श्रीशिवानन्दलहरी -६८
अमितमुदमृतं मुहुर्दुहन्तीं
विमलभवत्पदगोष्ठमावसन्तीम्।
सदय पशुपते सुपुण्यपाकां
मम परिपालय भक्तिधेनुमेकाम् ॥ ६८ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -68
அமிதமுத³-ம்ருʼதம்ʼ முஹுர்து³ஹந்தீம்ʼ,
விமலப⁴வத், பத³கோ³ஷ்ட²மா – வஸந்தீம்।
ஸத³ய பஶுபதே, ஸுபுண்ய-பாகாம்ʼ,
மம பரிபாலய ப⁴க்திதே⁴நுமேகாம் ॥ (68)
सदय! पशुपते! अमित-मुद् (त्)-अमृतं मुहुः दुहन्तीं विमल-भवत्-पद-गोष्ठम् आवसन्तीं सुपुण्य-पाकां मम भक्ति-धेनुम् एकां परिपालय॥
भक्तिपरिपालनं प्रार्थयते – अमितेति। हे सदय दयासहित! पशुपते पशुपालक! अमितमुदमृतम् अमितमुद् अपरिच्छिन्नानन्दः सैव अमृतं क्षीरं तत् दुहन्तीं[1] प्रपूरयन्तीं विमलभवत्पदगोष्ठं भवतः पदमेव गोष्ठं गोस्थानं विमलं तत् च भवत्पदगोष्ठं च तत् आवसन्तीं तत्र वासं कुर्वतीमित्यर्थः। “उपान्वध्याङ्वसः” इति आधारस्य कर्मसंज्ञया द्वितीया। सुपुण्यपाकां[2] विमलपुण्यफलभूताम् एवंभूतां मम मे भक्तिघेनुं भक्तिरेव धेनुस्ताम् एकां परिपालय पुष्य। यथा वा लोके कश्चन धेनु- जन्यफलं भोक्तुकामः तद्रक्षणासमर्थः सन् तद्रक्षणसमर्थं कंचन गोमन्तं दयालुं धेनुरक्षणाय प्रार्थयते तद्वत् त्वद्विषयकमद्भक्तिपरिपालनासमर्थः तत्फलभोगकामः अहं भक्तिपोषणसमर्थं त्वां तत्पुष्टिं संपादयेति प्रार्थयामीति प्रार्थयितुर्भावः ॥६८॥[3]
[1] मुहुर्दुहन्तीमिति साधारणापेक्षया विशेषः । व्यतिरेकालङ्कारः ।
[2] पाकाम् – “पोतः पाकोऽर्भको डिम्भः पृथुकः शावकः शिशुः” इत्यमरः । अत्र श्लिष्टरूपकम् ।
[3] छन्दः पुष्पिताग्रा ।
பசுவையுடையவன் மேய்ப்பவனைத் தேடுதல்போலத் தன்னிடமுள்ள சிவபக்தியென்னும் பசுவைக்காக்கப் பசுபதியை வேண்டுகின்றனர்.
सदय - ஸத³ய – ஹே நல்ல தயையுடன் கூடியவரே!
पशुपते – பஶுபதே – ஹே பசுபதே!
अमितमुदमृतम् – அமிதமுத³ம்ருʼதம்- (எனது பக்தி என்பது ஒரு பசுவல்லவா?) அந்த பக்தி கரைகடந்த சந்தோஷமான அம்ருதம் என்ற பாலை
मुहुः – முஹு꞉ – எப்பொழுதும் (அடிக்கடி)
दुहन्तीम् – து³ஹந்தீம் – கறந்துகொண்டே இருக்கின்றது
विमलभवत्पदगोष्ठं आवसन्तीम् – விமலப⁴வத்பத³கோ³ஷ்ட²ம்ʼ ஆவஸந்தீம் – மலரஹிதமான (பரிசுத்தமான) உமது திருவடிகள் என்ற தொழுவத்தில் கட்டி வசித்துவருவது.
सुपुण्यपाकाम् – ஸுபுண்யபாகாம் – உயர்வான புண்ணியம் என்பதற்கு காரணமாயிருக்கிறது.
मम भक्तिधेनुं एकाम् – மம ப⁴க்திதே⁴நும்ʼ ஏகாம் – ஆகையால் எனது பக்தி என்ற அந்தஒரு பசுவைக்
परिपालय – பரிபாலய – காப்பாற்றுவீராக.
ஏ பசுபதியே! திருவருளே திருமேனியாகவுடைய உமது திவ்விய சமுகத்தில் அடியேன் பிரார்த்திப்பது யாதெனில்? ஆநந்தமாகிய அமிர்தத்தை வரையறையின்றிப் பொழிவதும், நின் திருப்பாதமாகிய கொட்டிலில் அடைக்கலமாகக் கட்டுப்பட்டுள்ளதும், பல அரிய பயன்களை யளிப்பதற்குப் பின்னிடையாததும், எனது நிஷ்காமிய கர்மத்தின் பயனாக யான் அடைந்துள்ளதுமாகிய, எனது பேரன்பாகிய பக்தி என்ற பசுவை, உமக்கு அர்ப்பணம் செய்கின்றேன். வேண்டினார்க்கு விரும்பிய விதமே வரையின்றி விரைந்தருளும் வள்ளலாகிய நீர், பிரீதியுடன் அதை ஏற்றுக்கொண்டு காப்பாற்றிக் கடாக்ஷித்தல் வேண்டும் (என்பதாம்).
எல்லையில்லாக்கடல்போல் கருணையுடன் மக்களாகிற பசுக்களை பரிபாலிக்கின்ற ஹே பசுபாலக! ஒருவன் ஒரு பசுவைக் காப்பாற்றி அதன் அம்ருதமயமான பாலைப் பருகி அனுபவித்து வருகிறான். காலப்போக்கில் அவன் அப்பசுவைக் காப்பாற்ற வழியில்லாதவனாகி விடுகிறான். அப்பொழுது அவன் அப்பசுவை அநேகம் பசுக்களை வைத்து போஷிக்கின்ற ஒரு தனவந்தனிடம் விட்டுவிடுகிறான். அது போலவே ஹே பசுபதே என்னிடமும் ஒரு பசு இருக்கிறது. பத்தி என்ற அப்பசுவை நான் காப்பாற்றி வருகிறேன். அளவில்லாத ஆனந்தம் என்ற பாலை அடிக்கடி அது சுரக்கிறது. அதை நான் கறந்து பருகி வருகிறன். மிக சுத்தமானதும் அழுக்கே இல்லாததுமான உனது திருவடித் தாமரை என்ற கொட்டிலில் அதை விட்டிருக்கிறேன். அப்பசு ஆனந்தமாக அங்கே வாஸம் செய்கிறது. முன்ஜன்மாக்களில் நான் செய்த புண்யத்தின் பயனாக கிடைத்த அந்த பக்தி என்ற எனது பசுவை மட்டும் நீ போஷித்து காப்பாற்ற வேண்டும்.
உலகில், பசுவை வளர்க்க சக்தியற்ற ஒருவன் பல பசுக்களை வளர்த்து வருகின்றவனிடம் தன் பசுவை வளர்ப்பதற்காக ஒப்படைப்பதுபோல், ஸ்ரீ பரமேச்வர பக்தியாகிற பசுவை, பசுக்களுக்கெல்லாம் பதியான ஸ்ரீ பரமேச்வரனே இரக்ஷித்து வரவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறார். பக்தியாகிற பசு எப்போதும் ஆனந்தமாகிற பாலை கறந்து கொண்டே இருக்கிறது. பல ஜென்மங்களில் செய்த புண்ணிய வசத்தால்தான் அது கிடைக்கக்கூடும். ஸ்ரீபரமேச்வர சரணங்களாகிற பரிசுத்தமான கொட்டிலில் அது வாசஞ்செய்கிறதாம்.
இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்களுக்கு சிவபக்தி மேலோங்கி, அவர்கள் ப்ருஹ்மானந்த ரஸத்தை அநுபவிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகம் ப்ரமாணம்.
सदय = हे दयालु !
पशुपते = हे पशुपति !
सुपुण्यपाकाम् = महत् पुण्य परिपाक से प्राप्त,
विमलभवत्पदगोष्ठम् = आपके निर्मल चरणरूप बाडे में,
आवसन्तीम् = रहने वाली,
मुहुः = बार-बार,
अमितमुदमृतम् = निःसीम आनन्दरूप दूध,
दुहन्तीम् = देने वाली,
मम = मेरी,
एकाम् = अकेली (असहाय),
भक्तिधेनुम् = भक्तिरूप गाय का,
परिपालय = (आप) हर तरह से पालन कीजिये ।
Dr.T.M.P.Mahadevan
O Lord of souls; O Compassionate One! Please protect this single cow of mine, Devotion, which is the fruit of meritorious deeds, which yields repeatedly and plentifully the delight-giving milk, and which resides in the cow-pen of Thy blemishless Feet.
Devotion is, here described to be a blemishless cow that deserves to be protected by the Lord. Devotion is the spiritual Kamadhenu (cow of plenty). Immortality is the milk that it yields. The feet of the Lord constitute its place of residence.
Swami Tapasyananda
O Thou merciful cowherd! Protect that only cow of mine – the cow of devotion to Thee – which yields continually as milk an endless supply of the nectar of joy which lives in the cow-pen of Thy holy feet, and which I have acquired as the result of my meritorious deeds.
विमलभवत्पदगोष्ठमावसन्तीम् ।
सदय पशुपते सुपुण्यपाकां
मम परिपालय भक्तिधेनुमेकाम् ॥ ६८ ॥Commentaryहे पशुपते = HeY! PasupathE!
अमितमुदमृतं = that milk called amrutham that gives exceeding happiness;
मुहु : = often;
दुहन्तीं = milking;
विमलभवत्पदगोष्ठम् = In the cowpen of your faultless saraNaaravindham;
आवसन्तीम् = living;
सुपुण्यपाकां = manifesting as many of puNyaathmas;
एकां = being one;
मम = my;
भक्तिधेनुं = the pasu called bhakthi;
हे सदय = Hey! PrabhO! who protects the praaNis with kindness;
परिपालय = do your rakshaNa of me.
The swaarasyam of the use of the word भक्तिधेनुं in this slOka is that bhakthi should be known as the cow. Also that bhakthi has to be ONE viz. it has to be ananya bhakthi. That is it has to proclaim its goal of jeevabrahma aikya saakshaathkaaram. The saasthras roar that in its body all remain composed. That is, by calling that ananya bhakthi as the cow, it has to be understood that all forms of bhakthis are contained in this cow.
Therefore, Hey! ParamEswara! This cow of ananya bhakthi is endlessly yielding and overflowing the milk of sivaanandhaamrutham and I am constantly drinking it enjoying the kuthoohalam of sivaanandham. Therefore Hey! PrabhO! you have the ability and responsibility to protect this cow called bhakthi. If you do not perform this task then in time this ananya bhakthi would turn into dwaitha bhakthi and would turn barren and not yield the milk of adhvaithaamrutham. Therefore Hey! ParamEswara! You should herd this cow in the field called ‘brahmasathyam’ where the green grass called ‘तत् त्वं असि ‘ is lusciously growing. Then only this bhakthi pasu of mine will be strong enough to keep yielding the milk of adhvaithaamrutham.
Pasupathi maharaaj ki Jai!
![]()
