நாரங்க பலம் vs ஷட்பஞ்ச பலம்

Another incident to show how much Periyava cared and supported veda brahmnas. Must-read….

எண்ணூர் அருகே காட்டுப்பள்ளி என்று ஓரிடம். அங்கு நவராத்திரி பூஜை.அந்த இடத்துக்கு போகணும்னா எண்ணூர் போய் அங்கிருந்து போட்டில் கயிறு கட்டி இழுத்து செல்வார்கள். தனிமையான இடம், ஒரு பெரியவ வனாந்திரம் மாதிரி, இயற்கையின் எழில் கொஞ்சும். பெரியவா அந்த நவராத்திரியில் காஷ்ட மௌனமாயிருந்தார். அதாவது ஒன்பது நாளும் உபவாசம். கூடவே மௌனம், சைகையால் கூட விருப்பத்தை வெளியிடமாட்டார். நாங்கள் தரிசனத்துக்காக அங்கு சென்றிருந்தோம்.

அப்போது, பெரியவா ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து கொண்டிருந்தா. அன்றுதான் ஒன்பது மௌன விரதத்தை கலைத்தார். எங்கள் அருகாமையில் ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா, பிரவசனம் செய்பவர்களும், ஒரு வருமானவரி துறையில் உள்ள முக்கிய நபரும் அமர்ந்திருந்தார்கள்.

பெரியவா சிரிச்சுண்டே ஸ்ரீ ராமமூர்த்தி சர்மாவைப் பார்த்து ‘உனக்கு மாதம் எவ்வளவு வருமானம் வரும்” என்று கேட்டார்.

“சுமார் ரூ 300/- வரை வரும்”  .

“நீ கடன் வாங்குவியா?”  .

“அப்பப்போ ரூ 10, 20ன்னு வாங்குவேன்”

உடனே அருகிலிருந்த வருமானவரி ஆபிசரை நோக்கி, “உனக்கு எவ்வளவு சம்பளம்?” என்று கேட்டார்

“ரூ 10,000/- வரும். அதுவும் போராததால் அப்பப்போ ரூ 3000/- கடன் வாங்குவேன். குடும்பத்துலே இது சகஜம் தானே” என்றார்.

“எவ்வளவு  இருந்தாலும் போறாதுதான். ஏன்னா நம் தேவைகளை பெருக்கிக் கொண்டே போகிறோம். போதும் என்று எண்ணம் எப்போ வருதோ அப்போதான் நல்ல கார்யம் செய்ய முடியும்” என்று உபதேசித்தார்.

பேசிக்கொண்டே, கையில் ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரித்தார். பெரியவா தோலை தன் கையிலேயே வைத்துக்கொண்டு பழத்தை வருமானவரி ஆபிஸரிடம் கொடுத்தார்.

கொடுத்ததோடு இல்லாமல், “அதில் எத்தனை சுளை இருக்கு?” என்று கேட்டார்.

அந்த ஆபிஸர் அந்த பழத்தை இரு பிளவாக செய்து “என்ன 6, 6 மொத்தம் 11” என்று சொன்னார்.

பெரியவா கேட்டார், “இந்த பழத்தை ஷட் பஞ்ச பலம் (ஷட் – 6 , பஞ்ச – 5) என்று சொல்லலாம் இல்லியா? என்றார்.

உடனே ஸ்ரீ ராமமூர்த்தி சர்மாவும், வருமானவரி ஆபிஸரும் எழுந்து கீழே விழுந்து நமஸ்காரம் செய்தனர். எனக்கோ ஒன்னும் புரியவில்லை.

ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா தான் அந்த வருமானவரி ஆபிஸர் வீட்டுக்கு புரோஹிதம் செய்வது வழக்கம். ஒரு சமயம் அவசரத்தில்  ஆரஞ்சு பழத்துக்கு சமஸ்கிருதத்தில் நாரங்க பலம் என்பதற்கு பதிலாக ஷட்பஞ்ச பலம் என்று சொல்லி அதிகாரியிடம் வசை வாங்கிக் கட்டிண்டார். அது வேத வாக்கு பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை பெரியவா நடத்தியிருக்கிறார் என புரிந்தது. பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.

–இன்னும் வரும்…..



Categories: Devotee Experiences, Mahesh's Picks

Tags: ,

3 replies

  1. Sri Parvathi Patheyaa Hara Hara Maha Deva,

    I read so many great devotees experiences in this blog.

    May I request , to post a video showing all MUDRAS that one should do while doing Sandhya Vandanam Please ?

    Not sure how should I post my request, hence I am posting here.

    I need to know the correct form of MUDRA’s we do before commencing Gayathri Maha Manthra Japam during Sandhya Vandanam.

    If this is not the right way to request. My apologies.

    Thanks,
    Gopal Seethepalli

    • you dont have to feel bad for asking. there are lots of books, videos in giri traders on sandhyavandhanam. when my boys got their upanayanam done, i originally bought them these books and videos….not sure where you live….if you are in chennai, you should easily get these…..

      Also there are lots of youtube videos on the net – do a google and you can find a lot quickly.

      • i had posted a mail about sandhyavandanam, oldest book taken out of a library in US or somewhere. i am sure it should be available. if it is available i will post it to you mahesh and you may try to post it in this site, if you feel it is not troublesome. that is a good book.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading