ஸதாராவின் ஹேமநாத பாகவதர் – ஆசார்யாளின் திருவிளையாடல்

Thanks to Shri Hubli Ramaswamy mama for sharing this….

 

Periyava_sitting_for_snanam

ஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பர்நம் ஆசார்யாளின் திருவிளையாடல் அனந்தம்.

ஸ்ரீ பரமச்சார்யாள் ஸதாராவில் முகாமிட்டிருந்தார். ஸ்ரீ பெரியவா சன்னிதானம் என்றாலே வித்வத் சபைகளுக்கு பஞ்சம் இருக்காது. அனைத்துகலைகளும் அவருடைய போதனையால் வளர்ந்தது என்றால் மிகையாகாது.

ஸதாராவில் ஸ்ரீக்ருஷ்ண சாஸ்த்ரி என்ற பண்டித் தர்க்க வித்வானாக பிரகாசித்து வந்தார். அவருடைய பிள்ளை, பேரன் என பரம்பரையாக தர்க்க வாதத்தில் விற்பன்னராக இருந்து வந்தார். அவருடைய க்ருஹத்திலேயே சாஸ்திர பாடசாலை வைத்து நடத்தி பல வித மாணாக்கர்களை தயார் படுத்தி வந்தார்.

ஸ்ரீ பரமாச்சார்யாள் ஸதாரா வந்ததும் தினமும் நடைபெறும் வித்வத் சபைகளில் பங்கெடுத்துக்கொண்டு, வேறு யாவரும் வாதத்தில் வெற்றி பெறமுடியாத படி நடுவில் பல கேள்விகளைக் கேட்டு, யாரும் பதில் சொல்ல முடியாது திணறுவதை கண்டு தக்ஷிண தேசத்தில் எனக்கு பதில் சொல்ல பண்டிதர் எவருமில்லை என்ற இறுமாப்புடன் இருந்து வந்தார்.

சர்வேஸ்வரான ஷங்கரருக்கு அவர் எண்ணம் புரியாதா என்ன? அதற்க்கான வேலைகளை தொடங்கினார் ஸ்ரீ பெரியவா.

கும்பகோணத்திலுள்ள அத்வைத சபாவின் தலைவராக இருந்த விஷ்ணுபுரம் ஸ்ரீ ராமமூர்த்தி அய்யர் அவர்களிடம் தகவல் அனுப்பி பண்டிதராஜ் ஸ்ரீசுப்ரமணிய சாஸ்த்ரிகளை உடனே ஸதாரா அனுப்பி வைக்குமாறு சொன்னார்.

பண்டதராஜ் ஸ்ரீசுப்ரமணிய சாஸ்த்ரிகள் என்பவர் தலை சிறந்த வித்வான். கொச்சி ராஜா தர்க்க சாஸ்த்ரம் படித்தவராயும், வாதத்தில் விருப்பமுடையவராகவும் இருந்ததனால் அடிக்கடி பண்டிதராஜ் அவர்களை வாதத்திர்க்கழைத்து,அவரின் வாத திறமைக்கு சந்தோஷித்து தனக்கு சமமான ஆசனத்தில் அவரை இருத்தி போஜனம் செய்வார் என்பது ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் பெருமை அல்லவா!

ஆனால் அவருக்கு தேக ஆரோக்கியம் பிரயாணம் செய்யும்படியாக முடியாமல் போன சமயத்தில் ஸ்ரீ பெரியவா ஆங்கை வந்தது. ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் அசௌகர்யம் என்னவென்றால், மல மூத்ர விசர்ஜனங்கள் Tubeஇன் வழியால் வெளிஏற்றும்படி இருந்தது. கும்பகோணத்தில் இருக்கும்போதே அவரின் உதவிக்கு இன்னொருவரை நாட வேண்டி இருந்தது. இந்த மாதிரியான குரு சேவை செய்ய வேண்டிருப்பதை பெரியவாளுக்கும் தெரியபடுதப்பட்டது.

ஆனால் ஆசார்யாள் அவருக்கு பெருமை தேடித்தர சித்தம் கொண்டதால் இச்சிறுமையான விஷயங்களை மனதில் வாங்கிக் கொள்ளாது, (“அவர் இங்க வரணும்அவாளுக்கு வேண்டிய சௌர்யத்த பண்ணி கொடுத்து ரயில்ல முத பொட்டில (வகுப்பில்) ஜாக்ரதையா அழச்சுண்டு வாங்கோ!”) என உத்தரவே போட்டு விட்டார்.

அதன்படி பண்டிதராஜ் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் சதாரா வந்து சேர்ந்தார். அன்றும் நம் ஹேமநாத பாகவதரான சதாரா சாஸ்திரிகளும் வந்தார். ஸ்ரீ பெரியவாளோ அவரை அழைத்து தக்ஷிண க்ஷேத்ரதிலிருந்து சிறிய தர்க்க வித்வான் வந்துள்ளார். இன்று ஒய்வு எடுத்துக்கொண்டு நாளை உங்களுடன் விவாதிப்பார் என்றார். நம் ஹேமநாத பாகவதரின் பிரதியான சதாரா சாஸ்த்ரிகளோஒரு நாள் போதுமா!” என்ற பாவனையுடன் சென்று விட்டார்.

மறுநாள் ஸ்ரீ பெரியவாள் சந்நதியில் சபை தொடங்கியது. தர்க்க வாக்யார்த்தம் ஆரம்பிக்கப்பட்டது. பண்டிதராஜ் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் ஸ்ரீ பெரியவாளுக்கு குரு வந்தனம் செய்து பின் வாக்யார்த்தம் சொல்ல ஆரம்பித்தார். வழக்கம்போல் ஸதாரா சாஸ்த்ரிகள் கேள்விக்கனையைத் தொடுத்தார்பண்டிதராஜ் அவர்கள் நடுவில் எந்த கேள்வியும் தயவு செய்து கேட்க வேண்டாம்நான் முடித்தபின் நீங்கள் எத்தனை கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறேன் என கேட்டுக்கொண்டார். அதே போல் இடைவிடாது 3 மணி நேரம் வாக்யார்த்தம் நடந்தது. அனைத்தும் சொல்லி முடித்தார் ஸ்ரீ பண்டிதராஜ்பின் பெரியவாளை சேவித்து வந்து அமர்ந்தார்.

ஸனாதன சங்கரரோ ஸதாரா பண்டிதரை இனி உங்கள் கேள்விகளை கேட்க தொடங்கலாம் என குறுநகையுடன் தெரிவித்ததும் அவர் உடனே ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, என் கேள்விகளுக்கு மேல் அவர் அனைத்தும் பதிலாக சொல்லிவிட்டார். அவரின் பதில்களுக்கு என்னிடம் கேள்விகள் இல்லை என்றார். மேலும் ஸ்ரீ பெரியவா தக்ஷின தேசத்து சிறிய வித்வான் என அறிமுகப்படுத்தினார்சிறிய வித்வானே என்னை கேள்வி கேட்க முடியாமல் செய்தாரேனில் தக்ஷிண தேசத்து பெரிய வித்வான்கள் முன் நான் வாய் திறக்க கூட அருகதை இல்லை என மனமுவந்து பெரிய மனதோடு ஒப்புக்கொண்டார்.

அதற்கு பண்டிதராஜ் அவர்கள் இது நம் ஸ்ரீ ஆச்சார்யாளின் பிரபாவமேயன்றி என் சாமர்தியமல்ல. ஸ்ரீ ஆச்சார்யாளின் அடிமணலும் வாதிக்கும். குருநாதரின் கிருபையைத் தவிர வேறு எதுவுமில்லை. எவ்வளவு படித்தாலும், வித்தை கற்று கொண்டாலும், அந்த படிப்போ, வித்தையோ சமயத்தில் கைகொடுக்க வேண்டுமெனில்சத்குரு கிருபைஇருந்தால் மட்டுமே முடியுமேயன்றி வேறு எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாதுஎன்றார் அவை அடக்கத்தோடு.

ஸ்ரீ ஆச்சார்யாள் ஸதாரா சாஸ்த்ரிகளை கௌரவப்படுத்தி, அடுத்த வருடம் கும்பகோணம் அத்வைத சபாவிற்கு தாங்களும் வர வேண்டுமென நியமித்தார். அதன்படி ஸ்ரீ பண்டித் அவர்களும் வந்து தெற்கத்தில் வித்வான்களோடு கலந்து அந்த சபையை அலங்கரித்தார்.

ஸ்ரீ ஸதாரா சாஸ்த்ரிகள் தன் கருத்தை மாற்றிக்கொண்டு தக்ஷின தேஷ வித்வான்களுக்கு மரியாதை சேர்க்கும் விதமாய்செப்பு பட்டயம்‘”எழுதித் தந்தார் என்பதுசெவி வழிசெய்தி. இதை தெரிந்தவர்கள் உறுதி படுத்தினால் நலம்.

திருவிசநல்லூர் மாது என்கிற மாதவ சாஸ்திரிகள் சென்னையில் வசித்து வருகிறார். குரு கிருபையோடு ஸகல சௌகர்யமாய் வசித்து வருகிறார்.



Categories: Devotee Experiences

Tags:

6 replies

  1. பஞ்சக்ஷர மந்திர சொரூபனே உன் பாதம் சரணம்

  2. All idya Garvams are controlled by the Lord Himself. Reminded of ‘ThiruviLaiyadal’ cinema scene. Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Who is Sri. Thiruvisainallur Madhava sastrigaL, living in Chennai?

  3. DEAR ALL DIVINE LOVERS, ASPER DIVINE WILL EGO SHOULD NOT DOMINATE ONE’S MIND AS NOTHING CONSTRUCTIVE HAPPENS WITHOUT THE GRACE OF GOD.THIS EPISODE CLEARLY STATES THE SUPREMACY OF DIVINE OM JAYA JAYA JAYA SANKARA OM HARA HARA HARA SANKARA OM JAI SRI SAI RAM.,OM SRI SARVA MAN\GALA DATTATREYA SWAMI THUNAI OM SRI SARVA MANGALA DIVINE GRACE THUNAI

  4. THENNADUYA PERIYAVAA POTRI, ENNNATTAVARUKUM IRAIVA POTRI, SARVAGNA SARVAVYAPI PERIYAVAA SARANAMA, MAHAPIRAPGATARUM MAHA PERIYAVAA MALARADI POTRI. HARA HARA SANARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA.

  5. annaiyum naney thanthaiyum naney akila ulagathai rakshikum sarveshwaranum naney. ketkha padikha inimai periyavalin thiruvilaiyadal. jaya jaya sankara hara hara sankara

  6. Dear mahaperiyavaa bhakthas,

    blessed you all are, tobe associated with mahaperiyavaa and to enjoy the
    eternal bliss of avatara murthi.
    continue this good work.
    SARVE JANAHA SUKINO BHAVANTHU

    shankar
    bahrain

Leave a Reply to Saikumar SrinivasanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading