
Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this chapter, Sri Periyava advises us on how to deal with contradictions in the different versions of Sri Sankara Charitham. The objective is to not question but to increase our devotion by reading all the charithams.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for the flamboyant drawing and Shri ST Ravikumar for the great translation. Rama Rama
______________________________________________________________________________________
‘சங்கர விஜய’ங்களும் ஆசார்யாள் குறித்த மற்ற நூல்களும் –கதாபேதங்கள்
இப்படிப் பல புஸ்தகங்கள் இருப்பதில் சில கதாபேதங்கள் இருக்கின்றன. (கதைகளிடையே சில வித்யாஸங்கள் காண்கின்றன.) ராமாயணத்தில் பல தினுஸாக, வால்மீகியில் ஒரு விதம், கம்பரில் ஒரு விதம், துளஸீதாஸில் ஒரு விதம் என்று அங்கங்கே கொஞ்சம் வித்யாஸமிருப்பதுபோல இவற்றில் இருக்கிறது.
எல்லாவற்றிலும் ஒரே விதமாகச் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கேள்வியில்லாமல் எடுத்துக் கொண்டு விடலாம். ஒன்றில் இருப்பதற்கு விரோதமாக இல்லாமல் அதிகப்படியாக இன்னொன்றில் ஒரு detail (விவரம்) இருந்தால், அப்படி இருப்பவை ஆசார்யாளின் கௌரவத்துக்கு ஏற்றபடியும், circumstantial evidence (ஸந்தர்ப்ப சூழ்நிலையின் சான்று) உள்ளதாகவும் இருக்கிறபோது எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகச் சொன்னால் ஒன்றுக்கொன்று விரோதமில்லாத வரையில் ஒவ்வொன்றிலுமுள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு புஸ்தகத்தில் (அவர் சென்ற ஊர்களில்) சொல்லாத ஒரு ஊரை இன்னொரு புஸ்தகத்தில் சொல்லியிருக்கிறது; (அவர் செய்த கார்யங்களில்) சொல்லாத ஒரு கார்யத்தை இன்னொன்றில் சொல்லியிருக்கிறது-என்றால், அப்படி இருக்கவே முடியாது என்று ஸர்வ நிச்சயமாகத் தெரிந்தாலொழியக் கூடுதலாகச் சொல்லியுள்ள எல்லா ஊர், கார்யம் முதலானவற்றையும் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர் நாளில் இருந்திருக்கவே முடியாத ஊர், [சிரித்து] நெய்வேலி டவுன்ஷிப்புக்கு வந்தாரென்றால் எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படியே, பெர்னார்ட் ஷாவோடு வாதம் பண்ணினாரென்றால்…..? ஆனாலும் அப்படியில்லாத இடங்களிலெல்லாம் ஏற்றுக் கொள்வதுதான் யுக்தம். ஏனென்றால், அவர் வாஸ்தவத்தில் அந்த மாதிரிப் பண்ணவில்லை என்றால்கூட பண்ணியதாக நாம் வைத்துக் கொள்வதனால் பெரிய தப்பு எதுவுமில்லை. ஆனால் அவர் பண்ணியிருந்தும், பண்ணவில்லை என்று நாம் தள்ளிவிட்டால் தப்புத்தானே? அவதாரமாக வந்து அவர் பண்ணிய ஒவ்வொன்றுக்கும் ‘வால்யூ’ உண்டு. அப்படிப்பட்ட ஒன்றை நாம் ‘இல்லை’ என்று தள்ளப்படாததுதானே?
போலகம் சாஸ்த்ரிகள்1 இந்த விஷயமாக, ‘ஆசார்யாள் எப்படிப் பண்ணிக் காட்டியிருக்கிறாரோ, அதையே நாமும் பின்பற்றலாம்’ என்று எழுதியிருக்கிறார். ஆசார்யாள் என்ன பண்ணியிருக்கிறாரென்றால்: சரீரத்திலிருந்து வெளியேறிவிட்ட யோகியின் ஜீவன் ப்ரஹ்மலோகம் போகும் வழிக்கு அர்ச்சிராதி மார்க்கம் என்று பெயர். அதில் பதின்மூன்று பர்வா, அல்லது ஸ்தானங்கள் இருக்கின்றன. இந்தப் பதின்மூன்றைப் பற்றியும் உபநிஷத்துக்களிலிருந்து தெரிகிறது. ஆனால் எந்த ஒரு உபநிஷத்திலும் பதின்மூன்றையும் வரிசையாகச் சொல்லியிருக்கவில்லை. ஒவ்வொன்றிலும் சிலதை விட்டிருக்கிறது; வரிசைப்படி இல்லாமல் முன் பின்னாகவும் சொல்லியிருக்கிறது. இப்படி இருப்பதை ஆசார்யாள் எடுத்துப் போட்டுக் கொண்டு எதுவும் விட்டுப்போகாமல் சேர்த்து, வரிசை க்ரமமும் தப்பாதபடி ஒழுங்குபடுத்தித் தம்முடைய ஸூத்ர பாஷ்யத்தில் கொடுத்திருக்கிறார்2. இப்படியே அவருடைய சரித்ரத்திலும் ஒரு புஸ்தகத்தில் சொல்லி இன்னொன்றில் சொல்லாதது, ஸம்பவங்களை காலவாரியாயில்லாமல் முன் பின்னாகச் சொல்லியிருப்பது ஆகியவற்றை நாம் எதுவும் விட்டுப் போகாமலும், கால ரீதியில் ஆர்டர் தப்பாமலும் ஒழுங்கு பண்ணிக் கொள்ள வேண்டுமென்று அவர் சொல்லியிருக்கிறார்.
2500 வருஷம் முன்னால் இருந்துவிட்டு ஆசார்யாள் போய்விட்டார். அவரோ ஸ்வசரிதை-ஒரு குறிப்பாகக்கூட-எழுதியும் வைக்கவில்லை! பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு அப்புறம் வரையில் அவருடைய சரித்ர நூல்கள் எழுதப்படும்போது அங்கங்கே வித்யாஸங்கள் வரக்கூடியது தானே? அவரோ அந்தக் காலத்திலேயே தேசம் முழுவதும் ஸஞ்சாரமும் பண்ணியிருக்கிறார். ஒரு தடவைக்கு மூன்று தடவையாகப் பண்ணியிருக்கிறார். அதனால் தேசத்தின் எந்த மூலை முடுக்கிலானாலும், ‘இங்கே ஆசார்யாள் இன்ன இன்ன பண்ணினார்’ என்று சொல்கிறார்கள். இது அத்தனையையும் எந்த க்ரந்த கர்த்தா சேகரித்து எழுத முடியும்? இந்த நாளில் ரயில், ப்ளேன் எல்லா வசதியும் இருந்தும்கூட இப்படி யாராவது ஸாதிக்க முடியுமா என்று தோன்றுகிறது. அந்த நாளில் கேட்பானேன்?
ஆசார்யாளுக்குப் பிறகு மடங்களில் அவர் பெயரிலேயே மஹா பெரியவர்களாக சில ஸ்வாமிகள் வந்திருக்கிறார்களென்றும், இவர்களை ஆதி ஆசார்யாளாகவே நினைத்துக் கொஞ்சம் குழறிப் போயிருப்பதாகவும் முன்னேயே பார்த்தோம். இதனாலும் சில சரித்ர பேதங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, ஆசார்யாள் ஸர்வஜ்ஞ பீடமேறியது காஞ்சி என்றும், காஷ்மீர் என்றும் இரண்டு விதமாகப் புஸ்தகங்களில் இருக்கிறது. இதற்கு மூன்று விதமாக பதில் சொல்லும்போது, ஒன்று, காஞ்சி மண்டலத்துக்கே காஷ்மீரம் என்றும் பெயர் இருந்திருக்கிறது என்பது. “கோவிந்தநாதீ”யத்தில் இவ்விஷயம் ஸ்பஷ்டமாகவே சொல்லியிருக்கிறது. இன்னொரு பதில், “காஷ்மீரில் ஸர்வஜ்ஞ பீடம் மாதிரியே இருந்ததற்கு ‘சாரதா பீடம்’ என்று பேர்; காஞ்சியில் தான் ஸர்வஜ்ஞ பீடம் என்றே பேர்; ஆசார்யாள் இரண்டிலும் ஏறினார்” என்பது. மூன்றாவதாகச் சொல்வது, “ஆதி ஆசார்யாள் காஞ்சியில் ஸர்வஜ்ஞ பீடமேறினார்; அபிநவ சங்கரர் காஷ்மீரத்தில் ஸர்வஜ்ஞ பீடமேறினார். இதிலே மாறுபாடு ஏற்பட்டுவிட்டது” என்பது.
ஆசார்யாள் பெயரில் பலர் இருந்திருப்பது மட்டுமில்லை. அவர் கதையில் வருகிற சில பாத்ரங்களின் பெயரிலும் இரண்டு பேர் இருந்திருப்பதால் கொஞ்சம் குழறுபடி ஏற்படுகிறது. ஸாதரணமாக 40 பேர் படிக்கிற ஒரு க்ளாஸிலேயே இரண்டு பசங்களுக்கு ஒரே பேர் இருந்து, இனிஷியலுங்கூட ஒன்றாகவே இருந்து விடுவதால், ஒருத்தனுக்கு ஊர் பெயரையும் சேர்த்து இரண்டு இனிஷியலாக்குவதைப் பார்க்கிறோமல்லவா? இம்மாதிரி ஆனந்தகிரி, மண்டன மிச்ரர் என்றெல்லாமும் இரண்டிரண்டு பேர்கள் இருந்திருப்பதாக ஆராய்ந்து பார்த்துச் சொல்கிறார்கள். ஆசார்யாளின் நேர் சிஷ்யரான ஆனந்தகிரி வேறே, கொஞ்சம் பிற்பாடு சிஷ்ய பரம்பரையில் வந்து சங்கர விஜயம் எழுதிய (அனந்த) ஆனந்தகிரி வேறே என்கிறார்கள். ‘ப்ரஹ்ம ஸித்தி’ என்ற அத்வைத க்ரந்தமும், மூன்று மீமாம்ஸா சாஸ்த்ர புஸ்தகங்களும் எழுதிய மண்டன மிச்ரர் வேறே, மீமாம்ஸகராயிருந்து அப்புறம் ஆசார்யாளின் சிஷ்யராகி ஸுரேச்வராசார்யாள் என்று பெயர் பெற்று, ‘நைஷ்கர்ம்ய ஸித்தி’, வார்த்திகங்கள் ஆகிய அத்வைத நூல்கள் மட்டும் எழுதியவர் வேறே என்கிறார்கள். ஸுரேச்வர-மண்டனமிச்ரர் அப்படியே ஆசார்ய ஹ்ருதயத்தை ப்ரதிபலித்து எழுதியவர். இன்னொரு மண்டனமிச்ரரோ அத்வைதமே சொன்னாலும் அதில் ஆசார்யாளுக்கு வித்யாஸமான சில கோட்பாடுகளைச் சொல்பவர். அவரும் ஆசார்யாளின் காலத்திற்குச் சிறிது முற்பட்டவர்தானென்று தெரிகிறது.
ஒரே பெயரில் இரண்டு மநுஷ்யர்கள் இருந்திருப்பது போல, ஒருவருக்கே இரண்டு பெயர் இருந்திருப்பதாலும் கொஞ்சம் குழறுபடிக்கு இடம் கொடுத்திருக்கிறது. இந்த நாளில் கூட ‘alias’ போட்டுக் கொண்டு ரொம்பப் பேர் இருக்கிற மாதிரி! இப்படி ஸுரேச்வர-மண்டனமிச்ரருக்கே விஸ்வரூபரென்றும் பெயர் இருந்ததாகத் தெரிகிறது.
இப்படிப் பலவிதமாக இருக்கும்போது, சரித்ரம் எழுதியவர்களில் அவரவரும் தாங்கள் கேள்விப்பட்டது, தங்களால் சேகரிக்க முடியாது, வித்யாஸமாக இருப்பதில் தங்களுக்கு ஸத்யமாகத் தோன்றியது ஆகியவற்றைக் கொண்டு எழுதியிருப்பார்கள். தங்களுக்கும் முன்பு இருந்த ஆசார்ய சரித்திரத்தைப் பார்த்து அதை base பண்ணி மேலே எழுதியிருப்பார்கள். இதில் அவரவர்கள் அபிமானப் படியும் கதையைக் கொண்டு போயிருக்ககூடியது ஸஹஜமே. தேசம் பூரா ஆசார்யாள் ஸஞ்சாரம் பண்ணிப் பல ஸ்தாபனங்களை ஏற்படுத்திவிட்டுப் போயிருப்பதில் ஒவ்வொன்றை ஆச்ரயித்தவர்களுக்கும் அதை விசேஷித்துச் சொல்லணுமென்று தோன்றக் கூடியதுதான். அதனாலும் கதா வித்யாஸங்கள் ஏற்பட்டிருக்கும்.
அநேக புஸ்தகங்களுக்குள் இப்படி வித்யாஸம் ஏற்படுவது மட்டுமில்லை. ஒரே புஸ்தகத்துக்கே உள்ள பல ப்ரதிகளுக்குள்ளேயுங்கூட வித்யாஸங்கள் இருப்பதையும் பார்க்கிறோம். ஏட்டுச் சுவடிகளாகவே எழுதி வைத்துக் கிடைத்திருக்கிறவற்றில் பாட பேதங்கள் சிலவும் இருக்கின்றன.
‘எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்று பழமொழி கேள்விப்பட்டிருக்கலாம். லேககர்களின் — ‘காப்பி’ எழுதும் scribeகளின் — கவனக் குறைவால் பாட பேதம் ஏற்படுவது ஒன்று. சில ச்லோகங்களைக் காப்பி பண்ணாமல்கூட அவர்கள் விட்டிருக்கலாம். இப்படியெல்லாம் ஏற்படுவது ஒன்று. இன்னொன்று, அபிமானத்தைப் பொறுத்து மாற்றி எழுதுவது.
‘ஆப்ஜெக்டிவ்’- ஆகத்தான் (ஸ்வயச் சார்பில்லாமல் விஷயச் சார்புடன் மட்டுமே) எழுத வேண்டும், அப்படி எழுதி வைத்ததை ‘ஆப்ஜெக்டிவ்’-ஆகத்தான் பார்க்க வேண்டுமென்று பேச்சில், கருத்தளவில், சொன்னாலும் கார்யத்தில் வரும்போது அபிமானங்கள் விட்டுப்போவதென்பது ச்ரமமாகவே இருக்கும். ‘Likes’ என்று சொல்கிற போதே ‘dislikes’-ம் தொக்கி நிற்பது வேறே! ந்யாயமாகப் பார்த்தால் ஆசார்யாள் – அத்வைதம் என்கிறபோது இதற்கெல்லாம் இடம் இருக்கப்படாதுதான். அவரைப்போல, ‘கொள்கையபிமானம் என்று ஒன்று இல்லாமல் ஸத்யத்தை ஸத்யமாகப் பார்த்துச் சொல்லணும்’ என்று நிஷ்பக்ஷபாதமாக அலசி அலசித் தத்வத்தை உருவாக்கியவர் எவருமில்லை. அதனால்தான் அவருடைய அத்வைதத்தில் த்வைதம், கர்மம், பக்தி, ஸாங்க்யம், யோகம், பௌத்தம், மீமாம்ஸை அத்தனைக்குமே இடம் கொடுக்க முடிந்திருக்கிறது…ஆனால் ஆசார்யாள் மாதிரி ஆசார்யாள்தான் இருக்க முடியும்! அதுதானே அவர் பெருமை?
ஏற்கெனவே (ஆசார்ய சரிதங்கள்) எழுதி வைத்து விட்டது தீர்ந்துபோன விஷயம். எழுதியவர்கள் எல்லாருமே ஆசார்யாளிடம் நிரம்ப பக்தி வைத்திருந்த பெரியவர்கள். தங்களுடைய பக்தி தங்களோடு முடிந்து போகாமல் லோகத்திலும் பரவுவதற்காகவே அவருடைய சரித்ரத்தை அழகாக எழுதிக் கொடுத்தவர்கள். அவர்கள் செய்துள்ள உபகாரம் பெரிசு. அவர்களெல்லாரையும் நாம் போற்றத்தான் வேண்டும்.
இன்றைக்கு அந்தச் சரித்ரங்களை நாம் எப்படி ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பதே கவனிக்க வேண்டியதாகிறது. எந்தச் சரித்ரமானாலும் அது மனஸை ஆசார்யாளிடம் இழுத்து வைக்கிறது என்ற முறையில் பக்தி நூல்களாக எல்லாவற்றையுமே நாம் ரஸிக்க வேண்டியதுதான். இங்கே கேள்வி வேண்டாம். பக்திக்குக் கேள்வியுமில்லை, பதிலுமில்லை. பக்திதான் நமக்கு முக்யம். ஆசார்யாளை நம்முடைய கல்லு மனஸ் நினைத்துக் கொஞ்சம் உருகும்படியாக எங்கே அவகாசம் (வாய்ப்பு) கிடைத்தாலும் அப்படிப் பண்ணிவிட்டுப் போக வேண்டியதுதான். அதனால் எல்லாச் சரித்ரங்களையும் பாராயணம் பண்ணுவோம்.
கதையாக இருப்பதில் எது வாஸ்தவம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அறிவினால் அலசிப் பார்க்கும்போது நிஷ்பக்ஷபாதமாகப் பண்ண வேண்டும். அவர் எப்படி ஸ்வயாபிமானமில்லாமல் ஸத்யத்தைப் பார்த்தாரோ — ஏகமான பரம ஸத்யத்தைப் பார்த்தாரோ — அப்படி அவருடைய சரித்ரங்களில் ஸத்யத்தைப் பார்க்க அவரையே ப்ரார்த்தித்துக் கொண்டு நடுநிலையிலிருந்து கொண்டு பண்ண வேண்டும்.
ஸத்யத்தோடு ப்ரேமையும் முக்யம். ஒன்றுக்காக இன்னொன்றை விட்டுக் கொடுக்கக்கூடாது. ஸத்யம் என்று நமக்கு ஒன்று முடிவாகத் தோன்றுகிறது என்பதற்காக, அந்த முடிவுக்கு வர முடியாதவர்களிடம் பேதம் பாராட்டக் கூடாது. அத்வைதம் என்றாலே அபேதம்தான். ஒன்றாய்ப் போய்விடுவது என்ற ‘ஐக்ய’த்தையே சொன்னவர் ஆசார்யாள். அவர் விஷயமாகவே அபிப்ராய பேதம், மனோபேதம் என்று ஏற்படச் செய்தோமானால் அதைவிட அபச்சாரமில்லை.
‘நமக்கு ஸத்யம் தெரியவேண்டும்; உள்ளது உள்ளபடி பார்த்துப் புரிந்து கொள்கிற தீரம் வேண்டும்; தீரம் என்பது சண்டைக்குப் போகும் சூரத்தனமாகாமல் இருக்க வேண்டும்; நம் மனஸில் கொஞ்சங்கூட ப்ரேமை மாறாமல் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்; அவர்களுக்கும் ஸத்யமான த்ருஷ்டியும் ப்ரேமையுள்ள மனஸும் வாய்க்க வேண்டும்’ என்று ஆசார்யாளையே ப்ரார்த்தித்துக் கொண்டு இந்த விஷயத்தில் ப்ரவேசிப்பதுதான் முறையான மனோபாவம்.
____________________________________________
1 காலஞ்சென்ற சாஸ்த்ர ரத்னாகரம் போலகம் ப்ரம்மஸ்ரீ ராம சாஸ்திரிகள்.
2 IV-3.1-3
__________________________________________________________________________________________
‘Sankara Vijayams’ and other books on Acharya – Differences in storylines
Since there are so many books (on Sankara Vijayam), variations in the storylines [कथा भेदं – differences in the story narrated] are observed. Just as there are different versions of the Ramayana – one by Valmiki, one by Kambar, one version by Tulasi Dasa. and some with other variations here and there, among these books also there are differences.
Incidents narrated uniformly in all the books can be accepted without any questions. If there are more details in one, without being contradictory to what is stated in another, and if such narrations are enhancing the greatness of Acharya and lending circumstantial evidence, they can also be accepted. In general, as long as one narration is not in contradiction with another, all of them can be accepted.
If a book mentions a place (among the places he has visited) which is not mentioned in another book or if a book mentions a deed (of the various deeds he had performed) which is not found in another, we have to accept the additional places, deeds etc. unless it is certain that it is not so. Can we accept (laughing) that he came to Neyveli Township – a place which was not at all there during his days? Similarly, if it says that he debated with Bernard Shaw……? It would be appropriate [युक्तम्] to accept only those things that are not impossible. It may not be a mistake to accept something as been done by him even if he has not actually done it. However, will it not be a huge mistake to ignore something that he has actually done? Having descended as an incarnation, there is certain ‘value’ attached to everything that he did. We should not reject any such a thing as not done by him, isn’t it?
In this regard, Polagam Sastry1 has written ‘Whatever was demonstrated by Acharya may be followed by us too’. What Acharya has done is this: The path to heaven [ब्रह्मलोकम्] that is traversed by the spirit which has exited the body of a Yogi, is called Archiraadi path [अर्चिरादि मार्ग]. There are thirteen stages [पर्व] in that. We get to know about all these thirteen from the Upanishads. However, none of the Upanishads have mentioned them in a sequential order. One or the other has been omitted by each of the Upanishads; wherever they have been mentioned, it is not done in a sequential order but in an arbitrary manner. Acharya took up this task; in his Sutra Bhashyam [सूत्रभाष्यम्] he has collated all of them without omitting any, and also presented them in a sequential order2. He (Polagam Sastry) says thus: similar to what Acharya did, incidents mentioned in one but left out in another, incidents not mentioned in proper order etc. should be collated and presented in total, and in a sequential order.
Acharya lived 2500 years back and has left. And he has not written anything about his own life [स्वचरितम्] even in the form of a minor remark! When books on his life are written centuries later, there will be some differences in the narration, isn’t it? During that time, itself, he has toured [सञ्चारम्] the entire country. He has done it not just once, but three times. That is why, even people in the remote corners of the country say ‘Acharya carried out such and such a task here’. How can the author of a treatise [ग्रन्थकर्ता] compile all these [achievements] and put them in writing? We wonder whether such a thing is possible even in the present times when all facilities like trains, planes etc. are available. What can one say about those days?
We have already seen that there were some renowned Swamijis in the Matam with the same name as Acharya, but subsequent to the time of Acharya, and there has been some confusion where these Swamijis were mistaken to be the the original Acharya himself. It appears that there have been differences in the narrations because of this also. For example, there are two versions in the biographies about the location where Acharya ascended the Sarvajna Peetam [seat of Omniscience – सर्वज्ञ पीठम्] – namely Kanchi and Kashmir. To this, three different responses are provided; One, the district of Kanchi itself was called Kaashmeeram [काश्मीरम्]. This has been clearly spelt out in “Govindanaadeeyam”. Another response is this: The Sarvajna peetam at Kashmir, which was similar to the one at Kanchi, was known as ‘Sarada Peetam’ [शारदा पीठम्]. Only in Kanchi, it is called by the name Sarvajna Peetam; And Acharya ascended both the peetams. The third response is this: “the original Acharya ascended the Sarvajna Peetam at Kanchi, while Abhinava Sankara ascended the Sarvajna Peetam at Kashmir. Because of this, the narration has got mixed up”.
It is not just that there were many people with the same name as Acharya. More confusion is created since there are two people having the same name as the characters who were there during his lifetime. Even in a class of 40, when two children have the same name with the same initial, don’t we see that the name of the place [village] is added as initial to one of them and he is given two initials? Researchers say that there were two people with names such as Anandagiri, Mandana Mishra, etc. They say that Anandagiri, the direct disciple of Acharya is different from the (Ananta) Anandagiri who came later in the order of disciples and wrote the ‘Sankara Vijayam’. They also say that the Mandana Mishra who wrote the Advaita Grantha called ‘Brahma Siddhi’ [ब्रह्मसिद्धि] and three Meemamsa Sastra texts is different from the Mandana Mishra who was earlier a Meemamsaka, later became Acharya’s disciple with the name ‘Sureswaracharya’ and wrote only Advaita books – ‘Naishkarmya Siddhi’ [नैष्कमर्यसिध्दि] and the Vartikā(s) [वर्तिका:]. Sureswara-Mandana Mishra’s writings reflect Acharya’s thoughts in total. The other Mandana Mishra, though he professed Advaita, also talked about some principles contradictory to those put forth by Acharya. It is also learnt that he lived a little earlier to the times of Acharya.
Like two persons having the same name, the same person having two names has also created some confusion. Even these days there are many people with the same name as ‘alias’! Likewise, Sureswara Mandana Mishra himself seems to have had another name Viswarupa.
With so many issues on hand, it is possible that those who wrote the biographies would have written them based on what they heard, and from what they could not gather, included things which were different but which they felt was true. They would have studied the biographies written earlier and based on them, would have developed the story further. It is also quite possible that they might have developed the story according to their preferences. With Acharya having traversed across the entire country and having established many institutions, it is quite possible that people who have been associated with them would like to highlight only that particular institution. Variations in the stories could have happened because of this also.
Not only are there variations among many books. We also see that there are variations in different editions of the same book. There are also some variations in the text in those versions written on palm leaves.
You might have heard the proverb, ‘The man who wrote spoiled the palm leaf’ [எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்]. First comes the difference in matter that might occur due to negligence of scribes who ‘copy’ the text. They might even have omitted copying a few verses. First is the difference that happens due to such errors. Writing differently according to one’s own preference [अभिमानम्] is another.
Although one may say and feel that whatever is written should be written ‘objectively’ (not according to one’s likes but only based on facts), and that such writings should also be viewed objectively, when it comes to action, it will be difficult to overcome one’s preferences. Also, when ‘likes’ crop up, ‘dislikes’ also tag along! Of course, from a point of propriety, in the case of Acharya and Advaita there should certainly be no room for such things. There is no one else who analysed everything in such an unbiased manner and put forth his principle with the firm belief ‘truth should be stated as it is, without any preference for any philosophy’. That is why his Advaita could accommodate all other philosophies such as Dvaita, Karma, Bhakti, Sankhya, Yoga, Bouddha, Meemamsa, etc. Only Acharya can equal himself. [No one else can become equal to him]. That is his greatness, isn’t it?.
What is already written [in Acharya Charitams – आचार्यचरितम्] is a closed matter. All those who have written them are great people, much devoted to Acharya. They have written them beautifully with the only intention that their devotion should not end with themselves, but spread to the entire world. The service they have rendered is truly great. We should certainly laud them.
How we make use of these biographies is of importance now. Whichever biography it maybe, we should enjoy them from the point of view that they draw our heart to Acharya, and thus they are devotional texts. There is no question about this. Devotion has no questions and answers. It is devotion that is important for us. Wherever there is an opportunity for our hardened heart to melt thinking about Acharya, we should to it. Therefore, let us read all the biographies [पारायणम्].
If we wish to analyse the story intellectually and find out what could be the reality, it should be done impartially. Just as he had sought the truth without any personal preferences – sought only the supreme truth- we should also pray to him to look only for the truth in his biographies, and also do it impartially.
Along with truth, love is also important. One cannot be compromised for the sake of the other. Simply because we feel that something is conclusively true, we should not harbour differences with those who are not able to come to the same conclusion. Advaitam itself means ‘no difference’ [अभेदम्]. Acharya is the one who taught us the concept of – merging [ऐक्य्म्] with the One Supreme. There can be nothing more profane than creating difference of opinions, prejudices [मनोभेद्म्] etc. in the very matter of Acharya.
The right mental attitude [मनोभावम्] would be to pray to Acharya himself and then set out in our quest for truth: ‘We should know the truth; we should have the courage to comprehend things as they are; the courage should not lead us to picking up a fight; We should be able to convey to others also without change in our love for them; Others should also be bestowed with a quest for truth and a heart full of love’.
_____________________________________________________________
1 The deceased Sastra Ratnakaram Polagam Brahmasri Rama Sastrigal
2 IV-3.1-3
_______________________________________________________________________________________
Audio
![]()