श्रीशिवानन्दलहरी -६७
बहुविधपरितोषबाष्पपूर – स्फुटपुलकाङ्कितचारुभोगभूमिम्।
चिरपदफलकाङ्क्षिसेव्यमानां परमसदाशिवभावनां प्रपद्ये ॥ ६७ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -67
ப³ஹுவித⁴ பரிதோஷ பா³ஷ்பபூர ஸ்பு²ட புலகாங்கித சாரு போ⁴க³ பூ⁴மிம்।
சிரபத³ ப²லகாங்க்ஷி ஸேவ்யமாநாம்ʼ பரம ஸதா³ஶிவ பா⁴வநாம்ʼ ப்ரபத்³யே ॥ (67)
बहु-विध-परितोष-बाष्प-पूर-स्फुट-पुलक-अंकित-चारु-भोग-भूमिं चिर-पद-फलकांक्षि-सेव्यमानां परम-सदाशिव-भावनां प्रपद्ये॥
शिवभावनां प्रपद्य इति निवेदयति – बह्विति। बहुविधपरितोषबाष्पपूरस्फुटपुलकाङ्कितचारुभोगभूमिम् परितोषबाष्पाणि आन्दाश्रूणि बहुविधानि बहुप्रकाराणि च तानि आनन्दाश्रूणि च तेषां पूरः प्रवाहः तस्य च स्फुटं स्पष्टं पुलकाङ्कितं पुलकरूपं भक्तिचिह्नं तस्य च चारुभोगभूमिं रमणीयभोगस्थानं चिरपदफलकाङ्क्षिसेव्यमानां चिरपदं शाश्चतस्थानं कैलास इत्यर्थः तदेव फलं प्रयोजनं तत् काङ्क्षन्ति अपेक्षन्ते इति तत्काङ्क्षिणः तैः सेव्यमानाम् आश्रीयमाणां परमसदाशिवभावनां सदाशिवः नित्यानन्दस्वरूपः परमश्च सर्वेभ्य उत्कृष्टः तथाभूतस्य भावनां ध्यानं प्रपद्ये शरणीकुर्वे। सर्वदा शिवध्यानपरो भवामीत्यभिप्रायः ॥६७॥[1]
[1] पुष्पिताग्रा छन्दः ।
ஈசுவர தியானத்தையே தஞ்சமாக அடைகின்றேன் எனக் கூறுகிறார்.
बहुविधपरितोषबाष्पपूरस्फुटपुलकाङ्कितचारुभोगभूमिम् – ப³ஹுவித⁴பரிதோஷபா³ஷ்பபூரஸ்பு²டபுலகாங்கிதசாருபோ⁴க³பூ⁴மிம் – ஹே பிரபோ! பலவிதமான ஆநந்தக்கண்ணீர்பெருகி, அங்கமெல்லாம் மயிர்க் கூச்சுண்டாகி, பக்தியென்னும் நிலைமையையடைந்து, அதன் பயனையடைய காரணமாயுள்ள போகபூமி போன்றதும்
चिरपदफलकाङ्क्षिसेव्यमानाम् – சிரபத³ப²லகாங்க்ஷிஸேவ்யமாநாம் – அழிவற்ற பதவியாகிய சாசுவதமான மோக்ஷசாம்ராஜ்யத்தை விரும்புகிறவர்களால் ஸேவிக்கப்படுகின்றதாயும்,
परमसदाशिवभावनाम् – பரமஸதா³ஶிவபா⁴வநாம் – மேலுக்கும் மேலானவரும் நித்யானந்தஸ்வரூபியுமான ஸ்ரீபரமேச்வரனாகிய உமது தியானத்தை
प्रपद्ये – ப்ரபத்³யே – (நான் சரணமாக) அடைகின்றேன்.
ஏ பரமசிவமே! பொருந்திய பக்தியின் பயனுக்கோர் வரம்பாய் உள்ளதும், ஆநந்தத்தின் பெருக்கமே தனது வடிவமாயுள்ளதுமான திருக்கயிலாயத்தையே, இருப்பிடமாகவுடைய ஒப்புயர்வற்ற நினது (சதாசிவ) வடிவத்தையே தியானித்து எனது உடலும் பூரித்து என்பு நெக்குருகி, உரோமஞ் சிலிர்ப்ப ஆநந்த அருவி சொரிய அவ்வழகிய திருப்பாதத்திடத்தே அடைக்கலம் புகுந்துள்ளேன் ஆதலின் அன்பே திருமேனியாக அமர்ந்துள்ள அருட்பெருங்கடலே! உன்னில் இரண்டறக் கலப்பதாகிய அந்தமில் இன்பத்தை யடைந்து அதுவாய் விளங்கும் நிலையை யான் அடைதல் நிச்சயமாம் (என்பதாம்).
அநேக விதமான ஸந்தோஷங்களின் அனுபவத்தால் உள்ளம் உருகிக் குளிர்ந்த ஆநந்தக் கண்ணீர் கண்களில் வழிய, உடலெல்லாம் ரோமாஞ்சம் மிகத் தெளிவாக ஏற்பட்டு, ஆநந்தத்தை அனுபவிக்கும் மனோஹர போக பூமியாகிய அழிவற்ற கைலாஸத்தை விரும்புகின்ற மஹான்களால் ஸேவிக்கப்படுகின்ற, அந்த மிகச் சிறந்த நித்யாநந்தமே உருவாக அமர்ந்திருகின்ற பரமேச்வரத்யானத்தை நான் சரணமடைகிறேன்.
இதில் இடைவிடாமல் ஸ்ரீபரமேச்வரத்யானத்திலேயே நான் ஈடுபட்டிருக்கிறேன் என பகவத்பாதாள் கூறுகின்றார். சாச்வதமான பதவி, அதாவது மோக்ஷத்தை விரும்புகின்றவர்கள் எல்லோரும் ஸ்ரீபரமேச்வரத் தியானத்தை செய்து கொண்டிருக்கின்றனர். ஆநந்த பாஷ்பமும் ரோமாஞ்சமும் களங்கமற்ற பக்தியின் அடையாளம். பரமேச்வரத்யானத்தில் ஈடுபவட்டவர்களிடம் இவ்விரு அடையாளங்களையும் எப்பொழுதும் காணலாம்.
ஸதா என்பது பார்வதி தேவியையும், சிவன் என்பது பரமேச்வர ஸ்வரூபத்தையும், இவ்விரண்டும் சேர்ந்த ஓர் அகண்டமான ஆனந்த தத்துவத்தை ஸதாசிவ தத்துவம் என்றும் அறியவேண்டும். இதனால் சிவ-சக்திகளை பிரித்து உபாசனை செய்யக்கூடாது, ஒரே ஸ்வரூபமாகவே உபாசனை செய்யவேண்டும் என்பது வெளியாகிறது. இப்படிச் செய்வதுதான் மேலான த்யானம் என்பதை “பரம” என்ற விசேஷணத்தினால் உணர்த்துகிறார். இந்த கிரந்தத்தின் முதல் ச்லோகத்திலேயே பகவத்பாதாள் பார்வதீ பரமேச்வரர்களைத் த்யானம் செய்கிறார்கள். அதையேதான் இந்த ச்லோகத்திலும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் ஸதாகாலமும் ஸதாசிவனது த்யானத்தில் ஈடுபட்டு முடிவில் சாச்வதமான மஹா கைலாசத்தை அடைவார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
बहुविधपरितोषवाष्पपूरस्फुटपुलकांकितचारुभोगभूमिम् = हर तरह के सन्तोष से जन्य
आनन्दाश्रुओं से भरपूर प्रफुल्लित रोमांच जिसका गुण है ऐसे सर्वाधिक सुन्दर आनन्दभोग की भूमिरूप,
चिरपदकांक्षिसेव्यमानाम् = नित्य परमपदरूप फल चाहने वाले जिसका सेवन करते हैं (उस)
परमसदाशिवभावनाम् = परात्पर भगवान् सदाशिव के ध्यान की,
प्रपद्ये = मैं शरण लेता हूँ ।
शिवध्यान की महत्ता यहाँ प्रकट की है ।
Dr.T.M.P.Mahadevan
I seek refuge in the contemplation of the supreme Sadasiva, which is the pretty land of enjoyment characterized by tears of joy and thrills of body engendered by various delights, and which is adorned by those who desire the fruit consisting of the status eternal.
Meditation on Siva is compared to a rich and fruitful field of enjoyment. What one obtains from this field is emancipation.
Swami Tapasyananda
I resort to contemplation on Lord Siva, which is adopted by those who are desirous of the fruit of the eternal state of liberation, and which gives many delightful devotional experiences like tears of joy and horripilations.
Sivaanandalahari – 67
बहुविधपरितोषबाष्पपूरस्फुट
पुलकांकितचारुभोगभूमिम् ।
चिरपदफलकांक्षिसेव्यमानां
परमसदाशिवभावनां प्रपध्ये ॥ ६७ ॥
Commentary
बहुविध = many sorts;
परितोष =stemming from santhOsham;
बाष्पपूर = pravaaham of tears of joy;
स्फुट= shining;
पुलकांकित = creating horripilation;
चारु = that which is manOharam;
भोगभूमिम् = bhOgasthaanam;
चिरपदफलकांक्षिसेव्यमानां = who is worshipped by those desiring mOkshasthalam of kailaasa;
परमसदाशिवभावनां = the swaroopadhyaanam of sarvOthkrushtan Sadhaasivan;
अहं = I;
प्रपध्ये = surrender.
(தாயுமானவர்)
I surrender to sadhaasivadhyaanam which is uthamOthamam that is worshipped by those desiring mOkshasthalam of kailaasa, that raises one’s hair in horripilation and that which sends out tears of joy in torrents.
‘sadhaa’ stands for Paarvathi’s swaroopam and Sivan stands for ParamEswara swaroopam. Sadhaasiva thathwam should be known as the akhanda aanandha thathwam consisting of the inseparable paarvathi-paramEswaraaL. It is important that no upaasana should be done separating Siva and Shakthi. This is underscored by AachaaryaaL by the use of the word “parama”, that is, sadhaasiva thathvam is vilakshaNam to jatadEhaathis, sadhaasiva thathvam is that which is sarvOthkrushtam and uthamOthama thathvam and that thathvam is the swaroopam of sadhaasiva.
Nama: paarvathee pathayE hara hara mahaadeva!
![]()
