Sri Vishnu Sahasranamam

 

 

ஒரு நாள் மாலை பூஜைக்கு முன்பு, ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்களுக்கு கடுமையான ஜுரம். இந்த விஷயம் அங்கிருந்த பக்தர்களுக்குத் தெரியாது. ஸ்ரீ ஆசார்யாள் எல்லோரையும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யச் சொன்னார். பாராயணம் முடிந்தவுடன் ஸ்ரீ பெரியவாள், சுருக்கமாக எல்லோரையும் பார்த்து, “நீங்கள் எல்லோரும் தவறாமல் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும். அரை மணிக்கு முன்பு எனக்கு கடுமையான ஜுரம். இப்போது நிவர்த்தியாகி விட்டது. இப்போது ஸ்நானம் செய்து விட்டு பூஜைக்கு உட்காரப் போகிறேன்” என்றார்கள்.

இதே போல, இரண்டாம் உலகப் போர் மிகக் கடுமையாக இருந்த நேரம், நாஸி ஜெர்மானியக் குண்டு சென்னையில் விழப் போகிறது என்ற நிலையில் சென்னையிலிருந்து பலர், தென் ஜில்லாக்களுக்குத் தங்கள் குடும்பத்தை அனுப்பி விட்டனர். சென்னை மாகாணம் முழுவதும் பீதியடைந்த தருணத்தில் ஸ்ரீ ஆச்சாரிய சுவாமிகள், “எல்லோரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். ஒரு ஆபத்தும் நேராது” என்று கூறினார்கள். அதன்படி, சென்னையில் பல இடங்களில், அன்பர்கள் பாராயணத்தில் ஈடுபட்டார்கள். யுத்தத்தினால், சென்னைக்கும் நம் தேசத்திற்கும் யாதொரு அபாயமும் ஏற்படவில்லை.



Categories: Upanyasam

4 replies

  1. Very useful information.

  2. Lord Vishnu”s another form is Dhanvanthri,(Physician God) Invoking vishnu very easily is chanting Vishnu Sahasranamam.Our Periyava has the faith, if we call utter sincere Lords name,He will come to our help.and help us to redress our grevience.

  3. “Sahasra Naamne Purushaya Saasvathe Sahasra Koti Yuga Dharine Namaha: “

  4. Shankara, Sarveshwara

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading