श्रीशिवानन्दलहरी -३४
किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शम्भो भव-
द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते।
भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं
पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -34
கிம்ʼ ப்³ரூமஸ்தவ ஸாஹஸம்ʼ பஶுபதே, கஸ்யாஸ்தி ஶம்போ⁴, ப⁴வத்³-
தை⁴ர்யம்ʼ சேத்³ருʼஶமாத்மந꞉, ஸ்தி²திரியம்ʼ சாந்யை꞉, கத²ம்ʼ லப்⁴யதே।
ப்⁴ரஶ்யத்³-தே³வக³ணம்ʼ, த்ரஸந் – முநிக³ணம்ʼ, நஶ்யத்-ப்ரபஞ்சம்ʼ லயம்ʼ,
பஶ்யந்-நிர்ப⁴ய ஏக ஏவ, விஹரத்யாநந்த³ ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ (34)
पशुपते! तव साहसं किं ब्रूमः? शंभो! ईदृशं भवद्(त्) + दैर्यं च कस्य अस्ति? इयम् आत्मनः स्थितिः च अन्यैः कथं लभ्यते? भवान् भ्रश्यद्(त्) + देव-गणं त्रसत् + मुनिगणं नश्यत् – प्रपंचं लयं पश्यन् एकः एव आनंद-सांद्रः (सन्) विहरति॥
परमशिवस्य स्थितिरन्यदुलर्भेत्याह- किं ब्रूम इति। हे पशुपते। शंभो! तव साहसं दुर्घटकरणं किं ब्रूमः किमिति वदामः? ईदृशं वक्ष्यमाणविषयं धैर्यं निश्चयः कस्यास्ति? न कस्यापीत्यर्थः। इयमात्मनः स्थितिश्च इत्थंभूतमात्मनोऽवस्थानं अन्यैः त्वदितरैः कथं केन प्रकारेण लभ्यते। त्वदितरे तत्प्रकारानभिज्ञा इति भावः। आनन्दसान्द्रः निविडानन्दस्वरूपः भवान् त्वं भ्रश्यद्देवगणं भ्रश्यन् स्वस्थानेभ्यः च्यवन् देवगणः सुरसमूहो यस्मिन्। त्रसन्मुनिगणं विभ्यन् मुनिगण ऋषिगणो यस्मिन्। नश्यतप्रपञ्चं प्रपञ्चो दृश्यमात्रं नश्यन् अदर्शनं प्राप्नुवन् यस्मिन्। लीयतेऽस्मिन् सर्वमिति लयः प्रलयकालः तं पश्यन् निर्भयः भयरहितः एक एव विहरतीति यत् इयमवस्थितिरिति पूर्वेणान्वयः। यद्यपि महाप्रलये नाशप्रतियोगित्वं परमशिवेतरेषां सर्वेषामविशिष्टं, तथापि देवगणमुनिगणयोः भ्रंशत्रासकथनं नाशपूर्वावस्थाप्रदर्शनमिति ज्ञेयम्। महाप्रल्येऽप्यवस्थानप्रतिपादनात् परमशिवस्य नित्यत्वमवसीयते ॥ ३४ ॥
பரசிவனுடைய தைரியத்தை வியந்து புகழ்கின்றனர்.
पशुपते – பஶுபதே – ஹே பசுபதே!
शंभो – ஶம்ʼபோ⁴ – சம்புவே
तव – தவ – உமது
साहसम् – ஸாஹஸம் – மற்றவர்களால் செய்யமுடியாத மிகத் துணிவுடன் கூடிய ஸாகசத்தை
किं ब्रूमः? – கிம்ʼ ப்³ரூம꞉? என்னென்று கூறுவது?
ईदृशम् – ஈத்³ருʼஶம் – இப்படிப்பட்ட
भवद्धैर्यम् – ப⁴வத்³தை⁴ர்யம் – உமது தைர்யம்
कस्य अस्ति – கஸ்ய அஸ்தி – வேறு யாவருக்கு உண்டு? (ஒருவருக்கும் இல்லை) உமது பெருமையை யாரால் அடையக் கூடும்?
भ्रश्यद्देवगणम् – ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் – தம் தம் ஸ்தானங்களிலிருந்து நழுவும் தேவக் கூட்டங்களையும்
त्रसन्मुनिगणम् – த்ரஸந்முநிக³ணம் – பயமுடன் இருக்கின்ற ரிஷிக் கூட்டங்களையும்
नश्यत्प्रपञ्चम् – நஶ்யத்ப்ரபஞ்சம் – நசிக்கப்படக் கூடிய பிரபஞ்சங்களையும்
लयम् – லயம் – மஹாப்பிரளய காலத்தில்
आनन्दसान्द्रः – ஆநந்த³ஸாந்த்³ர꞉ – ஆனந்த நிலயமான
भवान् – ப⁴வான் – நீர் மட்டும்
एक एव – ஏக ஏவ – தன்னந்தனியே யிருந்து
निर्भयः – நிர்ப⁴ய꞉ – பயமின்றி
पश्यन् – பஶ்யன் – பார்த்துக்கொண்டு
विहरति – விஹரதி – நடித்து விளையாடுகின்றீரே!
आत्मनः – ஆத்மந꞉ – தங்களுடைய
इयं स्थितिः – இயம்ʼ ஸ்தி²தி꞉ – (எல்லாம் அழிந்தபின் தனிமையில் இருத்தல் என்ற) பெருமையை
अन्यैः – அந்யை꞉ – மற்றவர்களால்
कथं लभ्यते? – கத²ம்ʼ லப்⁴யதே? எப்படி அடையக்கூடும்
ஏ, சர்வசக்திமானே! நீவிர், நாமரூப ரஹித அருவனாய் இருந்தும், ஆன்மகோடிகளின் வினைக்கீடாக, தநுகரண புவன போகங்களைத் தந்து இரக்ஷிப்பான் வேண்டி, சித்ஜடப் பொருள்களனைத்தையும் படைத்துக்காத்துத் துடைக்கும் அவசரம் உருவனாகவும், உருவருவனாகவும் புறத்து மகத்தும் பொருந்தி நின்றும், தேவர் முனிவராதிகளும் திகைத்து, பதைத்து அலறும் ஸர்வ ஸம்ஹார காலத்திலே, தான் மாத்திரம் மிஞ்சியும், தனித்தும், அச்சமின்றியும் நின்று பேரீ மத்தாடியும் விளங்கும் உனது ஒப்புயர்வற்ற அபார ஆற்றலுக்கு, வேறொருவரை ஒப்புவமை கூற முடியுமோ? முடியாது (என்பதாம்).
ஜீவகோடிகளை பரிபாலித்தருள் பாலிக்கன்ற ஹே சம்போ! உனது தன்னிகரற்ற துணிச்சலை என்னவென்று சொல்வது. உனக்கிருக்கும் தைரியம் யாருக்குத் தான் இருக்கிறது. உன் தனிப் பெருமையை என்னவென்று சொல்வது! ப்ரளய காலத்தில் நீ இருக்கும் நிலையை யார்தான் அடைய முடியும்? யாராலுமே முடியாது. ஹே பரமேச்வரா! ப்ரளய காலத்தில் முனிவர்களின் கூட்டங்களும் தேவ ஸமூஹங்களும் தங்கள் தங்கள் பதவிகளை விட்டு அனைவரும் அழிந்துவிடும் காலத்தில் நீ ஒருவனே பயமேதுமின்றி இப்ரபஞ்சம் அழிவதை பார்த்துக் கொண்டு ஆனந்த கனமாக ஆகி மிக களிப்புடன் ப்ரளயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய். இவ்வதிசயமான நிலையை யார் தான் அடைய முடியும்.
ஸ்ரீபரமேச்வரனுடைய தனிப்பெருமையை இங்கு கவி எடுத்துரைக்கிறார். பிரளயகாலத்தில் தேவர்கள் முனிவர்கள் முதலிய அனைவரும் அழிந்துவிடுகின்றனர். ஸ்ரீ பரமேச்வரன் ஒருவரே நிர்ப்பயமாக ஆனந்த தாண்டவ மாடிக்கொண்டிருக்கிறார். இது வேறுயாராலும் செய்யமுடியாத ஓர் ஆச்சரியமான காரியமாகும். சுலோகத்தில் “தேவர்கள் நடுங்கி ஓடுகின்றனர்” என்றும் “முனிவர்கள் பயந்து கொண்டிருக்கின்றனர்” என்றும், கூறப்பட்டதன் கருத்து பிரளயம் ஏற்படுவதற்கு சற்றுமுன் அவர்கள் அம்மாதிரி இருக்கின்றனர் என்பதாம். பிரளயகாலத்தில் அவர்களுடைய ஸ்வரூபமே அழிந்துவிடுகின்றபடியால் அவர்கள் ஓடுகிறார்கள் என்பதும், பயந்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதும் (அப்படியே எடுத்துக் கொள்வது literal meaning) பொருத்தமற்றதாகும்.
ஹே பரமேச்வர! ஸகல வஸ்துக்களும் உம்மிடத்திலிருந்து உத்பத்தி அடைந்து, உம்மால் ரக்ஷிக்கப்பட்டு, உம்மிடத்திலேயே லயத்தை அடைகின்றன என்பதால் நீர் ஒருவரே நித்தியமான வஸ்து என்பது வெளியாகிறது. இவ்வாறு நீர் இருந்துவரும் நிலையை நாங்கள் என்னவென்று சொல்லுவோம்! இந்த ச்லோகத்தைச் சொல்லி பரமேச்வரனை நமஸ்கரிப்பவர்கள் அவர் கருணைக்குப் பாத்திரமாகி அசகாயசூரர்களாக இருந்துகொண்டு செயற்கரிய செயல்களைச் செய்யவல்லார்களாகி கடைசியில் பரசிவத்திலேயே லயிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
पशुपते = हे पशुपति ! शम्भो = हे शम्भु ! तव = आपके, साहसम् = साहस को, किम्
= क्या, ब्रूमः = कहें ?, ईदृशम् = ऐसा, भवद्धैर्यम् = आपका धैर्य, कस्य = किस अन्य का,अस्ति
= है ?, च = और, आत्मनः = अपनी, इयम् = यह, स्थितिः = दृढता, अन्यैः = अन्यं द्वारा, `
कथम् = कैसे, लभ्यते = प्राप्त की जाये ?, भ्रश्यद्देवगणम् = गिरते हए देव समूह को,
त्रसन्मुनिगणम् = त्रस्त होते मुनिसमाज को, नश्यत्प्रपंचम् = नष्ट होते प्रपंच को, (एसे), लयम् =
प्रलय को, पश्यन् = देखते हए, भवान् = आप, एकः = अकेले, एव = ही, आनन्दसान्द्रः =
आनन्दपूर्ण (व), निर्भयः = अभय (रहते हुए) विहरति = विहार करते हैं ।
Dr.T.M.P.Mahadevan
O Lord of Souls! What shall we say about Thy exploits? O Sambhu! Who can possess Thy courage in this manner? How can this status of Thine be obtained by others? Beholding the state of dissolution, when the gods fall (from their positions), the ascetics are seized with fright, and the world gets destroyed, Thou dost revel all alone, without fear, and filled with bliss.
The Saiva texts give this as one of the arguments for the establishing the supremacy of Siva: at the time of dissolution when all beings are destroyed, He alone remains without any mutation. He is the still-point of a turning world. The entire universe passes away. But that makes no difference to Him. It is only when there is another that there is fear for one. Since Siva is the non-dual reality, He is fearless and of the nature of bliss. His happiness is not fugitive and contingent. He is happiness itself. His revelry is not object-conditioned; He is atma-rama.
Swami Tapasyananda
O Lord of living beings! How audacious is Thy conduct? And, pray, who can ever be a match to Thee in courage? And who attains to the state which is Thine? For Thou fearlessly sportest, alone and full of bliss, witnessing the cosmic dissolution when the celestials lose their heavenly positions, the sages feel terror-stricken, and the world systems become reduced to their primal state.
किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव-
द्धैर्यं चेदृशमात्मन: स्थितरियं चान्यै: कथं लभ्यते ।
भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणम् नश्यत्प्रपंचं लयं
पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४ ॥
हे पशुपते ! – Hey ! Pasupaasa vimochaka!
हे शम्भो ! – Hey! Shambho! Hey! Sukarane!
तव – your;
साहसं – works of dheeram;
किं – how;
ब्रूम – we can tell;
ईदृशं – like this;
भवद्धैर्यं – Your courage;
कस्य – To whoever;
अस्ति – stays with;
इयं – this;
आत्मनः – Of one’s own;
स्तितिस्श्च – of one’s abode;
अन्यै: – by others (aliens);
कथं – how;
लभ्यते – is it got;
आनन्दसान्द्रः – filled with Aananda;
भवान् – You;
भ्रश्यद्देवगणं – that of those devagana’s falling from their respective places;
त्रसन्मुनिगणम् – those groups of muni’s afflicted with fear;
नश्यत्प्रपंचं – that which is built-in with the destruction of this prapanjam;
लयं – that period of time known as pralaya;
पश्यन् – the one who is witnessing it;
निर्भय: – with no trace of fear;
एक एव – by being all alone;
विहरति – You are playing!
Commentary
Aum
At the time of MahapraLaya all devas from Brahma onwards fall from their respective positions and meet with their destruction. Even ज्ञानी who have the knowledge of the kaalathrayam are fearful of MahapraLaya.
Hey! Parameswara! You remain a calm witness to this terrible MahapraLaya that brings destruction to the entire universe. In fact when all has been lost into nothing in this mahapraLaya you remain a fearless Ekan and enjoy the bliss of solititude!
Hey! Sarveswara! How would I describe this great feat of courage of yours in the face of immense destruction. This seems to be a play for you and the sruthis proclaim this as follows:
यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति |
यत्प्रप्रयन्त्यमिसविशन्ति || (Taitiriyopnishad)
सर्व खलु इदं ब्रह्मां तज्जलानीति शान्तं उपासीत् (Ribu Geetha)
Everything has its origin in you. You are the protector of everything and in the end everything is absorbed in you. Looking at this dheera saahasam of yours the only conclusion that I come to is that you are the permanent One! Hey! PrabhO! You cannot be said to be non-existent in the past neither would you be non-existent in the future. Who can deny you exist in the present?
विरिञ्चि: पञ्चत्वं व्रजति हरिराप्नोति विरतिं
विनाशं कीनाशो भजति धनदो याति निधनम् /
वितन्द्री माहेन्द्री-विततिरपि संमीलित-दृशा
महासंहारेऽस्मिन् विहरति सति त्वत्पति रसौ || (Soundaryalahari 26)
Brahma is reduced to elements; Hari retires into passivity; Yama himself dies; Kubera meets with his end and Indra and his followers close their eyes in destruction. When such , O! Chaste consort of Siva! is the state of all beings at the time of Mahasamhaara of the universe, thy husband Sadasiva along is sporting!
![]()

5 Responses
Jaya jaya shankara
SRI MAHA PERIAVA SARANAM. JAI MA BHARATH.
34 repeated?
Yes. Due to blog redesign, previous post was lost. So reposted.
a mind stirring content. thanks for sharing