श्रीशिवानन्दलहरी -४६ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -46 – Sri Sivaanandalahari-46

श्रीशिवानन्दलहरी -४६

आकीर्णे नखराजिकान्तिविभवैरुद्यत्सुधावैभवै-
राधौतेऽपि च पद्मरागललिते हंसव्रजैराश्रिते।
नित्यं भक्तिवधूगणैश्च रहसि स्वेच्छाविहारं कुरु
स्थित्वा मानसराजहंस गिरिजानाथाङ्घ्रिसौधान्तरे ॥ ४६ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -46

ஆகீர்ணே நக²ராஜிகாந்திவிப⁴வை, ருத்³யத்ஸுதா⁴வைப⁴வை-
ராதௌ⁴தேபி ச பத்³மராக³லலிதே, ஹம்ஸவ்-வ்ரஜைராஶ்ரிதே।
நித்யம்ʼ ப⁴க்திவதூ⁴க³ணைஶ்ச ரஹஸி, ஸ்வேச்சா²விஹாரம்ʼ குரு
ஸ்தி²த்வா மாநஸ-ராஜ-ஹம்ஸ, கி³ரிஜாநாதா²ங்க்⁴ரி-ஸௌதா⁴ந்தரே ॥ (46)


मानस-राजहंस! नख-राजि-कांति-विभवैः आकीर्णे उद्यत्‌-सुधा-वैभवैः आधौते अपि च पद्म-राग-ललिते हंस-व्रजैः आश्रिते गिरिजा-नाथ+अंघ्रि-सौध+अन्तरे नित्यं भक्ति-वधू-गणेः च रहसि स्वेच्छा-विहारं कुरु।॥ 



मानसराजहंसस्य गौरीरमणाङ्घ्रिसौधान्तरे वासं विधत्ते – आकीर्ण इति। हे मानसराजहंस! हंसानां राजा राजहंसः “राजदन्तादिषु परमि”ति उपसर्जनस्योत्तरनिपातः, हंसश्रेष्ठ इत्यर्थः। मानसमेव राजहंसः तस्य संबुद्धिः। नखराजिकान्तिविभवैः नखानां राजिः पङ्क्तिः तस्याः कान्तिः द्युतिः तस्या वैभवैः (विभवैः) विभूतिभिः समृद्धिभिरित्यर्थः। आकीर्णे व्याप्ते। उद्यत्सुधावैभवैः उद्यतः नित्याभ्युदयं प्राप्नुवतः मूर्ध्‍नि स्थितस्य चन्द्रस्य सुधाः अमृतमयकिरणाः तासां वैभवैः व्याप्तिभिः। अन्यत्र सुधा एव सुधा दग्धशर्कराचूर्णानि तासां विभवैर्व्याप्तिभिः। आधौते धवलिते। अपि किं च पद्मरागललिते पद्मस्य राग इव रागः कान्तिविशेषः स एव पद्मरागाख्यरत्नविशेषः तेन ललिते खचिते। हंसव्रजैराश्रिते हंसा हंसमन्त्रार्थध्यानपराः त एव हंसाः हंसपक्षिणः तेषां व्रजैः समूहैः आश्रिते उपासिते, अन्यत्र आश्रिते आक्रान्ते। गिरिजानाथाङ्घ्रिसौधान्तरे गिरिजानाथस्य पार्वतीनाथस्य अङ्घ्रिरेव सौधः प्रासादः तस्यान्तरे अन्तर्विद्यमाने गृहे “तत्र भव” इत्यण्, आदिवृद्धिश्च। रहसि आवृतस्थाने भक्तिवधूगणैः सह्‌, भक्तय एव वध्वः भार्याः तासां गणाः सङ्घाः तैः सह, नित्यं सदा स्वेच्छाविहारं स्वच्छन्दक्रीडां कुरु विधेहि। महादेवस्य पादारविन्दसेवाजन्यसुखं प्रियतमासङ्गजन्यसुखसदृशमिति भावः ॥४६॥[1]

[1] विभावनालङ्कारः ।


மானஸ ராஜஹம்சத்திற்கு கௌரிகாந்தனது திருவடிகளாகிற உப்பரிகையின் நடுவில் வசிக்கும்படி கட்டளையிடுகிறார்.


मानसराजहंस ​- மாநஸராஜஹம்ʼஸ – ஹே மனமெனும் ராஜஹம்ஸமே! (உனக்கோர் உபாயம் கூறுவேன் கேட்பாயாக!)

नखराजिकान्तिविभवैः – நக²ராஜிகாந்திவிப⁴வை꞉ – நகங்களினின்று வெளிப்படும் காந்தி

आकीर्णे – ஆகீர்ணே – எங்கும் வியாபிக்கும்படி விளங்கியும்,

उद्यत्सुधावैभवैः – உத்³யத்ஸுதா⁴வைப⁴வை꞉ – வளர்பிறையின் அமிருதமயமான கிரணங்களாகிய முத்து வெள்ளையின் பூச்சுக்களால்

आधौते – ஆதௌ⁴தே – எங்கும் வெண்மையாகச் செய்யப்பட்டதாயும்,

अपि च​ – அபி ச – இன்னும்

पद्मरागललिते – பத்³மராக³லலிதே – பத்மராகம் முதலான உயர்ந்த ரத்தினங்களால் அழகுடன் இழைக்கப்பட்டதாயும்,

हंसव्रजैः – ஹம்ʼஸவ்ரஜை꞉ – ஹம்ஸ மந்த்ரார்த்த த்யான பரரான ஹம்ஸர் (யதிகள்) களால் எப்போதும் சூழ்ந்து

आश्रिते – ஆஶ்ரிதே – சேவிக்கப்பட்டதுமான இருப்பிடத்தை யுடைய

गिरिजानाथांघ्रिसौधान्तरे – கி³ரிஜாநாதா²ம்ʼக்⁴ரிஸௌதா⁴ந்தரே – நமது பர்வத வர்த்தனியான ஸ்ரீ மாதாவின் நாதனான ஈசுவரருடைய திருவடிகளின் நடுவில்

स्थित्वा – ஸ்தி²த்வா – நீ இருந்துகொண்டு

भक्तिवधूगणैः – ப⁴க்திவதூ⁴க³ணை꞉ – பக்தியாகிய சிறந்த பெண் ஹம்சங்களுடன் கூட

रहसि – ரஹஸி – ரஹஸ்யமாய்

नित्यम् – நித்யம் – எப்பொழுதும்

स्वेछाविहारं कुरु – ஸ்வேசா²விஹாரம்ʼ குரு – உன் இஷ்டப்படி விளையாடிக்கொண்டே இரு.


எனது சுத்த சத்துவாம்ச மனமாகிய அரச அன்னப்பட்சியே! நீ உனது பிறவியின் இயற்கைத் தன்மையாகிய பகுத்தறிவுடன் கூடியிருந்தும், அதை மறந்து, சாரமற்ற அநித்திய உலக சுகபோகங்களில் எக்காலும் ஓய்வின்றி அலைந்துதிரிந்து அல்லல் பலவற்றிற்கும் ஆளாவது விவேகத்தன்மையாகுமா? உன் உயரிய தன்மைக்கேற்ப உன்னத நிலையை அடையச் செய்யும் உபாயம் ஒன்று கூறுகிறேன் கேள். திருக்கைலாஸ கிரியின்கண்ணே அமைந்த, அழகிய வெண்ணிறத் திருமாமணிப் பீடத்தில், உமாதேவியுடன்கூடி திருவோலக்கம் கொண்டெழுந்தருளியிருக்கும்  மஹாதேவனது, வெண்டாமரைபோன்ற திருவடிகளில், சிவந்த அந்த நகங்களின் பிரகாசமானது, அப்பீடத்தில் இழைக்கப்பட்ட விலையேறப் பெற்ற நவரத்தினங்கள் போல் ஜொலிக்க,  பல முனிபுங்கவர்கள் சூழ்ந்து வாழ்த்தெடுப்ப,  விளங்கும் உப்பரிகையில்,  பக்தி மாதாகிய இலட்சுமீகரத்துடன் (விளங்கும் பெண் அன்னபக்ஷிகளுடன் ) கூடிப்பரவசமாயிலகும், திருவடிப் பேற்றில் இரண்டறக் கலந்து எப்போதும் இன்புற்றிருப்பாயாக (என்பதாம்).


மனமென்னும்‌ ஹே ராஜ ஹம்ஸ்மே! மஹாதேவனுடைய பாதாரவிந்தங்களையடைந்து அவைகளை ஸேவிப்‌பது என்பது தன்‌ ப்ரியதமையான பத்னிஸங்கமத்தால்‌ உண்டாகின்ற சுகத்தை ஓத்ததேயாகும்‌. ஏனெனில்‌ அந்த பர்வதராஜ புத்ரியான பார்வதீபதியின்‌ இரு பாதங்களும்‌ ஒரு மாளிகைபோல ப்ரகாசிக்கிறது. இம்மாளிகையானதுமிகவும்‌ அழகாக இருக்கிறது. பரமேச்வரனின்‌ கால்‌ விரல்‌ நகங்களின்‌ சோபை இம்மாளிகையில்‌ எங்கும்‌ பரவி மாளிகைக்கு மேலும்‌ அழகையூட்டுகிறது. பரமேச்வரன்‌ தன்‌ தலையில்‌ சந்த்ரக்கலையை சூடியிருக்கிறான்‌. அதிலிருந்து அம்ருதமயமான கிரணங்கள்‌ பரமேச்வரனது சரணங்களாகிற மாளிகையில்‌ பட்டு எங்கும்‌ வெள்ளை வெளேரென வெண்மையாக சுண்ணாம்பு பூசப்பட்டது போல ப்ரகாசிக்கிறது. மேலும்‌ செந்தாமரை மலரைப்‌ போல செக்கச்‌ சிவந்த பத்மராகச்‌ கற்களால்‌ இழைக்கப்‌ பட்டது போலவும்‌ இம்மாளிகை ஒளி விட்டு ப்ரகாசிக்‌கிறது. இம்மாளிகையில்‌ ஓர்‌ வகை ஹம்ஸ பறவைகளின்‌ கூட்டம்‌ வாஸம்‌ செய்கின்றன. “’ஸோஹம்‌ ஹம்ஸ! ஹம்ஸ: ஸோஹம்‌” என சதா ஜபித்து ஜபித்து பரமஹம்ஸ பதவியை எய்திய முனிவர்களின்‌ கூட்டம்‌ தான்‌ அப்‌ பறவைகள்‌. இப்பரமஹம்ஸ பறவைகளால்‌ ஆச்ரயிக்கப்‌பட்ட பரமேச்வரனின்‌ சரணாரவிந்தங்களாகிற இம்‌ மாட மாளிகையில்‌ பக்‌தி என்ற இளம்‌ பெண்‌ ஸமூஹங்களுடன்‌ ஹே மனமே, நீ ரஹஸ்யமாக குடியிருந்து கொண்டு உன்‌ விருப்பம்‌ போல்‌ விளையாடு.


மனதை ஹம்ஸபக்ஷியாகவும், ஸ்ரீ பரமேச்வரனுடைய சரணங்களை சிறந்த மாளிகையாகவும் கற்பனை செய்து அம்மாளிகையில் மனதாகிற ஹம்ஸபக்ஷி பக்தியாகிற பெண் பக்ஷிகளுடன் எப்பொழுதும் உல்லாசமாக க்ரீடித்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறார்.

 

ஸ்ரீமஹாதேவனுடைய மலரடிகளைச் சேவிப்பது, ஓர் சிறந்த மாளிகையில் மனதிற்கிசைந்த மங்கைகளுடன் உல்லாசமாக க்ரீடித்துக் கொண்டிருப்பதற்குச் சமமாம்.

 

பக்தியை ஸாமான்ய பக்தி என்றும் விசேஷ பக்தி என்றும் அறியவேண்டும். ஸாக்ஷாத் பரமேச்வரனுடைய வைபவத்தையும், மஹிமையையும் தெரிந்துகொண்டு அவரிடத்திலேயே மனதை லயித்துக் கொண்டிருக்கும்படிச் செய்வது ஸாமான்ய பக்தியென்றும், பரசிவத்தை ஆத்மஸ்வரூபத்திற்கு வேறு படுத்தாமல், அகண்டாகார வ்ருத்தி ஞானத்தோடு சிவோஹம் என்று அநுஸந்தானம் செய்துவருவதை விசேஷபக்தி என்றும் அறியவேண்டும். இவ்வாறு விசேஷ பக்தியை அநுஸந்தானம் செய்துவருபவர்கள், காலக்கிரமத்தில் எல்லையற்ற ஆத்மஞானமாகிய சிவானந்தத்தை அனுபவிப்பார்கள். இந்த எல்லையற்ற சிவானந்தமானது, ஏகாந்தமாகவும், அந்தர்முகர்களாகவும் இருந்துவரும் பரமஹம்ஸர்கள் விஷயத்தில் தான் உண்டாகும்.  ஆகையால் ஹே மனமாகிய ராஜ ஹம்ஸமே! நீ ரஹஸ்யமாக, பக்தியென்னும் பெண் ஹம்ஸங்களுடன், பரமேச்வரனுடைய திருவடித்தாமரையில், உன்னிஷ்டப்படி விளையாடு; அப்போதுதான் நீ எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிப்பாய் – என்ற ரஹஸ்யத்தை ச்லோகத்தில் ரஹஸி ஸ்வேசா²விஹாரம்ʼ குரு என்ற பதங்களினால் பகவத்பாதாள் பிரகடனம் செய்கின்றார்கள். இந்த ச்லோகத்தின் தாத்பர்யத்தை உணர்ந்து பரமேச்வரனை நமஸ்கரிப்பவர்கள் அவரது தாமரைப்பாதங்களை ஸ்மரணம் செய்யும் பாக்கியத்தினால், காலக்கிரமத்தில் சிவாநந்த அனுபவம் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. இதற்கு இந்த ச்லோகமே  ப்ரமாணம்.


मानसराजहंस = हे मनरूप श्रेष्ठ हंस !
नखराजिकान्तिविभवैः = नखों की पंक्तियों की कान्ति के वैभव से,
आकीर्णे = व्याप्त, अपि = और,
उद्यत्सुधावैभवैः = बढ़ते चन्द्रमा की किरणों से,
आधौते = उजले,
च = तथा,
पद्मरागललिते = लाल मणियों से सुशोभित,
च = एवम्‌,
हंसव्रजैः = हंससमूहों द्वारा,
श्रिते = आश्रित,
गिरिजानाथाघ्रिसौधान्तरे = गिरिजापति के चरणरूप महल में
स्थित्वा = रहकर,
नित्यं = सदा,
भक्तिवधूगणैः = भक्तिरूप पत्नियों से,
रहसि = एकान्त में,
स्वेच्छाविहारम्‌ = यथेच्छ विहार
कृरु = करो ।

 


Dr.T.M.P.Mahadevan

O Mind, the royal swan! Stay in the mansion of the feet of the Mountain-Daughter’s Lord, which is lit by the brilliant splendour of all the toe-nails, white-washed with the rays of the waxing moon, made charming with rubies, and resorted to by the swarm of swans (saints)! In privacy, along with the wives of devotion, may you disport yourself as you please!

The bird-analogy is continued in the present verse. Here, the mind becomes the royal swan, and the Lord’s feed its stately mansion. Let the mind stay at Siva’s feet and derive all its pleasures therefrom! It is at His feet that the saints and sages revel. The word hamsa means both ‘swan’ and ‘saint’ or ‘sage’.

Swami Tapasyananda

O Kingly swan of my mind! Sport at pleasure with the ladies of devotion, residing in the privacy of the mansion of Siva’s feet – mansion rendered brilliant by the rich light diffused by the nails, white-washed with the nectarine rays of the crescent moon, rendered charming by the ruby-like lustre of the lotus-feet, and resorted to by the swans of sages who meditate on the meaning of Hamsamantra.


आकीर्णे नखराजिकान्तिविभवैरुध्यत्सुधावैभवै
राधौतेपि च पद्मरागललिते हंसव्रजैराश्रिते ।
नित्यं भक्तिवधूगणैच्व  रहसि स्वेछाविहारं कुरु
स्थित्वा मानसराजहंस गिरिजानाथांघ्रिसौधान्तरे ॥ ४६ ॥

Commentary

हे मानसराजहंस = Hey! Mind that is like the princely swan!;
नखराजिकान्तिविभवै: = the shine coming off the group of the nails (of ParamEswara’s feet);
आकीर्णे = pervaded;
उदयत्सुधावैभवै: = of the raising moon’s nectar like white rays that spread out;
आदौते = made white all around;
अपि च  = more over;
पद्मरागललिते = made of the padmaraaga stone that is as red as the lotus flower;
हंसव्रजे  = of the group of swans (sanyaasis);
आस्रिते  = that which is worshipped by;
गिरिजानाथांघ्रिसौधान्तरे= in the dais of the holy feet of ParamEswara who is the husband of Parvathi;
रहसि = secretly;
स्थित्वा = remaining;
भक्तिवधूगणैच्व = in the company of the ladies called bhakthi;
स्वेछाविहारं = play of your own liking;
कुरु = do.

AachaaryaaL continues to address the mind in this sloka.

Thaathparyam:-

Hey! Mind that is like the princely swan!

Please listen patiently.

संसार सर्पदष्टानाम् जन्तूनां अबिवेकिनाम् |
चन्द्रशेखरपादाब्ज स्मरणं परमौषधम् ||

For the avivEki who is bitten by the snake of samsaara and is caught in the cycle of birth and death, there is only one medicine to neutralize this poison and that is the constant smaraNa of Chandrasekhara’s paadhaabjam. (My aneka koti saashtaanga namaskaarams to ParamaachaaryaaL Sri Chandrasekharendra Saraswathi).  Therefore you have to do smaraNam of ParamEswara’s padhaabjam constantly. The shine of those feet get increased by those brilliant nails that remain close to one another.  Moreover because of the raising moon’s nectar like white rays that spread out these feet look pure white.  Also adorned with the red padhmaraaga stones they bring aanandha to the eyes.  And these holy feet are worshipped by the paramahamsas who are aware of the thathwas of mahaathanthras.  You should secretly get to these exalted feet with those divine ladies called bhakthi and play to your heart’s content.  Only by adorning on these softest lotus feet can you be enjoying the supreme aanandha.

Hey! Mind that is like the princely swan!

Bhakthi is known in two ways as saamaanya bhakthi and as visesha bhakthi. Knowing Parameswara’s vaibhavam and mahima and to have the layam of the mind in Parameswara is saamaanya bhakthi. But in visesha bhakthi a person’s mind has attained akhandaakaara vritthi’s ज्ञानं  that led him to know the non-difference of his own aathma with Siva with the realization of ‘SivOham’ (I am Siva). This is also known as ‘aham sa:’ or ‘hamsa’. This secret is outed by AachaaryaaL in this sloka by saying ‘रहसि स्वेछाविहारं कुरु’.

Hey! Mind that is like the princely swan!

Only those who do anusandhaanam in this manner will in the course of time will be able to know Paramasiva as his prathyagaathma and enjoy Sivaanandham.  These is no doubt at all about this.  This endless aanandha of the greatest mahima can occur only to those who remain in their ekaantham and antharmukham.  It can never happen otherwise.

SivOham, SivOham.

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading