ஸ்ரீகாரடையான் நோன்பு எனும் ஸ்ரீகாமாக்ஷி விரத மஹிமை :

ஸ்ரீகாரடையான் நோன்பு எனும் ஸ்ரீகாமாக்ஷி விரத மஹிமை :

Greatness of Shri Karadaiyan Nonbu :

1) ஸாவித்ரி மந்த்ரோபாஸனையால் ஸ்ரீஅச்வபதி மஹா ராஜனுக்கு புத்ரியாய்த் தோன்றிய ஸாவித்ரி

2) யமன் அங்குஷ்ட மாத்ர ரூபத்துடன் விளங்கும் ஸத்யவானை தன்னுலகிற்கு அழைத்துச் செல்லலும், சாவித்ரி யமனை பின் தொடரலும்,

3) தர்மத்தைப் பற்றி ஸாவித்ரி யமதர்மரிடம் கேட்க, மகிழ்ந்த யமன் பார்வதியைப் போல், லக்ஷ்மியைப் போல் ஸௌபாக்யவதியாய் இருக்கும்படி ஸாவித்ரிக்கு யமன் வரமளித்தல்.

4) ஸ்ரீபுவனேச்வரியின் மஹிமையையும், தேவியை விட பரம் இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதையும், மணித்வீப வாஸமே முக்தி என்பதையும், பிறப்பற்ற நிலையை அடைய ஸ்ரீபுவனேச்வரியின் உபாஸனையே சிறந்த வழி என்பதையும் ஸாவித்ரி தேவிக்கு யமன் உபதேசம் செய்தல்.

5) ஐஸ்வர்யம் கொண்டவர்களில் லக்ஷ்மியும், வித்வான்களில் ஸரஸ்வதியும், பதிவ்ரதைகளில் துர்கையும், ஸௌபாக்யவதிகளில் ராதையும் எப்படி உயர்ந்தவர்களோ, அது போல் யஞ்ஞங்களில் அம்பாபிதமே உயர்ந்தது என்று யமன் ஸாவித்ரிக்கு கூறல்.

6) ஸாவித்ரிக்கு குருவாய் இருந்து ஸ்ரீதர்மராஜர் அன்னை ஸ்ரீபுவனேச்வரியின் ஹ்ரீங்கார பீஜத்தை உபதேசித்தல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading