श्रीशिवानन्दलहरी -३३ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -33 – Sri Sivaanandalahari-33

 

श्रीशिवानन्दलहरी -३३

नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः
पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम्।
स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते
का वा मुक्तिरितः कुतो भवति चेत्किं प्रार्थनीयं तदा ॥ ३३ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -33

நாலம்ʼ வா ஸக்ருʼதே³வ தே³வ, ப⁴வதஸ் ஸேவா நதிர்வா நுதி꞉,
பூஜா வா ஸ்மரணம்ʼ, கதா²ஶ்ரவண-மப்யாலோகநம்ʼ மாத்³ருʼஶாம்।
ஸ்வாமிந்-நஸ்தி²ரதே³வதாநுஸரணாயாஸேந கிம்ʼ லப்⁴யதே,
கா வா முக்திரித꞉ᳲ, குதோ ப⁴வதி சேத் கிம்ʼ ப்ரார்த²நீயம்ʼ ததா³ ॥ (33)


  स्वामिन्‌! देव! भवतः सेवा वा नतिः वा नृतिः वा पूजा वा स्मरणं वा कथा-श्रवणम्‌ अपि आलोकनम्‌ अपि सकृद्‌ (त्‌) एव मादृशां न अलं किम्‌? इतः मुक्तिः का वा? कुतः भवति चेत्‌ तदा अस्थिर-देवता+अनुसरण+आयासेन किं लभ्यते? प्रार्थनीयम्‌ किम्?॥



वक्ष्यमाणानां साधनानामन्यतमेन मुक्तिः सुलभेति मत्वाऽन्यदेवतानुसरणे वैयर्थ्यमुपपादयति – नालमिति। हे स्वामिन्‌ सर्वभूताध्यक्ष! देव स्वप्रकाशस्वरूप! भवतस्तव सकृत्‌ सेवा आवृत्त्या विना भजनं करणत्रयसाधारणमिदम्‌। इदमेव विशिष्याह- नतिर्वा नमस्कारो वा, इदं कायिकम्‌। नुतिः स्तोत्रं वा, इदं सेवनं वाचिकम्‌। पूजा वा सपर्या वा, इदं च सर्वसाधारणम्‌। स्मरणं स्मृतिः, इदं सेवनं मानसिकम्‌। कथाश्रवणमपि चरित्रश्रुतिरपि, इदं श्रौत्रम्‌। आलोकनं दर्शनं च, चाक्षुषमेतत्‌। एवमुक्तानामन्यतमं त्वद्भजनं मादृशामस्मद्विधानां मुक्तिप्रापणे नालं वा न पर्याप्तं वा? अन्तिमो वा शब्द काक्वर्थः। आदिमा वाशब्दाः विकल्पार्थाः। इदमेव पर्याप्तमिति पर्यवसितोऽर्थः। इतः इममन्यतममुपायं विहाय प्राप्या मुक्तिः का वा कीदृशी? इति प्रश्नार्थे काकुः, न कापीत्यर्थः। उक्तानां मध्ये कुतोऽप्युपायात्‌ मुक्तिर्भवतीति चेत्‌, तदा अस्थिरदेवतानुसरणायासेन अस्थिरा या देवताः, उपाध्यभिधानप्रयुक्तमस्थिरत्वम्‌, तासामनुसरणं भजनं, तस्य य आयासः तदनुकूलप्रयत्नविशेषः, तेन किं लभ्यते ? ततः प्रार्थनीयं किम्‌ ? न किमपीत्यर्थः। उक्तानां भजनानां मध्ये सकृत्कृतमपि एकमेव भजनं मुक्तिप्रापणे पर्याप्तमिति भावः ॥ ३३ ॥


திரிகரணத் தூய்மையான சிவோபாசனையே சிறந்தது எனக் கூறுகிறார்.


भो स्वामिन् – போ⁴ ஸ்வாமின் – ஹே ஸ்வாமிநாதா!

देव – தே³வ – தேஜோமயமாய் விளங்குபவரே!

मादृशाम् – மாத்³ருʼஶாம் – என் போன்ற எளியோனுக்கு

भवतः – ப⁴வத꞉ – உம்மை

सकृदेव – ஸக்ருʼதே³வ – ஒரே ஒருதரம்

आलोकनम् – ஆலோகநம் – தங்கள் திவ்ய விக்ரஹத்தை தரிசிப்பதாலும்

नतिर्वा – நதிர்வா – நமஸ்கரிப்பதாலும்

नुतिर्वा – நுதிர்வா – துதிப்பதாலும்

पूजा वा – பூஜா வா – பூஜிப்பதாலும்

स्मरणम् वा – ஸ்மரணம் வா – நினைப்பதாலும்

कथाश्रवणमपि – கதா²ஶ்ரவணமபி – உமது கதையைக் கேட்பதாலும், இவற்றுள் எதாவது ஒன்றான

सेवा – ஸேவா – அவ்வித சேவையானது

नालं वा? – நாலம்ʼ வா? – போதாதா ? இவற்றுள் எதாவது ஒன்றைக்கொண்டே நாங்கள் முக்தியடைய முடியாதா?  அவைகளே பேரின்பமாம் முக்தியைக் கொடுக்கக் கூடுமே!

इतः – இத꞉ – இவ்விதங்களில் அடைவதைத் தவிர்த்து

का वा मुक्‍तिः – கா வா முக்தி꞉ – வேறு முக்தியென்று அடையக்கூடிய நிலைமையும் ஒருவனுக்கு உண்டோ ?

कुतो भवति चेत् – குதோ ப⁴வதி சேத் – இவ்வித உபாயங்களில் எதினாலாவது முக்தியடையக் கூடியதாயிருக்கும் போது

अस्थिरदेवतानुसरणायासेन – அஸ்தி²ரதே³வதாநுஸரணாயாஸேந – சாசுவதமற்ற இதர தேவதைகளை உபாசிப்பதில் வீண் பிரயாஸமேயன்றி

किं लभ्यते – கிம்ʼ லப்⁴யதே – வேறு என்ன லாபம் அடையப்படுகிறது?  ஒன்றுமில்லையே.

तदा – ததா³ – அப்படியிருக்க

किं प्रार्थनीयम् – கிம்ʼ ப்ரார்த²நீயம் – மற்ற தேவதைகளை ஆச்ரயித்து அடையக் கூடியது என்ன இருக்கிறது ?  ஒன்றுமில்லை.


மனம், வாக்கு, காயம் என்னும் முக்கரணங்களும் ஒருங்கே ஒத்துச் செய்யும் சிவபூசையொன்றே, பின் தேவரீரைப் பிரியாது இரண்டறக் கலக்கும் பேரானந்த நிலையை அடைவிக்கும் நேர் சாதனமாம் என்பது ஸர்வ சாஸ்த்திரப் பிரசித்தமாயிருக்க, ஒருகாலத்திருந்தொழிபவர்களான ஏனைய தேவர்களைப் பூசிப்பதால் ஆன பயன் என்ன? இல்லை, ஆகவே ஒப்பற்ற ஒருவனாய் ஒளிரும் நின் பூசையை அன்றி, வேறுத் தேவர் பூசையை என் மெய்ம்மறந்த நிலையிலும் விரும்பேன் (என்பதாம்).


ஹே அனாதரக்ஷக! தேவ தேவ! த்ரிகரணங்களையும்‌ உனக்கு அர்ப்பணித்து உன்னை பக்தியோடு நமஸ்கரித்தால்‌ அல்லது உனது ஸ்தோத்ரங்களை பாராயணம்‌ செய்‌தால்‌, அல்லது உனது புண்ய கதையை கேட்பதினால்‌ பரிவாரங்‌களுடன்‌ ஸாம்பபரமேச்வரனாக விதிப்படி பூஜை செய்வதினால்‌ அல்லது உனது மங்கள விக்ரஹத்தை ஒரு தடவையாவது கண்ணாறக்‌ கண்டு உனது சேவையை செய்வதினால்‌ என்‌ போன்றவர்களுக்கு போதாதா? அது முக்தியைக் கொடுக்காதா? நிச்சயமாக அது முக்தியைக் கொடுக்கும்‌. இந்த வழிகளல்லாமல்‌ மோக்ஷத்திற்கு வேறு ஒரு உபாயம்‌ உண்டா? இல்லவே இல்லை. மேலே சொன்ன வழிகளையனுஸரித்து வாழ்வதால்‌ முக்தி கிடைக்கிறது என்றிருக்குமேயனால்‌, என்றோ ஒரு நாள்‌ அழியப்‌ போகின்ற மற்ற தேவர்களை உபாஸித்து, த்ரிகரணங்களை கஷ்டப்படுத்துவதினால்‌ என்ன ப்ரயோஜனம்‌? என்ன லாபம்‌? ஒரு பயனுமில்லை. அந்த தேவதைகளை ப்ரார்த்‌தித்து, த்ருப்தி செய்து மனிதன்‌ பெறுவதற்கு ஏன்ன இருக்கிறது, ஒன்‌றுமேயில்லை.


மற்ற தேவதைகளை உபாஸிப்பதால் முக்தியைப் பெறமுடியாது என்றால் அப்பொழுது அவர்களிடம் வேண்டிக் கொள்ளவேண்டியது ஒன்றுமில்லை. ஆதலால் ஏ பரமேச்வரா! தங்களை வணங்குதல் என்ற “காயிகஸேவை”, தங்களைபற்றிப் பாடுதல் என்றும் “வாசிகஸேவை”, தங்களை தியானம்செய்தல் என்ற “மானசிகஸேவை” முதலியவற்றுள் ஏதாவதொன்றை ஒருதடவை செய்த மாத்திரத்தில் முக்தி ஸுலபமாகக் கிட்டிவிடுமாதலால் அது ஒன்றே போதுமே, மற்றவை எதற்காக?

ஸஹஸ்ரம் வர்த்தந்தே, யதாபுத்திசுக்தௌ என்று தொடங்கின இரண்டு முன் ச்லோகங்களில் பரமேச்வரன்தான் உத்தமோத்தமமான உபாஸ்யதெய்வம் என்று நிர்த்தாரணம் செய்தார்கள். இந்த ச்லோகத்திலும் அதே தத்துவத்தை, அதாவது பரமேச்வரன் க்ஷிப்ரபிரஸாதீ, ஆசுதோஷீ, ஸௌலப்யமானவர் என்பதை வலியுறுத்துகிறார்கள். இந்த ச்லோகத்தை சொல்லி நமஸ்கரிப்பவர்கள் பரமேச்வரனின் ப்ரஸாதத்திற்குப் பாத்திரமாவாகள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.


देव = हे महादेव!,
स्वामिन्‌ = हे मालिक !,
भवतः = आपकी,
सेवा = सेवा,
नतिः = प्रणाम,
वा = या,
नुतिः = स्तवन,
पूजा = पूजन,
स्मरणम्‌ = ध्यान,
कथाश्रवणम्‌ = कथा सुनना,
वा = या,
आलोकनम्‌ = दर्शन (यदि),
सकृत्‌ = एक बार,
एव = भी (हो जाये तो),
मादृशाम्‌ = मुझ जैसों के लिये,
वा = क्या,
अलम्‌ = पर्याप्त,
न = नहीं है ?,
अस्थिरदेवतानुसरणायासेन = वदल जाने वाले देवताओं के पीछे घूमने के प्रयास से,
किम्‌ = क्या,
लभ्यते = मिलता है ?,
का = कौन सी,
मुक्तिः = मुक्ति,
वा = ही (मिलती है) ?,
चेत्‌ = यदि (कहो कि),
इतः = इस से (उक्त प्रयासे),
कुतः = क्योंकर (मुक्ति),
भवति = होगी ?
तदा = तो (और),
प्रार्थनीयम्‌ = चाहने योग्य,
किम्‌ = है क्या (जिसके लिये मैं आयास करूं जबकि एक वार शिवपूजनादि से ही मुक्ति मुझे अनायाससिद्ध है) ?

 


Dr.T.M.P.Mahadevan

O Master! O God! Is it not enough for people like me to serve Thee ven once through making obeisance, singing praise, worship, meditation, listening to Thy story, or having a sight of Thee? Other than thus, how is release possible? This being so, what is to be gained by following, with effort, gods who are impermanent? And why should they be prayed to?

The devotee is convinced that nothing else is requied for gaining release than the grace of Siva. Even a single act of worship offered to Him in all sincerity is enough. Why go to the other gods and godlings? What independent power do they possess? Any effort to court them will only end in futility and frustration.

Swami Tapasyananda

O Lord! Thou Master of all! For the attainment of liberation, is it not enough for men like me to serve Thee even once by prostration, by praise, by listening to divine stories, by worship, by contemplation, or by visualisation? By what else but these can liberation be achieved? If, however it is attainable by any of these, what is there to be gained by the arduous worship of ephemeral deities?


नालं वा सकृदेव देव भवत: सेवा नतिर्वा नुति:
पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम् ।
स्वामिन्‍नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते
का वा मुक्‍तिरित: कुतो भवति चेत्किं प्रार्थनीयं तदा ॥ ३३ ॥

हे स्वामिन्  – Hey! ParamporuLe!

हे देव – Hey! Jyotiswaroopa!

भवत: – that which is done by me towards you;

नतिर्वा – either namskaram

नुति: – or stuti;

पूजा वा – or pooja;

स्मरणं – or dhyaana;

कथाश्रवणम् अपि – or listening to the stories;

आलोहनं – or even looking at your moorthy;

सकृत् – once;

सेवा – doing service atleast;

मादृशाम् – To those like me;

नालं वा – Is it not enough to attain Mukthi;

इतः  – these tricks not result in the अवलम्ब or fructification’

मुक्ति – Moksha;

का वा – how can it result?

 कुत: – By any of these tricks’

भवति चेत् – If Moksha can result;

तदा – at that time;

अस्थिरदेवतानुसरणायासेन – by the pain and burden of the upaasana of anitya devatas;

किं – Which purushaartha;

लभ्यते – is attained from them;

प्रार्थनीयं – to be prayed from them;

किं – What is there (nothing is the answer).

Commentary

Aum

Hey!Parameswara! You are the lord of Mahakailaash. You give mangalam to the entire universe. You keep doing indescribably wonderous leelas! When your kaaruNyam is so vast, is it not enough if deenas like me do a saashtaanga namaskaram to attain mOksha? Or is not the chanting of the Vedic manthras that brings out the mahima of you enough? Or is it not enough if I repeat the stuthis of great rishis? Or is it not enough if I sing ThEvaaram or Thiruvaachagam? Or is it not enough to just do the smaraNam of your manthra swaroopam in my heart? Or is it not enough to do sravaNam of Saiva puraaNaas with great devotion? Or is it not enough if I merely have the dharshan of Siva Lingam on Sivaraathri day? Or it is said “एक्विल्वंदानतोSपितोषिणे नमः शिवाय ‘, so is it not enough to do arpaNam of a BilwadhaLam at your lotus feet?

Hey! SarvEswara! when I can get Moksham by observing any one of the above why would I do Bajanam of anya devathas who have their abhimaanam in their respective lokas with which they have become inseparable, knowing full well that all lokas are going to be lost in mahapraLaya? It is so said in Bhagavat Geetha: ‘आब्रम्हभुवनाल्लोका: पुनरावर्तिनोर्ज्जुन ‘.

Brahma Sutra clearly says: फलमत उपपत्तेः pointing out to you as the karmaphala daata.

In Bhagavat Geetha it is said: ‘स्वपमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् ‘, so if a person performs any one of the above worships even once, he will be relieved of the samsaara bhayam and he is sure to attain Nithya MOksha Sukham.

புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.
(திருமந்திரம்)

Aum Namasivaaya!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading