Periyava’s Eye Operation

Him at Satara 1981

Thanks to வரகூரான் நாராயணன், Facebook for typing this article.

அது 1974-ஆம் ஆண்டு..காஞ்சி மகா பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வை பழுதுபட்டது. கிட்டத்தட்ட ஒரு கண்ணின் பார்வை இன்றியே தன் நித்ய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து வந்தார்.  தேகத்தில் ஏற்படும் மகான்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கேற்றாற்போல் அவரது செயல் பாடுகளில் எந்த ஒரு மாறுதலும் இல்லை.இருந்தாலும், சில அன்பர்களது வற்புறத்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ஒரு கட்டத்தில் சிகைச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அது போதிய பலன் தரவில்லை.

அதோடு, பாதிக்கப்பட்ட அந்தக் கண்ணில் மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்ய இயலாது…அது பலன் தராது
என்கிற நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொருகண்ணின் உதவியுடனேயே இருந்து வந்தார் மகா பெரியவா.

நாளடைவில் நன்றாகச் செயல்பட்ட அந்த இன்னொரு கண்ணிலும் கேட்ராக்ட்..[புரை] ஏற்பட்டது.இதை அறிந்த
பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களும் ஸ்ரீமடத்து விசுவாசிகள் பலரும் பெரியவாளை அணுகி “கேட்ராக்ட்டுக்குப்
பெரியவா ஏதாவது சிகிச்சை எடுத்துக்கணும்” என்று விக்ஞாபித்துக் கொண்டனர்.

புன்னகையுடன் அந்தக் கோரிக்கையை மறுத்து விட்டார். பெரியவா, “போதும்டா…இந்த ஒரு கண்ணை வெச்சுண்டே
நான் சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையை நடத்திக்கிறேன். இந்தப் பார்வையே எனக்குப் போதும்” என்று அன்புடன்
மறுத்து விட்டார்.

ஆனால் மகா பெரியவாளின் இந்த சமாதானமான பதிலை ஸ்ரீஜயேந்திரர் ஏற்கவில்லை. கேட்ராக்ட்டுக்கு அவசியம்
ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவாளிடம் வற்புறுத்திக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில்
பெரியவாளும் இதற்கு சம்மதித்தார்.

அப்போது மயிலாப்பூரில் பிரபல வக்கீலாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் டாக்டர் பத்ரிநாத்
மகா பெரியவாளுக்கு அறிமுகம் ஆனது.இந்த நேரத்தில்தான், சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில்
இருந்தார் பத்ரிநாத். இவரது சேவை மனப்பான்மை பற்றியும் தொழில் நேர்த்தி குறித்தும் ஸ்ரீமடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஸ்ரீமடத்து அதிகாரிகள் கலந்தாலோசித்த பிறகு பத்ரிநாத்தைக் கொண்டே மகா பெரியவாளுக்கு கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

முதலில் ஸ்ரீஜயேந்திரரைச் சந்தித்த பத்ரிநாத் பெரியவாளுக்கு எப்படி ஆபரேஷன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை
விளக்கினார். ‘ஒரு சந்நியாசிக்கு மருத்துவமனையில் வைத்தெல்லாம் சிகிச்சை செய்யக் கூடாது. அதுபோல்
நர்ஸ்,மருத்துவ உதவியாளர்கள் போன்றோரின் ஸ்பரிசம் பெரியவாளின் மேல் படவே கூடாது” என்றெல்லாம் சில
விஷயங்கள் ஸ்ரீமடத்தின் சார்பில் பத்ரிநாத் முன் வைக்கப்பட்டது.

“நானும் மகா ஸ்வாமிகளின் பக்தன்தான். அவரது துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாதவாறு இதைப்
பார்த்துக் கொள்கிறேன்” என்றார் மென்மையாக.

ஆபரேஷன் சமயத்தில் பத்ரிநாத் மட்டுமே மருத்துவர் என்ற முறையில் இருந்தார். இவரைத் தவிர, மருத்துவமனை
சிப்பந்திகள் எவரும் இந்த சிகிச்சையின்போது உடன் இல்லை. அப்படி என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு ஆபரேஷன்
நேரத்தில் உதவியவர்கள் யார்?

மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்கள் சிலருக்கே தேவையான மருத்துவப் பயிற்சி கொடுத்து,அவர்களைத்
தன் உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார் பத்ரிநாத். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபம்,
ஆபரேஷன் தியேட்டராக மாற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் சென்னையில்
இருந்தே கொண்டு வரப்பட்டன. எல்லாம் தயார் ஆன பின், மிகக் கச்சிதமாக மகா பெரியவாளுக்கு ஆபரேஷன் முடிந்தது.Categories: Devotee Experiences

13 replies

 1. Sad to read that Periyava enacted this Drama when He Hiself could have cured His problems…

 2. I know Dr Badrinath and Mrs Vasanti Badrinath and the services towards eye care rendered by Sankara Nethralaya since 1992. I knew that Dr Badrinath conducted the eye operation for Maha Periyava but what I did not know was the year the operation was conducted. I am grateful for the information provided in this write up.

  RS Kuppusamy
  (former Executive Secretary to Dr MS Swaminathan)
  W 51, Kovaipudur, Coimbatore 641042

 3. Sri Bhadhrinath is a real blessed soul, Our PeriyaVas blessings are always with him.thanks for this reporting.

  • Maha Periyava Saranam.
   I could recall my memory the Dharsan of Maha Periyava I had with my brother at small Kanchipuram in a house near Varadaraja perumal koil soon after His eye surgery. I remember to have heard that Periyava underwent the surgery without any anaesthesia. Only Maha Purusha like Maha Periyava could do like this.
   T.G.Prabhakar

 4. What a humble and kind devotee Dr Badrinath is.

 5. excellant. Sri Badrinath really served for he poor, with the GRACE OF SWAMIGAL.

 6. டாக்டர் பத்ரிநாத் செய்த புண்ணியம், அவர்கள் ஸ்ரீ பெரியவள் அவர்களுக்கு கண் ஆபரேஷன் செய்ய முடிந்தது. நிஜமாஹவே பெரியவாளின் அனுக்ராஹமும் சேர்ந்து கிடைத்தது . வெளியிட்டமைக்கு மகிழ்ச்சி

 7. i must mention about dr. badrinath. his bhakti towards periava cannot be explained by words and it is that bhakthi and vinayam that has helped him operate on periava. how blessed he should have been. his name is known all over the world and sankara hospital in chennai and other places are doing wonderful service. needless to say that he was ably assisted by our friend sivaraman another selfless person and his wife gowri…….tears in my eyes. n.ramaswami

 8. Maha Periyava’s cataract surgery by Dr. Badrinath is the catalyst and Seed Capital for Shankara Nethraalayaa and now it is a great institution of excellence> All Maha Periyavaa’s Grace and dedicated work of Dr. Badrinath and thousands of co-workers and volunteers. Our Sri. Sivaraman himself served for long as PRO there. All Maha SwamigaL’s Blessings. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

 9. I have heard somewhere that Dr.Badri was astonished with this operation without any chloroform and nurses help and became such a devotee that one day Dr was expressing his sadness that he wishes to go back to Harvard as things in India are not to his liking.Periyavaa:what is that you have in mind which you can’t fulfill in India?
  Dr:I wish to serve the poor and needy in whatever form possible but it is not working out well..
  Periyavaa. A few secs Mounam…Then :why dont you start a Hospital mainly to help the poor and you will succeedd.
  Dr.needs lots of money,others help
  Periyava:just start ‘sankara nethralay’Acharya will take care of your needs as your intentions are very very pure..
  Dr takes his chances..Today Dr has recd so many awards for serving the poor,that time will remember his great contribution..!

 10. Great. My wife, our children and I had the opportunity to have his darsan in Kancheepuram a few days after his operation.

 11. Dr Badrinath is indeed blessed to have the grace to touch and operate both the eyes of Maha Periyaval, for removal of Ctaract

 12. hara hara shankara, jaya jaya shankara
  i had read about sri maha paeriyavaa’s eye operation a while ago…you will not believe this. only yesterday, i was pondering how a medical procedure would have been performed on a mahaan like periyava who is very strict with his anushtanams etc. as if to answer my query, this blog post appears..i really dont know what to say…his divine grace is all over us all the time.

  my humble pranams to his lotus feet..and thanks to mahesh and everyone associated with this blog.. you are indeed very blessed, for HE is using you as an instrument to spread his message.

Leave a Reply

%d bloggers like this: