श्रीशिवानन्दलहरी -६५
वक्षस्ताडनशङ्कया विचलितो वैवस्वतो निर्जराः
कोटीरोज्ज्वलरत्नदीपकलिकानीराजनं कुर्वते।
दृष्ट्वा मुक्तिवधूस्तनोति निभृताश्लेषं भवानीपते
यच्चेतस्तव पादपद्मभजनं तस्येह किं दुर्लभम् ॥ ६५ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -65
வக்ஷஸ்தாட³ந ஶங்கயா, விசலிதோ, வைவஸ்வதோ நிர்ஜரா꞉,
கோடீரோஜ்ஜ்வல, ரத்நதீ³பகலிகா, நீராஜநம்ʼ குர்வதே।
த்³ருʼஷ்ட்வா, முக்தி-வதூ⁴ஸ்தநோதி, நிப்⁴ருʼதாஶ்லேஷம்ʼ ப⁴வாநீபதே,
யச்சேதஸ்தவ பாத³பத்³மப⁴ஜநம்ʼ, தஸ்யேஹ கிம்ʼ து³ர்லப⁴ம்॥ (65)
भवानी-पते! वैवस्वतः वक्षः-ताडन-शंकया विचलितः। निर्जराः कोटीर-उज्ज्वलरत्न-दीप-करिका-नीराजनं कुर्वति। दृष्ट्वा मुक्ति-वधूः निभृत-आश्लेषं तनोति। यत्-चेतः तव पाद-पद्म-भजनं (करोति) तस्य इह दुर्लभं किम्?
परमशिवपादपद्मं भजमानस्य दुर्लभराहित्यं प्रतिजानीते – वक्ष इति। हे भवानीपते पार्वतीरमण! यच्चेतः यस्य पुरुषस्य चेतः चित्तं तव पादपद्मभजनं भवति तव ते पादपद्मभजनं पादपद्मसेवकं भवति जायते तं दृष्ट्वा वैवस्वतो यमः वक्षस्ताडनशङ्कया शिवभक्तद्रोहेण पूर्ववत् मम वक्षः परमशिवस्ताडयिष्यतीति शङ्कया विचलितः दूरं पलायितो भवति। निर्जराः वार्धक्यशून्याः देवाः कोटीरोज्ज्वलरत्नदीपकलिकानीराजनं कोटीरेषु उज्ज्वलाः प्रकाशमानाः रत्नानि दीपा इव रत्नदीपा: कोटीरोज्ज्वलाश्च ते रत्नदीपाश्च तेषां कलिकाभिः अङ्कुरैः नीराजनं कोटीरोज्ज्वलरत्नदीपकलिकानीराजनं तत् तस्य कुर्वते विरचयन्ति। मुक्तिवधूः मुक्तिरेव वधूः अङ्गना तस्य निभृताश्लेषं दृढालिङ्गनं तनोति विस्तरेण करोति। ततः तस्य भक्तस्य इह अस्मिन् लोके किं किं फलं दुर्लभं लब्धुमशक्यं, सर्वं सुलभमेवेति भावः। शिवपादारविन्दार्पितचित्तस्य सर्वं सुलभमेवेति भावः॥६५॥
பரமசிவன் பாதங்களைச் சேவிப்பவற்கு எல்லாப் பயனுமுண்டாகும் என்று கூறுகிறார்.
भवानीपते – ப⁴வாநீபதே – ஹே பாவநீ பதே!
यच्चेतः – யச்சேத꞉ – எவனது மனதானது
तव – தவ – உம்முடைய
पादपद्मभजनम् – பாத³பத்³மப⁴ஜநம் – திருவடித்தாமரைகளுடைய ஸேவையை உடையதா யிருக்கிறதோ, (அவனது பெருமையை என்னவென்று கூறுவது? உம்மை அவ்வாறு ஸேவிப்பவனைப்)
दृष्ट्वा – த்³ருʼஷ்ட்வா – பார்த்த மாத்திரத்திலே
वैवस्वतः – வைவஸ்வத꞉ – யமனும் (அவனைக் கண்டு)
वक्षस्ताडनशङ्कया – வக்ஷஸ்தாட³நஶங்கயா – (எங்கே உமது பக்தனை அணுகினால் முற்காலத்தில் மார்கண்டேயனைக் காக்குமாறு) நீர் மார்பினில் கொடுத்த உதையை நினைத்து, பயத்தால்
विचलितः – விசலித꞉ – ஓட்டமெடுக்கிறான்.
निर्जराः- நிர்ஜரா꞉- (அதுமட்டுமன்றி), தேவர்களும்
कोटीरोज्ज्वलरत्नदीपकलिकानीराजनं कुर्वते – கோடீரோஜ்ஜ்வலரத்நதீ³பகலிகாநீராஜநம்ʼ குர்வதே – (உமது பக்தனது பிரியத்தைப் பெற்று அதன் மூலம் உமது தயவை சம்பாதிப்பதற்காக) அவர்கள் தலைகளில் தரித்துள்ள ரத்தினகிரீடங்களைக் கொண்டு பணிந்து பணிந்து அவ்விரத்தினங்களாலான பிரகாசத்தினால் ஹாரத்தி செய்கிறார்கள். இம்மட்டோ!
मुक्तिवधूः – முக்திவதூ⁴꞉ – முக்தி என்னும் இளமங்கை
निभृताश्लेषं तनोति – நிப்⁴ருʼதாஶ்லேஷம் தநோதி – அப்பக்தனை சிறிதும் பிரியாது தழுவிக் கொண்டே இருக்கிறாள். என்ன ஆச்சரியம்! என்ன பெருமை!
तस्य – தஸ்ய – ஆதலால், உமது பக்தனுக்கு
इह – இஹ – இகலோகத்தில்
किं दुर्लभम्? – கிம்ʼ து³ர்லப⁴ம்? – கிடைக்கத் தகாத காரியம் எதுதான் உண்டு? எல்லாம் கிடைக்கக்கூடியவைகளே.
ஏ பரமேட்டி! எந்த அன்பனுடைய மனமானது தேவரீரது திருவடித் தரிசனத்தை எப்போதும் நாடி நிற்கின்றதோ, அந்த பக்தனுடைய செயலைக்கண்டு, அவன்பால் எதிர் நிற்கவும் அச்சமுடையவனாய் மறலியும் (யமனும்), ஓடி மறைகிறான்; குற்றமற்ற தேவர்களும் அவன்பால் ஏகி, மகிழ்ச்சியுடன் வணங்கிச் செல்வர்; முக்தியாகிய இலட்சுமியும் அவன் மங்களகரமாகவே விளங்க அவனைச் சூழ்ந்து எக்காலும் நீங்காது வீற்றிருப்பள்; என்றால் உனது பக்தியின் பெருமைக்கீடாக எதைச் சொல்லமுடியும்? வேறொன்றுமிரா. ஆகவே, அந்த நிலையை அடியேனும் கைபற்றிக் கடைத்தேறக் கடாட்சிப்பாயாக (என்பதாம்).
ஹே பார்வதீரமண! எவனுடைய மனமானது உன் திருவடித் தாமரைகளையே பஜிக்கின்றதோ அவனைக் கண்ட யமன், மறுபடியும் உனது காலால் அவனது மார்பை உதைப்பாயோ என்று ஸந்தேஹித்து விலகிச் சென்று விடுகிறான். தேவர்கள் அணிந்திருக்கின்ற கிரீடங்கள் ரத்தினங்களால் இழைக்கப்பட்டு அவை ரத்ன தீபமாக ஒளிவீசுகிறது. அப்படிப்பட்ட தீபத்தை உனது பக்தனுக்குத் தேவர்கள் நீராஜனமாகக் காண்பிக்கிறார்கள். முக்தி என்ற பெண் அவனை மிகவும் நெருக்கமாகக் கட்டித் தழுவுகிறாள். இவ்வுலகில் அவனுக்கு அரியது எது? எதுவுமேயில்லை சிவபாதங்களில் அர்ப்பித்த மனத்தையுடையவனுக்கு இவ் வுலகில் எல்லாமே மிக எளிதில் கிடைக்கிறது.
பரமேச்வர பக்தனைக்கண்டு யமன் நடுங்குகின்றான், தேவர்கள் வணங்குகின்றனர். முக்தி என்ற மாது அவனிடம் விருப்பங்கொண்டு வருகின்றாள். இவ்வுலகில் அவனுக்குக் கிடைக்கக் கூடாததே ஒன்றுமில்லை என்பதாம்.
ஸஹஸ்ரம் வர்த்தந்தே என்ற நான்காவது ச்லோகத்தில், ‘எனது மனமானது வெகுநாட்களாக, ஹே பரமேச்வர! உனது பாதபத்ம பஜனத்தைச் செய்யவேண்டும்’ என்று பகவத்பாதாள் யாசித்தார்கள். தான் அங்கே யாசித்த பரமசிவ பாதபத்ம பஜனமானது ஒருவனுக்கு அவன் பூர்வபுண்ணியத்தினால் ஏற்பட்டுவிட்டால், அவனால் முடியாததுதான் என்ன என்பதை இந்த ச்லோகத்தில் வர்ணிக்கின்றர்கள்.
முன்பு சிவத்யானம் செய்துகொண்டிருந்த பக்தனான மார்கண்டேயனுடைய பிராணனை எடுப்பதற்கு, பாசக்கயிற்றைப் போட்டவுடன், யமனுடைய மார்பினில் பரமேச்வரன் இடது காலால் உதைத்த உதை, இன்றளவும் யமனுக்கு ஞாபகம் இருக்கிறது. ஆதலால், பக்தர்கள் சிவத்யானத்தில் இருக்கும்போது அவர்கள் உயிரை எடுக்க வந்தால், எங்கே பரமேச்வரனின் உதை மீண்டும் தன் மார்பில் விழுந்துவிடுமோ என்று பயந்து யமன் அவர்களை விட்டு விலகிவிடுகிறான். மேலும் இத்தகைய சிவபக்தர்களுக்கு ஸகல தேவர்களும் நமஸ்காரம் செய்வது, தங்கள் கிரீடத்தினால் நீராஜநம் செய்வது போல் இருக்கிறது. அதாவது மூன்று லோகங்களும் அவனுடைய அதீனத்தில் வருகிறது. இவ்வாறு பரமேச்வர பாதாப்ஜத்தில் லயித்திருப்பவனுக்கு மனோநாசம் ஏற்பட்டு, தத்வமஸி என்ற மஹாவாக்யமாகிய முக்தி என்ற பெண், கொஞ்சம்கூட இடைவெளியில்லாமல் அந்த பக்தனை ஆலிங்கனம் செய்துகொள்கிறாள். அதாவது, பக்தனுக்கு சிவஸாயுஜ்ய பதவி கிடைக்கிறது. அதனால், இவர்களால் அடைய முடியாதது என்பது ஒன்றுமே இல்லை.
இந்த ச்லோகத்தைச் சொல்லி பரமேச்வரனை நமஸ்கரிப்பவர்களுக்கு எமபயம் கிடையாது. அவர்களுக்கு துர்லபம் என்பது எதுவுமே இல்லை. காலக்கிரமத்தில் அவர்கள் சிவசாயுஜ்யத்தை அடைவார்கள் என்பதற்கு பகவத்பாதாளின் இந்த ச்லோகமே ப்ரமாணம்.
भवानीपते = हे भवानीपति !
यच्चेतः = जिसका चित्त,
तव = आपके,
पादपद्मभजनम् = चरणकमल के भजन में लगा है,
तस्य = उसके लिये,
इह = संसार में
दुर्लभम् = दुर्लभ,
किम् = क्या है?,
वक्षस्ताडनशंकया = छाती पर चोट पड़ेगी इस डर से,
वैवस्वतः = यम,
विचलितः = डरा रहता है (अतः उसे नहीं छूता) ।
निर्जराः = देवता,
कोटीरोञ्ज्वलरत्नदीपकलिकानीराजनम् = = मुकुरस्थ चमकते रत्नरूप दीपों की पंक्तियों से आरती,
कुर्वते = करते हैं ।
दृष्ट्वा = (उसे) देखने मात्र से,
मुक्तिवधूः = मुक्तिरूप पत्नी,
निभृताश्लेषम् = गाढ आलिंगन को,
तनोति = स्थिर कर देती है ।
कर्त्रर्थक ल्युट् मानकर भजनशब्द समझना चाहिये । भक्ति मोक्षका साधन है इसे स्पष्ट किया ।
स्वयं भक्ति ही परम पुरुषार्थ नहीं । भक्ति से पावित चित्त में अखण्ड बोध स्थिर होता है– विज्ञान, निदिध्यासन होता है, अतः उत्तम भक्त को अत्यल्प यत्न करना पड़ता है इसे दृष्ट्वा से कहा । क्योंकि भक्त अपने कल्याण के प्रति निःशंक बना रहता है इसलिये उसे मृत्यु डराती नहीं । इंद्रियां भगवदर्चनादि में ही लगी रहती हैं अतः उसकी मंगलकामना करते हए उसे सुख ही देती हैं। एवं च जीवित रहते भी भक्त निडर सुखी है व मरकर भी उसे दुर्गति की चिन्ता नही तथा बहुधा तो वह यही ज्ञान पाकर मुक्त हो जाता है । अतः सबको ऐहिक व आमुष्मिक सुखप्राप्ति के लिये यथासम्भव प्रकारों से सर्वाङ्गोपेत भगवद्धक्ति करनी चाहिये, यही प्रकरणार्थ है ॥६५ ॥
Dr.T.M.P.Mahadevan
O Consort of Parvati! What is impossible for him, here, whose mind worships Thy Feet? Seeing him, Yama runs away, fearing another kick at the chest; the gods wave the lamps consisting of the flaming gems that are set in their crowns; and the Mukti bride (Release) holds him in inseparable embrace.
Markandeya’s was not the only instance of a devotee conquering death. Every devotee of God realizes deathlessness. The status of the devotee is far superior even to that of the gods, the so-called immortals. The gods adore the devotee, for in doing so they know that they are adoring Siva. When they pass before the devotee with bowed heads wearing bejewelled crowns, it appears like a row of lamps being waved ceremonially in worship. The fruit of moksha is what the devotee reaps through his devotion to Siva.
Swami Tapasyananda
O Lord of Bhavani! Whoever worships Thy lotus feet – from him the god of Death runs away fearing another kick at the chest; him the Immortals adore by performing the ‘light-waving’ ceremony with the gems of lamp-like brilliance studding their crowns; him the damsel of liberation holds in her tight embrace. What is there difficult of achievement for him in the three worlds?
(The allusion is to Markandeya who was saved by Siva from the god of Death. It is implied that Siva is equaly merciful towards all devotees and so the God of Death should beware, knowing that a devotee is deathless in spirit)
Sivaanandalahari – 65
वक्षस्ताडनशङ्कया विचलितो वैवस्वतो निर्जरा:
कोटीरोज्ज्वलरत्नदीपकलिकानीराजनं कुर्वते ।
दृष्ट्वा मुक्तिवधूस्तनोति निभृताश्लेषं भवानीपते
यच्चेतस्तव पादपद्मभजनं तस्येह किं दुर्लभं ॥ ६५ ॥
Commentary
हे भवानीपते = Hey! PaarvatheepathE!
यच्चेत: = whose mind;
तव = your;
पादपद्मभजनं = doing paadhapooja sEva and bajana;
दृष्ट्वा = on seeing that bhakthaa;
वैवस्वत; = yama;
वक्षस्ताडनशङ्कया = frightened that he would get a kick in the chest like before;
विचलित:= runs far away;
निर्जरा: = devaas;
कोटीरोज्ज्वलरत्नदीपकलिका = (devas) with their kireetams on their head that are studded with rathnas that dazzles;
नीराजनं = doing deepaaraadhanai;
कुर्वते = they do;
मुक्तिवधू: = (the mahaavaakya ‘thath thwam asi’) mukthi that is considered as a girl;
निभृताश्लेषं = hugging tightly;
तनोति = she does;
(अत : = therefore);
तस्य = to him;
इह = in this world;
किं = which;
दुर्लभं = that cannot be attained?
सहस्रम् वर्तन्ते जगति विबुधा: क्षुद्रफलदा:
न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।
हरि ब्रह्मादीनामपि निकटभाजामसुलभं
चिरं याचे शंभो शिव तव पादांभोजभजनं ॥ ४ ॥
In this stanza to the uthamOthaman, anirvachaneeya mahaathmyan and mahaa kailaasaadhipathi ParamEswara our aachaaryaaL begged: “Hey! KaaruNyajalathE! After all I am only a sanyaasi. Yet my mind has been waiting for a very long time to do poojanam and bhajanam to your paadhaabjam yet never has so far been blessed with that bhaagyam. Please give me that fortune.” In this slOka Bhagavathpaadhaal describes that the paadhaabhjam that he had begged for before, were to be attained because of one’s poorva puNya then what sivadhyaana can do.
नास्ति द्यानसमं तीर्थं नास्ति द्यानसमं तपः |
नास्ति द्यानसमो यज्ञस्तस्मद्द्यानं समाचरेत् ||
The saasthra says: there is no puNya theertham beyond sivadhyaanam neither is there a greater thapas than sivadhyaanam. There is no superiior yagnyaa to surpass sivadhyaanam and therefore sakala praaNis should do sivadhyaanam always. Therefore Hey! ParamEswara! when someone is doing dhyaanam to your paadhakamalam yamaa runs far away from him! Because in a earlier time when Yama attempted to snatch the praaNan of MaarkandEya when he was doing sivadhyaanam he got a kick of his life time in his chest which Yamaa never forgets.
नमामि सिरसा देव किं नो मृत्युः करिष्यति||
गङ्गाधरं शशिधरं शङ्करं शूलपाणिनं |
नमामि शिरसा देवंकिनो मृत्युः करिष्यति
चान्द्रषेखरमाश्रये मम किंकरिष्यति वै यमः ||
That is how MaarkanDeya cried out to ParamEswara hugging the lingam so tightly. This was sivadhyaanam par excellence! When Yama disturbed Shiva he got an unforgettable kick on his chest!
Hey! PrabhO! To him who does sivadhyaanam you make the three lOkas come into his aadheenam. When his sivadhyaanam leads him into manOnaasam the mahaavaakya ‘तत् त्वं असि’ transaforms into the girl called Mukthi who tighly hugs him. Thus bhagavathpaadhaaL says that there is nothing that is beyond the reach of a person doing sivadhyaanam.
Mruthyunjaya mahadEva MahEswara Sankara subha CharaNaa!
![]()
