श्रीशिवानन्दलहरी -४२ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -42 – Sri Sivaanandalahari-42

श्रीशिवानन्दलहरी -४२

गाम्भीर्यं परिखापदं घनधृतिः प्राकार उद्यद्गुण-
स्तोमश्चाप्तबलं घनेन्द्रियचयो द्वाराणि देहे स्थितः।
विद्या वस्तुसमृद्धिरित्यखिलसामग्रीसमेते सदा
दुर्गातिप्रियदेव मामकमनोदुर्गे निवासं कुरु ॥ ४२ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -42

கா³ம்பீ⁴ர்யம்ʼ பரிகா²பத³ம்ʼ க⁴நத்⁴ருʼதி꞉ᳲ ப்ராகார உத்³யத்³கு³ண-
ஸ்தோமஶ்சாப்தப³லம்ʼ, க⁴நேந்த்³ரியசயோ த்³வாராணி தே³ஹே ஸ்தி²த꞉।
வித்³யாவஸ்து, ஸம்ருʼத்³தி⁴ரித்யகி²ல, ஸாமக்³ரீ ஸமேதே ஸதா³,
து³ர்கா³திப்ரியதே³வ, மாமகமநோது³ர்கே³, நிவாஸம்ʼ குரு ॥ (42)


दुर्गा+अतिप्रिय! देव! गांभीर्यं परिखा-पदं घन-धृतिः प्राकारः उद्यद्‌ (त्‌)+गुणस्तोमः आप्त-बलं देहे स्थितः घन+इंद्रिय-वचः द्वाराणि विद्या-वस्तु-समृद्धिः च इति अखिल-सामग्री-समेते मामक-मनो-दुर्गे सदा निवासं कुरु॥ 



दुर्गातिप्रियत्वेन हेतुना स्वमनोदुर्गे शिवस्य वासं प्रार्थयते – गाम्भीर्यमिति। हे दुर्गातिप्रिय! दुर्ग: दुःखेन गन्तुमर्हः अचलः अत्यन्तं प्रीतिविषयो यस्य स तथोक्तः तस्य संबुद्धिः। हे देव! परमशिव। परिखापदं परितः खायते अवदार्यत इति परिखा जलदुर्गः तस्याः पदं लक्षणं गाम्भीर्यं गम्भीरभावः अगाधतेति यावत्‌। घनधृतिः सान्द्रधैर्यं तदेव प्राकारः सालः। “प्राकारो वरणः साल:” इत्यमरः। उद्यद्गुणस्तोमः उद्यन्त उत्पद्यमानाः गुणाः साधुगुणाः तेषां स्तोमः समूहः स एवाप्तबलम्‌ आप्तं विश्वसनीयं बलम्‌ आपन्निवृत्तिसाधकं, देहेस्थितः देहे विद्यमानः घनेन्द्रियचयः घनेन्द्रियाणि चक्षुरादीनि तेषां चयः सन्दोहः स एव द्वाराणि गमागमस्थानानि, विद्या शिवविषयकज्ञानं सैव वस्तुसमृद्धिः गोप्यपदार्थसंपद्‌ – इत्येवं भूतानां दुर्गपेक्षिताखिलपदार्थानां सामग्री समग्रभावः पौष्कल्यं तया समेते मामकमनोदुर्गे ममेदं मामकं यन्मनः तदेव दुर्गं दुष्प्रवेशस्थानं तस्मिन्‌। त्वमित्यध्याहारः। सदा सर्वदा निवासं वसतिं  कुरु विधेहीति प्रार्थनायां लोट्‌ ॥४२॥[1]

[1] रूपकालङ्कारः हेत्वलङ्कारश्च।


பரமேஸ்வரன் பர்வததுர்க்கத்தில் வசிப்பதில் பிரீதியுடையனாயிருத்தலின், தன் மநோதுர்க்கத்தில் வசிக்கும்படி பிரார்த்திக்கின்றனர்.


दुर्गातिप्रिय​ – து³ர்கா³திப்ரிய – வழிகள் கஷ்டமாயுள்ள மலைப்பிரதேசத்தில் வஸிக்க இஷ்டப்பட்டவரே! (து³ர்கா³ம்பிகையிடத்தில் பிரியமுள்ளவரே)

देव​ – தே³வ – தேவதேவரே!

गाम्भीर्यम् – கா³ம்பீ⁴ர்யம் – (என் மனமென்ற துர்க்கம்/கோட்டை) கம்பீரமான உயரத்துடன்

परिखापदम् – பரிகா²பத³ம் – கோட்டைக்கு சுற்றிலும் அகழியின் லக்ஷணத்தைக் கொண்டும் இருக்கிறது. அகழியும் மிக ஆழமானது, மனதும் மிக ஆழமானது. அதாவது மனதில் உள்ளவற்றை யாரும் எளிதில் அறிந்துகொள்ள முடியாது.

घनधृतिः प्राकारः – க⁴நத்⁴ருʼதி꞉ ப்ராகார꞉ –  (என் மனம் என்னும் கோட்டை) தைரியம் என்னும் மதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட கோட்டை போன்றது

उद्यद्गुणस्तोमः – உத்³யத்³கு³ணஸ்தோம꞉ – அவ்வப்போது தோன்றும் சிறந்த ஸாது குணஸமூகம்

आप्तबलम् – ஆப்தப³லம் – ஆப்த (நம்பிக்கைக்கு பாத்திரமான) சேனை.

देहे स्थितः – தே³ஹே ஸ்தி²த꞉ – உடலில் இருக்கும்

घनेन्द्रियचयः – க⁴நேந்த்³ரியசய꞉ – கணக்கற்ற இந்திரியக் கூட்டங்களே

द्वाराणि – த்³வாராணி – கோட்டையின் வாயில்படிகள்.

विद्या – வித்³யா – சிவ விஷய ஞானவித்தை என்ற

वस्तुसमृद्धिः – வஸ்துஸம்ருʼத்³தி⁴꞉ – ரகசியமாக இரக்ஷிக்கவேண்டிய பதார்த்தங்கள் வெகு விதமாயுண்டு.

इति – இதி – ஆகையால், இவ்வாறுள்ள (என் மனமெனும் கோட்டையில்)

अखिलसामग्रीसमेते – அகி²லஸாமக்³ரீஸமேதே – (ஒரு கோட்டைக்குத் தேவையான) ஸகல ஸாமக்ரியைகளும் இருப்பனவாதலால் (அது நீர் வாஸம் செய்ய தகுந்த இடமேயாகும்)

मामकमनोदुर्गे – மாமகமநோது³ர்கே³ – என் மனம் என்ற துர்க்கத்தில் (கோட்டையில்) தயவு செய்து

सदा – ஸதா³ – எப்பொழுதும்

निवासं कुरु – நிவாஸம்ʼ குரு – தங்கியருள்வீர்.


ஹே சங்கரனே! நீர் வசிக்க கஷ்டமான பர்வதப் பிரதேசமாகிய கயிலைக்குன்றில் வாசம் செய்யும் விருப்புடையனாயிருத்தலின், அதைக்காட்டிலும் மேன்மைதங்கியதும், அழகியதும், ஆழ்ந்துள்ளதும், அகன்றுள்ளதுமாகிய அகங்காரமென்னும் அகழி சூழ்ந்ததும், தைரியமான கோட்டையை யுடையதும், ஞானேந்திரியங்களென்னும் சமூக பலமுடையதும், நவவாயில்களையுடையதும், நல்ல ஞான சாஸ்திர பொக்கிஷங்களும், விதம் விதமாக அமைந்துள்ளதாகிய எனது மனக்கோட்டைக்குள், சந்துஷ்டியாய், சதாவாசம் செய்ய யாது தடை? ஆகவே எழுந்தருளி என்னை ஈடேற்றவேண்டும் (என்பதாம்).


யாரும்‌ நுழைய முடியாத மலை கோட்டையில்‌ வஸிப்பதில்‌ மிக்க விருப்பமுடைய ஹே தேவ! எனது மனம்‌ என்ற மிக்க பலம்‌ வாய்ந்த கோட்டையில்‌ வந்து வீற்றிருக்க வேண்டுகிறேன்‌. என்‌ மனது மிக ஆழமானது. அதன்‌ ஆழத்தை காண முடியாது. கோட்டையைச்‌ சுற்றிலும்‌ அகழி எவ்விதமோ அது போல என்‌ மனம்‌. உறுதியான தைர்யம்‌ தான்‌ இதன்‌ மதில்கள்‌. நுழைவாயில்கள்‌ எனது கண்‌ மூக்கு முதலிய இந்‌திரியங்களே. சிவஞானத்தை போதிக்கின்‌ற அதிசயமான விலை மதிக்க முடியாத வித்யை என்ற ஸம்பத்‌து இக்கோட்டையில்‌ பாதுகாக்கப்‌ பட்டிருக்‌கிறது.  இந்த ஸம்பத்தைக்காக்க மிகப்‌ பலம்‌ வாய்ந்த ஸேனையாக ஸத்குணங்களின்‌ ஸமூஹங்கள்‌ விளங்குகின்றன. இவ்விதம்‌ ஸகலவிதமான ஸம்பத்‌துக்களும்‌ நிறைந்திருக்கின்ற எனது மனம்‌ என்ற கோட்டையில்‌ எப்போதும்‌ குடியேறி வீற்றிருப்பாயாக.


ஏ பரமேச்வர! தங்களுக்கு கோட்டையில் வாசம் செய்வதில் பிரியமல்லவா? என் மனதும் ஒரு சிறந்த கோட்டையாகவே இருக்கிறது. கோட்டைக்கு இருக்கவேண்டியவை எல்லாம் என்மனதில் இருக்கின்றன. ஆதலால் அங்கேயே தாங்கள் எப்பொழுதும் வாசம் செய்யவேண்டும்.

இந்த ச்லோகத்தின் ஸாராம்சம் யாதெனின், பரசிவத்தை எப்பொழுதும் ஹ்ருதயாகாசத்தில் த்யானம் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பதே. இதைத் தான் சிவராஜ யோகம் என்று வித்துவான்கள் சொல்லுவார்கள். துர்க்கையுடன் பரமேச்வரனை சேர்த்து த்யானம் செய்துகொண்டு, அவர்கள் சந்நிதியில் இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் ஸகலவித துக்கங்களும் நீங்கப்பெற்று, அவர்கள் மனதில் பரமேச்வரன் ஸ்திரமாக வாஸம் செய்யப்பெற்றவர்களாக ஆநந்தவாழ்வு வாழ்வார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணமாகும்.


दुर्गातिप्रिय = हे किलों के शौकीन!
देव = हे महादेव,
गाम्भीर्यम्‌ = अनुच्छंखलता (जिसकी),
परिखापदम्‌ = खाई का स्थान है,
घनधृतिः = दृढ धैर्य (जिसका),
प्राकारः = परकोटा है,
उद्यद्गुणस्तोमः = उत्तम गुणों का समुदाय (जिसका),
आप्तबलम्‌ = पर्याप्त सैन्य बल है,
देहे = देह में,
स्थितः = स्थित,
घनेन्धियचयः = पुष्ट इन्द्रियों का समूह (जिसके),
द्वाराणि = दरवाजे हैं ,
च = और,
विद्या = विद्या (जिसमें),
वस्तुसमृद्धिः = आवश्यक वस्तुओं कौ सम्पत्ति है,
इति = इस प्रकार,
अखिलसामग्री समेते = सारी सामग्री से सम्पन्न,
मामकमनोदुर्गे = मेरे मनरूप किले में,
सदा = हमेशा,
निवासम्‌ = निवास,
कुर = कीजिये ।

 


Dr.T.M.P.Mahadevan

O God, who art fond of inaccessible fortresses (or, Durga)! Do stay always in the fortress of my mind which has magnificence as its surrounding moats, great courage as ramparts, high qualities as royal armies and is provided with the gateways of sense-organs that are firm in the body, and is endowed with a profusion of provisions consisting of knowledge, and thus is complete with all the necessary appurtenances.

The mind is compared here to a fortress, and the Lord is invited to take His residence there. The Lord is fond of fortresses. He may well reside in the fortress of the mind. There is a pun on the word durga. It means ‘fortress’, and is also a name of Parvati.

Swami Tapasyananda

O Lord! Thou who art fond of residing in fortresses (Durga)! Take Thy residence always in the well-supplied fortress of my mind, having calmness as the moat, unyielding resolution as the surrounding walls, the rising multitude of virtues as the faithful army, the powerful senses located in the body as the gates, and knowledge as abounding wealth.

(There is a pun on the word Durga. It means a fortress and also Parvati the Divine Mother)


गांभीर्यं परिखापदं घनधृति: प्राकार‌ उद्यदगुण
स्तोमश्‍चाप्तबलं घने न्द्रियचयो द्वाराणि देहे स्थित: ।
विध्या वस्तुसमृद्धिरित्यखिलसामग्रीसमेते सदा
दुर्गातिप्रिय देव मामकमनोदुर्गे निवासं कुरु ॥ ४२ ॥

Commentary

हे दुर्गातिप्रिय = one who loves to live in a mountain that is not easily accessible (also one who has priyam to Durgambika);
हे देवा  = swaprakaasaswaroopane;
परिखापदं = marked by the moat in front;
गांभीर्यं = depth, remote;
घनधृति: = of unrelenting boldness;
प्राकार‌ : ramparts;
उद्यदगुणस्तोम: = of those group of qualities;
आप्तबलं = of conforming army;
देहे = in the body;
स्थित: = residing;
घने न्द्रियचाय: = of the crowding organs;
द्वाराणि = the openings, the doors;
विध्या= of vidhya;
वस्तुसमृद्धि: = of many objects;
इति  = in this way;
अखिलसामग्रीसमेते = composed of many things;
मामकमनोदुर्गे= of the fort of my mind;
सदा = always;
निवासं कुरु = do live.

Hey! ParamEswara! You are capable of doing anything at any time.  O! Dweller of a place that is hard for anyone to access! Why are you always residing in the mountain? Is it your preference to live in a terrible place? Hey! Durgaambika prEmi!  Do you know there is a more remote place than mahaa kailaasa parvatham? You can permanently stay there overflowing your sivaanandham along with paraasakthi.  Are you wondering what is that wonderous place?  It is my mind that is the strongest of the forts!  It is surrounded by deep moats all around.  You never have to worry that this fort will ever get destroyed.  Because it has been built by surpassing boldness on my part.  And I have put on guard a strong army to guard it from invaders.  You have to know that this remarkable army is made up of saadhu gunas.  It has the openings that are of the indriyas.  It is filled with Brahma Vidhya to know you.  Hey! Swayamprakaasi! With paraasakthi as your consort you can live here permanently.

The saaraamsam of this sloka is that one should do dhyaanam of Paramasiva in his hridhayaakaasam.  The antharangasaadhanam for that is manOnnigraham only.  Vidwaans say that this manOnigraham is really the Raja Yoga.

Whoever says this slOka and do namaskaram to Paramasiva, in his heart Paramasiva will live permanently.  This is certain!

Aum Namasivaaya!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading