श्रीशिवानन्दलहरी -४४ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -44 – Sri Sivaanandalahari-44

श्रीशिवानन्दलहरी -४४

करलग्नमृगः करीन्द्रभङ्गो
घनशार्दूलविखण्डनोऽस्तजन्तुः।
गिरिशो विशदाकृतिश्च चेतः-
कुहरे पञ्चमुखोऽस्ति मे कुतो भीः ॥ ४४ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -44

கரலக்³நம்ருʼக³꞉ᳲ கரீந்த்³ரப⁴ங்கோ³
க⁴நஶார்தூ³ல விக²ண்ட³நோ(அ)ஸ்த ஜந்து꞉।
கி³ரிஶோ விஶதா³க்ருʼதிஶ்ச சேத꞉ᳲ-
குஹரே பஞ்சமுகோ²ஸ்தி மே குதோ பீ⁴꞉ ॥ (44)


कर-लग्न-मृगः करि+इंद्र-भंगः घन-शार्दूल-विखंडनः अस्त-जन्तुः गिरि-शः विशद+आकृतिः च पंच-मुखः मे चेतः-कुहरे अस्ति मे भीः कुतः?॥ 



महादेवं सिंहत्वनिरूपणेन स्तौति – करलग्नेतिपञ्चमुख एव पञ्चमुख। पञ्च मुखानि यस्येति व्युत्पत्त्या परमेश्वरः, अन्यत्र पञ्चमुखः व्यक्तमुखः सिंहः पचि व्यक्तीकरणे इति धातोः कर्तरि अच्प्रत्यये पञ्चेति रूपसिद्धिः। मे मम चेतःकुहरे चेत एव चित्तमेव कुहरः गिरिगुहा तत्रास्ति। एवं सति भीतिः (भीः) भयं कुतः कस्माद्‌ भयं भविष्यति? न कुतोऽपीत्यर्थः। स कथंभूत इत्याकाङ्क्षायामाह – करलग्नमृगः करे हस्ते लग्न: सम्बद्धः मृगो यस्य स तथोक्तः। करीन्द्रभङ्गः करीन्द्रस्य करिश्रेष्ठस्य, अन्यत्र गजासुरस्य, भङ्गो येन स तथोक्तः। व्यधिकरणबहुव्रीहिः। घनशार्दूलविखण्डनः घनो बलवान्‌ यः शार्दूलो व्याघ्रः, अन्यत्र व्याघ्रासुरः, तं विविधं खण्डयतीति छिनत्तीति तथोक्तः। अस्तजन्तुः अस्ताः निरस्ताः जन्तवो येन अन्यत्र अस्ताः स्वरूपे लीना: जन्तवो यस्य स तथोक्तः। गिरिशः गिरौ शयानः, गिरिशत्वमुभयत्र तुल्यमेव। विशदाकृतिः विशदा धवला आकृतिः यस्य, इदमप्युभयत्र

तुल्यमेव। स्पष्टार्थोऽयम्‌ ॥४४॥[1]

[1] कार्यात्कारणजन्मोक्तेः विभावनालङ्कारः। “विभावना विनापि स्यात्‌ कारणं कार्यजन्म चेत्‌” । मालभारिणीयं छन्दः ।


மஹாதேவனைச் சிங்கவடிவமாக உவமித்துக்கூறுகின்றனர்.


(எனக்கு இப்போது பயம் என்பது கொஞ்சமும் இல்லை; ஏனெனின்:)

करलग्नमृगः – கரலக்³நம்ருʼக³꞉ – கையில் மானைத் தரித்தவரும் [மானை அடித்து கையில் வைத்திருப்பதும்]

करीन्द्रभङ्गः – கரீந்த்³ரப⁴ங்க³꞉ – கஜாசுரனைக் கொன்றவரும் [யானையை ஜெயிப்பதும்]

घनशार्दूलविखण्डनः – க⁴நஶார்தூ³லவிக²ண்ட³ந꞉ – வியக்கிராசுரனை நசித்தவரும் [வலிமையுள்ள புலியைக் கொல்லக்கூடியதும்]

अस्तजन्तुः – அஸ்தஜந்து꞉ – தமது ஸ்வரூபத்தில் சகல ஜந்துக்களும் லீன மாகும்படி விளங்கி நிற்பவரும் [பிராணிகளை நாசம் செய்ததும்]

गिरिशः – கி³ரிஶ꞉ – மலையின் மீது சயனித்திருப்பவரும் [மலையிலுருப்பதும்]

विशदाकृतिश्‍च ​- விஶதா³க்ருʼதிஶ்ச – சுத்த நித்த வஸ்துவானவருமான [கம்பீர உருவத்தை உடையதும்]

पञ्चमुखः – பஞ்சமுக²꞉ – ஐம்முகங்கள் கொண்ட பரமசிவன் [சிங்கம்]

मे चेतः कुहरे – மே சேத꞉ குஹரே – எனது மனதாகிற குகையில்

अस्ति – அஸ்தி – தங்கியிருக்கிறது. ஆதலின்,

मे – மே – எனக்கு

भीः – பீ⁴꞉ – பயம் என்பது

कुतः? – குத꞉? – எவ்வாறு உண்டாகும்?


தமது அழகிய திருக்கரத்தில் மானைத் தரித்தவனும், துஷ்டத்தன்மையும் மிக்க பலமும் உடைய கஜாசுரன், வியாக்கிராசுரன் முதலியவர்களை தண்டித்தவனும், உலக உயிர்த்தொகுதிகளனைத்திலும் உயிருக்குயிராய் விளங்கி, எல்லா சராசரங்களும் தானேயாய் பொருந்துபவனும், திருக்கயிலை மலையில் வாசம் செய்யும் தலைவனும், ஆகிய ஐந்து திருமுகங்களையுடைய சிங்கேறானது அடியேன் மனக்குகையில் இருத்தலை உணர்ந்துள்ளேனாகையால், இனி நான் எதற்கும் பயப்படவேண்டிய அவசியமேயில்லை [என்பதாம்].


ஐந்து முகங்களையுடைய ஹே கிரிச! ஜந்துக்களில் சிறந்தது ஸிம்ஹம்‌. தைவங்களின்‌ ஸமூஹத்தில்‌ நீ ஸிம்ஹமாக விளங்குகிறாய். உனக்கும் ஸிம்ஹத்திற்கும் ஒற்றுமை ஏராளமாக இருக்கின்றன. எப்படி எனில் உனக்கு ஐந்து முகங்கள்‌ இருக்கின்றன. ஸிம்ஹத்திற்கு பஞ்சாஸ்ய: என்று ஸம்ஸ்க்ருதத்தில்‌ சொல்வதுண்டு. நீ உனது திருக்கரத்‌தில்‌ மானை ஏந்தினவனாக ப்‌ரகாசிக்கிறாய்‌. ஸிம்ஹம்‌ மானைக்‌ கொன்று அதை வைத்தவண்ணம்‌ இருக்கிறது. அதே ஸிம்ஹம்‌ மத்த கஜங்களைக்‌ கொல்‌கிறது. நீயோ கஜாஸுரனைக்‌ கொன்றவன்‌. மிக்க பலம்‌ வாய்ந்த வ்யாக்ராஸுரனையும்‌ அழித்தவன்‌ நீ. அதே போல ஸிம்ஹமும்‌ பலமுள்ள புலிகளைக்‌ கொல்கின்றது. மற்ற மிருகங்களை அது தூரத்தில்‌ துரத்தியடித்துக்‌ கொண்டிருக்கிறது. ப்ராணிகள்யாவும்‌ உன்னிடம்‌ லயத்தை யடைகின்றன. ஆக விரட்டப்பட்ட ப்ராணிகளோடு ஸிம்ஹம்‌ இருப்பதினாலும்‌ லயத்தை அடைகின்ற ப்ராணிகளோடு நீ ப்ரகாசிப்பதினாலும், நீங்கள்‌ இருவரும்‌ ஸ்வச்சமான உருவத்தையுடையவர்களாக இருப்பதினாலும்‌ உங்களுக்‌குள்‌ வேற்றுமையே இல்லை. நீ ஸிம்ஹமே தான்‌. அப்படிப்பட்ட ஸிம்ஹமான நீ எனது மனக்குகையில்‌ வீற்றிருக்‌குங்கால்‌ எனக்கு பயம்‌ ஏது? நான்‌ ஏன்‌ பயப்பட வேண்டும்‌.


ஸ்ரீபரமேச்வரனை சிங்கமாகக் கற்பித்து அந்த சிங்கம் என் மனதில் வசிக்கையில் எனக்கு ஏது பயம்? என்று கேட்கின்றார் கவி. இந்த சுலோகத்தில் உள்ள சொற்கள் எல்லாம் ஸ்ரீபரமேச்வரனையும் சிங்கத்தையும் குறிப்பிடுகின்றன. இந்த ச்லோகத்தைச் சொல்லி பரமேச்வரனை நமஸ்கரிப்பவர்களுக்கு அவர்கள் மனதில் மரணபயம் பர்யந்தம் எந்தவித பயமும் உண்டாகவே உண்டாகாது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.


करलग्नमृगः = जिसके हाथ में हरिण है,
करीन्द्रभंगः = गजराज का जिसने नाश किया है,
घनशार्दूलविखण्डनः = तगड़े चीते को जिसने मारा है,
अस्तजन्तुः = जन्तुओं को समाप्त करने वाला,
च = और,
विशदाकृतिः = विशाल शरीर वाला,
गिरिशः = पर्वतवासी,
पंचमुखः = पंचमुख (शेर तथा महादेव),
चेतःकुहरे = मनरूप गुफा मे,
अस्ति= है (अतः),
मे = मुझे,
कुतः = काहे का,
भीः = डर ।

 


Dr.T.M.P.Mahadevan

In the cave of my heart dwells the Lord with five faces (lion), the Mountain-Resident, who holds a deer in the hand (which has caught a deer as a prey), who killed the Elephant-deomon (which can destroy elephants), who destroyed the ferocious Tiger-demon (which can overcome even tigers), who has on him dead animals (which has near it animals which it has killed), and who has a white form (which has a majestic appearance). Whence is there fear for me!

The present verse is in the form of a pun. The expressions apply both to Siva and lion. Siva has five faces; so He is called Pancamukha. The word also means ‘lion’.

The mind of the devotee is described as a cave. When the Siva-lion resides in this cave, the devotee need have no fear at all.

Swami Tapasyananda

Thou holdest the deer in hand as the lion its prey. Thou didst kill the elephant-shaped and tiger-shaped monsters as the lion kills the leaders of elephant herds and tigers of huge proportions. Thou dost destroy all beings at the end of the cycle as the lion does the beasts of the forest. When the Lord Siva – the fair-complexioned and the five-faced or pancamukha, who thus resembles in all respects the lion also called pancamukha or the five-faced – resides in the cave of my heart, whence is there any cause of fear for me?


करलग्नमृग: करीन्द्रभंगो
घनशार्दूलविखण्डनोऽस्तजन्तु: ।
गिरिशो विशादाकृतिश्‍च चेत: कुहरे
पंचमुखोस्ति मे कुतो भी: ॥ ४४ ॥

Commentary

करलग्नमृग:: = the one who is holding the deer in his hands;
करीन्द्रभंग: = one who has gajaasura (as his garment);
घनशार्दूलविखण्डन: one who has destoyed or destroys the wicked tiger called vyaagraasura;
अस्तजन्तु: = one who has those beasts that were destroyed or one who destroys the beasts;
गिरिश: one who is in the mountain or that which is in the mountain;
विशादाकृतिश्‍च = one who has the white body or that which is white;
पंचमुख: = ParamEswara who has five faces or indicating the lion;
मे = my;
चेत: कुहरे = in the cave of my mind;
अस्ति: = He resides or it stays;
अत : therefore;
भी: the fear;
कुत: where is it? (meaning it does not exist).

AachaaryaaL continues to employ slEdai (double meaning) in his poetry.

Thaathparyam:-

Saakshaath ParamEswaran remains nibidaanandaswaroopi holding the four Vedas that are the rig, yajus, saama and atharvaNa.  At the same time he destroys the mahaa asuras such as gajaasura and vyagraasura and brings maNgalam to the fourteen lOkas.  Also during praLayam he destroys the amoeba to Hiranyagabha and remain Eki (One) nibidaanandaswaroopi.  The saasthra says:

“शिवः सर्वाणि मृतानि शिवादन्यत् न किञ्चन”

Siva remains the root cause and support of the entire universe by being ‘sarvavyaapi’.  To speak the truth there is no dwaitha prapancham apart from the Paramasiva who is Satchitaananda.    From this we do realize that everying has come out of Paramasiva, everything is protected by Paramasiva and everying ultimately finds its layam in Paramasiva and therefore clearly only Paramasiva is the sathya vasthu.

Hey! Girisa of this remarkable mahima! Living with Ambika in mahaakailash, and adorned with the purest viboothi you teach the entire world that it is being burnt down in ज्ञानाग्नि into ashes.  When this glorious ParamEswara lives in the cave of my mind as His simhaasanam where will be any fear for me?  In what way can the most terrible samsaara saagaram threaten me.  Or even the frightful yama who takes away people’s lives for that matter.

As long as my mind remains the cave, that is, it remains antharmukham, so long will ParamEswara live in there.  Again knowing that the mind that is bent on running after the vishayas must be deflected to remain inwards to form into a cave fit for the lion of ParamEswara to reside and this effort is known as Raja Yoga.

ஆராலும் என்னை அமட்ட வொண்ணாதினிச்
சீரார் பிரான் வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி யங்கே திரிவதல்லால் இனி
யார்பாடுஞ் சாரா அறிவறிந்தேனே.
(திருமந்திரம்)

“பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.”(from Pidiththa Paththu)

(Manikkavachakar says to Shiva “You were always a wanderer but now I have caught you in my heart, in which kovil can you be present hereafter?!”

Aum Namasivaya

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading