Navaratri Special – Soundaryalahari – Day 2

सौन्दर्यलहरी​-7

7. அம்பிகையின் ஸ்தூல வர்ணனை

क्वणत्काञ्चीदामा करिकलभकुम्भस्तननता परिक्षीणा मध्ये परिणतशरच्चन्द्रवदना ;

धनुर्बाणान्पाशं सृणिमपि दधाना करतलैः पुरस्तादास्तां नः पुरमथितुराहोपुरुषिका . ७ .

க்வணத்காஞ்சீதா³மா கரிகலப⁴கும்ப⁴ஸ்தநநதா
பரிக்ஷீணா மத்⁴யே பரிணதஶரச்சந்த்³ரவத³நா ;
த⁴நுர்பா³ணாந்பாஶம் ஸ்ருணிமபி த³தா⁴நா கரதலை꞉
புரஸ்தாதா³ஸ்தாம் ந꞉ புரமதி²துராஹோபுருஷிகா . 7 .

क्वणत्काञचीदामा – க்வணத்காஞசீதா³மா – ஜல் ஜல் என்று சப்திக்கின்ற ஒட்டியாணத்தையுடையவளாயும்,

करिकलभकुम्भस्तननता – கரிகலப⁴கும்ப⁴ஸ்தநநதா – முப்பது வயதுள்ள மதயானை கும்பஸ்தலம் போலிருக்கின்ற தனபாரத்தினால் கொஞ்சம் வணங்கினவளாயும்,

मध्ये परिक्षीणा –          மத்⁴யே பரிக்ஷீணா – மிகவும் கிருசமான (மெல்லிய) இடுப்பையுடையவளாயும்,

परिणतशरच्चन्द्रवदना –   பரிணதஶரச்சந்த்³ரவத³நா – பரிபூரணமான சரத் கால சந்திரன் போலிருக்கின்ற முகமுள்ளவளாயும்,

धनुः – த⁴நு꞉ -(கரும்பு) வில்லையும்,

बाणान्       பா³ணான் – (புஷ்ப) பாணங்களையும்,

पाशं – பாஶம் – பாசாயுதத்தையும்,

सृणिमपि – ஸ்ருணிமபி – ஈட்டியையும்

करतलैः – கரதலை꞉ – நான்கு கைகளால்

दधाना – த³தா⁴நா – தரிக்கின்றவளாயும்

पुरमथितुः – புரமதி²து꞉ – திரிபுராந்தகனான ஈச்வரனுடைய

आहोपुरुषिका – ஆஹோபுருஷிகா – அகங்கார ரூபியாகிற தேவீ

(मणिपूरात् – மணிபூராத் – மணிபூரமென்கிற தீவிலிருந்து,)

नः – ந꞉ – எங்களுடைய,

पुरस्तात् – புரஸ்தாத் – எதிரில் (அதாவது) ஹிருதயகமலத்தில்,

आस्तां – ஆஸ்தாம் – இருக்கட்டும்.

ஸஞ்சரிக்கும்போது ஜல் ஜல் என்று சப்திக்கின்ற ஒட்யாணமுள்ளவளாயும் யானையின் கும்ப ஸ்தலம் போன்ற ஸ்தனபாரத்தால் கொஞ்சம் குனிந்த முன் சரீரமுள்ளவளாயும், ரொம்பவும் கிருசமான இடுப்புள்ளவளாயும், சரத்கால பூர்ணிமா சந்திரன்போல விளங்குகின்ற முகமண்டலமுள்ளவளாயும், கரும்புவில், புஷ்பபாணம், பாசக்கயிறு, ஈட்டி இந்த நான்கையும் நாலு கைகளினால் தரித்துக்கொண்டிருக்கின்றவளாயும், ருத்திரனுடைய அஹங்கார ரூபியாயுமிருக்கின்ற பரமேச்வரியானவள் மணித்தீவிலிருந்து எங்கள் மனமாகிய ஹிருதயகமலத்தில் பிரவேசிக்கட்டும்.

உபாஸனாவிதிப்படிக்கு மாநஸ பூஜைசெய்ய தேவியை ஹிருதயகமலத்தில் பிரவேசிக்கச் செய்ய வேண்டும்.

அம்பிகையின் ரூப வர்ணனை இது. இந்த சுலோகத்தில் மணிபூர சக்ரத்திலிருந்து எல்லாவிதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, அவ்விடமிருந்து புறப்பட்டு, ஹ்ருதய மண்டலத்திலுள்ள அநாஹத சக்கரத்துக்கு வருகையில் உள்ள அம்பிகை வர்ணிக்கப்படுகிறாள்.  நாம் தியானம் செய்யும்போது தன்னுடைய நிஜ ஸ்வரூபத்துடன் தர்சனம் கொடுக்கவேண்டுமென்று ஆச்சார்யாள் பிரார்த்திக்கிறார். இந்த சுலோகத்தில் சொல்லப்பட்டபடி அம்பிகையை த்யானம் செய்யவேண்டும் என்பது கருத்து. அநேகவித ரத்தினங்கள், தங்கச் சலங்கைகள் இழைத்த தங்க ஒட்டியாணம் இடுப்பில். நடக்கும்போது ஜல் ஜல் என்று சப்திகின்றது. ஸ்தன பாரம் காரணமாக அம்பிகை சிறிது வளைந்து காணப்படுகிறாள். இடுப்பு என்பது இல்லையோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. நான்கு கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்புவில் இவைகளுடன் காணப்படுகிறாள். இவளுடைய அழகு சிவபெருமானுடைய பிரதாபத்தையும் அடக்கி விடுகிறது. ‘அஹம்’ என்பது தேவியின் ரூபம். பரமசிவனின் அஹங்கார ரூபிணியாக அம்பிகை விளங்குகிறாள். ‘அஹோ’ என்பது ஸாதாரணமாக ஆச்சர்யத்தைக் குறிக்கும் பதம். ஆனால் இங்கு ‘அஹம்’ என்ற பிரத்யாகாத்மாவைத்தான் குறிக்கிறது. ஆஹோபுருஷிகா என்றால், காமேச்வராபின்னமான பிரத்யாகாத்மஸ்வரூபிணி என்று பொருள். கரும்பு வில்லையும் புஷ்பங்களையும் மன்மதன் உபயோகிக்கும்போது மோகம் ஏற்படுகிறது. அம்பிகை இதை மநுஷ்யர்களுக்கு காமத்தைக் கட்டுப்படுத்தவும் மனதைக் கட்டுப்படுத்தவும் வைத்திருக்கிறாள். இந்த மந்திர உபாஸனை மூலம் ராஜ வசியம், சத்ரு வசியம் ஏற்படும்.

ஸௌந்தர்யலஹரியில் 42-வது (கதைர் மாணிக்யத்வம்) முதல் 91-வது (பதந்யாஸ க்ரீடா) வரை அம்பிகையின் ஸ்தூல ரூபம்தான் வர்ணிக்கப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாமாவில் 6-வது நாமா முதல் 63-வது நாமா முடிய இவ்வடிவத்தின் வர்ணனைதான். இறை வழிபாட்டில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு இவ்வடிவ வழிபாடே தக்க பலன் தருவதாகும். இவ்வடிவத்தை இடைவிடாமல் தியானிப்பதால் தன் மனமே கடவுள் மயமாகிறது.


“Kvanathakancheedhaamaa Karikalabhakumbhasthananathaa
Pariksheenaa Madhye Parinathashcharaschandravadanaa!
Dhanurbaanaan Paasham Srunimapi Dadhaanaa Karathalaihi
Purasthaadaasthaam Nah Puramadhithuraahopurushikaa!”

क्वणत्काञचीदामा – Kvaṇatkāñcīdāmā: க்வணத்காஞசீதா³மா – She who wears a waist ornament that jingles as she moves.

करिकलभकुम्भस्तननता – Karikalabhakumbhastananatā:-கரிகலப⁴கும்ப⁴ஸ்தநநதா – She who bends slightly under the weight of Her breasts, which resemble the frontal globes of a young elephant.

मध्ये परिक्षीणा – Parikṣīṇā madhye – மத்⁴யே பரிக்ஷீணா – She who has an exceedingly slender waist.

परिणतशरच्चन्द्रवदना – Pariṇataśaraccandravadanā – பரிணதஶரச்சந்த்³ரவத³நா – She whose face resembles the full autumn moon.

धनुः – Dhanuh – த⁴நு꞉ – The sugarcane bow.

बाणान् – Bāṇān – பா³ணான் – The flower arrows.

पाशं – Pāśam – பாஶம் – The noose.

सृणिमपि – Sṛṇimapi – ஸ்ருணிமபி – The goad.

करतलैः – Karatalaiḥ – கரதலை꞉ – With Her four hands.

दधाना – Dadhānā – த³தா⁴நா – She who holds.

पुरमथितुः – Puramathituḥ – புரமதி²து꞉ – Of Lord Shiva, the destroyer of the three cities.

आहोपुरुषिका – Āhopuruṣikā – ஆஹோபுருஷிகா – The Goddess who embodies the sense of “I” or ego.

(मणिपूरात् – Maṇipūrāt – மணிபூராத்) – From the Manipura Chakra.

नः – Naḥ – ந꞉ – Our.

पुरस्तात् – Purastāt – புரஸ்தாத் – Before us, that is, in the lotus of the heart.

आस्तां – Āstāṃ – ஆஸ்தாம் – May She abide.

As She moves, Her waist ornament jingles melodiously. She bends slightly under the weight of Her breasts, which resemble the frontal globes of an elephant. She has an exceedingly slender waist and a face radiant like the full autumn moon. She holds a sugarcane bow, flower arrows, a noose, and a goad in Her four hands. May the Supreme Goddess, who embodies the ego of Lord Shiva, the destroyer of the three cities, proceed from Manidweepa and enter the lotus of our hearts, which represents the mind.

According to the prescribed method of worship, the Goddess must be invoked into the lotus of the heart to perform mental worship (Manasa Puja).

This is a description of the form of Ambika. In this sloka, the Goddess is described as She emerges from the Manipura Chakra, adorned with all kinds of ornaments, and proceeds toward the Anahata Chakra, situated in the region of the heart.

When we meditate, the Acharya prays that the Goddess should grant us a vision of Her true, essential nature. The intention is that we should meditate upon Ambika in the manner described in this sloka.

Around Her waist is a golden girdle adorned with numerous precious stones and golden bells. As She walks, it produces a jingling sound. Because of the weight of Her breasts, the Goddess appears slightly bent. Her waist is so slender that one might wonder whether She has a waist at all!

She appears with four hands holding the noose, the goad, the flower arrows, and the sugarcane bow. Her beauty surpasses even the splendour and majesty of Lord Shiva.

The sense of “I” (Aham) is the form of the Goddess. Ambika manifests as the embodiment of the ego of Paramashiva. Ordinarily, the word “Aho” expresses wonder or astonishment. Here, however, it refers to “Aham,” the innermost Self. Thus, Ahopurushika means the embodiment of the innermost Self, inseparable from Kameshwara.

When Manmatha, the god of love, uses the sugarcane bow and flower arrows, they create attraction and delusion. The Goddess possesses these same implements to help human beings restrain desire and control the mind.

Through the worship of this mantra, it is said that one can attain Raja Vashyam (the ability to win the favour of rulers) and Shatru Vashyam (the ability to overcome or bring adversaries under control).

From the 42nd sloka of Soundarya Lahari (Gatair Manikya Tvam) to the 91st sloka (Pada Nyasa Kreeda), the manifest, physical form of the Goddess is described. Similarly, in the Lalita Sahasranama, the description of this form extends from the sixth name through the 63rd name.

For those who are at the beginning of their spiritual practice, worship of this manifest form is particularly beneficial. By meditating continuously upon this form, the mind itself becomes completely absorbed in the Divine.

This sloka will directly link the devotee to the Supreme Goddess of Kanchipuram, Kamakshi. She is the dominant One “Purushika” and She literally takes over the devotee and gives her/ him a delicious taste of Her “saannidhyam”. Messages, events related to Kanchi Kamakshi will fill the life of the devotee and she/ he is constantly in a state of bliss just thinking about Her.

Loading

Leave a Reply