அத்வைதமும் சயின்ஸ்ஸும்

ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப் பொருள்களுக்குள் (elements) அடங்குவதாக சயின்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து.

ஆனால், இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின் இந்த மூலப் பொருள்கள் எல்லாமும் கூட வேறான பொருட்கள் அல்ல, என்றும் ஒரே சக்தி (energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் சயின்ஸ் நிபுணர்கள் நிலை நாட்டி இருக்கிறார்கள்.

பொருள் (matter) சக்தி (energy) இவையும் வேறுவேறானவை அல்ல என்று நவீன சயின்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம் தான் சயின்ஸ்ஸும் நமக்கு காட்டுகிற உண்மை.

ஐன்ஸ்டீன், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல சயின்ஸ் நிபுணர்கள் உபநிஷதமும் சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள்.

உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்கு பொருள் யாதனில், “உலகம் இறுதி சாத்தியமல்ல; இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம்; இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றை சார்ந்ததே” என்பதுதான்.பிரம்மமே பரமார்த்திக சத்தியம். உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் உலக இயக்கமெல்லாம் இன்னொன்றை சார்ந்தவை (relative) தான்; முழு உண்மை (absolute) அல்ல என்கிறார்கள்.

சக்தியும் பொருளும் ஒன்று என்ற பெரிய உண்மையை கண்ட அணு விஞ்ஞானிகள் அந்த அறிவைக் கொண்டே அணு குண்டைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களை குறித்து சயின்ஸ்ஸால் நிலை நாட்டப்படும் advaitham  புத்தி மட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது.

அத்வைதம் வெறும் அறிவோடு நிற்காமல் மக்களின் பாவனையில் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் சயின்ஸ் வழியாக ஏற்பட்டால் அணு குண்டை தயாரித்த நவீன சயின்ஸே ஆத்மஹானிக்கு பதிலாக மகத்தான ஆத்மக்ஷேமம் செய்ததாகவும்.ஏற்படும்…

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading