Lord Sidheswarar and Govinda Gosham


”மேட்டூருக்கு அருகே, நெருஞ்சிப்பேட்டை என்றொரு கிராமம். 1928-ஆம் வருடம் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா.

ஊரின் முக்கியஸ்தரான சுந்தர ரெட்டியாருக்கும் அப்போ தைய எம்.எல்.ஏ. குருமூர்த்திக்கும் பெரியவாளிடம் அதீத பக்தியும் அபிமானமும் உண்டு. நினைத்தபோதெல்லாம் ஊர்ப் பெரியவர்களுடன் சென்று, அந்த மனித தெய்வத்தைத் தரிசித்து வருவார்கள். அப்படியிருக்க, அவரே தங்களது கிராமத்துக்கு விஜயம் செய்திருக்கிறார் என்றால், கேட்கவேண்டுமா?!

ஒருநாள்… ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, பெரியவாளைச் சுற்றி அமர்ந்திருந்தனர் ஊர்மக்களும் பக்தர்களும். அப்போது சற்று தூரத்தில், ‘கோவிந்த… கோவிந்த’ எனும் கோஷம் ஒலித்தது. உடனே பெரியவா, ‘இந்த கோவிந்த கோஷம் எங்கேயிருந்து வர்றது?’ என்று கேட்டாராம்.

”பக்கத்திலேயே பாலமலைன்னு ஒரு மலை… அதன் உச்சியில், ஸ்ரீசித்தேஸ்வரர் கோயில் இருக்கு. அந்த ஈஸ்வரனை தரிசிக்க மலையேறும் பக்தர்கள், ‘கோவிந்த, கோவிந்த’ன்னு கோவிந்த நாமாவைச் சொல்லிக்கிட்டுதான் மலை ஏறுவார் கள். கிட்டத்தட்ட 12 மைல் துரம்!’ என்று  ஊர்ப் பெரியவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

மகா பெரியவாளுக்கு ஏக ஆனந்தம். ‘ஈஸ்வரனைத் தரிசிக்க ‘கோவிந்த’ கோஷமா?!’ என்று வியந்து சிலா கித்தவர், ‘நானும் ஸ்ரீசித்தேஸ்வரரை தரிசிக்கணுமே’ என்று தனது ஆசையைக் கூறினாராம். ‘ஸ்வாமிகளுக்கு 12 மைல் மலையேறுவது கஷ்டம் ஆயிற்றே!’ என்று பக்தர்களுக்கு தயக்கம். ஆனால், மகா பெரியவரோ தயங்காமல் கிளம்பிவிட்டார்.

நம் எல்லோருக்கும் வழிகாட்டிய அந்த மகானுக்கு, ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசிக்க வழிகாட்டுவதற்காக, அன்பர்கள் குழு ஒன்றை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தார் சுந்தர ரெட்டியார்.

மலையில் 12 மைல் தூரம் ஏறிச் சென்று, சுயம்புவான ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசித்த மகா பெரியவர், ”ஒரு நாள், ஒரேயரு பக்தர், தன் சொந்தச் செலவில் இந்த ஸ்வாமிக்குக் கோயில் கட்டுவார்!’ என்றாராம். மகா பெரியவரின் அந்த தெய்வ வாக்கு அதன்பின் 62 வருடங்கள் கழித்து, 1990-ல் பலித்தது.

அந்த வருடம்… வடநாட்டு சேட்ஜி ஒருவர், ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவருக்கு அந்த ஈஸ்வரன் என்ன ஆணையிட்டாரோ… அந்த அன்பரே தனியருவராகக் கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்து முடித்து விட்டார்!”

– பரவசத்துடன் இந்தச் சம்பவத்தை விவ ரித்த அகிலா கார்த்திகேயன், இன்னொரு சுவா ரஸ்யமான விஷயத்தையும் சொன்னார்…

”முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், முழு வரியையும் பாக்கி இல்லாமல் செலுத்திய தன் குடி மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க விரும்பினார்.

மந்திரியை அழைத்து, ‘பணத்தைத் தண்ணீ ரில் கொட்டு’ என்று ஆணையிட்டார். அந்த மதியூக மந்திரி என்ன செய்தார் தெரியுமா? தகுந்த பணியாட்களைக் கொண்டு, அங்கே இரண்டு அணைகள் கட்டினாராம். இதனால்,  ஊர் செழித்தது!

மகா பெரியவா நெருஞ்சிப்பேட்டையில் தங்கியிருந்த காலத்தில், அணைகளின் நடுவே கற்களையே அடித்துச் செல்வதுபோல் பெரும் சத்தத்துடன் தண்ணீர் பாய்ந்ததாம். அங்கே ஒரு பெருமாள் விக்கிரகமும் இருப்பதைக் கண்ட  பெரியவர், அணையையும் விக்கிரகத் தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ‘இதுபத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’ என்று ஊர்ப் பெரியவர்களிடம் கேட்டிருக்கிறார்.

”ஒரு ராஜா, இங்கே வேங்கடபெரு மாளுக்கு ஆறு ஏக்கர் பூமியைக் கொடுத்ததைக் கதை கதையாகக் கேட்டிருக்கோம். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்!” என்று அவர்கள் கூற, ‘அடியிலே பொக் கிஷம்!’ என்று அந்த இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொன்னாராம் பெரியவா. அப்போது, ஊர் மக்களுக்கு பெரியவா ஏன் அப்ப டிச் சொன்னார் என்பது விளங்க வில்லை!

பல வருடங்கள் கழித்து, மேட்டூர் அணையிலிருந்து வரும் நீரில் மின்சாரம் எடுக்க ஏற்பாடு ஆனது. இன்ஜினீயர்கள் அந்த இடத்தில் பள்ளம் தோண்டிய போது, பெருமாள் விக்கிரகத்தையும் அகற்ற வேண்டியதாயிற்று. வெகு ஜாக்கிரதையாக பெருமாள் விக்கிரகத்தை அகற்றி, 25 அடி ஆழத் துக்குப் பள்ளம் தோண்டி, அஸ்திவாரப் பணி யைத் துவங்கியபோதுதான்… ‘அடியிலே பொக் கிஷம்’ என்று மகா பெரியவாள் சொன்னதன் அர்த்தம் புரிந்தது ஊர்க்காரர்களுக்கு!

முதலில், அனுமன் விக்கிரகம் கிடைக்க, அடுத் தடுத்து ஸ்ரீராமன், சீதாதேவி விக்கிரகங்களும்  கிடைத்தனவாம். சிலிர்த்துப்போன சுந்தர ரெட்டி யாரும் இன்னும் சில ஊர்ப் பெரியவர்களும், அந்த விக்கிரகங்களை ஒரு டெம்போவில் ஏற்றிக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார்கள். மகா பெரிய வரைத் தரிசித்து, விஷயத்தைச் சொல்லி அந்த

விக்கிரகங்களை வைத்துக் கோயில் கட்ட ஆசி வேண்டினர். மகாபெரியவாளும், ”உடனே செய் யுங்கள். சீக்கிரமே நடக்கும்!” என்று அருளாசி வழங்கினார்.

அனைவரும் கிளம்பும்போது, பெரியவர் அவர்களை அழைப் பதாகக் கூப்பிட, மீண்டும் அவர் கள் உள்ளே வந்தனர். ”நான் ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசிக்க மலை ஏறினப்போ, வழிகாட்டியா வந்த பெருமாள் கவுண்டர் நன்னா இருக்காரா?’ என்று கேட்டார் பெரியவர். ஒரு பாமர வழிகாட்டியை, 70 வருடங்கள் கழித்தும் பெயர் முதற்கொண்டு நினைவு வைத்திருந்து, அன் போடு நலம் விசாரிப்பதை எண் ணிச் சிலிர்த்தனர் அவர்கள்.

”கவுண்டர் நன்றாக இருக்கிறார். 95 வயது ஆகிறது” என்று அன்பர்கள் பதில் அளிக்க, பெரி யவர் தன் முன் இருந்த தாம்பாளத்தில் இருந்த புது வஸ்திரங்களை அவர்களிடம் காட்டி, ‘இந்த வஸ்திரங்களைக் கொண்டுபோய்ப் பெருமாள் கவுண்டரிடம் நான் கொடுத்ததாகக் கொடுங்கோ. நான் அவரை ரொம்பவும் விசாரிச்சேன்னு சொல்லுங்கோ!’ என அன்புடன் கூறினார். பெரு மாள் கவுண்டர் எத்தனை பாக்கியம் செய்திருக் கிறார் என்று உருகிப் போனார்கள் நெருஞ்சிப் பேட்டை அன்பர்கள்.

எங்கோ, எப்போதோ தனக்கு வழிகாட்டியதை மறக்காமல், அந்த அன்பரை நினைவு வைத்திருந்து, தன் மரியாதையையும் அன்பையும் காட்டினாரே… பெரியவாளின் கருணையே கருணை!”
Categories: Devotee Experiences

Tags: ,

1 reply

  1. would be glad if i receive this article in English

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: