Happy Skanda Shasti: – Skanda roopi Parameshwara mantra in Sri Rudram

Happy Skanda Shasti. Skanda, Subramanya or Muruga is Pratyaksha Deivam in this Kaliyuam. Worshipping Skanda showers one with not only all material benefits but also the Jnana leading to Moksha. Skanda / Swaminatha / Subramanya / Muruga is Kuladeivam for lakhs of families. On this auspicious Skanda Shasti occasion, let us pray to Lord Parameshwara in the form of Skanda. In the famous Sri Rudram, there is one Mantra [10-2] whose Dyana Slokam describes Sri Paramashwara as Skandaroopi.

या ते॑ रुद्र शि॒वा त॒नू: शि॒वा वि॒श्वाह॑भेषजी।

शि॒वा रु॒द्रस्य॑ भेष॒जी तया॑ नो मृड जी॒वसे᳚ – इति॥

या। ते॒। रु॒द्र॒। शि॒वा। त॒नू:। शि॒वा। वि॒श्वाह॑भेष॒जीति॑वि॒श्वाह॑ – भे॒ष॒जी॒।

शि॒वा। रु॒द्रस्य॑। भे॒ष॒जी। तया᳚। नः॒। मृ॒ड॒। जी॒वसे᳚॥

(सा॰भा॰): हे रुद्र, ते त्वदीया शिवा शान्ता तनू: या विद्यते तया तन्वा न: अस्मान् जीवसे जीवयितुं मृड सुखय​। कथं तन्वा: शिवत्वम्? तदुच्यते। यस्मादेवं विश्‍वाहभेषजी सर्वेष्वह​:सु रोग-दारिद्र्यादे-रौषधवद्विनाशहेतु: तस्मात् शिवा। किं च​, यस्मात् रुद्रस्य तादात्म्य-प्राप्तये भेषजी औषधरूपा ज्ञानप्रदानेन जन्ममरणादि-दु:खं निवारयति तस्मादप्येषा शिवा

 हे रुद्र​![1] – ஹே ருத்ரரே! विश्वाह भेषजी – எந்நாளும் பிணி, வறுமை முதலிய துன்பங்களை நீக்கும் மருந்தாய் விளங்குவதும், शिवा – ‘சிவா’ என்று கூறப்படுகின்ற பரம மங்களகரமான, रुद्रस्य​ – ருத்ரனுடன் இரண்டறக்கலந்து இன்புறச்செய்யும், भेषजी – பிறவித்துன்பத்தை நீக்கும் ஞான மருந்தாகியதுமாகிய, शिवा – மங்களகரமான, ते – உம்முடைய, या शिवातनू: – எந்த ஒரு பரமமங்களமான பராசக்தியுடன் கூடிய அருள்புரியும் தன்மையுடைய சரீரமுண்டோ உண்டோ, तया – அந்த சரீரத்தால், नः – எங்களை, जीवसे – வாழ்வாங்கு வாழும் பொருட்டு, मृड​ –  ஸுகமாக ஜீவிக்கும்படிச் செய்யுங்கள்.

[ஸா.]: ஹே ருத்ர! நோய், வறுமை முதலியவைகளை நீக்கி அருள்வதாலும், பிறப்பைப் போக்குவதாலும், உன்னுடன் இரண்டறக் கலந்து ஒன்றுபடும் முக்தியைக் கொடுப்பதாலும், மங்களத்தைச் செய்யும் உனது திருமேனியால் அத்தகைய மங்களத்தைச் செய்வீராக!

[அபிநவ சங்கரர்] : ஹே பரமேச்வரா! உமது திவ்யத் திருமேனி பரம மங்களமானது. அதனால் அது சிவா என்று கூறப்படுகிறது (शिवा शान्ता). அதை நினைத்த மாத்திரத்தில், என்றைக்கும் க்ஷேமத்தைக் கொடுக்கக் கூடியது என்று அநுஸந்தானம் செய்துகொண்டவுடன், ஆஹா! நீர் எத்தகைய பரம சாந்தமூர்த்தி (शिवा शान्ततरा)!, உமது இந்தத் திருமேனியல்லவோ ரோக தாரித்ரியத்தை நீக்குகிறது (विश्वेषु सर्वेष्वपि अहःसु, भेषजी रोगदरिद्र्यादेरौषधवद्विनाशहेतुः; यस्मादेवं तस्मात् शिवा) என்று ஞாபகம் வந்துவிட்டது. அதற்காக இரண்டாம்தரம் சிவா என்ற பதம் போடப்பட்டது. உமது சரீரம் மோக்ஷத்தையே கொடுக்கும் (न केवलमैहिकसुखप्रदत्वमात्रेण शिवत्वम्, किं तु मोक्षसुखप्रदत्वेनापीत्याह – शिवा रुद्रस्येति।) என்றவுடன், ஆஹா உமது ரொம்ப சாந்தமான வடிவம் மறுபடியும் நினைவு உண்டாகிவிட்டது. அதற்காக மூன்றாவது தடவை சிவா என்ற பதம் போடப்பட்டது  – என்பதை அறியவேண்டும்.

பரமேச்வரனுக்கென்று தனிப்பட்ட சரீரம் எதுவும் இல்லை. அவர் பிரபஞ்சத்திற்கு பொருட்காரணமாக விளங்குவதால், உலகம் முழுவதுமே அவரது சரீரமாக இருக்கிறது. அறிவுக்காரணமான அவர், அனைத்து அறிவின் வடிவிலும் விளங்குகிறார். எனவே, எல்லாக் காலங்களிலும் தோன்றும் நோய்கள், வறுமை போன்றவற்றைப் போக்கக் கூடியவர், ஸ்ரீபரமேச்வரனே. அவர் மங்கள வடிவினர். இப்பொழுது அந்த விரும்பத்தக்க பலன்களை அவர் நமக்கு அருளியிருக்கிறார். அதனால் அவர் மங்களத் திருமேனியை உடையவராகிறார். (சிவா விச்வாஹ பேஷஜீ). அனைத்து மங்களங்களிலும் சிறந்த மங்களமான மோக்ஷத்தை, ப்ரஹ்மவித்தையாகிய ஞான மருந்தைத் தந்து, ஸம்ஸாரமாகிய பிறவி நோய்க்கு வைத்தியராக, பேஷஜீயாக இருக்கிறார் (சிவா ருத்ரஸ்ய பேஷஜீ). இக்காரணத்தால்தான் அவரது உடல் மேலும் சிவமாக, மங்களகரமானதாக இருக்கிறது. ஸ்ரீபரமேச்வரனை மங்கள வடிவில் வழிபடுகிறோம். அவர் நமக்கு எப்பொழுதும் ஆனந்தத்தை அருளட்டும்.

भक्तश्‍च यः कार्तिकेये काकुत्स्थ भुवि मानवः।

आयुश्‍मान्पुत्रपौत्रैश्च स्कन्दसालोक्‍यतां व्रजेत्॥ [वा.रा १.३७.३२]

ஓ ராமா! எந்த மனிதன் இப்பூமியின்கண் கார்திகேயனான சுப்ரமணியரிடம் பக்தியுள்ளவனா இருக்கிறானோ, அவன் தீர்காயுஷ் உள்ளவனாகவும், பிள்ளை பேரன் முதலியவர்களை அடைந்தவனாகவும் இம்மையில் வாழ்ந்து மறுமையில் சுப்பிரமணியரின் லோகத்தை யடைவான்) என்று ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் (1.37.32) சொல்லியபடி, இவ்வுலக ஸுகத்தையும் மோக்ஷ ஸுகத்தையும் கொடுப்பவரும் பரம சாந்தகுணம் பொருந்தியவரும், பரமேச்வரனின் அவதாரமுமான சுப்பிரமணியர் இதனால் பிரார்த்திக்கப்பட்டதாய் ருத்ர கல்பம் என்ற மந்திர சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

[1] பரமேசுவரா! நீ (காளகூட விஷத்தை அருந்தியபின்னும்) பிழைத்திருக்கின்றாயே! உமக்கு யார் மருந்து கொடுத்தார்கள்? உனக்கு இரண்டு சரீரங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கோரமானது. மற்றொன்று மங்களகரமானது. கோரஸ்வரூபம் உன்னுடையது. சிவ என்பதை சிவா என்று நீட்டினால் அம்பிகைக்கு ஆகும் அம்பிகைக்குப் பாதி (உன் உடலில்) உண்டு. அவள் ஸ்வரூபம் பரம மங்களகரமானது. லோகம் முழுவதற்கும் மருந்து அது தான். அம்பாள் கடாக்ஷம் இருந்தால் அகாலமரணம் லோகத்தில் இராது. உனக்கும் மருந்து பண்ணுவது அந்த ஒரு சரீரம், ஸர்வமங்கள சரீரம்தான் மருந்து, அதனால் ‘எங்கள் அம்பிகையால் தான் நீ பிழைத்திருக்கிறாய்’ என்ற கருத்து கீழே சொன்ன சுருதியில் இருக்கிறது, இது மூல சுருதி. சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் என்னும் ஸௌந்தர்யலஹரி முதல் ச்லோகத்திலும் இதே கருத்து வந்திருக்கிறது.

 

Source: Kamakoti.org | Original Tamil : Sri Rudram & Chamakam by Muthukirshna Sastry | English Translation by Sri P.R.Kannan

Mantra  2

या ते रुद्र शिवा तनूः शिवा विश्वाहभेषजी ।

शिवा रुद्रस्य भेषजी तया नो मृड जीवसे ॥

Meaning:

रुद्र-  O Parameswara,   विश्वाहभेषजी –   being medicine for removal of disease, poverty etc. at all times,    शिवा-  called ‘Sivaa’,    शिवा-  very auspicious,      या- that,   ते- your,  तनूः-  body,      रुद्रस्य-  of you, who is doctor curing the disease of samsara,  भेषजी- being medicine,   शिवा- the auspicious (body),  तया-  with that also,  नः- us,    जीवसे-  for living,  मृड- make comfortable.

Explanation:

Parameswara has two forms- ‘Sivaa’ and ‘Ghora’. Of these, ‘Sivaa’ can be considered as two- one, which removes all diseases and miseries like poverty of all people at all times and bestows comforts; other, which bestows Atmagnana, destroys the misery of samsara like birth, death etc. and grants the bliss of Moksha. The term ‘Visvaahabheshaji’ refers to the first form and ‘Rudrasyabheshaji’, the second. The prayer here is for grant of comfortable life by both these forms.

Rishi and Devata for this mantra are Sri Parameswara of the form of Subrahmania; Chandas is Anushtup.

Dhyanam:

“द्रुतचामीकरप्रख्यं शक्तिपाणिं षडाननम् ।

मयूरवाहनारूढं स्कन्दरूपं शिवं स्मरेत्  ॥“

“One should meditate on Parameswara of the form of Subrahmania, brilliant like molten gold, holding the weapon ‘Sakti’ (Vel) in the hand and seated on the peacock mount.”

Full power of this mantra will be realized by doing Pranayama 108 times and chanting this mantra 5000 times. Chanting this mantra will bestow good progeny, nourishment, health and wealth.

Loading

One Response

  1. My Satha kOti pranamalu to B.SRINIVASAN, Cupertino, CA. TAkes pains to explain the meaning and annotates by padam and that makes a lot of sense. Sanskrit words sometimes have dozens of annotatio based on context. May Bhagavaan grant him a long life and many more such articles. If i can get his E-mail address, i would like to share a few (Such as Sadhaachaara anysandhaanam) which he could use to put it in his format. Such treatise will make sense only to TRUE JIGNYAASU and not cut ice with those who beleive that visiting temples gives a boon, or collecting money from others for a noble act etc. gives them some spiritul benefits .

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading