श्रीशिवानन्दलहरी -४३
मा गच्छ त्वमितस्ततो गिरिश भो मय्येव वासं कुरु
स्वामिन्नादिकिरात मामकमनःकान्तारसीमान्तरे।
वर्तन्ते बहुशो मृगा मदजुषो मात्सर्यमोहादय-
स्तान्हत्वा मृगयाविनोदरुचितालाभं च सम्प्राप्स्यसि ॥ ४३ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -43
மா க³ச்ச² த்வமிதஸ்ததோ கி³ரிஶ, போ⁴ மய்யேவ வாஸம்ʼ குரு
ஸ்வாமிந்நாதி³கிராத, மாமக, மந꞉ᳲ காந்தார ஸீமாந்தரே।
வர்தந்தே ப³ஹுஶோ ம்ருʼகா³ மத³ஜுஷோ மாத்ஸர்ய மோஹாத³ய: (ஸ்)-
தாந் ஹத்வா ம்ருʼக³யா விநோத³ ருசிதாலாப⁴ம்ʼ ச ஸம்ப்ராப்ஸ்யஸி ॥ (43)
भोः गिरिश! स्वामिन्! आदि-किरात! त्वम् इतः+ततः मागच्छ मयि+एव वासं कुरु। मामक-मनः+कांतार-सीमा+अंतरे मद-जुषः मात्सर्य-मोह+आदयः मृगाः बहुशः वर्तन्ते। तान् हत्वा मृगया-विनोद-रुचिता-लाभं च संप्राप्यसि।॥
परमशिवस्य आदिकिरातभावं संभाव्य किरातलभ्यं फलं मयि सुलभमिति हेतोर्मेत्तोऽन्यत्र गमनं मा भूदिति प्रार्थयते- मा गच्छेति। भो आदिकिरात आदिव्याध! अत एव गिरिश गिरौ शयान! स्वामिन् सर्वाध्यक्ष! त्वमितस्ततः मा गच्छ मैव व्रज। मयि वासं कुरु। मल्लभ्यं फलमिह नास्तीति चेदस्तीत्याह- मामकमनः कान्तारसीमान्तरे मदीयमन एव कान्तारम् इतरदुर्गमो वनप्रदेशः तस्य सीमान्तरे मर्यादामध्ये मदजुषः अस्मान् जेतुं कोऽपि न समर्थ इति गर्वभाजः मात्सर्यमोहादयः मात्सर्यं मत्सरभावः अन्यस्मिन् अकारणतः प्रद्वेषः। मोहः अनात्मनि अहंबुद्धिः अहङ्कार इति यावत्। तदादयो दोषाः कामक्रोधलोभमोहमदमात्सर्याख्याः एव मृगाः वनजन्तवः बहुशो बाहुल्येन प्रवर्तन्ते। तान् हत्वा हिंसित्वा मृगयाविनोदरुचितालाभं मृगार्थमटनं मृगया तया विनोदः कालयापनं तस्मिन् रुचिरिच्छा यस्य सः तस्य भावः तत्ता तस्या लाभः फलं मृगहननं तं च संप्राप्स्यसि यथेच्छं लप्स्यसे। भवत इष्टलाभात् हेतोः मय्येव वासं कुर्विति प्रार्थयितुस्तात्पर्यम्। विनोदमचिरादागत्य संप्राप्स्यसीति पाठे अचिरात् क्षिप्रमेव आगत्य एत्य मृगयाविनोदं संप्राप्स्यसीत्यर्थः ॥४३॥[1]
[1] रूपकं प्रतिषेधश्च।
சிவபெருமான் ஆதிக்கிராதன் (ஆதிவேடுவன்) ஆதலின், அதையெண்ணி வேடுவனுக்கு வேண்டிய (வினோத, திமிர் பிடித்த மிருகங்கள்) யாவும் தன்னிடமிருப்பதால், அதில் வசிக்க வேண்டுகின்றனர்.
आदिकिरात – ஆதி³கிராத – ஆதிமுதல்வரே! கிராத வடிவங்கொண்டவரே!
भो स्वामिन् – போ⁴ ஸ்வாமின் – ஹே ஸ்வாமின்! ஸர்வ ஜெகதீசனே!
गिरिश – கி³ரிஶ – பர்வதத்தில் சயனிப்பவரே!
त्वम् – த்வம் – நீர்
इतस्ततः – இதஸ்தத꞉ – (வேடுவ வுருவந்தாங்கி வேட்டை நிமித்தம்) இங்குமங்கும்
मा गच्छ – மா க³ச்ச² – அலைதல் வேண்டாம்.
मय्येव – மய்யேவ – (உமது வேட்டைக்கு உகந்தவை யாவும் என்னிடமே உள்ளன, அதனால்) என்னிடத்திலேயே
वासं कुरु – வாஸம்ʼ குரு – வாஸம் செய்யலாம்.
मामकमनःकान्तारसीमान्तरे – மாமகமந꞉காந்தாரஸீமாந்தரே – அங்கே யாவராலும் நுழையமுடியாத அடர்ந்த காட்டுப் பிரதேசத்தின் நடுவே
मदजुषः – மத³ஜுஷ꞉ – மதம் கொண்ட
मात्सर्यमोहादयः – மாத்ஸர்யமோஹாத³ய꞉ – பொறாமை, பேராசை முதலான
मृगाः – ம்ருʼகா³꞉ – மிருகங்கள்
बहुशः वर्तन्ते – ப³ஹுஶ꞉ கணக்கற்று இருந்து திரிகின்றன.
तान् – தான் – (நீர்) அவைகள் எல்லாவற்றையும்
हत्वा – ஹத்வா – வேட்டையாடிக் கொல்லலாம்.
मृगयाविनोदरुचितालाभं च – ம்ருʼக³யாவிநோத³ருசிதாலாப⁴ம்ʼ ச – வேடுவ உருவமடைந்ததின் பயனை
संप्राप्स्यसि – ஸம்ʼப்ராப்ஸ்யஸி – (முற்றிலும் என் மனதிடத்திலேயே நீர்) அடையலாம்.
ஹே ஆதி கிராதரே! நீர் அன்பர்கட்கு அருள்புரியும் சமயம், உமது அருட்சக்தியுடன் கூடி அருள்புரிபவன் என்பதை, முன் அர்ச்சுனனுக்காக குடும்ப சகிதமாய் வேடுவவடிவம் தாங்கி, கயிலை மலையிலிருந்து கால் கடுக்க நடந்து காட்சி தந்ததிலிருந்து அறியப்படுவதால், ஆதிவேடுவன். வேடுவத் தொழிலான வேட்டையாட, நீர் கயிலை மலையிலும் அதற்கடுத்த காட்டிலும் ஏன் அலையவேண்டும்? கணத்திற்கு கணம் மாறும் இயல்பினையுடைய என் மனமாகிய விசித்திரக்காட்டில், மதம் மிகுந்த காமக்குரோதாதி அறுவகையான கொழுத்த மிருகங்கள் எண்ணற்றவை உள்ளன. அங்கு சஞ்சரித்து, மேற்படி மிருகங்களை உன்னிஷ்டப்படி கொன்று, வேட்டையாடுதலில் உனக்குள்ள ஆசையின் பலனை நன்றாகக் பெறுவாயாக. அதனால், நானும் கிருதார்த்தனாவேன்.
மலையில் வாழ்கின்ற ஹே ஈசா! உலகில் முதன்முதலில் வேடனாக தோன்றியவன் நீ. ஆகையினாலேதான் நீ மலையில் வீற்றிருக்கிறாய். ஹே ஸ்வாமின்! எனது மனம் ஒரு பெருங்காடு. அக்காட்டின் எல்லைக்குள்ளே அநேக ம்ருகங்கள் திமிர்பிடித்து கொழுத்து திரிகின்றன. காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம், அஹங்காரம் முதலியவைகள் தான் அக்கொடிய மிருகங்கள். எனது மனமாகிற காட்டில் இவைகள் யதேச்சையாக சுற்றியலை கின்றன. இவைகளைத் தவிர ஏராளமான துர்குணங்கள் என்ற கொடிய விலங்குகளும் இக்காட்டில் வாழ்கின்றன. நீ இவைகளை வேட்டையாடிக் கொன்று மகிழலாம். அதனால் உண்டாகும் இன்பத்தை அனுபவிக்க, எனது மனதில் வந்து குடியிருந்து உனது விருப்பத்தை பெறு.
ஏ பரமேச்வர! தாங்கள் உலகில் முதமுதலில் வேடனாகத்தோன்றி பல மிருகங்களை வேட்டையாடுவதற்காக காட்டில் இங்குமங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள். என்னிடத்திலேயே தாங்கள் வசிக்கும் பக்ஷத்தில் தங்களுக்கு அந்த சிரமம் இராது. மேலும், என்னுடைய மனதாகிற காட்டில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் முதலிய பல கொழுத்த மிருகங்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் கொன்று வேட்டையில் விசேஷ லாபத்தையும் பெறலாம். அதாவது ஸ்ரீ பரமேச்வரனை இடைவிடாமல் தியானம் செய்தால், காமம், குரோதம் முதலிய துர்குணங்கள் நசித்துவிடும் என்பதாம்.
உண்மையில் பாஞ்சபௌதிகமானதும் அநாத்மகமாகவும் இருக்கப்பட்ட இந்த ஸ்தூல தேகத்தை, ஆத்மா என்று அநுபவிப்பதற்குத்தான் அவித்யை என்று பெயர். இந்த அவித்யையினால் பந்தம் உண்டாகிறது. அந்த அவித்யா நாசத்தைத்தான் மோக்ஷம் என்று சொல்லுவார்கள். இத்தகைய அவித்யையை, வித்யை (அல்லது ஞானம்) என்ற தேஜஸ்ஸால் த்வம்சம் செய்து நாசம் செய்பவர் ஞானஜோதியான பரமேச்வரன். இதையே ஆதிகிராத என்ற ஸம்போதனையினால் அறியவேண்டும். இந்த கிராதஸ்வரூபத்தில் விளங்கும் பரமேச்வரனைத்தான் த்யான மூர்த்தியாக ஸ்ரீருத்ரத்தின் மூன்றாவது அநுவாகத்தில் சொல்லியிருக்கிறது. இந்த ஸ்வரூபத்தில் பரமேச்வரனை த்யானம் செய்த மாத்திரத்தில் ஸகலவிதமான சத்ருக்களும் வேரோடு நாசத்தை அடைவார்கள். இந்த ச்லோகத்தைச் சொல்லி பக்தியுடன் நமஸ்கரிப்பவர்கள் மனதில் பரமேச்வரன் ஸ்திரமாக உமாதேவியுடன் வாஸம் செய்வார் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
भो = हे,
गिरिश = पर्वतवासी !
स्वामिन् = हे नाथ !
आदिकिरात = हे प्रथम किरात !
त्वम् = आप,
इतः = इधर से,
ततः = उधर
मा= मत,
गच्छ = घूमिये ।
मयि = मुहमें ,
एव = ही,
वासम्= निवास,
कुरु = कीजिये ।
मामकमनःकान्तारसीमान्तरे = मेरे मनरूप जंगल की सीमाओं
के अंदर
मात्सर्यमोहादयः = असूया, अविवेक आदि रूप्
मदजुषः = मदमस्त,
बहुशः = अनेक प्रकार के
मृगाः = जानवर,
वर्तन्ते = रहते हैं ।
तान् = उन्हे,
हत्वा = मारकर (आप),
मृगयाविनोदरुचितालाभम् = शिकार खेलने के शौक को पुरा करने का मौका,
च = भी,
सम्प्राप्स्यसि = पालेंगे ।
Dr.T.M.P.Mahadevan
O Mountain-Resident! O Master! O Primeval Hunter! Do Thou not wander here and there (in search of game)! Do reside in me alone. Within the limits of the dense forest of my mind dwell various kinds of infatuated beasts, viz., jealousy, delusion etc.; killing them, Thou shalt gain the delight of engaging Thyself in wild-game.
The mind is a dense forest replete with wild game. Let Siva, the Hunter-chief, indulge in His favourite sport of hunting in this rich forest. Thus the mind will be rid of its passions, and Siva will have the satisfaction of having done a good job.
The Mahabharata tells us that Siva assumed the role of a hunter in order to test Arjuna’s prowess and grant him the Pasupata weapon.
In the Sri-Rudra the following expressions are used with reference to Siva:
Namaste astu dhanvane bahubhyaam uta te namah|
Obeisance be to Thy bow; and obeisance be to Thy two arms?
vanaanaam pataye namah|
Obeisance to the Lord of the forests!
mrgayugbhyaha namao namah|
Obeisance to the hunter of animals!
namah kaathyaaya ca|
Obeisance to the One who resides in the forests full of stones and thorns!
For vinodarucitalabham ca, there is an alternative reading: vinodam acirad agatya
Swami Tapasyananda
O Lord! Thou Resident of the Mountain! Thou the Primeval Hunter! Go not hither and thither, but reside within me alone. For in the forest of my mind there are many beasts of prey like envy, infatuation and the rest. Killing them, Thou shalt satisfy Thy fondness for the hunt.
मा गच्छ त्वमितस्ततो गिरिश भि मय्येव वासं कुरु
स्वामिन्नादिकिरात मामकमन: कान्तारसीमन्तरे ।
वर्तन्ते बहुशो मृगा मदजुषो मात्सर्यमोहादय
स्तान्हत्वा मृगयाविनोदरुचितालाभं च संप्राप्यसि ॥ ४२ ॥
Commentary
हे स्वामिन् = Hey! SarvEswara!;
हे आदिकिरात = Hey! original hunter!;
हे गिरिश = one who lives in mahaa kailaasa parvatham;
त्वं = you;
इतस्ततः ; = here and there;
मा गच्छ = do not have to go (hunting);
भो! = Hey! ParamEswara!;
मय्येव वासं कुरु = you can live with me alone;
मामकमन: कान्तारसीमन्तरे = in the midst of the dense forest of my mind that is impenetrable by others;
मदजुष: = having termerity;
मात्सर्यमोहादय : = having jealousy, mOham etc.;
मृगा: = animals;
बहुश: = many kinds;
वर्तन्ते = roams around;
तान् = those;
हत्वा = kill;
मृगयाविनोदरुचितालाभं = have the benefit of the sport of hunting;
संप्राप्यसि = (you) attain.
Hey! Parameswara! You are roaming the forests to hunt but in vain because the animals are sensing your arrival and are hiding from you! O! KailaasapathE! Without knowing this secret you are getting tired of chasing these elusive animals. I know of a forest where you will never fail to find an animal. Hey! SarvEswara! You don’t have to wonder where is such a forest. That forest is none other than my mind which is impregnable because it is dense with sankalpas. And no ordinary hunter can live in this forest of mine because the animals there are so cruel that it is not easy to hunt and kill them. These animals are kaamam, krOdham, lObham, mOham, madham and maathsaryam and they are no ordinary animals. These animals have the fiendish character of greed, anger etc. I have never been able to destroy them. It is impossible for me to live with these animals. You alone are capable of killing these wretched beings becuase you are Aadhikiraadhan!
This body is made up of five elements and therefore is anaathma. However, knowing this anaathma as Aathma is called avidya. Because of avidya one gets attached. MOksham is nothing but avidyaa-naasam. Only Kailaasavaasi Parameswara is capable of destroying this avidya. Parameswara who destroys this beginningless avidya is called Aadhikiraatha. Sri Rudhram in its third anuvaaka describes this Aadhikiraatha as the dhyaanamurthy. The following sloka does a varNana of His Mahimaa.
रूपयौवनसंपन्ना मूर्तेव वनदेवता ।
पुष्पितानेकपुन्नागसहकारशिशूपमः ।।
पञ्चविंशतिनक्षत्रमायूरकृतशेखरः ।
अकलङ्कशरत्पूर्णचन्द्रबिम्बसमाननः ॥
प्रातर्विबुद्धपद्माभं वसानं चर्म कोमलम् ।
सव्यापसव्यविधृतकृतमालाविभूषितः ।
धराकदंबपुञ्जेन नाभिदेशप्रलंबिना ॥
आजङ्घं प्रेक्षणीयेन प्रेक्षणियोपि शत्रुभिः ॥
भूधरस्य च चार्वङ्गी कन्यालङ्कारशोभिता ।
आदर्शमूर्तिः शोभानामन्या नारीव निर्मला ।
तस्या हस्ते धनुर्दत्वा शरमेकं च निर्मलम् ॥
तदीयमंसमालंब्याश्लिष्टं वामेन बाहुना ।
सुगंधिपुष्पस्तबकमाघ्रायाघ्राय पाणिना ॥
वीज्यमानो मन्दमन्दं पनपल्लवशाखया ।
समावृतो बालकैश्च श्वभिश्चापि मनोहरैः ॥
गच्छद्भिरग्रतो दृप्तैः ध्यातव्यो जगतां गुरुः ।
एवंरूपो महातेजा किरातवपुरीश्वरः ॥
In this slOka also vidhwaans say manOnigraham is the message. So long as the mind remains a cave then alone paramEswara as simham will live there. The mind that has the tendency to wander in vishayaadhis have to be kept in the position of the guhai and know this to be raaja yoga!
Whoever says this slOka and do namaskaram to Paramasiva will never be afflicted with bhayam. This is certain.
Aum Namasivaaya!
![]()
