(Published every Monday and Thursday)
श्रीशिवानन्दलहरी -२7
करस्थे हेमाद्रौ गिरिश निकटस्थे धनपतौ
गृहस्थे स्वर्भूजामरसुरभिचिन्तामणिगणे।
शिरस्स्थे शीतांशौ चरणयुगलस्थेऽखिलशुभे
कमर्थं दास्येऽहं भवतु भवदर्थं मम मनः ॥ २७ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -27
கரஸ்தே² ஹேமாத்³ரௌ, கி³ரிஶ நிகடஸ்தே² த⁴நபதௌ,
க்³ருʼஹஸ்தே² ஸ்வர்பூ⁴ஜா(அ)மர, ஸுரபி⁴ சிந்தாமணிக³ணே।
ஶிரஸ்தே² ஶீதாம்ʼஶௌ, சரணயுக³லஸ்தே²(அ)கி²லஶுபே⁴,
கமர்த²ம்ʼ தா³ஸ்யே(அ)ஹம்ʼ, ப⁴வது ப⁴வத³ர்த²ம்ʼ மம மந꞉॥(27)
गिरिश! हेम+अद्री कर-स्थे धन-पतौ निकट-स्थे स्वः+भू-ज+अमर-सुरभि-चिन्तामणि-गणे गृहस्थे शीत+अंशौ कर-स्थे अखिल-शुभे चरण-युगल-स्थे अहं कम् अर्थं दास्ये? मम मनः भवद्(त्)+अर्थं भवतु॥
वक्ष्यमाणरीत्या परमेश्वरमुद्दिश्य सिद्धत्वेन हेतुना दातव्यवस्तूनामयोगात् स्वमनसः तदधीनतां प्रार्थयते–करस्थ इति। भो गिरिश! शिव! हेमाद्रौ स्वर्णगिरौ करस्थे करतलस्थे सति। तत्करस्थत्वं च मेरुकोदण्डत्वादिति भावः। धनपतौ राजराजे निकटस्थे समीपस्थे सति। समीपस्थत्वं च तस्य तत्सखत्वादिति भावः। स्वर्भूजामरसुरभिचिन्तामणिगणे स्वर्भूजाः अमरतरवः, अमरसुरभिः कामधेनुः, चिन्ता- मणयः चिन्तितमात्रदायिनो मणयः, तेषां गणः समूहः तस्मिन्, गृहस्थे सति। ईश्वरस्यानन्तशक्तित्वात् तेषां तद्विधेयत्वेन तद्गृहस्थत्वं संभवतीति भावः। शीतांशौ चन्द्रे शिरस्थे सति शिरसि स्थिते सति, चन्द्र शेखरत्वप्रसिद्धेरिति भावः अखिलशुभे अखण्डमङ्गले चरणयुगलस्थे सति पादद्वन्द्वगते सति। तच्छरणानां सर्वमङ्गलप्रसिद्धेरिति भावः।पूर्वोक्तभ्यो हेतुभ्यः केनापि वस्तूपचारेण तव प्रयोजनाभावात् कं कीदृग्विधमर्थं पदार्थं भवत्तोषकरमहं दास्ये दास्यामि ? अतो हेतोः मम मनः त्वदर्थं त्वच्छेषं भवतु भूयात्। सर्वार्थसिद्धत्वेन इतरानपेक्षणाद् हेतोः तव कर्तव्यमुपचारमपश्यन्नहं केवलं मनसः त्वदायत्ततां प्रार्थयामीति भावः ॥२७॥
சிவார்பணத்திற்கு உரிய பொருள் மனம் ஒன்றேயாகும் என்று, மனவர்ப்பணப் பெருமையை வழுத்துகிறார்.
हे गिरिश – ஹே கி³ரிஶ – ஹே கிரிச! (அருமையென்று சொல்லக்கூடிய எந்த வஸ்துவை உமக்கு அடியேன் அர்ப்பணம் செய்யக்கூடும்?)
हेमाद्रौ – ஹேமாத்³ரௌ – தங்கமயமான மேருபர்வதமோ
करस्थे – கரஸ்தே² – வில்லாக உமது கையில் இருக்கிறது;
धनपतौ – த⁴நபதௌ – செல்வங்களுக்கு அதிபதியான குபேரனோ
निकटस्थे – நிகடஸ்தே² – உமது பக்கத்திலேயே காத்துக்கொண்டிருக்கிறான்;
स्वर्भूजामरसुरभिचिन्तामणिगणे – ஸ்வர்பூ⁴ஜாமரஸுரபி⁴சிந்தாமணிக³ணே – தேவலோகத்திலுள்ள கல்ப விருக்ஷங்கள், காமதேனு, சிந்தாமணி முதலான கூட்டங்கள் எல்லாம்
गृहस्थे – க்³ருʼஹஸ்தே² – உமது இருப்பிடத்தில் உள்ளன;
शीतांशौ – ஶீதாம்ʼஶௌ – குளிர்ச்சியளிக்கவல்ல சந்திரன்
शिरस्थे – ஶிரஸ்தே² – சிரஸில் இருக்கிறான்
अखिलशुभे – அகி²லஶுபே⁴ – ஸர்வ மங்கலத்தையும் செய்யவல்ல வன்மை
चरणयुगलस्थे – சரணயுக³லஸ்தே² – உமது திருப்பாதங்களுக்கிருக்கின்றது.
कमर्थम् – கமர்த²ம் – (ஆகையால், உமது வசம் இல்லாத) எந்தப் பொருளை
अहम् – அஹம் – யான்
दास्ये – தா³ஸ்யே – உம்மிடம் அர்ப்பணம் செய்ய வல்லேன்!
मम मनः – மம மந꞉ – (ஆயினும் உம்மிடமில்லாததும் என்னிடத்தில் மட்டும் இருக்கும்படியான குற்றம் பொருந்திய) எனது மனது இருக்கிறது.
भवदर्थम् – ப⁴வத³ர்த²ம் – (அந்த மனது) தங்களுக்காக (தங்களிடம் ஈடுபட்டதாக)
भवतु – ப⁴வது – இருக்கட்டும். (அதை தேவரீர் பெற்றுக்கொண்டு என்னை ஈடேற்றுவீர்).
ஹே பரிபூரணனே! தேவரீரது திருவுளங் களிக்க வளிக்கும் பொருள் யாது என்னிடத்துள்ளது? சிந்தித்த வண்ணமே சீக்கிரத்தளிக்கும் சிந்தாமணி, கற்பகம், காமதேனு முதலிய பரம ஐச்வரியங்களும் உமதிடத்திருக்கின்றது; அன்றியும், பொன்மயமான மஹா மேருகிரியை வில்லாக திருக்கரத்திலேந்தியும், நவநிதியாளனாகிய குபேரனை நின்னருகில் நின்று குற்றேவல் புரியும் பணியாளனாகவும், அழகிய வெண்ணிற மூன்றாம் பிறைச்சந்திரனைச் சிவந்த சடைமுடியில் தரித்தும், அடியார்கள் விரும்பும் வண்ணம் உதவும் ஆற்றலை திருப்பாதத் தேற்றும் விளங்குகின்றீர். உம் சிந்தையுவக்க, யாது செய்ய முடியும்? ஆயினும், உம்மிடமிராத என் மனத்தை சிவார்ப்பணமாக உம் திருவடிக்கே சமர்ப்பிக்கின்றேன், ஆதலின், புந்திமகிழ்ந்தேற்றுக் கிருபை புரிவீராக (என்பதாம்).
ஹே பரமேச்வர! மேருமலை தங்க மயமானது; அதை வில்லாக வளைத்து உன் கையில் தாங்கி த்ரிபுரஸம்ஹாரம் செய்தாய். அப்படிப்பட்ட தங்க மயமான மலையே உனது கையில் இருக்கிற போது நான் உனக்கு எதை அளிப்பேன். பணத்திற்கு அதிபதியான குபேரன் உனது பக்தன், அவன் உன் பக்தனாகையினால் உனது பக்கத்திலேயே இருக்கிறான். ஆகையால் பணத்தை நான் உனக்கு அளித்தும் ப்ரயோஜனமில்லை. விரும்பியவைகளை அளிக்க கூடிய தேவலோகத்து கற்பகதரு, காமதேனு, சிந்தாமணி முதலியவைகளும் உனக்கு வசமாக உனது வீட்டிலேயே உள்ளது. உனது இரு காலடிகளோ ஸர்வமங்களங்களையும் அளிக்க வல்லவை: மேலும் ஹ்ருதயத்திற்கு பரமசுகத்தை அளிக்கிற குளிர்ந்த சந்திரக்கலை உனது ஜடா முடியில் இருக்கிறது. இவ்விதம் ஸகல விதமான ஐச்வர்ய ஸம்பன்னனாக நீ இருக்கும் பொழுது உனக்கு நான் எதை அளிப்பது. எதை அளித்தாலும் அது உனக்கு ப்ரயோஜனப்படாது. ஆகையால் எனது மனதை உனக்கு அளிக்கிறேன், ஏற்றுக்கொள்.
ஒருவரிடம் இல்லாத பொருளை அளித்தால் அவருக்கு திருப்தி உண்டாகக்கூடும். ஸ்ரீ பரமேச்வரனிடம் எல்லாவித பொருளும் இருக்கிறபடியால் அவரிடமில்லாத தன் மனதை அவருக்கு அர்ப்பணம் செய்வதாகக் கவி இங்கு கூறுகிறார். திரிபுரஸம்ஹார காலத்தில் மேருமலையை வில்லாகக் கையில் தரித்தார். அம்மலை முழுவதும் ஒரே பொன்மயம் எனக் கூறப்படுகிறது. ஆதலால் அவருக்கு பவுன் தேவையில்லை. எல்லாவித தனங்களுக்கும் அதிபதியான குபேரன் ஈச்வரனிடம் மிகவும் ப்ரீதியுள்ள பக்தனானதால் அவர் சமீபத்திலே எப்பொழுதும் வசிக்கிறான். ஆதலால் மற்ற எவ்வித பொருள்களிலும் அவருக்கு விருப்பமிராது. கல்பவிருக்ஷம், காமதேனு, சிந்தாமணி என்ற ரத்தினம் இவையெல்லாம் ஸ்ரீ பரமேச்வரனுக்கு வசமாகவே இருக்கின்றன. சிரஸில் சந்திரக்கலையிருப்பதால் சுகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கும் அவருக்கு நாம் செய்யும் எவ்வித உபச்சாரங்களாலும் பயனில்லை. மேலும் ஸ்ரீ பரமேச்வரனுடைய சரணங்களை பூஜித்தால் ஒருவனுக்கு ஸமஸ்த மங்களங்களும் சித்திக்கின்றன. இதைத்தான் अखिलशुभे – அகி²லஶுபே⁴ என்ற பதம் தெரிவிக்கின்றது., அதாவது பரமேச்வரனுடைய பாத கமலங்கள்தான் அனைத்துலகங்களுக்கும் மங்களத்தை அளித்துக்கொண்டிருகின்றது. ஆதலால் அவ்விஷயத்திலும் நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஆதலால் அவரிடமில்லாத தன் மனதையே அர்ப்பணம் செய்வதாகக் கூறுகிறார். அதாவது தன் மனது எப்பொழுதும் அவருடைய ஸ்வரூபத்திலேயே ஈடுபட்டிருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறார்.
பரமேச்வரன் பக்தர்களின் மனோபாவத்தை மட்டுமே கிரஹிப்பவனாக இருக்கிறார். பக்தியுடன் ஒரு பில்வதளத்தை பரமேச்வரன் பாதத்தில் அர்ப்பணம் செய்துவிட்டால், அவனுக்கு மோக்ஷத்தையே அளித்து விடுகிறார். அவருக்கு நாம் எந்த வஸ்துவைத் தந்து திருப்தி செய்யமுடியும்?
भवतु भवदर्थम् मम मनः – ப⁴வது ப⁴வத³ர்த²ம் மம மந꞉ – என்ற பதங்களின் தத்வார்த்தம் என்னவென்றால், சிவராஜயோகம்தான் மேலானது; பரப்ரும்மத்தை ஆத்மஸ்வரூபத்திற்கு வேறுபடுத்தாமல், எப்போதும் சிவோஹம் என்று அநுஸந்தானம் செய்வதுதான் சிவராஜயோகம். இதற்கு நிர்மலமானதும், உன்னை அடையவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் கூடிய மனதுதான் மிகவும் முக்கியம். இந்த எண்ணத்தோடு மனதை லயிக்க வைத்தால், அதன்மூலம் த்வைதமாகத் தோன்றுகின்ற இந்த ஜீவாத்மா, பரப்ரும்மத்தில் லயிக்கும். இதனால் பரமேச்வரனை அடைய, பாஹ்யமான ஒரு பதார்த்தமும் ப்ரயோஜனப்படாதென்றும், சிவோஹம் என்ற பாவனையோடு கூடிய நிர்மலமான மனதொன்றுதான் வேண்டும் என்று வெளியாகிறது.
இந்த ச்லோகத்தை சொல்லி நமஸ்கரிப்பவர்கள், பரமேச்வரனிடம் தம் மனதை அர்ப்பணம் செய்து சிவோஹம் என்று இருந்துவருவார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே சிறந்த ப்ரமாணமாகும்.
क्या कोई इस हिंदी भाग को फॉलो कर रहे हैं? अगर बहुत से लोग नहीं हैं, तो मैं हिंदी में पोस्ट करना बंद कर सकता हूँ। कृपया अपनी प्रतिक्रिया दें। सबसे नीचे तक स्क्रॉल करें और अपनी टिप्पणियाँ पोस्ट करें।
गिरिश = हे पर्वतवासी !,
हेमाद्रौ = स्वर्णमय मेर के,
करस्थे = हाथ में स्थित होने पर,
धनपतौ = धनपति कुबेर के,
निकटस्थे = (सेवकरूप से) निकट स्थित होने पर,
स्वर्भूजामरसुररभिचिन्तामणिगणे = स्वर्ग की भूमि में उगने वाले दिव्य वृक्षों, दैव-गाय ओौर यथेष्टप्रद मणिसमूहों के,
गृहस्थे = घर में स्थित होने पर,
शीतांशौ = चन्द्रमा के,
शिरस्थे = सिर पर स्थित होने पर,
अखिलशुभे = समस्त शुभ वस्तुओं के,
चरणयुगलस्थे = दोनों चरणों में स्थित होने पर,
भवदर्थम् = आपके लिये,
कम् = किस,
अर्थम् = वस्तु को,
अहम् = मैं,
दास्ये = दूँ?,
[भवदर्थम् = आपके लिये],
मम = मेरा,
मनः = मन,
भवतु = होवे ।
Dr.T.M.P.Mahadevan
O Mountain-Dweller! When the golden mountain (Meru) is in Thy hands (as bow), when the lord of wealth (Kubera) stays near Thee (as Thy servant), when in Thy household are the heavenly trees, the divine cow, and whish-granting gems, when the cool moon is on Thy head, and when everything that is auspicious is at Thy Feet, what tribute can I give Thee? May my mind be dedicated to Thee!
There is nothing of value that we can give to Siva; for He is the source of all value. What has He not that we could offer Him? All auspiciousness flows from His feet. He does not require our wealth or material offerings. These are themselves the gifts of His grace. What we should offer to Him is our mind. Let our wills be dedicated to Him. Let our passions run to Him. Let our thoughts dwell on Him.
Swami Tapasyananda
Since Thou holdest the golden mountain (Meru) in Thy hand (as the bow); since Kubera, the lord of wealth, remains close to Thee; since the wish-yielding tree of heaven Kalpataru, the celestial cow of plenty Kamadhenu, and the magic gem that confers all desires (Chintamani) are in Thy household; since the moon resides on Thy head; and since all auspiciousness abides at Thy feet – what object of value can I possibly offer unto Thre? Therefore, O Thou residen of the mountain, let my mind be Thine (as the only thing that can be dedicated to Thee).
करस्थे हेमाद्रौ गिरिश निकिटस्थे धनपतौ
गृहस्थे स्वर्भूजामरसुरभिचिन्तामणिगणे ।
शिर:स्थे शीतांशौ चरणयुगलस्थेऽखिलशुभे
कमर्थं दास्येऽहं भवतु भवदर्थं मम मन: ॥ २७ ॥
हे गिरिश – One who lives in Himayagiri
हेमाद्रौ – that swarNa mountain (Meru parvatham);
करस्थे – when it happens to be the bow in your hand;
धनपतौ – that Kubera who is the lord of all aiswaryas;
निकिटस्थे – keeps himself near to you;
स्वर्भूजामरसुरभिचिन्तामणिगणे – the gatherings of all kalpa vrukshaas, kaamadenus, that ratna that gives sarvaabheeshtam (all desires);
गृहस्थे – all happens to be in your house;
शीतांशौ – Chandra with his cool rays;
शिरस्थे – being adorned in your head;
अखिलशुभे – sarva mangalam;
चरणयुगलस्थे – remain with you in your two feet;
अहं – me;
कम् – which;
अर्थं – which meaningful vastu;
दास्ये – I can give;
अतः – therefore;
मम – my;
मन: – mind;
भवदर्थं – be parted to you;
भवतु – so is my wish.
Commentary
Aum
Hey! Parameswara! How can I describe your Glories? As the sruthi would say, ‘यस्मात्पर नाSपरमस्ति किंचित् ’ it is not possible to determine your Vaibhavam. The smrithi says: ‘न त्वत्समोSस्ति अभ्यधिकः कुतोन्यः ’ You are the ParamporuL par excellence! Hey! Gireesaa! When you set out to destroy the thripura you held in your hand the golden mount Meru as a bow. Also Kubera the lord of riches is near you at your disposal. In your house you have the gift giving tree kalpaga vriksham, the desire fulfilling cow Kaamadhenu and the wonderous jewel Chinthaamani that showers the object of pleasures on the seekers. You are wearing the crescent moon of soft cool rays, on your head. People therefore call you Chandrasekharan. (My many pranaams to ParamaachaaryaaL, thinking of whom has brought साफल्यम् to my janma). Adding to all these are your charaNaaravindham that brings sakala mangalam. So you are called ‘अखिलशुभे’.
Therefore, ‘परिपूर्णस्य नित्यस्य मर्त्यैः किं क्रियते नरैः ’. If I give you a bilvadhaLam you give me Moksham in return! You are truly ‘ आशुतोष’! You are the greatest bestower!
You are अवाप्त समस्तकामन् (He who has attained all desires) and what can a nara like me give you? ‘पूजकानां मनोभावः देवेनग्रुह्यते स्फुटम् ’. Hey! PrabhO! You seem to be very fond of bhakthaas’ manObhaavam. Therefore I submit to you my mind that is pure yet craving to reach you. Please do accept it.
When AachaaryaaL says in this sloka ‘भवतु भवदर्थं मम मनः ’ we should realize it thathwaartham. In this sloka Jagat Guru emphasizes the importance of Raja Yoga. The meaning of yoga is to do anusandhaanam of ‘Sivoham’ as parabrahman that is non-different from one’s own aathma. In doing the anusandhaanam of Raja Yoga mind is the most important one. The mind has to have the layam of Brahmaivaaham by which jeevaathma that is seen as different from Parabrahmam gets its layam.
‘योगं जीवात्मनोरैक्यं प्राहुः योगविचक्षणाः ’ says the saasthra. In this, on attaining Parameswara who is अवाप्त समस्तकामन् no object would be useful except the pure mind that has the ‘Sivoham’ bhaavana.
எல்லா முனடிமையே எல்லா முனுடைமையே
எல்லா முனுடைய செயலே.
(தாயுமானவர்)
Sivoham, Sivoham
![]()