Swami Vivekananda’s hunger – Must-read

I have heard this story in Nochur Sri Venkataraman’s pravachanam on “Bagavatham”. Must-read…..(Article Courtesy: Dinamani)

Rama Rama

கோடைக்காலத்தில் ஒரு முறை சுவாமிஜி உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் பயணம் செய்தான் வியாபாரி ஒருவன். சுவாமிஜியிடம் பணமோ வேறு எந்த வசதியுயோ இல்லை என்பதைக் கண்ட அவன் அவரை ஏளனத்துடன் பார்ப்பதும் கேலி செய்வதுமாக இருந்தான். ஒவ்வொரு நிலையத்தில் ரயில் நிற்கும் போதும் நன்றாகச் சாப்பிட்டான். தவறாமல் சுவாமிஜியைக் கேலி செய்தான். கடைசியாக தாரிகாட் என்ற இடம் வந்தது. அது மதிய வேளை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நல்ல பசியும் தாகமும் சுவாமிஜியை வாட்டின. சுவாமிஜியிடம் ஒரு கமண்டலம் கூட இல்லை. ரயில் நிலையத்திலுள்ள கூரையின் கீழ் அமரச் சென்றார். சுமை தூக்கும் தொழிலாளி ஒருவன் அங்கே அவருக்கு இடம் தர மறுத்து விட்டான். எனவே அவர் வெயிலில் தரையில் அமர்ந்தார்.

அங்கும் அந்த வியாபாரி வந்து அவர் காணும்படி நல்ல இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். உணவு வரவழைத்து அவருக்கு முன்னாலேயே சாப்பிட்டான். இத்துடன் நில்லாமல் சுவாமிஜியிடம், ‘ஏய் சன்னியாசி! பணத்தைத் துறந்ததால் வந்த கஷ்டத்தைப் பார்த்தாயா? சாப்பிடவோ தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவோ உனக்கு வழியில்லை. என்னைப்போல் நீயும் ஏன் சம்பாதிக்கக் கூடாது? நன்றாகச் சம்பாதித்தால் வேண்டுமட்டும் அனுபவிக்கலாமே!’ என்று வம்பு பேசினான்.

திடீரென்று காட்சி மாறியது! அங்கே வந்தான் ஒருவன். அவனது கையில் ஒரு பொட்டலம். தண்ணீர், டம்பளர், இருக்கை போன்றவை இருந்தன. இருக்கையை ஒரு நிழலில் விரித்துவிட்டு நேராக அவன் சுவாமிஜியிடம் வந்தான். ‘சுவாமிஜி, நான் உங்களுக்காக உணவு கொண்டு வந்திருக்கிறேன். வாருங்கள்’ என்று அழைத்தான். சுவாமிஜி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வந்தவன் மீண்டும் சுவாமிஜியிடம், ‘சுவாமிஜி, வாருங்கள் சீக்கிரம் வந்து சாப்பிடுங்க’ என்றான்.

சுவாமிஜி: ‘இதோ பாரப்பா, என்னை நீ வேறு யார் என்றோ தவறுதலாக நினைத்து அழைக்கிறாய். நான் உன்னைப் பார்த்ததுகூட இல்லை.’

வந்தவன்: ‘இல்லை சுவாமிஜி, நான் கண்ட துறவி நீங்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லையே!’

சுவாமிஜி (வியப்புடன்): ‘நீ என்னைக் கண்டாயா? எங்கு கண்டாய்?’

வந்தவன்: ‘ நான் இனிப்புக் கடை வைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு வழக்கம் போல் சற்று கண்ணயர்ந்தேன். அப்போது ஸ்ரீராமர் என் கனவில் தோன்றினார். உங்களைக் காண்பித்து, “இதோ என் மகன் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருக்கிறான். உடனே எழுந்து பூரி, இனிப்பு எல்லாம் எடுத்துக் கொண்டு ரயில்நிலையத்திற்குப் போ” என்றார். நான் விருட்டென்று எழுந்தேன். அப்போது தான் அது கனவு என்பது புரிந்தது. எனவே அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கினேன். ஸ்ரீராமர் மீண்டும் வந்து என்னை உலுக்கி எழுப்பினார். அதன்பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் கூறியதுபோல் அனைத்தையும் தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தேன். நான் கனவில் கண்ட அதே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். தொலைவிலிருந்தே உங்களை நான் கண்டு கொண்டேன். வாருங்கள், மிகவும் பசியாக இருப்பீர்கள். எல்லாம் ஆறிப்போகுமுன் சாப்பிடுங்கள்.’

இவை அனைத்தையும் கண்டு கொண்டிருந்தான் வியாபாரி. சாட்சாத் ஸ்ரீராமரே வந்து உணவு அனுப்பியிருக்கிறார் என்றால் அவர் எத்தகைய உயர்ந்த மகானாக இருப்பார் என்பதை எண்ணிப் பார்த்த அவனார் அதன்பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. உடனே எழுந்து ஓடோடி வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் கூழ்ந்து மன்னிப்பு கேட்டான். சுவாமிஜி மௌனமாக அவனை ஆசீர்வதித்துவிட்டு சாப்பிடச் சென்றார்.Categories: Devotee Experiences, Mahesh's Picks

Tags:

13 replies

 1. Great Mahans’ has only spritual hunger rather than physical hunger

 2. Vivekananda is God’s own Child. He got all the protection direct from God and his Guru. If India has earned its name in the world for its spiritual heritage, it is because of him.

 3. Thanks for sharing.

 4. Yes it is an absolute truth.No exagerration.Faith and absolute faith in Him always protects every body.God is great and Guru only exposes the same.

  • If I may, I would ( w.r.t.TSS’s post above) prefer to say God’s Greatness is edxpressed ( not exposed_ through the guru’s.

 5. nice. Thanks for sharing

 6. Look at Him what an eyes — What a fantastic Photo of Him — I have never seen Him like this — Thanks for the Photo and also to the Article Mahesh

 7. is there an english translation of [swami Vivekananda’s hunger please ] thanks in advance

  • Great photo and experience as told by the savant, Brahmasri Nochur Sri. Venkatraman! I am attaching an English translation as requested by Mrs. Prema Suren. God Bless!

   “Swami Vivekananda was travelling in Uttar Pradesh, India in the hot summer.A merchant who was travelling with him, knowing that Swamiji was not having any money or other means with him,was looking at Him with disdain and was making fun of Him.He was eating well at every station where the train halted and also made fun of Swamiji. When the train arrived at Tharikot at noon, the temperature was blazing hot, Swamiji went out being hungry and thirsty. He was not even having a Kamandalam, to collect water and drink. To seek relief from the heat, He went to take rest under the station roof.A porter resting there, refused to give Swamiji space to rest. So Swamiji went and rested in the floor under the sun.
   The merchant came there also and sat on a convenient seat.He again got some food and ate heartily.He then told Swamiji, “Hey, Sanyasi, Since you renounced money, look at your trouble now! You have no way of eating or drinking now.Why can’t you earn like me? If you earn well, you can enjoy life as much as you want!”
   Suddenly a man came to that spot. He had a packet, water to drink, tumbler and a mat.He spread the mat under the shade and came straight to Swamiji.”Swamiji, I brought food for you. Please come and partake”, he invited. Swamiji was totally taken aback and told him, when he again invited Him, “Look here, my friend! You are mistaken. Possibly you are thinking of someone else. I have never seen you before!”
   “No, Swamiji, You are the Saint I saw! I have no doubt about it!”
   Swamiji was astonished and said, “you saw me? Where?”
   “Swamiji, I am selling sweets. I dozed off after lunch. Lord Rama came in my dream. He showed You to me and told me, “Look here, My son has not eaten anything for the past two days. You immediately get up and take Pooris and sweets and go the railway station.” I woke up, realised that it was a dream.So I went back to sleep. Lord Rama did not leave me and shook me and woke me up. Immediately, as per the Lord’s directions, I prepared everything and brought them here for you. I identified You even at a distance. You are the Swamiji who came in my dream. Please come and partake the food. You must be hungry. Pleaste take, before the food becomes cold!”
   The merchant was seeing all these with astonishment. He realised his mistake when he thought that if Lord Rama Himself had arranged for food for Swamiji, how great a Mahan, Swamiji could be! He immediately fell at Swamiji’s Feet and asked for pardon. Swamiji silently blessed him and went to take food, as arraged by the devotee lovingly! “

 8. Iam not equal even to the dust on the foot of Swami vivekananda, I wish to share in a brief that I had a smillar experience in Thiruchanoor (where the Lokamatha is rulling)near Thirupathi & before I reached the kali gopuram of thirupathi on foot during a peak summer I got sweet laddu etc fm thirupathi balaji(I used to call has rich god without paying his loan etc)reg Allarmelmanga(I am an ordent devotee with my fast fluent Lalitha shasranamans & sri lakshmi ashtotrams) I am sure no one might be fed by her thirty years before . If intrested to hear I can narrate those days of mine. God never makes their children to suffer when they are in need & has strong surrender to her/him even though it is kaliyuga. RG Pammal.

 9. nice to read again…I have heard it in Nochur mama’s Bhagavatha Pravachanam as well!! Thank you!!

 10. yes such things do happen. it is faith.

Leave a Reply

%d bloggers like this: