The above photo is our 65th Acharya HH Sri Maha Devendra Saraswathi Swamigal of Sri Kanchi Peetam. I am seeing this photo for the first time. Thanks to FB for the article and photo.
ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது பஞ்சாயதன பூஜை எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த பஞ்சாயதன பூஜை பத்ததியை சங்கர பகவத் பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும் படியாகச் சுப்பிரமணிய உபாஸனையையும் நிலை நாட்டி ஷண்மத ஸ்தாபனம் செய்தார்.
ஞான மார்கம்
—————————-
முருகன் என்றால் ஞான பண்டிதன், ஞானோபதேசம் என்பது நினைவுக்கு வந்துவிடுகிறது. அத்வைத ஞான ஸ்வரூபமாகவே, அவரைத் திருப்புகழிலும் கந்தரபூதியிலும் அருணகிரிநாதர் சொல்லிருக்கிறார்.
நான் வேறு எனாதிருக்க, நீ வேறு எனாதிருக்க
ஏகபோகமாய் நீயு நானுமாய்
இறுகு வகை பரம் சுகமருள்
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே
பக்தி மார்கம்
—————————-
பக்தி மார்க்கத்தில் முருகன் முடிவாக இருப்பதைச் சொல்லவே வேண்டாம். அடியார்களின் பக்தியையும் அவர்களிடம் கருணையையும்தான் புராணக்கதைகள்
ஸம்ஸ்கிருத ஸ்தோத்திரங்கள், தமிழ்த் துதி நூல்கள் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கின்றன. இவற்றில் எல்லோருக்கும் ஒரு சில திருப்புகழ்கள், திருமுருகாற்றுப்படை, ஸுப்ரஹ்மணிய புஜங்கம் ஆகியனவாவது மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
கர்ம மார்கம்
—————————
கர்மா என்று எடுத்துக் கொண்டாலும், குமரிலப்பட்டராகவும் ஞானசம்பந்தராகவும் அவதரித்து அவரே, இந்த மார்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். அப்பர் ஸ்வாமிகள் தாஸமார்க்கம் என்ற வழியில் எப்போதும் லோக க்ஷேமத்துக்காக ஊழியம் செய்துகொண்டே இருந்தவர். அவர் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சொன்னவர். இந்த வரி வருகிற செய்யுளின் ஆரம்பம் நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் என்பது. கடம்ப மாலையை விரும்பி அணிகின்ற முருகன்தான் கடம்பன். முருகனைப் பெற்ற அம்பாளைத் தன் பாகத்தில் கொண்ட பரமேசுவரன் என்ற ஸோமாஸ்கந்த மூர்த்தமாக இங்கே அப்பர் சொல்கிறார். நிஷ்காம்யமாகப் பணி செய்து கிடக்கிற பான்மையை முருகன் விசேஷமாக அருள்வான் என்கிற மாதிரி நம் கடம்பன் என்று ஆரம்பத்திலிருக்கிறது.
யோகமார்கம்
——————–
கடைசியில் யோகம் எனறு சொன்னேன். இது பிராண மூலத்தைக் கண்டுபிடித்து, அதோடு சேர்கிற வழி, பிராண சக்தி என்பது சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில், குண்டலினீ என்கிற ஸர்ப்ப ரூபத்திலேயே இருக்கிறது. நமக்கெல்லாம் அதன் மகாசக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச் சுருட்டிக் கொண்டு தூங்குகிற பாம்பாகவே இருக்கிறது. தூங்கும் பாம்பைத் தட்டி எழுப்புவதற்குத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன. சுப்ரம்மணியர் யோக விஸ்வரூபம். அதனால்தான் அவரை எப்போதும் பாம்போடேயே சேர்த்துச் சேர்த்துச் பேசுகிறோம். வீஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர்கூட ஸ்ரீ ஸுப்ரஹ்யமண்யாய நமஸ்தே கிருதியில் சொல்கிறார். ஆசார்யாளும் புஜங்கம் (புஜங்கம் என்றாலே பாம்பு) என்ற விருத்தத்தில்தான் ஸ்தோத்திரம் செய்கிறார். நாகர் பிரதிஷ்டை, ஷஷ்டியில் நாகராஜா பூஜை எல்லாம் சுப்ரம்மணியரை உத்தேசித்தே செய்கிறோம்.
(தெய்வத்தின் குரல்)
Categories: Upanyasam
Great! I think internet has served its purpose. I have seen the photo of the Kalavai periyava the 66th Acharya in the matam at Kanchi and Kumbakonam but this is the first time I am also seeing the photo of the 65th Acharya of such good clarity. Maybe someone has the sketches of earlier periyavaa’s as well and they can share it with us.
இன்று கூட இந்த ஆதாரங்களோடு சம்பந்தப்பட்ட ஆறுபடை வீடுகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இங்கே வந்தாலும் பெரியவாளின் வாக்கில் அதுவே. ரொம்ப நன்றி.
Dear Mahesh, Sri Subhramanya being worshipped as Sarpa Raja is present in many temple agamas. For instance in Sri Kamakshi Temple, Kancheepuram, the dwara palakas are Ganapathi on one side and Naga Raja on the other side – this Naga is none other than Sri Subhramanya. Same way, in all shiva temples, Ganapathi and Subramanya are the dwara palakas for the maha sannidhi. Even in Vishnava Agama, in Vaikanasa, the Raja Gopura dwara palakas are Vishwaksena ( Vigneswara ) and Nagaraja ( Subramanya ). Ganapathi denotes the patience and deep conciousness of Jeevas while Nagaraja points to the subtle Kundalini mahashakthi through which this conciousness is merged with supreme. Wonderful description from Deivathin Kural. Went to Arunachaleswara temple @ Thiruvannamalai and had the wonderful dharshan of Sthamba Subramanya – who is supposed to have prevented and graced Sri Arunagiri Natha Swami. ‘Maayon’ (MahaVishu) & ‘Seyon’ (Kumara) are mentioned together in many sangam tamil literature songs. Even if you see Ramayana and Skanda puranam, both have similar story lines though set with different characters. Kumara as Dhandayadha Paani is supposed to be the premordial cowheard boy atop ‘Thiru Aavina Kudi’ or Pazhani. Even Sri Krishna himself proclaims that among the commandars of army he is Shanmugha. I elsewhere read here in this site about how Mahaswami made all the above comparisons between Vishnu and Kumara and said as ‘Sarva Deva Namaskaram Keshavam prathi Gachchadi’ – both are giving a darshan together as Keshava atop Thirupathi.
Thanks and regards,
P.Vijay
Some people take Upadesam to perform panchayathana poojai. Just like
other deekshas, it is also to be performed regularly without fail except for the
period because of theettu at home.
Balasubramanian NR
Sath Guru Dharshanam,Sarva Papa Vemochanam endru periyavarkal Kooruvarkal,Endru Atharku thagundharpol Kanhi Kama Koti Peetathin 65 avathu Acharya Dharshanam kedaithathu.,Ethu Oru Bhagyam than.Guru Kadaksham Pari poornam. Hara Hara Sankara Jaya Jaya Sankara.
Very useful post of Kanchi mahaswamigal. Thanks to Mahesh Mahaswamigal’s description about Karma Yogam, Bhkthi Yogam and Yoga margam is in a simple way to understand every person. Deivathin Kural of Kanchi Mahaseamigal is giving solution to each, everybody and nation to all the personal problems and will give us divine blessings. Everybody should read and read repeatedly of Deivathin kural and lead our life. Thanking you.M.Mohan
Maha Periyava Teaches us Karma, Yoga, Bhakthi and Jnana Margas of worshipping the Lord. Nice article on Skandha Shashti Day. The photo shows Ilayaaththangudi Maha Periyava! Our Maha Periyava used to tell people who said that they needed ‘manasshanthi’ to go to Ilayaaththangudi, near Karaikkudi and Thiruppaththur and have Dharshan of Ilayaththangudi Periyava’s Adhishtaanam! It is a nice place with Veda Patashaala run by the Matham and Lord Kailasanathar Temple, the First Temple of Naattukkoottai Chettiyaars! Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Om SaravaNa Bhava!
Gnana Markam – Sri Bhagavan Ramana Maharishi
Bakthi Markam – Sri Ramakrishna Paramahamsar
Karma Markam – Sri Maha Periyava
Yoga Markam – Sri Seshadri Swamigal
I read the above description somewhere. Please forgive me if i mentioned anything wrongly
Periyava Saranam