Beyond everything…..

ஒருமுறை சென்னையில் ஹிந்துமத மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் எல்லா மடத்தலைவர்களும் ஆதீனங்களும் கலந்து கொள்வதாய் ஏற்பாடு.முதல்நாள் அந்த மாநாட்டுக்கு மஹாஸ்வாமிகளை தலைமை தாங்கும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஸ்வாமிகளும் சரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்.இதற்கிடையில் அன்று இரவு மற்ற மாடதிபதிகளும் ஆதீனங்களும் வேறுமாதிரி முடிவெடுத்தனர். அந்தமாநாட்டுக்க்கு ஸ்வாமிகளை தலைமைதாங்கவிடக்கூடாது என்று முடிவாகி ஒரு ஆதீனத்தை தலைமை தாங்க வைப்பது என்று முடிவெடுத்துவிட்டனர். இது விஷயம் ஸ்வாமிகள் காதுக்கு எட்டியது. பக்தர்கள் அந்த மாநாட்டுக்கு ஸ்வாமிகளைப் போகவேண்டாம் என்று தடுத்தனர்.ஆனால் ஸ்வாமிகளோ வாக்களித்தபடி போகத்தான் வேண்டும் கூறி மறுநாள் காலை மாநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பக்தர்கள் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் அபசாரம் நிகழ்ந்து விடக் கூடாதே என்று மனம் பதைபதைக்க அவருடன் சென்றனர்.
மாநாடு துவங்கியதும் முதல் பணி தலைவரை தேர்ந்தெடுப்பது. அமைப்பாளர் கூட்டத்தில் பங்கு கொள்ள வந்திருந்தவர்களைப் பார்த்து மாநாட்டு தலைவரை முன்மொழியச் சொன்னார். அரங்கத்தில் அமைதி குடிகொண்டது. ஒருவர் எழுந்து ………ஆதீனத்தின் பெயரை மாநாட்டுத் தலைவராக நான் முன் மொழிகிறேன் என்றார். உடனே கொஞ்சம் சலசலப்பு மாநாட்டின் பந்தலில்.ஆனால் அதை அடக்கும் வண்ணம் “‘நான் அதை ஆமோதிக்கிறேன்” என்று ஒரு மெல்லிய குரல் அவையிலிருந்து எழுந்தது. குரல் வந்த திசையை எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.ஆம் அது “‘தெய்வத்தின் குரல்தான்” மஹா பெரியவரே அதை ஆமோதித்து அந்த சிக்கலான விஷயத்தை லகுவாக சமாளித்து விட்டார் ,பட்டம் பதவி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மஹான்.



Categories: Devotee Experiences

Leave a Reply

%d bloggers like this: