Navaratri Special – Soundaryalahari – Day 8

  SOUNDARYALAHARI SLOKA NO.28:-

सुधामप्यास्वाद्य प्रतिभयजरामृत्युहरिणीं
विपद्यन्ते विश्वे विधिशतमखाद्या दिविषदः ।
करालं यत्क्ष्वेलं कबलितवतः कालकलना
न शम्भोस्तन्मूलं तव जननि ताटङ्कमहिमा ॥ २८ ॥

SLOKA NO.28:-
“Sudhaamapyaasvaadya Prathibhayajaraamruthyuharini
Vipadyanthe Vishve Vidhishathamakhaadyaa Divishadaha!
Karaalam Yathkshvelam Kabalithavathaha Kaalakalanaa
Na Shambhosthanmoolam Thava Janani Thaatankamahima!”
हे जननि he janani ஹே ஜனனி – ஹே தாயே! ஜகன்மாதாவே! O Mother! O Divine Mother! Mother of the universe!
विश्वे viśve ஸகலமான all; the entire universe / all beings
विधिशतमखाद्या vidhi-śatamakhādyāḥ ப்ரம்மா, இந்திரன் முதலான Brahmā, Indra, and others
दिविषदः diviṣadaḥ தேவர்கள் the gods; the celestial beings
प्रतिभय pratibhaya பயங்கரமான dreadful; terrifying
जरामृत्युहरिणीं jarā-mṛtyu-hariṇīm கிழத்தன்மை, சாவு இவை இரண்டையும் நீக்குகின்ற that which removes old age and death
सुधाम् sudhām அமிருதத்தை nectar; ambrosia; the nectar of immortality
आस्वाद्यापि āsvādyāpi பானம் செய்தும் even after drinking / partaking of
विपद्यन्ते vipadyante நாசமடைகிறார்கள் they perish; they meet with destruction
करालम् karālam கடுமையான terrible; dreadful; fierce
क्ष्वेलम् kṣvelam காளகூட விஷத்தை the Kālakūṭa poison
कबलितवतः kabalitavataḥ விழுங்கின of the one who swallowed
शम्भोः śambhoḥ சிவனுக்கு of Śambhu, Lord Śiva
कालकलना न kāla-kalanā na நாசம் என்பது இல்லை there is no reckoning of death / no destruction
इति यत् iti yat என்பது யாதொன்று உண்டோ whatever is the reason that this is so
तन्मूलं tan-mūlam அதற்குக் காரணம் the root/cause of that
तव ताटङ्कमहिमा tava tāṭaṅka-mahimā உம்முடைய தாடங்கத்தின் மஹிமைதான் is the greatness/glory of Your tāṭaṅka (ear ornament)

The same idea expressed in the śloka beginning “Viriñci Pañcatvam” is explained here in a different manner.

O Mother of the Universe! All the Devas, including Brahmā and Indra, although they have drunk Amṛta, the nectar that removes old age (jarā) and death, nevertheless meet with death at the time of the Mahāpralaya, the Great Dissolution. Your husband Śiva, on the other hand, although he consumed the terrible Kālakūṭa poison, remains untouched by death. This is due to the glory of Your Tāṭaṅka, the sacred ear ornament that signifies Your Pātivratya (devotion to one’s husband), Māṅgalya (auspiciousness of the married state), and related virtues.

This śloka describes the greatness of Ambikā’s earrings. All the Devas who consumed Amṛta disappear at the time of Mahāpralaya. But Sadāśiva, the Lord of Ambikā, continues to shine eternally even though He consumed poison.

When the Ocean of Milk was churned, the Hālāhala poison emerged. Śiva drank the poison, whereupon the Goddess, who was beside Him, clasped His throat with Her hands so that the poison would not descend below His chest. The poison thus remained in Lord Śiva’s throat and turned that region blue. It is well known that this is why He came to be called Nīlakaṇṭha, “the Blue-Throated One.”

In the Śivānandalaharī (verse 32), wonder is expressed: “How did Śiva look upon that terrible poison? How did He take it in His hand? How indeed did He place it upon His tongue?” It would appear that the answer to this wonder is being supplied here. This passage states that the reason Paramaśiva escaped death even after consuming the poison is the glory of Ambikā’s earrings.

In the Kalyāṇa Vṛṣṭi Stava Stotra (verse 6), the question is raised as to why the terrible poison, despite being consumed by Paramaśiva, did not harm Him. The explanation given there is that the Goddess resides as one half of Śiva’s body and generates the cooling effect of Amṛta, thereby protecting Him.

The ear, being one of the organs of knowledge (Jñānendriyas), represents the form of Oṃkāra. When the ear is pierced, the bindu, represented by “ṃ,” is added. Otherwise, it would remain merely “O.” Ambikā wears Tāṭaṅkas upon Her ears.

The Tāṭaṅka, also called ōlai or tōḍu, is one of the principal Saubhāgya Ābharaṇas, the auspicious ornaments associated with married women. The glory of the Tāṭaṅka is regarded as a cause of the husband’s longevity. Ambikā wears the Śrī Chakra itself as Her Tāṭaṅka. Thus, Ambikā’s Tāṭaṅka is none other than the Śrī Chakra.

The Sun and the Moon are deities who signify Time. Day after day, Time consumes the lives of beings in this world. Yet the Sun and Moon themselves become subordinate to the Goddess and serve as Her ornaments. Is not our Akhilāṇḍeśvarī the One who stands beyond Time itself?

For this reason, Aruṇāmodinī states that married women devoted to their husbands should never remain without an ornament in their ears. An ornament worn in the ear is called an ōlai. In ancient times, it was customary to roll a strip of palm leaf and wear it in the ear. Even an ear ornament made of diamonds continues to be called a vaira ōlai, or “diamond ōlai.”

The Goddess Akhilāṇḍeśvarī, who presides at Tiruvanaikaval, wears the Śrī Chakra itself as Her Tāṭaṅka.

It is stated that repeated recitation of this śloka in large numbers bestows the benefit of protection from untimely death, unnatural death, danger from poison, accidents, and all diseases.


ஸுதா⁴மப்யாஸ்வாத்³ய ப்ரதிப⁴யஜராம்ருʼத்யுஹரிணீம்ʼ
விபத்³யந்தே விஶ்வே விதி⁴ஶதமகா²த்³யா தி³விஷத³꞉ .
கராலம்ʼ யத்க்ஷ்வேலம்ʼ கப³லிதவத꞉ காலகலனா
ந ஶம்போ⁴ஸ்தன்மூலம்ʼ தவ ஜனனி தாடங்கமஹிமா .. 28 ..

हे जननि – ஹே ஜனனி – ஹே தாயே! ஜகன்மாதாவே!
विश्वे – ஸகலமான
विधिशतमखाद्या – ப்ரம்மா, இந்திரன் முதலான
दिविषदः – தேவர்கள்
प्रतिभय – பயங்கரமான
जरामृत्युहरिणीं – கிழத்தன்மை, சாவு இவை இரண்டையும் நீக்குகின்ற
सुधाम् – அமிருதத்தை
आस्वाद्यापि – பானம் செய்தும்
विपद्यन्ते – நாசமடைகிறார்கள்
करालम् – கடுமையான
क्ष्वेलम् – காளகூட விஷத்தை
कबलितवतः – விழுங்கின
शम्भोः – சிவனுக்கு,
कालकलना न நாசம் என்பது இல்லை
इति यत् – என்பது யாதொன்று உண்டோ,
तन्मूलं – அதற்குக் காரணம்
तव ताटङ्कमहिमा – உம்முடைய தாடங்கத்தின் மஹிமைதான்.

“விரிஞ்சி பஞ்சதவம்” என்ற ச்லோகத்தினால் சொல்லப்பட்ட விஷயத்தையே பிரகாராந்தரமாகச் சொல்லுகின்றார்.

ஓ ஜகன்மாதாவே! ஸகலமான ப்ரம்மா, இந்திரன் முதலான தேவர்களெல்லாம் ஜரா(கிழத்தன்மை), மரணங்களை நீக்குகின்ற அமிருத்தை பானம் செய்தவர்களாயிருந்தும், மஹாப்பிரளயகாலத்தில் மரணமடைகிறார்கள். உமது பர்த்தாவான சிவனோ, கடுமையான காளகூட விஷத்தை புசித்தவராகயிருந்தும் மரணமடையாமலிருப்பது உமது பாதிவ்ரத்யம் மாங்கல்யம் முதலியவைகளைக் காட்டுகிற தாடங்கத்தின் மஹிமைதான்.

இந்த ச்லோகம் அம்பிகையின் காதணிகளின் மேன்மையைக் குறிக்கின்றது. அம்ருதமுண்ட எல்லாத் தேவர்களும் மஹாப்ரளய காலத்தில் மறைந்து விடுகிறார்கள். ஆனால் அம்பிகையின் பதியான ஸதாசிவன் விஷத்தையுண்ட போதிலும் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட ஆலகால விஷத்தை சிவன் பருகவே, அருகிலிருந்த தேவி அந்த விஷம் நெஞ்சிற்குக் கீழே போகாமல், தன் கைகளால் அவருடைய கழுத்தை இறுக்கப் பிடிக்கவே, அவ்விஷம் சிவபெருமான் கழுத்திலேயே தங்கி, அப்பகுதியை நீலமாக்கியதும், அதனால் அவருக்கு ‘நீலகண்டன்’ எனப் பெயர் வந்ததும் யாவரும் அறிந்ததே. ‘சிவானந்தலஹரி’யில் (சு.32) ‘உக்ரமான அந்த விஷத்தை சிவன் எப்படிப் பார்த்தாரோ, எப்படிக் கையில் எடுத்தாரோ! எப்படித்தான் நாக்கில் வைத்தாரோ! என்று ஆச்சர்யப்படுகிறார். அதற்குப் பதில் இங்கு கூறியிருக்கிறார்போலும். இப்படி விஷமுண்டும் மரணத்தினின்று பரமசிவன் தப்பித்ததற்குக் காரணமே அம்பிகையின் காதணிகளின் மஹிமையென்று இங்கு குறிப்பிடுகிறார். கல்யாண வ்ருஷ்டி ஸ்தவ ஸ்தோத்திரத்தில் (சு.6) உக்கிரமான விஷத்தை சாப்பிட்டும் அது ஏன் பரமசிவனை பாதிக்கவில்லை என்று வினவி, அதற்குக் காரணம் தேவி சிவனுடைய சரீரத்தில் பாதி பாகமாக இருந்துகொண்டு அமிருதம் என்னும் சீதளத்தை உண்டுபண்ணுவதுதான் என்று சொல்லியிருக்கிறார்.
ஞானேந்திரயமான காது, ஓம்கார ரூபம். காது குத்தினால் ‘ம்’ என்ற பிந்து சேரும். இல்லையேல் வெறும் ‘ஓ’வாகவே இருக்கும். தமது காதுகளில் அம்பிகை தாடங்கத்தை அணிந்திருக்கிறாள்.
ஸ்திரீகளுக்கு முக்கியமான ஸௌபாக்ய ஆபரணங்களில் ஒன்று தாடங்கம் (ஓலை அல்லது தோடு). இந்த தாடங்க மஹிமையை புருஷர்களின் தீர்காயுளுக்கு காரணம். அம்பிகை ஸ்ரீசக்ரத்தையே தாடங்கமாக அணிந்து கொண்டிருக்கிறாள். அம்பிகையின் தாடங்கம் ஸ்ரீசக்ரமே.
காலத்தைக் குறிக்கும் தேவர்களான சூரிய சந்திரர்கள் உலகில் உள்ளவர்களின் உயிர்களை நாள்தோறும் விழுங்குபவர்கள். ஆயினும் அவர்கள் தேவியினிடம் அடங்கி அவளுடைய ஆபரணங்களாகவும் ஆகி விடுகின்றனர். காலத்தைக் கடந்து நிற்பவளன்றோ நம் அகிலாண்டேஸ்வரி.
இதனால்தான் பதிவிரதைகள் ஒருபோதும் காதில் பூஷணம் இல்லாமல் இருக்கக்கூடாது [என்கிறது அருணா மோதினி]. காதில் அணிவதை ஓலை என்பார்கள். பனை ஓலையைச் சுருட்டி காதில் அணிவது பழங்கால வழக்கம். வைரத்தால் ஆன தோடும் வைர ஓலை என்றே வழங்கப்படுகிறது. திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பிகை அகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்ரத்தையே தாடங்கமாக அணிந்துகொண்டிருக்கிறாள்.
இந்த ச்லோகத்தை அதிக ஆவிருத்தி செய்தால் அகால மரணம், இயற்கைக்கு விரோதமான மரணம், விஷபயம், விபத்து, எல்லா நோய்கள் ஆகியவற்றிலிருந்து தப்புதல் என்ற பலன் கிடைக்கும்.

Loading

Leave a Reply