Muslims doing bhajan on Lord Shanmuga

ஓ ! பகவான் ! ஓ ! பகவான் “தயாகரோ பகவான் ! கிருபாகரோ பகவான் ! ”

இந்தத் தொனி ஆகாசத்தைப் பிளந்தது. பெரியவா சிரமப் பரிகாரம் செய்து கொண்டு இருந்தார்கள். பஜனை கோஷ்டி பெரியவாளிடம் வந்து, நாம சங்கீர்த்தனம் செய்தது. சாண்டூர் மகாராஜா, “இவர்கள் எங்கள் ஊர் பஜனை கோஷ்டி” என்றார்.

பெரியவா, “உங்கள் ஊரில் கிராமிய பஜனை கோஷ்டியில் நிறைய முஸல்மான்கள் பஜனை செய்கிறார்கள். அவர்கள் கார்த்திக் ஸ்வாமி (முருகன்) பேரில் ரொம்பவும் ஆனந்தமாய் பஜனை செய்கிறார்கள். அவர்களை வந்து இங்கு உட்கார்ந்து கொண்டு ஒரு நாள் பஜனை செய்யச் சொல்” என்று உத்தரவு இட்டார்கள்.

அதன்படி அந்த உள்ளூர் பஜனை கோஷ்டியினர் பெரியவாளிடம் வந்து பஜனை செய்து விட்டுப் போனார்கள்.

சாண்டூர் மன்னருக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. தன் ஊரில் உள்ள ஒரு பஜனைக் குழுவில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கு கொண்டு, பஜனை பாடல்கள் பாடி வருகிறார்கள் என்ற செய்தி அவருக்கே தெரியாது. “எனக்கே தெரியாத செய்தி! எங்கோ தென்னாட்டிலிருந்து வந்த ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு அது தெரிந்திருக்கிறதே !” என்று மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டார்.



Categories: Devotee Experiences

3 replies

  1. திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலின் நான்கு தெருக்களும் அக்ரகரமாக இருந்த காலம் மாறி இன்று நான்கு வீதிகளிலும் முஸ்லிம் பெருந்தகைகள் குடியேறி உள்ளனர் . இன்றும் சுவாமி வீதி உலா வரும்போது அணைத்து வீட்டின் வாசல்களில் கோலமிட்டு சுவாமிக்கு தீபாராதனை செய்யும் முஸ்லீம் குடும்பத்தினரை வணங்கி விடை பெற்ற போது எனது கண்கள் பனித்தன நாம் சுவாமியை
    விட்டு பல மைல்கள் கடந்து வந்தாலும் வேறு தேசத்தில் இருந்தாலும் நினைவில் உள்ள தெய்வத்தை இன்றளவும் கொண்டாடுகின்ற முஸ்லிம்கள் பாராட்டுக்குரியவர்களே என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். சுவாமிநாத ஐயர் –

  2. yes, i will tell another incident. there is a mosque next to sankarmutt at kanch. it was one evening that the muslims usual call was made through the speaker ‘allahoo akbar’ etc. some one from the mutt was murmering this speakers sound is so much at this time when periava is giving darshan……..’. Periava called him nearby and asked him what he was saying and he was forced to repeat that murmer. Periava laughed and said ‘oh were you hearing some loudspeaker sound. i did not hear anything except what this person was telling to me, and pointed to a person near me who was telling something to periava. the mutt person was dumbfounded!!!!that is periava. people would perhaps now see from the video of sage of kanchi the long queue of muslims,christians,and nuns etc. who came to pay respects to periava when he attained siddi and even some of those getting so emotionally upset and wept and persons like me standing nearby had to say dont cry, you should not cry on such occasions!!!! n.ramaswami

  3. Shankara.

Leave a Reply

%d bloggers like this: