.
(Published every Monday and Thursday)
श्रीशिवानन्दलहरी -२५
स्तवैर्ब्रह्मादीनां जयजयवचोभिर्नियमिनां
गणानां केलीभिर्मदकलमहोक्षस्य ककुदि।
स्थितं नीलग्रीवं त्रिणयनमुमाश्लिष्टवपुषं
कदा त्वां पश्येयं करधृतमृगं खण्डपरशुम् ॥ २५ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -25
ஸ்தவைர் ப்³ரஹ்மாதீ³நாம்ʼ, ஜயஜய வசோபி⁴ர் நியமிநாம்ʼ,
க³ணாநாம்ʼ கேலீபி⁴ர், மத³கல மஹோக்ஷஸ்ய ககுதி³।
ஸ்தி²தம்ʼ நீலக்³ரீவம்ʼ த்ரிணயந முமாஶ்லிஷ்ட வபுஷம்ʼ,
கதா³ த்வாம்ʼ பஶ்யேயம்ʼ, கரத்⁴ருʼத -ம்ருக³ம், க²ண்ட³பரஶும் ॥ (25)
ब्रह्मा आदीनां स्तवैः नियमिनां जय-जय-वचोभिः गणानां केलीभिः मद-कलमहा+उक्षस्य ककुदि स्थितं नील-ग्रीवं त्रि+नयनम् उमा+आश्लिष्ट-वपुषं कर-धृतमृगं खण्ड-परशुं त्वां कदा पश्येयम्। ॥
प्रकारान्तरेण अवस्थितं तमेव स्तौति- स्तवैरिति। ब्रह्मादीनां ब्रह्मैवादियेषां तेषां सर्वेषां देवानामित्यर्थः। स्तवैः स्तोत्रैः स्तुतिग्रन्थैः स्तुतं, नियमिनां वेदोक्तनियमपरिपालकानाम् ऋषीणाम् जयजयवचोभिः जय जयेति शब्दैः प्रोत्साहितं, गणानां नन्दिभृङ्गिचण्डीश्वरादिप्रमथगणानां – केलीभिः तौर्यत्रिकादिविलासैः प्रमोदितं, मदकलमहोक्षस्य मदेन हर्षातिशयेन कलः मधुरः महांश्चासावुक्षा च मदकलमहोक्षः, अचतुरेत्यादिना निपातनाददन्तत्वम् तस्य ककुदि पिण्डाकारमांसोपलक्षितप्रदेशे पृष्ठस्थान इति यावत् स्थितम् आसेदिवांसम्। नीलग्रीवं नीलः ग्रीवा कण्ठः यस्य तं नीलग्रीवं त्रिनयनं त्रीणि नयनानि यस्य तम्, उमाश्लिष्टवपुषम् उमया पार्वत्या आश्लिष्टम् आलिङ्गितं वपुः देहः यस्य तम्, करधृतमृगं करेण धृतः गृहीतः मृगः कुरङ्गः येन तम्, खण्डपरशुं खण्डः अर्दितः परशुः कुठारो यस्य तमेतादृशगुणविशिष्टं त्वामहं कदा कस्मिन् काले पश्येयं साक्षात्कुर्याम्। स्पष्टार्थः ॥२५॥
பரமனது ரிஷபாரூட சேவையை வியந்து கூறுகின்றார்.
ब्रह्मादीनाम् – ப்³ரஹ்மாதீ³நாம் – பிரமன் முதலான தேவர்களது
स्तवैः – ஸ்தவை꞉ – ஸ்துதிகளோடும்
नियमिनाम् – நியமிநாம் – வேதங்களில் கூறப்பட்ட நியமங்களை பரிபாலனம் செய்கின்ற ரிஷிகளது
जयजयवचोभिः – ஜயஜயவசோபி⁴꞉ – ஜயஜய என்ற வார்த்தைகளோடும்
गणानाम् – க³ணாநாம் – நந்தி, பிருங்கி, சண்டி முதலான பிரமத கணங்களது
केलीभिः – கேலீபி⁴꞉ – பலவிதமான பாடல் ஆடல்களோடும் சூழப்பெற்று
मदकलमहोक्षस्य – மத³கலமஹோக்ஷஸ்ய – கொழுத்துப் பெரிதாயுள்ள நந்தியினது
ककुदि – ககுதி³ – பிடரியின் மீது
स्थितम् – ஸ்தி²தம் – வீற்றிருக்கும்
नीलग्रीवम् – நீலக்³ரீவம் – நீலகண்டத்தையும்,
त्रिणयनम् – த்ரிணயநம் – முக்கண்களையும்,
उमाश्लिष्टवपुषम् – உமாஶ்லிஷ்டவபுஷம் – ஸ்ரீ பார்வதி தேவியால் ஸதா ஆலிங்கனம் செய்யப்பட்ட சரீரத்தையும்
करधृतमृगम् खण्डपरशुम् – கரத்⁴ருʼதம்ருʼக³ம் க²ண்ட³பரஶும் – மான், மழு, பரசு இவைகளைத் தரித்த கைகளையும் உடைய
त्वाम् – த்வாம் – உம்மை
कदा – கதா³ – எப்போது
पश्येयम् – பஶ்யேயம் – நான் தரிசித்து ஆனந்தமடைவேன்!
ஹே மகாதேவா! தேவர், முனிவர், சிவகணங்கள் பலரும் போற்றி வாழ்த்தெடுப்ப, திரிமூர்த்திகளும் தொண்டு செய்து துதிக்க, சதுர்த்தப்பொருளாய் நின்று, சோம சூர்யாக்கினியாகிய திரிநேத்திரங்களும், கறைக்கண்டமும், மான் மழுவேந்திய திருக்கரங்களும், வாமபாகத்தம்பிகையும் பிரகாசிக்க, தரும வடிவாகிய வெண்ணிற விடையின்மீது, திருக்கயிலையங்கிரியில் விளங்கும் ஒப்புயர்வற்ற தமது திருக்கோலத்தைக் கண்டு, தரிசித்து, கடைத்தேற கிருபை புரிவாயாக (என்பதாம்).
ஹே பரமேச்வர! ப்ரஹ்மா முதலிய தேவர்கள் உன்னை ஸ்துதித்துக்கொண்டும், வேதங்களில் விதிக்கப்பட்டவைகளை அனுஷ்டிக்கின்ற முனிச்ரேஷ்டர்கள் ஐய ஐய என உன் ஸந்நிதியில் ஜய கோஷம் எழுப்பிக் கொண்டும் நந்தி, ப்ருங்கி, சண்டீச்வரன் முதலியோர் நாட்டியம் கீதம் முதலிய கேளிக்கைகளால் உன்னை ஆனந்தப்படுத்திக் கொண்டும் இருக்கின்றவர்களாய் கொழுத்த திமிலையுடைய விருஷபத்தின் முதுகில் உமயவள் இடது பக்கத்தில் உன்னை தழுவிக்கொண்டு வீற்றிருக்க, மூன்று கண்களையுடைய நீ கரங்களில் தாங்கிய மான், மழு இவைகளுடன் பாற்கடலைக் கடைந்த சமயத்தில் அதிலிருந்து. வெளிப் பட்ட காலகூட விஷத்தை உட்கொண்டு, இவ்வுலகைக் காத்து அதனால் உன் கழுத்து நீல நிறமாக ஆகி, நீலகண்டனாய் விளங்கிக் கொண்டிருக்கின்ற உனது கோலத்தை நான் எப்பொழுது காண்பேன்.
பிரும்மாதி தேவர்கள் ஒருபுறம் தோத்திரம் செய்ய, ரிஷிகள் எல்லோரும் ஜெயகோஷம் பண்ண, கணங்கள் நர்த்தனம் செய்ய, மிகுந்த ஸந்தோஷத்துடன் விருஷபாரூடரான முக்கண்ணனைக் கண்டுகளிக்கும் காலம் எப்பொழுதோ, என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் பகவத்பாதாள்.
இந்த ச்லோகத்தில் பரமேச்வரனைக் குறித்து ஆச்சார்யாள், நீலக்³ரீவம், த்ரிணயநம், உமாஶ்லிஷ்டவபுஷம், கரத்⁴ருʼதம்ருʼக³ம், க²ண்ட³பரஶும் என்ற ஐந்துவிதமான ஸ்வரூப வர்ணனைகளைச் செய்கின்றார்கள். அமிர்த மதனத்தின்போது வெளிப்பட்ட அதிகோரமான ஆலகால விஷத்தை விளையாட்டாக விழுங்காமலும் உமிழாமலும் தன் கண்டத்திலே தரித்து அண்ட சராசரங்களையும் ரக்ஷித்த பரமேச்வரனுடைய இந்த லீலையை ஸ்மரணம் செய்தலே ஜீவர்களை ஸகலவிதமான கஷ்டங்களிலிருந்து விடுபடச் செய்கிறது. ஸ்ரீருத்ரமும் “நமோ நீலக்ரீவாய ச” என்று பலமுறை கோஷமிட்டு பரமேச்வரனை நமஸ்கரிக்கின்றது. वेदत्रयी त्रिनेत्राणि – வேத³த்ரயீ த்ரிநேத்ராணி என்ற சாஸ்திரத்தை அநுஸரித்து மூன்று வேதங்களும் பரமேச்வரனுக்கு மூன்று கண்கள். ஸாக்ஷாத் உமாதேவியினால் ஆலிங்கனம் செய்ப்பட்டவராக இருந்துகொண்டு ஸர்வலோகத்துக்கும் மங்களத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்பொழுதும் உமாதேவியுடன் சேர்ந்தே இருக்கின்றார் என்பதை உமாஶ்லிஷ்டவபுஷம் என்ற விசேஷணத்தால் அறியவேண்டும். வேதங்களை மான் ரூபமாக வைத்திருக்கின்றார் என்பதை கரத்⁴ருʼதம்ருʼக³ம் என்பதாலும், தன்னைச் சரணடைந்த ஜீவர்களுடைய ஆபத்துகளை நீக்கி அவர்களுடைய ஸகலவிதமான சத்ருக்களை சம்ஹாரம் செய்து விளங்கி வருவதை க²ண்ட³பரஶும் என்ற விசேஷணத்தால் அறியவேண்டும். சாஸ்திரங்கள் ரிஷபத்தை தர்ம ஸ்வரூபம் என்றே போதிக்கின்றன. இத்தகைய ரிஷபாரூட தர்சனத்தை நான் எப்பொழுது பார்த்து ஆநந்திக்கப் போகிறேனோ என்று பகவத்பாதாள் கதறுகிறார்கள். இதிலிருந்து, ரிஷபவாகன தர்சனம் மிகவும் மஹிமைகொண்டது என்றும், அதை ஒவ்வொருவரும் தவறாமல் தர்சனம் செய்யவேண்டுமென்பதும் வெளியாகிறது. இந்த ச்லோகத்தைச் சொல்லி சிவசந்நிதியில் நமஸ்கரிப்பவர்களுக்கு பரமேச்வரன், நீலகண்டராக, உமாதேவியுடன் தர்சனம் தருவார் என்பதற்கு இந்த ச்லோகமே மேலான சான்றாகும்.
ब्रह्मादीनाम् = ब्रह्मा आदि देवताओं द्वारा की जा रही,
स्तवैः = स्तुतिययों से,
नियमिनाम् = संन्यासियों के,
जय जय वचोभिः = “जय हो ! जय हो !* ऐसे वचनों से,
गणानाम् = सेवकों के,
केलीभिः = खेलों से (रिझाये जाते हए, तथा),
मदकलमहोक्षस्य = अत्यन्त उत्साह वाले विशाल वृषभ के,
ककुदि = कन्धे पर,
स्थितम् = विराजमान,
उमाश्लिष्टवपुषम् = पार्वती से सटे शरीरवाले,
करधृतमृगम् = हाथ मेँ मृग धारण किये,
खण्डपरशुम् = टूटे फरसे वाले,
त्रिनयनम् = तीन नेत्रों वाले,
नीलग्रीवम् = नीलकण्ठ,
त्वाम् = आपको,
कदा = कब,
पश्येयम् = देखूँगा ?
Dr.T.M.P.Mahadevan
When shall I behold Thee, that hast a blue throad, three eyes and a body embraced by Uma, that holdest in Thy hands a deer and a cutting axe, that art seated on the hump of a big bull that is lusty and handsome, as Brahma and other gods sing Thy praise, as the ascetics cry out “Hail! Hail!”, and as the divine attendants dance around?
The devotee prays for the vision of Kailasa.
Among the characteristics mentioned are: the blue throad, three eyes, and the half male-half-female form – all indicative of infinite grace. There can be no sorrow in Kailasa; all is mirth and joy. All grades of beings lose their individualities and sense of separateness in the presence of Siva. While singing the praise of Siva or dancing in ecstasy, they forget themselves. Kailasa is the glorious experience of divine grace.
Swami Tapasyananda
When shall I behold Thee, three-eyed and blue-throated, sitting on the hump of Thy huge and spirited bull, with the battle axe and deer in Thy two hands and Uma holding Thy body in embrace, while the celestial attendants play about, the divinities like Brahma sing hymns of praise and ascetics cry “Hail”?
स्तवैर्ब्रह्मादीनां जयजयवचोभिर्नियमिनां
गणानां केलीभिर्मदकलमहोक्षस्य ककुदि ।
स्थितं नीलग्रीवं त्रिणयनमुमाश्चिलिष्ठवपुषं
कदा त्वां पश्येयं करधृतमृगं खण्डपरशुम् ॥ २५ ॥
ब्रह्मादीनां – Hari Brahmaadi devas;
स्तवै – with their praise;
नियमिनां – of the rishis;
जय जय – Jaya Jaya;
वचोभि – with words;
गणानां – Ganas such as Nandikeswara and Chandikeswara;
केलीभि: – various singing and plays;
मदकलमहोक्षस्य – with that fat bull (Nandikeswara);
ककुदि – with hump of hair on the head;
स्थितं – who is sitting on Nandi with gaambeeryam;
नीलग्रीवं – one who has the blue neck;
त्रिणयनं – with three eyes;
उमाश्चिलिष्ठवपुषं – one who has the sareeram that is constantly hugged by Uma;
करधृतमृगं – holding the deer in his hand;
खण्डपरशुम् – holding the axe that cuts anything into two;
त्वां – to you;
कदा – when;
पश्येयं – that I can see?
Commentary
Aum
It is impossible to describe the gaambeeryam and vaibhavam of Parameswara who stays in close company of Uma in Kailaash. Indra, Brahma and Vishnu on the one side, are singing hyms of praise of Parameswara. On the other side are the Brahmanishtaas who are great thapasvis shouting in ecstacy at the great sight of the auspicious Lord, slogans of victories such as Jai to Parameswara! Jai to Neelagreeva! Jai Jai Jai to SaraNaagathavathsala! Siva ganas such as Nandikeswara, Chandikeswara and Bringi are singing and dancing ecstatically.
Hey! Parameswara! How can I describe your limitless Mahima! How else can one get your dharsana if not for his sukrutham in millions of birth? Hey! Parameswara! When am I going to see the dhivya dharisanam of you sitting with Uma on the stout Vrishabha with the vedic deer on the one hand and the brilliant plough on the other with your long blue neck and benign face of kaarunyam?
In saying “नीलग्रीवं त्रिणयनं उमास्लिष्टवपुषं करधृतमृगं खण्डपरशुम् ” in this sloka of Sivaanandalahari, AachaaryaaL makes five different swaroopa varNanai of Shiva. Let us narrate and enjoy these here one by one.
During the time of kruthayuga it occurred to Devas and asuras that they have to overcome old age and death. With a view to realizing it they used Mount Meru as the rod and the great snake Vasuki as the rope and began to churn the milky ocean for amrutham. They did this for over a thousand years! Suddenly from the belly of the ocean came the most terrible poison called Haalaahalam and seeing this Naradha Muni shouted a dire warning:
न कार्यं मथनं चाब्धेः भवद्भिरधुनाSखिलैः
परार्थयध्वं शिवं देवाः सर्वे दक्षस्य याजनम्
तद्विस्मृतिं च वो यात वीरभद्रेण यत्कृतम् ||
That is, Hey! Devas! Hey! Asuraas! Danger! Danger! Stop churning the ocean! Immediately start doing the smaraNa of Parameswara who is the Sarva Rakshakan. Don’t you know what happened before in Dhaksha Prajaapathi’s yagna which was started without SivasravaNam? Was it not completely destroyed by mahaparaakraman Veerabhadran? Therefore O! Devas and asuraas! Without further thought “तस्माच्छिवः स्मर्यतां ’, begged Saint Naaradha. However driven by the desire to get amrutham they turned out to be jada buddhaas so they never stopped churning the ocean. Because of this Aalaahalam rose in terrible form.
दग्धादो ब्रह्मणोलोकं वैकुण्ठ च ददाह वै |
कालकूटाग्निना दग्धो विष्णुः अर्वगुहासयः ||
पार्षदैः सहितः सद्यः तमाल सदृशच्छविः |
वैकुणटम् च सुनीलं च अर्वलोकैः समावृतम् ||
It burnt down Brahmaloka first. Then it burnt down VaikuNtam too. Vishnu also got burnt in the melee that he got charred blue. Hearing the cry of Naaradha, Brahma Vishnu and other devas began chanting Sri Rudhram that starts with the sloka ‘नमस्ते रुद्र मन्यवे ’.
कृत्वास्पपिण्डं पाणिस्थं तद्विषं भगवान् हरः
सर्वलोकहितार्थाय भगवान् परमेश्वरः ||
कण्ठस्थमकरोत्प्राश्य लीलयामरपूजितः ||
Immediately KaruNaamoorthy Parameswara took that adhigOra aalaahala visham in his hand and playfully threw it into his mouth! Realizing that this terrible poison might burn down the entire creation that lives at the pleasure of the Lord, Parvathi put her hand at his throat and stopped Shiva from swallowing it. Yielding to the desire of his consort Shiva let the poison stay in his throat that turned his throat blue like an ornament embedded there. That is why the Veda says: ‘नमो नीलग्रीवाय च’.
Recalling this wonderous leela of Parameswara narrated in detail in Skanda Purana, alone would relieve the bhaktha of all his miseries. There is no doubt about it.
‘वेदत्रयी त्रिनेत्राणि ’ says the saasthra and AachaaryaaL echos this in Sivaanandalahari as ‘त्रिणयनम् ’.
Being hugged by saakshaath paraambikai Uma, Parameswara bestows mangalam to the three worlds. This is highlighted by AachaaryaaL when he says, ‘उमाश्चिलिष्ठवपुषं’.
Parameswara holds the Vedas in the form of a deer in his hand is known from AachaaryaaL’s expression ‘म्रुगधरम् ’, indicating Parameswara removes the thaapathraya of the praaNis who surrender to him. Also sathrunaasam is indicated by the parasu in his hands by the word ‘खण्डपरशुम्’. The poison that is capable of destroying all the worlds is but an ornament adorning his neck is known from the expression ‘नीलग्रीवं’. ‘वृषो धर्म इति प्रोक्तस्तमारूढस्ततो वषी ’ says the saasthra noting that vrishabham is of dhrmaswaroopam.
Thus, AachaaryaaL crys out to Shiva as follows:
Hey! Parameswara! When can I see you carrying the slender deer on the one hand and the bright mazhu on the other as Neelagreeva and Thrinayana hugged by Uma, you both sitting majestically on the dhaarmic vrishabham surrounded by the vedic chanting devas such as Brahma and Vishnu and ecstatic dancers like Bringi and others shouting their JayagOsham?
துங்கமழு மானுடையாய் சூலப்படையுடையாய்
திங்களணி செஞ்சடையாய் சேவுடையாய் – மங்கையொரு
பாலுடையாய் செங்கட்பணியாய் என் சென்னியின்மேல் காலுடையாய் நீயே கதி.
(தாயுமானவர்)
Hara Hara Mahaadeva SambO kaasi Viswanaatha GangE!
![]()