Namo Narayanaya!

 

csimg19

“இது ப்ரத்யக்ஷ நாராயணனோட பாத தீர்த்தம்! இன்னிக்குத்தான் அடியேன் தன்யனானேன்!”

காஞ்சிக்கு பக்கத்தில் கீழம்பி என்ற கிராமம். பெரியவா வயல் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரோடு பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யாரும் நடந்து வந்தார். அவர் பெரிய வைஷ்ணவ தலைவர். வைஷ்ணவ சம்பிரதாயங்களை துளிகூட குறைவில்லாமல் அனுஷ்டிப்பவர். எல்லாவற்றுக்கும் மேல், பெரியவாளிடம் ஹிமாயலய பக்தி !

வரப்பின் மேல் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தபோது, அண்ணா ஸ்வாமி கைகளைக் கூப்பிக் கொண்டு “தேவரீர், ஒரு நிமிஷம் அப்பிடியே நிக்கணும்……….” என்று வேண்டினார்.  பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு கணிகண்ணன் பின்னால் போன ஜகன்னாதன்  பக்தரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்ற அப்படியே நின்றார்.

வரப்பை ஒட்டி வாய்க்காலுக்கு போய்க் கொண்டிருந்த ஜலத்தை, இரு கைகளாலும் அள்ளி பெரியவாளின் திருப்பாதங்களில் வார்த்தார். கொஞ்சம் கூட அசையாமல் நின்றார் பெரியவா. பாத தீர்த்தத்தை எடுத்து தன் தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டு, சிறிது அருந்தினார். எப்பேர்ப்பட்ட பாக்யசாலி!

“இது ப்ரத்யக்ஷ நாராயணனோட பாத தீர்த்தம்! இன்னிக்குத்தான் அடியேன் தன்யனானேன்!” என்று மனஸ் நெகிழ்ந்து கூறிவிட்டு ” தேவரீர்…மன்னிக்கணும். தாமசப்படுத்திட்டேன்……..” என்று பணிந்தார்.  அண்ணா ஸ்வாமி எப்போதுமே பெரியவாளுடைய இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டுதான் வந்தனம் பண்ணுவார். அவருடைய ஜன்ம நக்ஷத்திரத்தன்று மடத்திலிருந்து ஒரு மூட்டை அரிசியும், பத்துக்கு ஆறு வேஷ்டியும் பெரியவா அனுப்புவது வழக்கம். விளம்பரமே இல்லாமல் பெரியவாளிடம் பக்தி செலுத்தியவர்கள் ஏராளம். உண்மையான சைவர்கள், பெரியவாளை சிவனாகவும், உண்மையான வைஷ்ணவர்கள் பெரியவாளை விஷ்ணுவாகவும் பக்தி பண்ணியிருக்கிறார்கள்.

பூரணமான ப்ரஹ்மம்தானே பெரியவா!



Categories: Devotee Experiences

Tags:

19 replies

  1. நன்றாக விளக்கம் சொன்னீர்கள் திரு மகேஷ். நன்றி.

    முதல் விஷயம்: மகா பெரியவா பக்தர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். இரண்டாவது விஷயம்: இவற்றுக்கு ஆதாரம் தேடுவது கொஞ்சம் சிரமம். எல்லாமே வாய் வழியாகச் சொல்லப்பட்டு வருபவை. வரகூரான் மாமா என்னிடமும் ஆதாரம் கேட்டார். அதற்கு அவரிடம், நீங்கள் சொன்ன பதிலைத்தான் சொன்னேன்.

    மகா பெரியவா மேல் பாரத்தைப் போட்டு விட்டுத்தான் சொல்ல வேண்டும். ஒரு முறை ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் நான் உபன்யாசம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு மாமி, ‘மகா பெரியவா இப்படி எல்லாம் கேட்டாரா?’ என்று குறிப்பிட்ட சம்பவத்தின்போது தடாலெனக் கேட்டார். ஆமாம் என்று விளக்கம் சொன்னேன்.

    நம்பிக்கைதான் ஒரே வழி. மகா பெரியவாளை நம்பினால், அவரது அனுபவங்களையும் நம்பித்தான் ஆக வேண்டும்.

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

  2. Tears roll down my eyes wen i read dis!!!!mahaperiyava saranam!!!!!!!!!!

  3. I remember one more Vaishnava devotee of Maha Periavaa called Balaji, who was a Chartered Accountant. He was one of the close circle devotees of Pradosham Mama.I used to meet at Pradosham Mama’s residence occasionally.

  4. Very great picture.Very great statement. உண்மையான சைவர்கள், பெரியவாளை சிவனாகவும், உண்மையான வைஷ்ணவர்கள் பெரியவாளை விஷ்ணுவாகவும் பக்தி பண்ணியிருக்கிறார்கள்.

    பூரணமான ப்ரஹ்மம்தானே பெரியவா!
    Om Nama shivaaya! Om Namo NaaraayaNaaya!

  5. இரண்டு நாள் முன்பு 25-07-2013 இதை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தேன்.என் பேஜிலும்.மற்றும் சில குருப்களில் போஸ்ட் செய்தேன்.ஒரு வைஷ்ணாவா குருப்பில் ஆதாரம் கேட்கிறார்கள்? மகேஷ் உதவ முடியுமா? நான் நண்பர் ஒருவரிடமிருந்து காபி பண்ணினேன்.

    Varagooran Narayanan.

    • Dear mama,

      don’t worry about it. Yesterday, we celebrated 79th Jayanthi of HH Pudhu Periyava in a very grand manner in Chicago. One Mahaperiyava devotee, a good friend of mine, also attended. When we were talking about different things – he narrated how many times he has seen Sri Bayangaram worshiped Mahaperiyava in Sri Matam. He also mentioned about one more Iyengar devotee, who used to do 108 namaskarams to Periyava – multiple times a day….There is no reason to respond to these people……we are not sitting here and fabricating stories about Periyava….When I read several articles in the past and wondered about the authenticity of them, later I met several folks who were personally involved in those incidents….no periyava devotee would lie…pl ignore those people….

      you’re doing a great job in FB…Pl continue that…

      My namaskarams to you…

  6. really great

  7. I happened to come across this in FB but here it brought tears

  8. I do not know anything about these commercial ads which come up on the internet. But is it possible to not have these advertisements showing matter and photos that are not just inappropriate to this site, that is dedicated entirely to the spiritual, but also are irreverent to the teachings and principles of the Periaval? Maybe a request to your service provider might set right the matter.

    • unfortunately, we have no control over them. this is a free blog and it comes with a price 🙂 these ads may go away if we pay more etc, which I dont intend do now….maybe later…

      • Just wondered. It will come about somehow, and soon, if Periaval so desires.
        After writing, I pondered over what I had said. How does it matter what the advertiser intends? It is my intention when I see the ads. is what matters. And therefore it does not really matter.
        Thank you very much for this good service you are doing.

  9. prathivathi bhayankaram is a great person. there was another srinivasan from reserve bank of india who is another serious vaishnavite having great bhakthi towards periava and his wife also. they used to spend most of the time with periava like jaya mami, vying with each other to give arthi to periava particularly during viswaroopa darshanam. In those green fields surrounded, periava used to maintain the same speed while walking in that single leg lane called varappu!!!!

  10. “கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
    வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
    எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
    சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.”

    ஸ்ரீ குருப்யோ நம: குருவே ஹரியும் குருவே ஹரனும்.

    மகேஷ்-ஜி, பகிர்வுக்கு நன்றி.

    — கெளரிஷங்கர்

  11. அருமை. கேட்டதில்லை இன்று வரை.

  12. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA.

  13. hariyum sivanum onnu enbadharkku sariyaana udhaaranam .. ippodhum silar mattumey vidhivilakku .. vithyaasam paarkaamal irukkiraargal .. naam vaaikku vaai kesavaa naarayanaa maadhavaa engirom .. aanaal andha alavukku namakku madhippu vaishnavargal tharuvadhillai engira mana thangal irukkadhaan seigiradhu ..

  14. indha bhagyam yarukku vaaikkum?

  15. உண்மையான சைவர்கள், பெரியவாளை சிவனாகவும், உண்மையான வைஷ்ணவர்கள் பெரியவாளை விஷ்ணுவாகவும் பக்தி பண்ணியிருக்கிறார்கள்.

    பூரணமான ப்ரஹ்மம்தானே பெரியவா!

    TRUE…………. PRATYAKSHA DEIVAM PERIVAAAAAA…. SARANAM…

Leave a Reply

%d bloggers like this: