श्रीशिवानन्दलहरी -४८
नित्यानन्दरसालयं सुरमुनिस्वान्ताम्बुजाताश्रयं
स्वच्छं सद्द्विजसेवितं कलुषहृत्सद्वासनाविष्कृतम्।
शम्भुध्यानसरोवरं व्रज मनोहंसावतंस स्थिरं
किं क्षुद्राश्रयपल्वलभ्रमणसञ्जातश्रमं प्राप्स्यसि ॥ ४८ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -48
நித்யாநந்த³ரஸாலயம்ʼ ஸுரமுநிஸ்வாந்தாம்பு³ஜாதாஶ்ரயம்ʼ,
ஸ்வச்ச²ம்ʼ ஸத்³-த்³விஜஸேவிதம்ʼ, கலுஷஹ்ருʼத் ஸத்³வாஸநா விஷ்க்ருʼதம்।
ஶம்பு⁴த்⁴யாநஸரோவரம்ʼ வ்ரஜ, மநோ ஹம்ʼஸாவதம்ʼஸ ஸ்தி²ரம்ʼ
கிம்ʼ, க்ஷுத்³ராஶ்ரயபல்வலப்⁴ரமண ஸஞ்ஜாதஶ்ரமம்ʼ ப்ராப்ஸ்யஸி ॥ (48)
मनः+हंस+अवतंस! नित्य+आनंद-रस+आलयं सुर-मुनि-स्वान्त+अम्भुजात+ आश्रयं सु+अच्छं सद्(त्)+द्विज-सेवितं कलुष-हृत्-सद्-वासना+आविष्कृतं शंभु-ध्यानसरः+वरं स्थिरं ब्रज। क्षुद्र-आश्रय-पल्वल-भ्रमण-संजात-श्रमं किं प्राप्स्यसि?
मनसः शिवध्यानाश्रयणमेव सर्वोत्तमफलदायकमिति निर्णीय अन्यदेवताश्रयणव्यावृत्तिं कुर्वन्नाह – नित्यानन्देति। हे मनोहंसावतंस! हंसानाम् अवतंसः श्रेष्ठः राजहंसः मन एव हंसावतंस: तस्य संबुद्धिः। नित्यानन्दरसालयं नित्यानन्दः शाश्वतानन्दः स एव रस उदकं तस्यालयं स्थानं सुरमुनिस्वान्ताम्बुजाताश्रयं सुराश्च देवाश्च मुनयश्च परमहंसाश्च तेषां स्वान्तानि हृदयानि तान्येव अम्बुजातानि जलजानि तेषामाश्रयम् आलयं, स्वच्छं मलरहितम्, अन्यत्र विजातीयप्रत्ययानन्तरितम्, सद्द्विजसेवितं सन्तश्च ते द्विजाः ब्राह्मणादयश्च त्रयो वर्णाः तैः सेवितम्, अन्यत्र सद्द्विजाः राजहंसाः तैः सेवितम् कलुषहृत् कलुषाणि पापानि हरतीति कलुषहृत्, अन्यत्रापि समानमेव। सद्वासनाविष्कृतं सतां साधुकर्मणां वासनया संस्कारेण आविष्कृतम् प्रकटितम्, अन्यत्र सद्वासना सुगन्धः तेनाविष्कृतं प्रकटितम्। शम्भुध्यानसरोवरं शम्भोर्ध्यानं विजातीयप्रत्ययानन्तरितसजातीयप्रत्ययप्रवाहः तदेव सरोवरं वरं सरः श्रेष्ठं सर इत्यर्थः। तत् त्वं व्रज गच्छ। स्थिरं ध्यानसरोवरं स्थिरं, प्रसिद्धं सरः अस्थिरमिति भावः। क्षुद्राश्रयपल्वलभ्रमणसंजातश्रमं क्षुद्राः उभयतारतम्यानभिज्ञाः तेषामाश्रयः पापेभ्यः तारणसमर्थं न मुक्तिदमित्यर्थः। तादृशं यत् पल्वलं शम्भुध्यानसरोवरादल्पं तदुद्दिश्य यत् भ्रमणं संचारस्तेन जातः यः श्रमः तं किं किमर्थं प्राप्स्यसि गमिष्यसि? बहिरङ्गसाधनं परित्यज्य अन्तरङ्गसाधनमनुतिष्ठेति भावः॥४८॥[1]
[1] हेत्वलङ्कारः।
பரமசிவ தியானமே சிறந்ததாம் என்று மனத்திற்குப் போதித்து இதர தேவதைகளை நாடுவதினின்றும் அதைத் திருப்புகின்றனர்.
मनोहंसावतंस - மநோஹம்ʼஸாவதம்ʼஸ – ஓ மனமென்ற ஹம்ஸமே! ஒரு விஷயம் உனக்குங் கூறுவேன், உன் நன்மையை நாடிக் கேட்பாயாக. உனக்கு சிறந்த பகுத்தறிவில்லையே! நான் உனக்கு உற்றதோர் பூம்பொய்கையை எடுத்துக் காட்டுகிறேன்; அப்பொய்கையில்,
नित्यानन्दरसालयम् – நித்யாநந்த³ரஸாலயம் – சாச்வதமான பிரம்மானந்த மென்னும் ஜலம் நிரம்பியுள்ளது.
सुरमुनिस्वान्ताम्बुजाताश्रयम् – ஸுரமுநிஸ்வாந்தாம்பு³ஜாதாஶ்ரயம் – தேவர்கள் முனிவர்கள் முதலான பெரியார்களது மனம் என்ற அம்புஜங்கள் தெளிந்து விகஸித்துள்ளன.
स्वच्छम् – ஸ்வச்ச²ம் – அங்கு (நிர்மலமாயும்)வேறு சிந்தனையில்லாமலும்,
सद᳭द्विजसेवितम् – ஸ த்³த்³விஜஸேவிதம் – ஸத்குணங்கள் நிறைந்ததுமான துவிஜர்கள் என்ற பக்ஷிகள் ஸேவையை எண்ணி பறந்து கொண்டிருக்கும்.
कलुषहृत् – கலுஷஹ்ருʼத் – அப்பொய்கையின் ஜலம் பாபங்கள் என்ற மாசுகளை முற்றிலும் நீக்கி சுத்தப்படுத்தும்.
सद्वासनाविष्कृतम् – ஸத்³வாஸநாவிஷ்க்ருʼதம் – அவ்விடம் புஷ்பங்களுக்குக் குறைவில்லை; நல்ல வாஸனையுடன் பிரகாசமாய் விளங்கும்.
स्थिरम् – ஸ்தி²ரம் – சாசுவதமாயுமிருக்கும்; அத்தகைய பூம்பொய்கை எது வென்று உனக்கு தெரியவில்லையா! அதுவே
शंभुध्यानसरोवरम् – ஶம்ʼபு⁴த்⁴யாநஸரோவரம் – பரமசிவனை தியானித்தல் என்ற பூம்பொய்கையாகும்.
व्रज – வ்ரஜ – அதை சென்று அடையக்கடவாய்.
किं क्षुद्राश्रयपल्वलभ्रमणसंचातश्रमं प्राप्स्यसि? – கிம் க்ஷுத்³ராஶ்ரய பல்வல ப்⁴ரமண ஸஞ்சாத ஶ்ரமம் ப்ராப்ஸ்யஸி? – தாரதம்யம் அறியமாட்டாத அற்பர்களை ஆச்சரயிப்பதான சேற்றுக் குட்டையில் கிடந்தது உழல்வதால் உண்டாகும் சிரமத்தை நீ ஏன் அடையவேண்டும்? அந்தோ! உன் ஆயாசத்தை விடுவாய்.
எனது மனமாகிய அன்னப்பறவையே! இயற்கையமைப்பிலேயே சாரம் அசாரமெனப் பகுத்தறியும் விவேகம் அடைந்திருப்பதற்கேற்ப நீ, உலகில் அற்பதேவதைகளின் ஸேவையாகிய, துர்நாற்றம் வீசும் குட்டையில் வசிக்கும் கஷ்டத்தை ஒழித்து, நித்தியாநந்ததை யொத்த தண்ணீர் நிரம்பியதும், தேவர், முனிவர் முதலியவர்களின் சித்ததையொத்த செந்தாமரை மலர்களையுடையதும், ஞானவான்களை நிகர்த்த உயர்ந்த பட்சிக்கூட்டங்கள் இடையறாது சூழ்ந்துள்ளதும், நல்ல கருமங்களாகிற நறுமணம் வீசுவதுமான ஈசுவர துதியாகிய அழகார்ந்த தடாகத்தையடைந்து உன் பிறவிப்பயனாகிய பேரின்ப நிலையைப் பெறுவாயாக (என்பதாம்).
மனமென்னும் ஹே சிறந்த ராஜஹம்ஸமே! ஸேவிப்பதற்கு ஸர்வ வல்லமையுடைய பரமேச்வரன் இருக்க மற்ற அற்ப தேவதைகளை நீ ஏனோ ஸேவித்துழலுகிறாய். அற்ப தேவதைகளை ஸேவிப்பதால் நீ செய்த பாபங்கள் கழுவப்பட்டாலும் நித்யாநந்தகரமான மோக்ஷஸாம்ராஜ்யத்தை அளிக்கும் மகிமை அத்தேவதைகளுக்கு இல்லையே. சிறந்த அன்னப்பறவை போலிருக்கின்ற உனக்கு ஸ்ரீ பரமேச்வர த்யானம் என்ற அதி அற்புதமானதும் அழியாத ஆநந்தம் என்னும் ரஸம் நிரம்பியதுமான ஸரோவரம் இருக்க, குளம் குட்டைக்கு ஸமமாக இருக்கின்ற தேவதைகளை ஸேவித்து, சுற்றியலைந்து ஏனோ நீ கஷ்டப்படுகிறாய். மஹாதபஸ்விகளான முனிவர்களுடையதும் தேவர்களுடையதும் மனமாகிற தாமரை மலர்கள் மலர்ந்தும், ஸ்படிகம் போல் நிர்மலமானதாகவும் இந்த ஸரோவரம் விளங்குகிறது. கர்மானுஷ்டான நிஷ்டர்களான சிறந்த ப்ரஹ்ம ஞானிகள் என்ற ஹம்ஸபக்ஷிகள் விஹரிக்கின்ற இவ்வற்புத ஸரோவரத்தை ஆச்ரயிப்பதால் மும்மலங்கள் விலகுகின்றன. மேலும் இது நல்ல நல்ல ஸம்ஸ்காரங்களை உண்டுபண்ணுதிறது. நறுமணம் உள்ளதாயும் இருக்கிறது. என்றும் அழியாதது இந்த ஸரோவரமே ஆகையால் ஹே மனமே! ஸகலவிதமான பலன்களையும் அளிக்க கூடிய ஸ்ரீ பரமேச்வரத்யானமே சிறந்தது. அதையே நீ செய். அவரே உனக்கு புகலிடம்.
மனதை ராஜஹம்ஸமாகவும், ஸ்ரீபரமேச்வர த்யானத்தை சிறந்த ஓடையாகவும் கற்பிக்கிறார். ஹம்ஸங்கள் எப்பொழுதும் நீர் நிலையங்களிலேயே வசிக்கும். அதுபோல் மனமாகிற ராஜஹம்ஸமும் ஸ்ரீபரமேச்வர த்யானமாகிற ஓடையிலே வசிக்கவேண்டும். பரமேச்வர த்யானத்தை வற்றாத ஓடையென்றும், மற்ற தேவதைகளின் த்யானத்தை சிறிய குட்டையென்றும் கற்பித்து இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும், நீர் நிலையத்திற்கும் பரமேச்வர த்யானத்திற்கும் உள்ள ஒற்றுமையையும் இங்கு வர்ணிக்கிறார்.
பரமேச்வர த்யானமாகிற ஓடைக்கு, அழிவற்ற ஆனந்தமே ஜலம். தேவர்களுடையவும், முனிவர்களுடையவும், மனதுகளே தாமரைகள். ஸாதுக்களான அந்தணர் முதலியவர்களே ராஜஹம்ஸங்கள். ஸத்கர்மாக்களின் வாஸனைகளே (ஸம்ஸ்காரங்களே) வாஸனை. இத்தகைய சிறந்த வற்றாத ஓடையை விட்டுவிட்டு மற்றதேவதைகளின் தியானமாகிற அற்ப ஓடைகளை ஏன் அடையவேண்டும்? அவை பாபங்களைப் போக்கடித்தாலும் முக்தியை அளிக்கக்கூடியவை அல்ல. ஆதலால் அவற்றை அண்டி வீண் சிரமத்தை அடையவேண்டாம் என்று மனதாகிற ஹம்ஸத்திற்கு உபதேசம் செய்கின்றார். இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்காரம் செய்பவர்கள் காலக்கிரமத்தில் அற்பமான தேவதைகளை ஆராதிக்காமல், மஹாமஹிமையுள்ள பரமேச்வரனை த்யானம் செய்யும் பாக்யத்தை அடைந்து சிவாநந்தத்தை அனுபவிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
मनोहंसावतंस = हे मनरूप श्रेष्ठ हंस !
नित्यानन्दरसालयम् = नित्य आनन्दरूप जल की अथाह राशि वाले,
सुरमुनिस्वान्ताम्बुजाताश्रयम् = देवताओं व मुनियों के मनरूप कमलों के आश्रय,
स्वच्छम् = साफ,
सद्विजसेवितम् = अच्छे द्विजों (पक्षियों व ब्राह्यणों ) द्वारा सेवित,
कलुषहृत्सद्वासनाविष्कृतम् = पापकालुष्य का निवारण करने वाली सुखद सुगन्ध देने वाले,
स्थिरम् शम्भुध्यानसरोवरम् = शम्भु के ध्यानरूप सरोवर को,
व्रज = जाओ । (वहां चले गये तो)
क्षुद्राश्रयपत्वलभ्रमणसंजातश्रमम् = तुच्छ आश्रय जो छोटे ताल,
उनमें घूमते रहने से होने वाली थकान,
किम् = क्यों कर्,
प्राप्यसि = पाओगे ?
Dr.T.M.P.Mahadevan
O Mind, the best of swans! Go to the lake of the meditation on Sambhu, which is the reservoir of eternal bliss, which blooms with the lotuses of the hearts of gods and ascetics, which is clear and is resorted to by the good and the wise (swans), which removes dirt (sin), which emits good scents, and which is calm. Why do you tire yourself by wandering in the muddy pools of service to the low?
Here again the mind is addressed as the royal swan. Its proper place is in the limpid lake of Siva-meditation. Let is not demean itself by resorting to muddy pools – the so-called patrons who are small-minded and hard-hearted!
There is deprecation, once again, of the seeking of patronage under people who are low and mean.
Swami Tapasyananda
O Kingly swan of my mind! Why do you wander in the muddy tanks of worldliness, fit only for mean creatures? Go unto the pure and perpetual lake of divine contemplation, having eternal bliss for its wanters, the minds of heavenly sages for its lotus flowers, the holy men as the birds resorting to it, sins as the dirt it cleanses away, and virtuous disposition as the fragrance it emits.
Sivaanandalahari – 48
नित्यानन्दरसालयं सुरमुनिस्वान्तांबुजाताश्रयं
स्वच्छं सद्विजसेवितं कलुषहृत्सद्वासनाविष्कृतम् ।
शंभुध्यानसरोवरं व्रज मनो हंसावतंस स्थिरं
किं क्षुद्राश्रयपल्वलभ्रमणसंजात श्रमं प्राप्स्यसि ॥ ४८ ॥
Commentary
हे मनोहंसावतंस = O! Mind that is the superior Annapakshi!
नित्यानन्दरसालयं = the abode of the nithyaanandha sivaanandha jalam;
सुरमुनिस्वान्तांबुजाताश्रयं = the abode of the flowers that are the minds of the devas and the munis;
स्वच्छं = of nirmalam;
सद्विजसेवितं = of being worshipped by the great swans of the Brahmanas;
कलुषहृत् = of being the remover of the dirt called paapas;
स्थिरं = of being permanent;
शंभुध्यानसरोवरं = of being the lake of sambudhyaanam;
व्रज = reach;
क्षुद्राश्रयपल्वलभ्रमणसंजातश्रमं = of the trouble of remaining in the meagerly useful puddle
किं = why?;
प्राप्स्यसि = attain.
Hey! Mind that is like the princely swan!
Hey! Mind that is like the princely swan!
I want you to get to this remarkable lake that is of endless sivaanandhajalam, that is of the abode of the mind-lotus of devas and muniswaraas, that lonely place which is pure light, that is swaprakaasa chithEkarasam, that is being worshipped by the swans who are the Brahmana srEshtaas desiring ब्रम्हज्ञानं , that which has the capacity to remove even the worst paapas that do not have any praayaschittham, that which has no destruction but remains permanent in all the three kaalas called the past, the present and the future. Why do you have to rot in the dirty puddle serving the undeserving masters? Please ponder.
The saasthras shouts at you for your attention with the words:
“आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्त्तिनोर्जुन |”
It drums to you the fact that all lOkas from BrahmalOka on meet with their destruction during the praLaya. Don’t you know this? When those worlds are to be destroyed why are you worshipping those devathaas having domain over those lOkas? Atleast hereafter stop worshipping useless Gods. You should reach that lake (please note that AachaaryaaL calls it a lake and not a lOka to show that the praLayam cannot destroy the lake but can only merge into it!) that is Sambhu’s Sivaanandhajalam who remains as the only devaasura poojyan and who can be known only through the vedas.
Without frittering their minds into many objects and without dedicating to the many anya-devathaas whose ends are time bound, all praaNis should seriously indulge in the ekaagra dhyaana of Parameswara who is possessed of endless mahima. Then only can they enjoy the supreme MOkshaanandam.
O! My mind! You soar like a swan! Please understand that there is nothing superior to Karunaamoorthy Parameswara. Only His paadhaabhja smaranam will give the limitless Aanandha. Kinowing this you should not surrender to the inferior devathaas.
न यद्वचश्चित्रपदं हरेर्यशो
जगत्पवित्रं प्रगृणीत कर्हिचित् ।
तद्वायसं तीर्थमुशन्ति मानसा
न यत्र हंसा निरमन्त्युशिक्क्षया: ||
–Bhaagavatham (1.5.10)
A puddle of water is akin to the abode of anya devathas. A puddle is a place where the crows (the small minded) visit but the swans (realized ones) go to the huge lake of Parameswara.
Aum SambhO Mahaadeva!
![]()
