श्रीशिवानन्दलहरी -३७ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -37 – Sri Sivaanandalahari-37

श्रीशिवानन्दलहरी -३७

आम्‍नायाम्बुधिमादरेण सुमनःसङ्घाः समुद्यन्मनो-
मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा ततः।
सोमं कल्पतरुं सुपर्वसुरभिं चिन्तामणिं धीमतां
नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ॥ ३७ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -37

ஆம்நாயாம்பு³தி⁴-மாத³ரேண, ஸுமநஸ் ஸங்கா⁴ஸ் ஸமுத்³யந், மநோ-
மந்தா²நம்ʼ, த்³ருʼட⁴ப⁴க்தி-ரஜ்ஜுஸஹிதம்ʼ க்ருʼத்வா மதி²த்வா தத꞉।
ஸோமம்ʼ, கல்பதரும்ʼ, ஸுபர்வ-ஸுரபி⁴ம்ʼ, சிந்தாமணிம்ʼ தீ⁴மதாம்ʼ,
நித்யாநந்த³ ஸுதா⁴ம்ʼ, நிரந்தர-ரமா-ஸௌபா⁴க்³ய-மாதந்வதே ॥ (37)


सुमनः+संघाः समुद्यत्‌+मनः दृढ-भक्ति-रञ्ञु-सहितं मन्थानं कृत्वा आदरेण आम्नाय+अंबुधिं मथित्वा ततः सोमं कल्पतरुं सुपर्व-सुरभिं चिन्ता-मणिं धीमतां नित्य+आनंद-सुधां निरंतर-रमा-सौभाग्यम्‌ आतन्वते 



विपश्चित्समूहाः आम्‍नायसमुद्रं मथित्वा तज्जन्यफलभूतं त्वां लभन्त इत्याह-आम्‍नायाम्बुधिमितिसुमनस्सङ्घाः सुमनसां विदुषां सुष्ठु  शास्त्राभ्याससंस्कृतं मनो येषां तेषां, विदुषां “सुपर्वाणः सुमनस” इति कोशमहिम्‍ना देवानामपि सङ्घाः समूहाः समुद्यत्  गुणसमुदायं प्राप्नुवत्  मनो मानसं दृढभक्तिरज्जुसहितं दृढा भक्तिरञ्चचला भक्तिः, सैव रज्जुः तया सहितं युक्तं मन्थानं कृत्वा मथनदण्डं कृत्वा तेन आम्‍नायाम्बुधिम्‌ आम्‍नायो वेद एव अम्बुधिः जलधिः तम्‌ आदरेण आसक्त्या मथित्वा ततस्तस्मात्‌ सोमं, कल्पतरुं, सुपर्वसुरभिं, चिन्तामणिं, धीमतां नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यम्‌ आतन्वते विस्तारेण लभन्ते। धीमतां बुद्धिशालिनाम्‌, अर्थान्तरे नित्यानन्दसुधामित्यस्य विशेषणम्‌, धियः मतेः इष्टां संमताम्‌। कल्पद्रुमं देवतरुसदृशं सुपर्वसुरभिं  कामधेनुसमानं चिन्तामणिसदृशं नित्यानन्दसुधाम्‌ अमृततुल्यनित्यानन्दस्वरूपं निरन्तररमासौभाग्यं शाश्वातमुक्तिलक्ष्मीसमृद्धिरूपं सोममुमासहितं परमेश्वरम्‌ आतन्वते। विस्तेरण लभन्ते। देवसमूहाः समुद्रं मथित्वा चन्द्रादिपदार्थान्‌ यथा अलभन्त तथा वेदान्‌ संशोध्य मथनजन्यसकलपदार्थसमष्टिरूपं परमशिवं लभन्त इति भावः ॥३७॥[1]

[1] रूपकालङ्कारः।


தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து தேவாமிர்தம் பெற்றது போல், சிவ ஞானிகள் மனதால் வேதக்கடலைக் கடைந்து சிவப் பேரமுதத்தை அடைந்தனர் என்று அறிவிக்கிறார். இது தேவர்களுக்கும் சிவ ஞானிகளுக்கும் சிலேடை.

அதேவிதம் தேவர்கள் கூட்டங்களாகச் சேர்ந்து மனதில் முயற்சிகொண்டு சலியாத வாசுகி என்னும் கயிற்றைக் கொண்டு மந்தர மென்னும் மத்தை நாட்டி க்ஷீராப்தியைக் கடைய அதிலிருந்து சந்திரனையும் கற்பகவிருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும், எப்போதும் சந்தோஷத்தையடையச் செய்யும் அமிருதத்தையும் பூர்ண அழகினையுடைய லக்ஷ்மிதேவியையும் அடைந்து மோக்ஷ லக்ஷ்மியின் ஸமிருத்தியுடைய உம்மையே யடைந்திருக்கிறார்கள்.


सुमनस्संघा – ஸுமநஸ்ஸங்கா⁴ – வித்வான்களாகிற சிவஞானிகள் ஸமூஹம் (தேவர்களுடைய கூட்டம்)

समुद्यन्मनो मन्थानम् – ஸமுத்³யந்மநோ மந்தா²நம் – முயற்சியுடன், நற்குணங்கள் நிறம்பிவிளங்கும் தங்கள் மனம் எனும் மத்தை ஏந்தியும்

दृढभक्तिरज्जुसहितम् – த்³ருʼட⁴ப⁴க்திரஜ்ஜுஸஹிதம் – தங்கள் பலமான பக்தி என்றதைக் கயிறாவும்

कृत्वा – க்ருʼத்வா – செய்துகொண்டு

आम्‍नायाम्बुधिम् – ஆம்நாயாம்பு³தி⁴ம் – வேதங்கள் என்ற ஸமுத்திரத்தை

आदरेण​ – ஆத³ரேண – ஆதரவுடன்

मथित्वा – மதி²த்வா – கடைந்து

ततः – தத꞉ – அந்த ஸமுத்திரத்திலிருந்து

कल्पतरुम् – கல்பதரும் – கற்பகவிருக்ஷம் போன்ற தயாளுவத்தை யுடையவரும்

सुपर्वसुरभिम् – ஸுபர்வஸுரபி⁴ம் – அழகிய காமதேனுவைப் போன்ற தாராளத்துவ முடையவரும்

चिन्तामणिम् – சிந்தாமணிம் – சிந்தாமணி என்பதற்கு சமானமானவரும்

धीमताम् – தீ⁴மதாம் – புத்திமான்களுக்கு

नित्यानन्दसुधाम् – நித்யாநந்த³ஸுதா⁴ம் – நித்யானந்தஸுகத்தைக் கொடுப்பவராயும்

निरन्तररमासौभाग्यम् – நிரந்தரரமாஸௌபா⁴க்³யம் – சாசுவதமான அழகுடன் அழிவற்ற ஸௌபாக்கியத்தை யளிக்கவல்லவராயும் இருக்கின்ற

सोमम् – ஸோமம் – பார்வதியுடன் கூடிய ஸ்ரீ பரமேச்வரனை

आतन्वते – ஆதந்வதே – அடைகின்றனர்


ஏ சிவபரமே! முன் தேவர்கள் கூடி திருப்பாற்கடலை கடைந்து அமிர்தமாதி ஐச்வரியங்ளை அடைந்தது போல், பண்டிதோத்தமர்களாகிய  ஞானவான்களும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதக்கடலில், மனமென்னும் மத்தை நாட்டி, அன்பென்னும் தாம்பில் பிணைத்து, வஸ்து நிர்ணய தத்துவ ஆராய்ச்சி என்னும் கடைதலைச் செய்து,  காமதேனுவாதி ஐசுவரியங்களெனும் தத்துவமசியாதி மஹா வாக்கியங்களையும், தேவாமிர்தத்தை யொத்த சிவபரம் பொருளாகிய தங்களையும் அறிந்து அடைந்து கடைத்தேறினார்கள்; ஆதலின் அத்தகைய மேன்மைத் தன்மையை அடியேனுமடைய அனுக்ரஹம் செய்வீராக (என்பதாம்).


ஹே பரமேச்வரா! தேவர்கள்‌ மந்தரமலையை மத்‌தாக்கி வாஸுகியை கயிறாகக்‌ கொண்டு பாற்கடலை கடைந்து காமதேனு, கற்பகவ்ருக்ஷம்‌, லக்ஷ்மீ, சந்த்ரன்‌, அம்ருதம்‌ முதலியவைகளைப்‌ பெற்றார்கள்‌. வேதங்களை நன்கு கற்றறிந்து மனதைச்சுத்‌தமாக்கிக்‌ கொண்ட வேதவிற்பன்‌னர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ மனதை மத்தாக்கி பக்தியாகிற கயிற்றால்‌ வேதமென்ற ஸமுத்திரத்தை ஆதரவோடு நன்கு கடைந்தெடுத்து உன்னை அடைகிறார்கள்‌. காமதேனுவாக, கற்பகத்தருவாக அழியாச்செல்வமாக, உமையுடன்‌ கூடின ஸோம சேகரனாக பேரானந்தத்தின்‌ வடிவாக அம்ருதமாக அவர்களுக்கு நீ கிடைத்திருக்கிறாய்‌.


முன்னொருகாலத்தில் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தரமலையை மத்தாகவும், வாஸுகியைக் கயிறாகவும் வைத்துக்கொண்டு பாற்கடலைக் கடைந்து, அதிலிருந்து, சந்திரன், கல்பகவிருக்ஷம், காமதேனு, சிந்தாமணி, லக்ஷ்மி, அமிருதம் இவற்றையெல்லாம் பெற்றனர்.  அதுபோல் வித்வான்கள் வேதங்களாகிற சமுத்திரத்தை, மனமாகிற மத்தில் பக்தியாகிற கயிற்றைக் கட்டி கடைந்து மேற்கூறிய எல்லா பொருள்களையும்விட பன்மடங்கு அதிகப்பெருமைகொண்ட ஸ்ரீபரமேச்வரனைப் பெற்றனர். அதாவது ஸர்வவேதங்களாலும் விளக்கப்படும் பொருள் ஸ்ரீபரமேச்வரன் ஒருவரே.  பாற்கடலில் பலபொருள்கள் தோன்றின. வேத ஸமுத்திரத்தில் ஸ்ரீபரமேச்வரன் ஒருவரே தோன்றினார். தேவர்கள் பெற்றதோ ஒரே பலனைத் தருகிற பல. சிவஞானிகள் பெற்றதோ பல நன்மைகள் தருகிற ஒன்றே ஒன்று. அங்கு ஸோம: என்பதற்கு சந்திரன் என்றும், இங்கு பார்வதியுடன் கூடிய பரமேச்வரன் என்றும் பொருள்.  காமதேனு கல்பவிருக்ஷம், சிந்தாமணி இவற்றைப்போல் விரும்பியவற்றையெல்லாம் அளிக்கக்கூடியவர் இங்கு ஸ்ரீபரமேச்வரனே.  பாற்கடலில் உண்டான அமிருதம் அறிஞர்களுக்கு அழிவற்ற ஆனந்தத்தை அளிக்கக் கூடியதல்ல. அவ்விதமே அங்குண்டான லக்ஷ்மியும் ஓரிடத்தில் நிலைத்து நிற்கக்கூடியவளல்ல. ஆனால் ஸ்ரீபரமேச்வரன், அறிஞர்கள் அனுபவிக்கும் அழிவற்ற ஆனந்தவடிவமாயும் நிலைத்துநிற்கும் முக்திலக்ஷ்மீ ரூபமாயும் இருக்கின்றார் என்பது விசேஷம்.

இதிலிருந்து, பக்தியில்லாமல் வேத வேத்யனான பரசிவத்தை தெரிந்துகொள்ளவே முடியாது என்பது ஸ்பஷ்டமாக விளங்குகிறது. இந்த ச்லோகத்தை சிவஸந்நிதியில் பக்தியுடன் சொல்லி நமஸ்கரிப்பவர்களுக்கு மேலும் சிவபக்தி உண்டாகி அவர்கள் பரசிவத்தில் லயிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே சான்றாகும்.


सुमनःसङ्घा = विद्वत्समुदाय,

समुद्यन्मनः = दृढ चित्त को,

मन्थानम्‌ = मथानी,

कृत्वा= बनाकर (और उसे),

दृढभक्तिरज्जुसहितम्‌ = स्थिर भक्तिरूप रस्सी से सम्बद्ध,

[ कृत्त्वा =कर],

आदरेण = श्रद्धापूर्वक,

आम्नायान्बुधिम्‌ = शास्ररूप सागर को,

मथित्वा = मथकर,

ततः= उससे,

सोमम्‌ = चन्द्रमा,

कल्यतरुम्‌ = कल्पवृक्ष,

सुपर्वसुरभिम्‌ = दैवी गाय (कामधेनु),

चिन्तामणिम्‌ = इच्छा पूर्ण करने वाली मणि,

नित्यानन्दसुधाम्‌ = सदा बना रहने वाला आनन्दरूप अमृत (और),

धीमताम्‌ = बुद्धिमानों को होने वाला,

निरन्तररमासौभाग्यम्‌ = सनातन लक्षमीरूप सौभाग्य,

आतन्वते = प्राप्त करते हैं ।

 


Dr.T.M.P.Mahadevan

Making the resolute intelligence the churning rod with the rope of firm devotion attached, those of good mind churn the ocean of Scripture with eagerness, and obtain therefrom the Moon, the wish-fulfilling tree, the cow of plenty, the wish-yielding gem, the ambrosia of eternal bliss, the perennial delightful Blessedness pertaining to the wise

The story of the churning of the milk-ocean is allegorized here. Out of the milk-ocean arose auspicious objects, delightful things – each fulfilling some wish or desire of man. The enquiry into the purport of Scripture with a resolute intelligence and firm devotion yields, not a variety of ends, but the final goal which is Moksha. Soma, Kalpavrksha, Kamadhenu, Cintamani, Amrta, Lakshmi – all of them, here, stand for one and the same objective which is release, the supreme beatitude.

Swami Tapasyananda

Just as the Devas churned the Ocean of Milk and obtained the moon (Soma), the wish fulfilling tree, the cow of plenty, the ‘magic-gem’, nectar, and Rama (Lakshmi), so the wise men churn the ocean of the Vedas, using their virtuous mind as the rod and firm devotion as the rope string, and obtain Thee, who art in union with the Divine Mother (Sa-Uma = Soma) – Thee who fulfillest all wants like the wish-fulfilling tree and the cow of plenty, who grantest all desires like the ‘magic-gem’, who conferest perpetual bliss on the wise like nectar, and who givest liberation like Lakshmi.

(The allusion is to the Pauranika story about the chrning of the ocean by the Devas and Asuras. The many rare things that came up in the course of the churning are referred to here. The practice of devotion to Siva and its fruits are compared to this episode and the results got from it)


आम्नायां बुधिमादरेण सुमन: सङ्ग्धा: समुध्यन्मनो
मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा तत: ।
सोमं कल्पतरुं सुपर्वसुरभिंचिन्तामणिं धीमतां
नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ॥ ३७ ॥

Commentary

सुमन: स्संघा: – The crowd of Vidwans or Devas;

स्समुध्यन् – that having efforts;

मन: – of the mind (of Meru parvat);

दृढभक्तिरज्जुसहितं – bound by the rope of druda bhakti (tied by strong snake!)

मन्थानं – as churning rod;

कृत्वा – having done;

आम्नायांबुधिं – milky ocean which is Veda itself;

आदरेण – supportive;

मथित्वा – churned;

सुरभिं – eequal to Kamadenu;

चिन्तामणिं – equal to Chintamani (wish giving ratna);

धीमतां – to those buddhimaans, devas;

नित्यानन्दसुधां – of amruta svaroopan;

निरन्तम् – being permanent;

रमासौभाग्यम् – that Paramasiva who has the प्रज्ञ or consci0usness or soundaryam of Moksha Lakshmi;

आतन्वते – attains;

In the previous stanza Raja Yoga was emphasized.  In this stanza AachaaryaaL underlines the Bhakthi Yoga.

Hey! ParamEswara!  Just as devas used mount Meru as the rod and the great snake Vasuki as the rope to churn the milky ocean and got wonderful things such as Kalpaga Vruksham, KaamadhEnu, Chinthaamani, Chandran, Mahaalakshmi and above all Amrutham, in the same way, vidwaans churn the vEdha samudhram with their nirmala manas as the rod and great bhakthi as the rope to obtain you O! Paramasiva! As the vidwaans do this churning they obtain you with Uma as your inseparable consort and also find that you are also the equivalent of Kalpaga Vruksham, KaamadhEnu, Chinthaamani, Chandran, Mahaalakshmi and Amrutham! In comparison to devas, vidwaans’ reward is effortless!

“सर्वे वेदाः यत्पदमामनन्ति ”, says the sruthi. Only through the four vedhas called Rig, Yajus, Saama and AtharvaNa, is it possible to know the real swaroopam of Paramasiva. Also it is not possible to know Him without bhakthi. Bhagavath PaadhaaL  says, “मोक्षसाधन सामग्र्यां भक्तिरेव गरीयसी ”. Bhakthi is a matchless tonic to obtain Parameswara. Therefore it can easily be said that bhakthi is the fifth purushaartham. “य सर्वे देवाः नमन्ति मुमुक्षवः ब्रह्मावादिनश्च इति ”, says the sruthi. That is, all praanis such as mumukshus, kaamis, mukthaas do their namaskaarams to Paramasiva. It is thus clear that in order to have layam in Paramasiva, bhakthi is the only means. More clearly, the means to mOksha is ज्ञान and the means to ज्ञान  is bhakthi.

In this stanza the importance of bhakthi yoga and the easiness of it were taught by invoking the charithra called ksheeraabdhimathanam.  Mumukshus with superior bhakthi, prema and sraddha, together with Ekaagra chinthana and vedhaadhyaana devoid of vacillations of the mind and firmness of the resolve win sarvaabheeshta siddhi and acquire the wishes such as all the wealth equivalent to kalpagavriksham and kaamadhEnu and in the end reach UmaamahEswaran.

When the mind attains its layam and in turn it itself shines as the प्रत्यगात्म स्वरूपं of Parameswara Himself there occurs the stiti of nirvikalpa aatma aananda which is defined as the परमकाष्ठा or the supreme goal of bhakti yoga. This rahasyam was revealed to us by  Sri Bhagavat PaadaaL स्वस्व्रूपानुसंधानं भक्तिरित्यमिधीयते meaning bhakthi is nothing but the anusandhaanam of akhandaakaaravriddhi that one’s own aathmaswaroopa is non-different from Paramasiva.

Whoever sings this stanza in sivasannidhaanam and do a namaskaaram in Siva Sannidhi he is bound to get his layam in Paramasiva.

SivOham

Loading

One Response

  1. HARA HARA SANKARA JAYA JAYA SANKARA. SRI MAHA PERIAVA SARANAM. JAI MA BHARATH.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading