श्रीशिवानन्दलहरी -३५
योगक्षेमधुरन्धरस्य सकलश्रेयःप्रदोद्योगिनो
दृष्टादृष्टमतोपदेशकृतिनो बाह्यान्तरव्यापिनः।
सर्वज्ञस्य दयाकरस्य भवतः किं वेदितव्यं मया
शम्भो त्वं परमान्तरङ्ग इति मे चित्ते स्मराम्यन्वहम् ॥ ३५ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -35
யோக³க்ஷேம து⁴ரந்த⁴ரஸ்ய, ஸகலஶ் ஶ்ரேய꞉ ᳲ ப்ரதோ³த்³யோகி³நோ
த்³ருʼஷ்டாத்³ருʼஷ்ட – மதோபதே³ஶ – க்ருʼதிநோ, பா³ஹ்யாந்தர- வ்யாபிந꞉।
ஸர்வஜ்ஞஸ்ய, த³யாகரஸ்ய, ப⁴வத꞉ᳲ, கிம்ʼ வேதி³தவ்யம்ʼ மயா,
ஶம்போ⁴, த்வம்ʼ, பரமாந்தரங்க³ இதி, மே சித்தே, ஸ்மராம்யந்வஹம் ॥ (35)
शंभो! योग-क्षेम-दुरन्धरस्य सकल-श्रेयः-प्रद+उद्येगिनः दृष्ट+अदृष्ट-मत+उपदेशकृतिनः बाह्य+अंतर-व्यापिनः सर्व-ज्ञस्य दयाकरस्य भवतः मया किं वेदितव्यम्? त्वं परम-अन्तः+अंगः इति अन्वहं मे चित्ते अहं स्मरामि॥
परमशिवस्य गुणान् विदितप्रायान् मत्वा तस्य परमाप्तत्वस्मरणं प्रतिजानीते- योगेति। हे शम्भो योगक्षेमधुरन्धरस्य धरतीति धरः धुरो धरः धुरन्धरः। अलब्धस्य लाभो योगः, लबन्धस्य परिपालनं क्षेमः, तयोर्धुरन्धरः तस्य। सकलश्रेयःप्रदोद्योगिनः सकलानि च तानि श्रेयांसि च तानि प्रददातीति तत्प्रदः स चासावुद्योगश्च सोऽस्यास्तीति सकलश्रेयःप्रदोद्योगी तस्य। दृष्टादृष्टमतोपदेशकृतिनः दृष्टमैहिकम्, अदृष्टमामुष्मिकम् एतदुभयफलकत्वेन अभिमतो य उपायः तस्योपदेशः तत्र कृतिनः सर्थमस्य। बाह्यान्तरव्यापिनः बहिर्भवानि बाह्यानि, अन्तर्भवानि आन्तराणि तानि व्याप्नोति व्याप्य तिष्ठतीति तद्व्यापिनः। सर्वज्ञस्य सर्वं जानातीति सर्वज्ञः तस्य। दयाकरस्य करोतीति करः दयायाः करो दयाकरः तस्य। भवतः भवत्संबन्धि। मया वेदितव्यं ज्ञातव्यं किम्? किमस्ति? त्वं मे परमान्तरङ्गः अत्यन्ताप्तः इत्यन्वहम् अनुदिनम् अहं चित्ते स्मरामि। सर्वदा त्वयि परमाप्तत्वस्मरणं मम श्रेयस्करमिति भावः॥३५॥
பரமேச்வரனிடம் எதை வேண்டுவது? நல்லதைச் செய் என்றா? நல்லதைத் தவிர வேறெதனையும் செய்தறியாத சங்கரனிடம் அது தேவையா? விண்ணப்பித்தாலொழிய அவர் என் குறைகளை அறியமாட்டாரா? ஸர்வஜ்ஞனாயிற்றே! என்றெல்லாம் எண்ணி, நீரே எனக்கு உற்ற நண்பன் என்று சொல்லுகின்றார்.
शंभो – ஶம்ʼபோ⁴ – ஹே சம்போ!
योगक्षेम धुरन्धरस्य – யோக³க்ஷேம து⁴ரந்த⁴ரஸ்ய – இதுவரை கிட்டாத நலப்பொருளை அடைதல், அடைந்ததைக் கைவசம் வைத்துக் காப்பாற்றிப் பயன்பெறுதல், இவைகளால் ஏற்படும் சுமைகளை வஹிகிறவராயும்
सकलश्रेयःप्रदोद्योगिनः – ஸகலஶ்ரே ய꞉ ப்ரதோ³த்³யோகி³ந꞉ – ஸகல நலங்களையும் கொடுப்பதற்காகவே கங்கணங்கட்டியிருப்பவராயும்
दृष्टादृष्टमतोपदेशकृतिनः – த்³ருʼஷ்டாத்³ருʼஷ்டமதோபதே³ஶக்ருʼதிந꞉ – இஹத்தில் காணப்பட்டவைகள், பரத்தில் காணப்படாதவைகள் இவைகளை அடையக்கூடிய உபாயங்களை உபதேசிப்பதில் வல்லவராயும்
बाह्यान्तरव्यापिनः – பா³ஹ்யாந்தரவ்யாபிந꞉ – அகத்திலும் புறத்திலும் வியாபித்திருப்பவராயும்
सर्वज्ञस्य – ஸர்வஜ்ஞஸ்ய – சர்வஜ்ஞராயும்
दयाकरस्य – த³யாகரஸ்ய – தயைக்கு இருப்பிடமானவராயும் உள்ள
भवतः – ப⁴வத꞉ – உமக்கு
मया – மயா – என்னால்
किं वेदितव्यम् – கிம்ʼ வேதி³தவ்யம் – அறிவித்துக் கொள்ள என்ன இருக்கிறது?
त्वम् – த்வம் – தாங்கள்
मे – மே – எனக்கு
परमान्तरङ्ग इति – பரமாந்தரங்க³ இதி – உண்மையான ஆப்தர் (சிறந்த நண்பர்) என்று
चित्ते – சித்தே – மனதில்
अन्वहम् – அந்வஹம் – அனுதினமும் (எப்பொழுதும்)
स्मरामि – ஸ்மராமி – நினைக்கிறேன். ஆகையால் நான் என் குறையிரப்பதற்கு சாத்தியனாகாததால் எனக்கு வேண்டியதை நான் வாயால் கேளாமல் நீரே கொடுத்துக் காப்பாற்றுவீர்.
நீர் சர்வலோக காரணனாயிருத்தலின், ஸமஸ்த உயிர்த்தொகுதிகளின் இக-பர-வீடு எனும் முத்திறத்தனவாகிய சுக துக்கங்கட்கும் ஏதுவாக விளங்குகின்றீர். ஆனால் அதை அவர்கள் வினைக்கேற்ப அளிக்கவேண்டியிருத்தலின், அவரவர் வினைகளின் அளவை அறிய, எப்போதும் எங்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து சர்வக்ஞனாய் எதையும் அறிகின்றீர். ஆகவே எனது உள்ளத்தும் நீங்காது உறையும் தாங்கள், உம்மையே மேலான நண்பனாக மதித்திருக்கும் எனது எண்ணத்தையும் அறிவீர். ஆதலின், உம்மையே நம்பியிருக்கும் அன்பனாகிய என்னைக் கைவிடாது காத்தருளக் கருணை புரிவீர் (என்பதாம்).
ஹே சம்போ! அடைவதற்கு அரிதானவைகளை அடையும் படி செய்கிறாய். அடைந்தவற்றை நிரந்தரமாக காப்பாற்றி எனக்கருள் பாலிக்கும் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாய். எனது பலவிதமான நன்மைகளுக்காகவும் நீ ஸதா முயற்சி செய்கிறாய்; இவ்வுலகத்தில் எனது விருப்பம் எதுவோ அதையளிப்பதிலும் பரலோகத்தில் எனக்கு எது விருப்பமோ அதையுமளிப்பதில் நீயே சக்தி யுள்ளவன். எனக்குள்ளேயும் வெளியிலும் எல்லா இடங்களிலும் நிறைந்து, எல்லாமும் அறிந்தவனாய், கருணையின் வடிவமாக இருக்கிற உன்னிடம் நான் தெரிவித்துக் கொள்ள என்ன இருக்கிறது? நீ எனக்கு ஆப்த நண்பன் என அனுதினமும் என் சித்தத்தில் உன்னை வைத்து ஸ்மரிக்கிறேன்.
ஏ பரமேச்வர! தங்களுடைய கல்யாண குணங்கள் எல்லாம் மிகப்பிரசித்தமானதால் நான் அவற்றை நன்கு அறிவேன். ஆதலால் அப்படிப்பட்ட தாங்களே எனக்கு மிகச் சிறந்த நண்பர் என்று நான் நினைத்துக்கொண்டே இருக்கின்றேன். அவ்வித நினைவே எனக்கு ஸமஸ்தாபீஷ்டங்களையும் அளிக்கும்.
தயாகரஸ்ய – दयाकरस्य करोतीति करः दयायाः करो दयाकरः तस्य। என்ற விசேஷணத்தை அநுசரித்து, தயையினுடைய ஆகரம் – இருப்பிடமாக இருக்கிறார் ஸ்ரீபரமேச்வரன். அந்த தயையை, ஆலஹால விஷ பானம், திரிபுர ஸம்ஹாரம், ம்ருத்யுஞ்ஜய லீலை, கங்காவதரணம் முதலான லீலைகள் மூலமாக ப்ரவ்ருத்தியிலும் காண்பிக்கிறார் பரமேச்வரன். ஸகல ப்ராணிகளுடைய மனோபாவத்தை அறியும் ஸர்வக்ஞராகவும் இருக்கிறார். அதனால் அவர் நம்முள்ளும் இருக்கிறார். அவரிடம் நாம் தெரிவித்துக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? அவர் நமக்கு பரம ஆப்தராக (நண்பராக) இருக்கின்றார் என்று அனுஸந்தானம் செய்துகொண்டு இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்களுக்கு, ஸ்ரீபரமேச்வரன் சிறந்த நண்பன் போல் இருந்துகொண்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மைசெய்வார் என்பதற்கு இந்த ச்லோகமே சிறந்த சான்று.
शम्भो = हे शम्भु ! योगक्षेमधुरन्धरस्य = अप्राप्त की प्राप्ति और प्राप्त की रक्षा मे कुशल,
सकलश्रेयःप्रदोद्योगिनः = सब को कल्याण प्रदान करना रूप व्यापार वाले, दृष्टादृष्टमतोपदेशकृतिनः
= लौकिक व अलौकिक विषयक शास्त्रों के उपदेशक, बाह्यान्तरव्यापिनः = बाहर-अन्दर सर्वत्र
व्यापकः, सर्वज्ञस्य = सर्वज्ञ, दयाकरस्य = दया करने वाले, भवतः = आपके समक्ष, मया = मेरे
द्वारा, वेदितव्यम् = निवेदन करने योग्य, किम् = क्या है ?, त्वम् = आप, मे = मेरे, परमान्तरङ्ग:
= अत्यन्त अन्तरङ्ग हैं, इति = इसीलिये, अन्वहम् = प्रतिदिन, चित्ते = मन में (आपका), स्मरामि
= स्मरण करता हूँ ।
Dr.T.M.P.Mahadevan
O Sambhu! Thou bearest the responsibility for the welfare (of all beings); Thou art intent on giving all that is good; Thou dost teach the way to all desired ends, seen and unseen; Thou art all-pervading, inside and outside; Thou art omniscient and merciful: To Thee, what should I make known? Thou art my inmost self: thus do I always think in my mind.
Siva is the source of all auspiciousness. He is the giver of all good, and the guarantor of the welfare of all. He saves the soul by imparting to it the knowledge of what is good, and by revealing the supreme truth. He is omnipresent, omniscient, and compassionate. Where is the need for the devotee to make known anything to Him? For, He knows all. The only task that the devotee should do is to remember the greatness of Siva, and to realize that He is the inner ruler immortal.
Swami Tapasyananda
What am I to petition unto Thee who bearest the responsibility for both the present and the future welfare of beings; who art ready to confer all good (on devotees); who art the perfect revealer of all religions existing and yet to exist; and who art all-knowing and all merciful? Always do I think of Thee in my mind as my dearest and nearest.
योगक्षेमधुरंधरस्य सकलश्रेयः प्रदोध्योगिनो
दृष्टादृष्टमतोपदेशकृतिनो बाह्यान्तरव्यापिनः।
सर्वज्ञस्य दयाकरस्य भवतः किं वेदितव्यं मया
शंभो त्वं परमान्तरंग इति मे चित्ते स्मराम्यन्वहम्॥३५॥
हे शम्भो ! – Hey! You the Paramporul that does the sukham!
योगक्षेमधुरंधरस्य – The one who bears the burden of obtaining the desired object and who takes the care of safeguarding that desired object;
सकलश्रेयः प्रदोध्योगिन:- The one who is adept in providing every conceivable good that we desire;
दृष्ट – that which are seen;
अदृष्टादृष्टमतोपदेशकृतिन: – and good at providing also those that are not seen;
बाह्यान्तरव्यापिनः – who resides in such strange place as that which has neither within nor without;
सर्वज्ञस्य – who is all knowing;
दयाकरस्य – one who is possessed of extreme kindness;
भवतः – to you;
मया – by me;
वेदितव्यं – to inform you;
किं – what is there?
त्वं – You;
मे – to me;
परमान्तरंग – are extremely close;
इति – thus;
चित्ते – in my mind;
अन्वहम् – daily;
स्मरामि – keep thinking.
Commentary
“अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥”
is the प्रतिज्ञ of the Lord given in the Geetha. Hey! MahaprabhO! You are adept in giving superior sreyas to bhaktha janas. You teach people in their own way to obtain the sukham of this world and of the beyond. ‘“यः सर्वज्ञः सर्ववित्”‘ says the sruthi and you are pervading the ins and outs of everything. You come to know of everything by being in the heart of all praaNis. Moreover in this sloka, AachaaryaaL uses the word ‘दयाकरस्य’. It is explained as ‘करोतीति करः दयायाः करः दयाकरः’ It can be said that you are the source of ‘dhayaa’. This dhayaa has manifested as aalaahala paanam, thripura samhaaram, mrithyunjaya leela and GangaadharaNam besides being सर्वज्ञ.
Hey! KaruNaanidhE! You are of such great mahima. As you are capable of knowing the manObhaavam of sakhala praaNis that include me, what is there for me to tell you? You are my eternal saviour. I am keeping you in my heart as my Paramaanandharangan. This itself is giving me limitless sreyas.
வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன் மாற்கரியோநீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே.
(திருவாசகம்)
![]()

One Response
SRI MAHA PERIAVA SARANAM. JAI MA BHARATH.