.
(Published every Monday and Thursday)
श्रीशिवानन्दलहरी -२३
करोमि त्वत्पूजां सपदि सुखदो मे भव विभो
विधित्वं विष्णुत्वं दिशसि खलु तस्याःफलमिति।
पुनश्च त्वां द्रष्टुं दिवि भुवि वहन् पक्षिमृगता-
मदृष्ट्वा तत्खेदं कथमिह सहे शङ्कर विभो ॥ २३ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -23
கரோமி த்வத்பூஜாம் ஸபதி³ ஸுக²தோ³ மே ப⁴வ விபோ⁴
விதி⁴த்வம்ʼ விஷ்ணுத்வம்ʼ தி³ஶஸி க²லு தஸ்யா꞉ᳲப²லமிதி।
புநஶ்ச்ச-த்வாம்ʼ த்³ரஷ்டும்ʼ தி³வி பு⁴வி வஹந் பக்ஷிம்ருʼக³தாம்-
அத்³ருʼஷ்ட்வா தத்கே²த³ம்ʼ கத²மிஹ ஸஹே, ஶங்கர விபோ⁴ ॥ (23)
विभो! त्वत्-पूजां करोमिः सपदि मे सुख-दः भव। शंकर! तस्याः फलं विधित्वं विष्णुत्वम। इति दिशसि खलु। विभो! पुनः च त्वां द्रष्टुं दिवि भुवि पक्षि-मृगतां वहन् अदृष्ट्वा तत् खेदं कथम् इह सहे॥
विधित्वविष्णुत्वादिकमपि शिवपूजायाः फलं दोषदर्शनेनास्वीकृत्य निर्दोषं नित्यसुखं प्रार्थयते- करोमीति। भो विभो! अहं तु त्वत्पूजां तवार्चनादिकं करोमि। सपदि अविलम्बेनैव भोः शङ्कर! मे मह्य निर्दोषनित्यसुखप्रदाता भव। तस्याः पूजायाः विधित्वं विधातृत्वं, विष्णुत्वं हरित्वं वा फलमिति मत्वा दिशसि खलु ददासि हि। पुनश्च इत उत्तरस्मिन् काले दिवि भुवि च त्वां द्रष्टुं वीक्षितुं पक्षिमृगतां पक्षितां हंसभावं, मृगतां वराहभावं वा वहन् त्वामदृष्ट्वा तत्खेदं तद्दुःखं पक्षिभावमृगभावप्रयुक्तं अदर्शनकृतं शोकं च कथं सहे कथं क्षमे? पूर्वं किल हरिब्रह्माणौ अन्योन्योत्कर्षनिकर्षानिश्चयेन विवदमानौ तन्निर्णयाय परमशिवं शरणं गतौ सन्तौ तदाज्ञया तत्पादशीर्ष्णोः दर्शनाय मृगपक्षिभावमवलम्ब्य प्रवृत्तौ तददर्शनाद् उभावपि पराभूतविति पुराणे प्रसिद्धिः। विभो। इति पुनर्वचनमादरार्थम् ॥ २३ ॥
நின் அடியேனாகிய எனக்கு நித்யானந்த வாழ்வு ஒன்றே வேண்டும், மற்ற எந்த பதவியும் வேண்டாமென்கிறார்.
शंकर – ஶங்கர – மங்களத்தைச் செய்பவரே!
विभो – விபோ⁴ – எங்கும் நிறைந்தவரே
त्वत्पूजाम् – த்வத்பூஜாம் – உமது பூஜையையே
करोमि – கரோமி – (நான்) செய்கிறேன்.
सपदि – ஸபதி³ – உடனே, தாமதமின்றி
मे – மே – எனக்கு
सुखदः – ஸுக²த³꞉ – பிரம்மானந்தமான மோக்ஷ ஸுகத்தைக் கொடுக்கிறவராய்
भव – ப⁴வ – (தாங்கள்) ஆகுவீர்
तस्याः – தஸ்யா꞉ – அத்தகைய பூஜைக்கு
फलमिति – ப²லமிதி – பிரயோஜனமாக
विधित्वम् – விதி⁴த்வம் – பிரமனது பதவியையோ
विष्णुत्वम् – விஷ்ணுத்வம் – விஷ்ணுவின் பதவியையோ
दिशसि खलु – தி³ஶஸி க²லு – அளிக்கிறீர் அல்லவா? (அவ்வாறு அளிக்காதீர். ஏனெனில், அவ்வித பதவியை அடைவேனாயின், அவர்களைப் போல)
पुनः च – புந꞉ ச – மறுபடியும்
त्वाम् – த்வாம் – உம்மை
द्रष्टुम् – த்³ரஷ்டும் – நேரில் பார்ப்பதற்கு
दिवि – தி³வி – ஆகாயத்திலும்
भुवि च – பு⁴வி ச – பூமியிலும்
पक्षिमृगताम् – பக்ஷிம்ருʼக³தாம் – பறவை (அன்னபக்ஷி) மிருகம் (வராகம்) இவைகளது தன்மையை
वहन् – வஹன் – வஹித்துக்கொண்டு
अदृष्ट्वा – அத்³ருʼஷ்ட்வா – உமது சிரஸையும் மலர்ப் பாதங்களையும் பார்க்க முடியாமல் (துக்கத்தில் அமிழ்ந்து விட நேரிடும்.)
तत्खेदम् – தத்கே²த³ம் – அந்த துக்கத்தை
इह – இஹ – இவ்வுலகில்
कथम् – கத²ம் – எவ்வாறு
सहे? – ஸஹே? – பொறுக்க முடியும்? (அந்நிலைமையை நான் பொறுக்க முடியாதன்றோ!)
ஹே கிருபாநிதியே! நினது அம்புஜம் ஒத்த திருவடிகளை அவாவித் துதிக்கும் அன்பனாகிய எனக்கு, மோக்ஷ ஸுகம் ஒன்றே வேண்டும். ஏனைய படைத்தலாதிய பதவிச் சுகம் எது தரினும் வேண்டேன். ஏனெனின், அந்த நிலையை அடைந்த அயனும் அரியும், அன்னம் பன்றி வடிவு கொண்டு ஒரு காலத்தில், உன் அடி முடியை அறியப் புகுந்தும், அறியாததுடன், பல அல்லல்களையும் அடைந்தனரன்றோ? ஆகவே பதவி ஸுகங்கள் செருக்கிற்கும் கஷ்டத்திற்கும் இடமாம், ஆனதால் விரும்பேன் (என்பதாம்).
எங்கும் நிறைந்த ஹே பரமேச்வர! நான் உன்னை பூஜிக்கிறேன். ஹே சங்கர! நீ தாமதமின்றி எனக்கு குறையற்ற நித்யமான மோக்ஷ சுகத்தை இப்பொழுதே அளித்திடுவாய். உன்ன பூஜிப்பதால் கிடைக்க கூடிய ப்ரஹ்ம பதவியோ அல்லது விஷ்ணுவின் பதவியோ பயனாக கிடைக்கும். அது எனக்குத் தேவை இல்லை. ஏனெனில் முன்னொரு சமயம் ப்ரஹ்மா ஹம்ஸமாக உருவெடுத்து உனது சிரஸ்ஸைத் தேடி ஆகாயத்தை நோக்கி சென்றார். அவரால் உனது சிரஸ்ஸை பார்க்க முடிய வில்லை. விஷ்ணு வராஹமாக உருக்கொண்டு உனது பாதங்களைத் தேடிப் பூமியை நோக்கிச் சென்று தோல்வியடைந்தார். அவருக்கு உனது பாத தர்சனம் கிடைக்கவில்லை. ஆகையால் இவர்களுடைய பதவியால் எனக்கு எவ்விதப் பயனுமில்லை. ஹம்ஸமாகவோ, வராஹமாகவோ ஆகியும் உன் அடிமுடி காணமுடியாமல் ஏற்படுகின்ற சோகத்தையும் அவ்விதம் ம்ருகமாகவும் பறவையாகவும் உருமாறின பிறகும் உனது தர்சனம் கிடைக்கவில்லையே என்ற துக்கத்தையும் நான் எப்படி ஸஹிப்பேன்.
ஏ பரமேச்வர! தங்களுடைய பூஜைக்கு பலமாக எனக்கு நித்தியமான மோக்ஷ ஸுகத்தையே அளிக்கவேண்டுமல்லாமல், நான்முக பிருஹ்மாவாகவோ, விஷ்ணுவாகவோ என்னைச் செய்துவிடக்கூடாது.
ஸ்ரீபரமேச்வர பூஜைக்கு பலமாக பிருஹ்மத்வமும், விஷ்ணுத்வமும் சித்திக்குமானாலும், அதைவேண்டாமென்று மறுப்பதற்குக் காரணம் என்ன வென்றால், அதை அடைந்தும் ஸ்ரீபரமேச்வர ஸ்வரூபத்தைப் பார்க்கமுடியவில்லை. செல்வச் செருக்குக்கும் கல்விச்செருக்குக்கும் எட்டாதது பரம்பொருள் என்பதை விளக்குவது லக்ஷ்மீநாயகனான விஷ்ணுவும், ஸரஸ்வதீநாயகனான பிரம்மாவும் கூட அடியும் முடியும் காணமல் அலைந்தார்கள் என்னும் புராணக்கதை. பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களில் யார் பெரியவர் என்று வாதித்துக்கொண்டிருக்கையில் லிங்க வடிவான ஒரு ஒளிப்பிழம்பு ஆகாசத்தையும் பூமியையும் அளாவியதாய் அவர்கள் முன் தோன்றிற்று. அதன் அடியையோ முடியையோ முதலில் காண்பவரே பெரியவர் என்று அவர்கள் சங்கேதம் செய்து கொண்டனர். பின்பு காட்டுப் பன்றிவடிவில் பூமியைப் பிளந்துகொண்டு விஷ்ணு கீழ்நோக்கிச் செல்ல, அன்னப்பறவை வடிவில் பிரம்மா மேலே பறந்து சென்றார். இருவர் முயற்சியும் பலிக்கவில்லை. “நாங்கள் தோற்றோம்” என்றபோதே அவர்கள் வெற்றிபெற்றனர். அண்ணாமலை தீபம் இவ்வரலாற்றை ஞாபகப்படுத்துவதாய் அமைகின்றது. (இந்த சரித்திரம் ஸ்காந்த புராணத்தில் மாஹேச்வர காண்டத்தில் விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கிறது) ஆதலால் அவ்வித பயனை விரும்பாமல் शङ्कर! निर्दोषनित्यसुखप्रदाता- ஶங்கர! நிர்தோ³ஷநித்யஸுக²ப்ரதா³தா – என்ற வியாக்கியானப்படி, ஒருவித தோஷமில்லாத, காலத்தினாலேயோ தேசத்தினாலேயோ வஸ்துவினாலேயோ பரிச்சேதம் செய்யமுடியாத சிவானந்தமாகிய மோக்ஷ ஸுகத்தையே பயனாக அளிக்கவேண்டுமென்று பிரார்த்திக்கின்றார்.
இந்த ச்லோகத்தை சிவசன்னதியில் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் பரம வைராக்கியத்தை அடைந்து சிவானந்தலஹரியில் லயிப்பதற்கு அர்ஹதியுள்ளவர்களாக ஆவார்கள் என்பதற்கு ஆச்சார்யாளின் அனுபவ ஸூக்தியான இந்த ச்லோகமே சிறந்த ப்ரமாணமாகும்.
विभो = हे शासक !
शंकरविभो = हे व्यापक शंकर !
त्वत्पूजाम् = आपकी पूजा,
करोमि = करता हूँ ।
मे = मुझ,
सपदि = जल्दी ही,
सुखदः = आत्यन्तिक सुख देने वाले,
भव = बनिये ।
खलु = यदि,
तस्याः = उस पूजा के,
फलम् = फल,
इति = रूप से,
विधित्वम् = ब्रह्मा ( या),
विष्णुत्वम् = विष्णु,
दिशसि = बना दिया,
पुनः = तो,
त्वाम् = आपको,
द्रष्टुम् = देखने के लिये,
दिवि = आकाश में ( तथा),
भुवि = पृथिवी पर,
पक्षिमृगताम् = हंस या वराह रूप,
वहन् = लेकर,
च = फिर भी (आपको ),
अदृष्ट्वा = न देखकर,
तत् = उस अदर्शन से ( होने वाले),
खेदम् = कष्ट को,
इह = संसार में ,
कथम् = कैसे,
सहे = सहूँगा ?
Dr.T.M.P.Mahadevan
O Sankara, the all-pervading One! I perform Thy worship; and please grant me immediately the (supreme) happiness! Shouldst Thou grant me the status of Brahma or Visnu as the fruit of my worship, I would only have the agony of taking the form of bird or animal for the same of seeing Thee in heaven or on earth, again, and of not seeing Thee! How can I bear this (agony), O all-pervading Lord!
The true devotee longs for release (moksha) from bondage as the fruit of his devotion. Nothing less will satisfy him – not even the status of the high gods such as Visnu and Brahma.
The story alluded to here relates to the failure of these two gods to discover the head and feet of Siva. Brahma and Visnu once had an argument about their relative superiority. Siva appeared before them in the form of a pillar or light – luminous Linga – without visible top or bottom. Brahma and Visnu entered into an agreement according to which they were to seek to find the limits of the Linga, and he who succeeded in this effort would be regarded as the superior god. Visnu took the form of a boar and burrowed into the earth in order to get to the foot of of the Linga. Brahma assumed the form of a swan and flew up to reach its crown. Neither of them succeeded. Their pride humbled, they prayed to the Lord of lords, recognizing Him as the supreme Deity.
Tradition believes that the Arunachala hill at Thiruvannamalai represents the pillar of light in which form Siva appeared before Brahma and Visnu.
In several verses of the Sivanandalahari, Sankara alludes to the story of the failure of Brahma and Vishnu to gauge the greatness of Siva.
Swami Tapasyananda
O all-pervading one! Unto me who am engaged in Thy worship, vouchsafe eternal bliss at once. How could I possibly bear the grief, if, as a result of Thy worship, Thou bestowest on me the position of Brahma or Visnu, and still I fail to find Thee in heaven or earth after searching for Thee as a bird and a beast?
(The allusion is to the episode of the Puranas of Brahma and Visnu taking the form of a swan and a boar respectively, and going up and down to find out the extremities of Siva who appeared as a tower of Light. Both of the failed in their effort to discover the limits of Diving Glory.)
करोमि त्वत्पूजां सपदि सुखदो मे भव विभो
विधित्वं विष्णुत्वं दिशसि खलु तस्या: फलमिति ।
पुनश्च त्वां द्रष्टुं दिवि भुवि वहन्पक्षिमृगता-
मदृष्ट्वा तत्खेदं कथमिह सहे शंकर विभो ॥ २३ ॥
हे विभो ! – Hey! Sarva vyaapi!
त्वत्पूजां – of your pooja;
करोमि – (I) do;
सपदि – in haste;
मे – to me;
सुखद: – one who gives Brahmaananda sukham;
भव – be so;
तस्या: – to that pooja;
फलमिति – as the pooja phalan or profit;
विधित्वं – being Brahma;
विष्णुत्वं – or being VishNu;
दिशसि खलु – you be the giver, aren’t you?
हे विभो ! – Hey! Sarva vyaapi!
हे शंकर ! – the giver of Mangalam;
पुनश्च – again;
दिवि – in the sky;
भुवि – or in the earth (or in paathaala)
त्वां – your (head and feet);
द्रष्टुं – to see;
पक्षिमृगतां – as a bird and as an animal;
वहन् – taking these forms;
अदृष्ट्वा – unable to see;
तत्खेदं – about that dhukkham;
कथ – how;
इह – here;
सहे – tolerate.
Commentary
Hey! Parameswara! I already told you that I am not responsible for the greed for money or the be entangled with various sense objects but the culprit is really my mind which stole my swaroopam and is walking around as if it is myself and I begged you to take control of this thief so I can be doing the smaranNa of your lotus feet ceaselessly and get my janma साफल्यं . But what reply do I get? You say I can have Brahma Padhavi or Vishnu Padhavi. Is it your intention that my janma should not have its सफलं ?
If I had coveted Brahma Padhavi or Vishnu Padhavi why would I be begging you? I might have as well begged Brahma or Vishnu for that. But I have considered their padhavi as being next to nothing and coveted only your lotus feet as my final abode. Hey! Parameswara! What is the big benefit in getting Brahma Padhavi or Vishnu Padhavi? Have we not seen these two gods fought against each other for the supremacy and being unable to resolve among themselves they heard the asareeree:
किमर्थं बालकौ युद्दं कल्प्यते मूढमानसौ युवयोर्बलवैषम्यम् शिव एव विवेक्षयते | तेजः स्तंभमयं रूपमिदं शम्भोर्यवस्थितं || आधयंतयोर्दि युवामीक्षिषाथाम् बलधिकौ | इति तां गिरमाकर्ण्य निर्गुधादिरतौ तदा |
“Hey! Baalas! Why are you quarreling like this without any vivekam? Hey! You who have stupid intellect! Nothing would be the outcome by quarreling. Hey! Idiots! Your strength and weaknesses are known only to your moolakarta Parameswara and not you. Look at him Tejomaya swaroopam that stays in front of you as a sthambam. Among you if anyone can find its head or foot then such a person will be declared as superior to the other.”
Immediately both Brahma and Vishnu scrambled to apprehend your head and feet. They took the form of a bird and an animal (swan and a pig) and spent crores of years in this effort and came out with a cropper. They meekly accepted their defeat and admitted that you are the greatest! In Skanda Puraana, Maheswara kanda, these two gods lamented:
मूलभूतः शिवः साक्षात् मूलमस्य कथं भवेत् अस्मादेव समुदबूSस्म्यह माद्यंतवर्ज्जितात |
मन्मयान्वेष्दुमा रब्धं शिवं पसुवपुर्धृता ||
O! Parameswara! By a very look (ईक्षणमात्रम् ) you create, preserve and destroy the entire universe thus proving unmistakably that you are the cause of all existence, but these two gods Brahma and Vishnu due to their ahambhaavam, tried to find your source and in that they miserably failed. Aho! Kashtam! They realized in their effort to find the source of Eternal Shiva, they were mere pasu!
Hey! Parameswara! If Hari and Brahma have proved themselves as pasu why should I covet their padhavi? After all there is no sukham in being a pasu.
Hey! KarunaanidhE! Aren’t you Sankara? “शंकर निर्दोष नित्यसुख प्रदाया “. You are the giver of nithyasukham of sivaananda that is faultless and that is without परिच्छेद् (being enveloped – boundless) at anytime, anywhere and by any means. So I do my pooja to you with this sloka.
शिवं शिवकरं शान्तं शिवात्मानं शिवोत्तमम् |
शिवमार्गप्रणेतारं प्रणतोर्स्मि सदाशिवम् ||
Aum Namasivaaya!
![]()