श्रीशिवानन्दलहरी -४१
पापोत्पातविमोचनाय रुचिरैश्वर्याय मृत्युञ्जय
स्तोत्रध्याननतिप्रदक्षिणसपर्यालोकनाकर्णने।
जिह्वाचित्तशिरोङ्घ्रिहस्तनयनश्रोत्रैरहं प्रार्थितो
मामाज्ञापय तन्निरूपय मुहुर्मामेव मा मेऽवचः ॥ ४१ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -41
பாபோத்பாத விமோசநாய, ருசிரைஶ்வர்யாய ம்ருʼத்யுஞ்ஜய,
ஸ்தோத்ரத்⁴யாந-நதிப்ரத³க்ஷிண-ஸபர்யா, லோகநாகர்ணநே।
ஜிஹ்வா சித்த ஶிரோங்க்⁴ரிஹஸ்த, நயந-ஶ்ரோத்ரை-ரஹம்ʼ ப்ரார்தி²தோ
மாமாஜ்ஞாபய, தந்நிரூபய முஹுர் மாமேவ மா மே(அ)வச꞉ ॥ (41)
मृत्युंजय! पाप+उत्पात-विमोचनाय रुचिर+ऐश्वर्याय स्तोत्र-ध्यान-नति-प्रदक्षिण-सपर्या+आलोकन+आकर्णने जिह्वा-चित्त-शिर:+अंघ्रि-हस्त-नयन-श्रोत्रैः अहं प्रार्थितः। माम् आज्ञापय मुहुः तत् निरूपय मे अवचः मा-एव (भूः)॥
वक्ष्यमाणार्थजाते मूकत्वादिदोषपरिहारार्थं प्रार्थयते – पापोत्पातेति। हे मृत्युञ्जय! मृत्युर्यमः तं जयतीति मृत्युञ्जयः तस्य संबुद्धिः। पापोत्पातविमोचनाय पापमेव उत्पातः विपत्सूचककादाचित्कनिमित्तं तस्य विमोचनाय परित्यागाय रुचिरैश्वर्याय सर्वस्वातन्त्र्याय स्तोत्रध्याननतिप्रदक्षिणसपर्यालोकनाकर्णने स्तोत्रं च ध्यानं च नतिश्च प्रदक्षिणं च सपर्या च आलोकनं च आकर्णनं च एतेषां समाहारे विषये जिह्वाचित्तशिरोऽङ्घ्रिहस्तनयनश्रोत्रैः समाहारघटकस्वस्वविषये यथासंख्यं प्रार्थितोऽहमस्मि, त्वदाज्ञापनं विना तत्प्रार्थितम् अर्थं निर्वोढुं न शक᳭नोमि। तस्मात् माम् आज्ञापय एवं प्रार्थितमर्थं कुर्विति विधेहि। तत्समाहारपदार्थं मां निरूपय मुहः प्रतिक्षणम् अनुसंधापय। मे मम अवचः अवचसो भावः मूकत्वमिति यावत्। एतच्च अध्यातृत्वादीनां दोषाणामुपलक्षणम्। मूकत्वादयो दोषाः मैव भूवन्। मामेव मा मेऽवच इत्यत्र माम् एव मा मे अवचः इति छेदः। प्रतिबन्धकेन विना प्रार्थितार्थनिर्वाहः मम भूयदिति प्रार्थयितुरभिप्रायः ॥४१॥[1]
[1] यथासङ्ख्यालङ्कारः । “यथासंख्यं क्रमेणैव क्रमिकाणां समन्वयः।”
கீழ்க்காணும் விஷயங்களில், மூகைத்தன்மை (ஊமைத்தன்மை), செவிட்டுத்தன்மை முதலியவை உண்டாகாதவாறு இறைவனை வேண்டுகிறார்.
मृत्युञ्जय – ம்ருʼத்யுஞ்ஜய – ஹே, ம்ருத்யுவை ஜெயித்தவரே
पापोत्पातविमोचनाय – பாபோத்பாதவிமோசநாய – பல ஜன்மங்களில் செய்யப்பட்டுக் குவிந்து கிடக்கும் பாபத்தையும், அதன் பின் விளைவான உபத்திரவங்களையும் நீக்கும் பொருட்டும்
रुचिरैश्वर्याय – ருசிரைஶ்வர்யாய – மேலான ஐச்வர்யமாகிய பிரம்மானந்தத்தைப் பெறவும்
जिह्वाचित्तशिरोंघ्रिहस्तनयनश्रोत्रैः – ஜிஹ்வாசித்தஶிரோங்க்⁴ரிஹஸ்தநயநஶ்ரோத்ரை꞉ – (எனது இந்திரியங்கள் யாவும் உமது கிருபாகடாக்ஷத்தால் என்னைத் தூண்டுகின்றன) எனது நாக்கு, மனம், தலை, கால், கைகள், கண்கள், செவிகள் முதலான சகல அவயவங்களும்
स्तोत्रध्याननतिप्रदक्षिणसपर्यालोकनाकर्णने – ஸ்தோத்ரத்⁴யாநநதிப்ரத³க்ஷிணஸபர்யாலோகநாகர்ணநே – முறையே உம்மைத் துதிக்கவும், தியானிக்கவும், வணங்கவும், பிரதக்ஷிணம் செய்யவும், பூஜிக்கவும் தரிசிக்கவும், உமது திவ்விய சரித்திரங்களைக் கேட்கவும் – இவ்விஷயங்களில் (தங்களை ஈடுபடும்படி செய்ய)
अहं प्रार्थितः – அஹம்ʼ ப்ரார்தி²த꞉ – நான் வேண்டிக்கொள்ளப்பட்டவனாக இருக்கிறேன்
मां आज्ञापय – மாம்ʼ ஆஜ்ஞாபய – ஆதலால், நீர் என்னை அந்தந்த அவயவங்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும்படி உத்தரவிடுங்கள்.
मुहुः – முஹு꞉ – அடிக்கடி
मां – மாம்ʼ – என்னை
तत् – தத் – ஸ்தோத்திரம், தியானம் முதலியவற்றின் ஸ்வரூபத்தை
निरूपय – நிரூபய – உணரும்படி செய்யுங்கள்
मे – மே – எனக்கு
अवचः – அவச꞉ – தங்களைத் துதிக்காமல் மௌனமாக இருத்தல் என்பது மட்டும்
मैव – மைவ – வேண்டவே வேண்டாம்.
அவச: – தங்களை துதிக்காமலிருத்தல் மற்ற குற்றங்களுக்கும் உபலக்ஷணமானதால், தியானம் நமஸ்காரம் பிரதக்ஷிணம், பூஜை, தர்சனம் சிரவணம் முதலியவற்றைச் செய்யாமலிருத்தல் இவையெல்லாம் ஒருபொழுதும் உண்டாகவே வேண்டாம் – என்பது பொருள்
மாமேவ மாமேऽவச: என்பதை மாம்-ஏவ -மா-மே-அவச: என்று பிரித்துக்கொள்ளவேண்டும்.
அடியேன் இப்பிறவியிலேயே உனது மங்களகுண சரிதங்களை எனது வாக்கினால் உரைக்கவும், நாவால் துதிக்கவும், காதுகளால் கேட்கவும், மனத்தால் பாவிக்கவும், கரத்தால் பூஜிக்கவும், உடலால் வணங்கவும், கால்களால் வலம் வரவும், நீர் கருணை புரிந்து இரக்ஷிக்கவேண்டும். அதனால் உடலைப் பெற்றதின் உறுதிப் பயனாகிய மோக்ஷப் பேரின்பம் எய்துவேன். இல்லையேல், இவ்வுறுப்புக்களை உடையனாயிருந்தும், உன்மத்தனாய், ஊமையாய் உழன்றவனை ஒப்பதுடன், இவ்வுடலுறுப்புக்களையளித்த உமக்கு நன்றியறிதலைக் காட்டாதவனும் ஆவேன். எனவே இந்நிலையை எனக்களிப்பீராக.
ஹே ம்ருத்யுஞ்ஜய! நான் செய்த பாபங்கள் அனைத்தும் அழிந்து ஸர்வ ஐச்வர்யங்களையும் அடைய வேண்டுமென எனது அங்க அவயவங்கள் யாவும் என்னை வேண்டுகின்றன. கோயில்களுக்குக் சென்று. உனது திவ்ய மங்கள விக்ரஹத்தை தர்சிக்க எனது கண்கள் ஏங்குகின்றன. திவ்ய பரிமள புஷ்பங்களை உனக்கு அர்ச்சிக்க எனது இரு கரங்களும் துடிக்கின்றன. உனது நாமாவை கீர்த்தனம் செய்ய என்னிடம் வேண்டுகிறது எனது நாக்கு. உனது அம்ருதமயமான திவ்யசரித்திரத்தைக் கேட்க என் காதுகள் விரும்புகின்றன. எனது தலை உன்னை நமஸ்கரிக்க என்னிடம் ப்ரார்த்திக்கிறது. உன்னையே த்யானம் செய்ய எனது மனம் என்னைக் கேட்கிறது. இந்த அவயவங்களின் விருப்பத்தை நிறைவேற்ற நீ உத்தரவு தந்து அருள்புரிக. ஸ்தோத்ரம் பாராயாணம் த்யானம் பூஜை இவைகளில் உன்னை அடிக்கடி நான் உணரும்படி அருள்புரி. உன்னை பார்க்காமல் ஸ்துதிக்காமல் பூஜிக்காமல், நமஸ்கரிக்காமல் இருக்கின்ற நிலை எனக்கு ஒரு பொழுதும் வேண்டாம்.
ஏ பரமேச்வரா! என் நாக்கு எப்பொழுதும் தங்களைப் பற்றி பாடுவதற்கும், மனது தியானம் செய்வதற்கும், தலை தங்கள் பாதம் பணிவதற்கும், பாதங்கள் பிரதக்ஷிணம் செய்வதற்கும், கரங்கள் தங்களை அர்ச்சிப்பதற்கும், கண்கள் தங்களுடைய அற்புதமான உருவத்தை பார்ப்பதற்கும், காதுகள் தங்கள் சரித்திரத்தை சிரவணம் செய்வதற்கும் விரும்புகின்றன. அப்படி செய்வதால் பாபங்கள் விலகும், முக்தி சித்திக்கும். பின்பு சுதந்திரமாக இருக்கலாம். ஆதலால் எவ்வித இடையூறுகளு மன்னியில் அந்தந்த அவயவங்களை அந்தந்த காரியங்களில் ஈடுபடும்படி செய்ய தாங்களே அனுமதிக்க வேண்டும். ஒருபொழுதும், மேற்கூறிய காரியங்களைச் செய்யாமல் என்னுடைய அவயவங்கள் இருத்தல் ஆகா. அதற்கும் தாங்கள் அருள் புரிய வேண்டும்.
இந்த ச்லோகத்தின் ஸாராம்சம் என்னவென்றால், மோக்ஷ பர்யந்தமுள்ள ஸகலவிதமான ச்ரேயஸ்ஸுக்கும் மூலகாரணம் சிவ ப்ரஸாதம் தான். மற்றும் பல ஜன்மங்களில் புண்ணியம் செய்தவர்களுக்குத்தான் சிவாநந்தத்தை அனுபவிக்க முடியும் என்பதாம். இந்திரியங்களெல்லாம் உன் ஸ்வரூபத்தில் லயிக்கவேண்டும் என்று என்னைப் ப்ரார்தித்துக் கொண்டபோதிலும், பூர்வஜென்மங்களில் செய்த மலைபோன்ற பாவத்தாலும், புண்ணியம் சிறிதும் இல்லாததாலும், அதனால் சிறிதும் ஞானமில்லாமல் நான் இருப்பதால், அவைகளுடைய இச்சசையை ஸாதித்துக் கொடுக்கமுடியாமல் இருக்கின்றேன். இந்த ஸங்கடத்திலிருந்து என்னை நீ காப்பாற்றவேண்டும். அது எப்படியென்றால், எனது எல்லா இந்திரியங்களும் உன்னிடமே லயித்திருக்க உன்னருள் வேண்டும். இந்த ச்லோகத்தைச் சொல்லி ம்ருத்யுஞ்ஜயனான பரமேச்வர சந்நிதியில் நமஸ்கரிப்பவர்கள், தங்கள் புலனடக்கத்தால் புண்ணியம் பெற்று, பாபங்கள் நசிக்கப்பெற்று, காலக்கிரமத்தில் பரசிவத்தில் லயிப்பார்கள் என்பதற்கு இந்தச் ச்லோகமே சிறந்த சான்று.
मृत्युञ्जय = हे मृत्यु- विजेता !
पापोत्पातविमोचनाय = पाप की छलाँगों से बचाव के लिये (और),
रुचिरैश्वर्याय = उज्ज्वल ऐश्वर्य की प्राप्ति के प्रयोजन से,
जिह्वाचित्तशिरोङ्घ्रिहस्तनयनश्रोत्रैः = जीभ मन, सिर, चरणों, हाथों, आँखों व कानों द्वारा,
अहम् = मुझ से,
स्तोत्रध्याननतिप्रदक्षिणसपर्यालोकनाकर्णने = (क्रमशः) स्तोत्रपाठ, ध्यान, नमस्कार, प्रदक्षिण पूजा, दर्शन व कथा श्रवण करने के लिये,
प्रार्थितः = प्रार्थना की जा रही है ।
माम् = मुझे (उचित कार्य करने की),
आज्ञापय = आज्ञा दीजिये ।
मुहुः = बार-बार,
माम् = मुझ,
तत् = उसे, (उचित कार्य को),
एव = अवश्य,
निरूपय = स्पष्ट कर समझाइये ।
मे = मेरे लिये,
अवच = चुप
मा = मत हो जाइये ।
Dr.T.M.P.Mahadevan
O Conqueror of Death! I am being entreated by my tongue, mind, head, feet, hands, eyes, and ears, for engaging them, respectively, in singing Thy praise, meditation, bowing, circumambulation, worship, beholding and hearing so that the trouble of sin may be removed, and the beatitude may be gained. Do order me; show me the way again and again! Do not observe silence with me.
The essence of devotion is to keep all the sense-organs and mind engaged in the service of the Lord. But how should the Lord be served? What are the disciplines? What are the techniques? These the Lord alone should reveal. Even to worship His feet, His grace there should be. Hence, the devotee implores the Lord to show the means and methods of worship and entreats Him not to remain silent. Siva in His role as Dakshinamurti taught through silence. The devotee confesses that he is not competent, like Sanaka, Sanandana, Sanatana and Sanatkumara, to understand the language of silence. So, he tells the Lord, “No Daksinamurti business with me? Please open Thy mouth and teach me through words”.
Swami Tapasyananda
O destroyer of death! For the destruction of sin and for the attainment of great prosperity (i.e liberation), I am requested by the tongue to sing Thy praise, by the mind to contemplate on Thee, by the head to prostrate to Thee, by the legs to curcumambulate Thee, by the hands to worship Thee, by the eyes to see Thee, and by the ears to hear Thy stories. Direct me to these endeaours and remind me of them. May I not become speechless (nor lose the powers of any of the organs mentioned above, so that I may practice devotion to Thee without impediment).
पापोत्पातविमोचनाय रुचिरैश्वर्याय मृत्युंजय
स्तोत्रध्याननतिप्रदक्षिणसपर्यालोकनाकर्णने ।
जिह्वाचित्तशिरोङ्घ्रिहस्तनयन श्रोत्रैरहं प्रार्थितो
मामाज्ञापय तन्निरूपय मुहुर्मामेव मा मेऽवच: ॥ ४१ ॥
पापोत्पातविमोचनाय = to remove the afflictions of sins;
रुचिरैश्वर्याय= to attain the superior aiswarya;
स्तोत्रध्याननतिप्रदक्षिणसपर्यालोकनाकर्णने = in the matter of performing sthuthi, dhyaanam, namaskaaram, pradhakshiNam, pooja, dharshanam, sravaNam.;
जिह्वाचित्तशिरोङ्घ्रिहस्तनयन श्रोत्रै: = with tongue, mind, head, feet, hands, eyes, ears;
अहं = I;
प्रार्थित: = worship;
मां = me;
आज्ञापय = order me;
तत् = for that reason;
मां = to me;
मुहु = often;
निरूपय = prove it;
मे = to me;
अवच: = if there is no ज्ञानं ;
मा एव = do not do at all.Oh! Mrutunjaya! You won over the lord of death Yama. If only you decide to have kaarunyam on me that very moment my janmaa will attain its साफल्यं. When are you going to show me that enormous karuNai on me? Hey! ParamEswara! In order to remove my paapams done in my many poorva janmas lock, stock and barrel, in order to attain the superior aiswarya called mOkshasaamraajyam, in order to praise your mahimaas, in order to do dhyaanam of your apraahrtha mangala vigraham, in order to do pradhakshiNam of all the Sivakshethrams of enormous mahimas, in order to do poojanam of your holy feet that gives mahaa mangalam, in order to do dharsanam of your moorthy of the greatest mahima, in order to speak of your history that gives divyaamritham, I have been entreated by my tongue, my mind, my head, my feet, my hands, my eyes and my ears. But I remain asakthan to fulfil their very pious requests. It is only you who can shower karuNa on me so I am able to fulfil these requests. In reality, according to “प्रणन्तुं स्तोतुं वा कथं अक्रुतपुण्य: प्रभवति” i.e. having not done smaraNam in the many thousands of the past janmas, having not accumulated the mountain like puNya in those past lives how can the praaNis be qualified to do namaskaaram or do sthuthi with their vaak?Therefore, as said in soothasamhitha,शिवप्रसादेन विना न बुद्दिः शिवप्रसादेन विना ने युक्तिः |
शिवप्रसादेन विना न सिद्दिः शिवप्रसादेन विना न मुक्तिः ||it is clear that the root cause for all sorts of srEyas that has mOkshaparyantham is Sivaprasaadham only. Hey! PrabhO! even though the indhriyaas have been praying to me to get them into your layam I am, as asakthan, unable to fulfil their requests. Because in my poorva janmas I have only done a mountain of paapas and not even a bit of puNya. The saasthras declare loudly that by puNya alone you can be attained. On the other hand I remain the worst sinner. And I remain without a wee bit of gnaanam. Please, Please ParmEswara! please grant me gnaanOdhayam!Hey! ParamEswara! according to the pradhigna,सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणम् व्रज |
अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा: ||please give me your aruL by which all my paapas of many kinds are completely removed and I become able to experience the mOksha saamraajya aiswaryam. So far I have not done any puNya karma at all. It is enough, surely enough to have wasted my janma. No more wasting of this precious janma. Hey! Paramaanandhaswaroopa! Hey! Mruthyunjaya! Hey! KaruNaajalathE! please relieve me from this trouble.The saaraamsam of this slOka is that only those who have done enormous punyaas in innumerable janmas can enjoy sivaanubhavam. This is certain.Aum Namasivaaya!
![]()

One Response
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA. SRI MAHA PERIAVA SARANAM. JAI MA BHARATH.