श्रीशिवानन्दलहरी -२१ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -21 – Sri Sivaanandalahari-21

.

(Published every Monday and Thursday)

श्रीशिवानन्दलहरी -२१

धृतिस्तम्भाधारां दृढगुणनिबद्धां सगमनां
विचित्रां पद्माढ्यां प्रतिदिवससन्मार्गघटिताम्।
स्मरारे मच्चेतःस्फुटपटकुटीं प्राप्य विशदां
जय स्वामिन् शक्त्या सह शिव गणैः सेवित विभो ॥ २१ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -21

த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம்ʼ த்³ருʼட⁴கு³ண நிப³த்³தா⁴ம்ʼ ஸக³மநாம்ʼ
விசித்ராம்ʼ பத்³மாட்⁴யாம்ʼ ப்ரதிதி³வஸ ஸந்மார்க³ க⁴டிதாம்।
ஸ்மராரே மச்சேதஸ் ஸ்பு²டபடகுடீம்ʼ, ப்ராப்ய விஶதா³ம்ʼ
ஜய ஸ்வாமிந், ஶக்த்யா ஸஹ, ஶிவக³ணை꞉ ஸேவித விபோ⁴ ॥ (21)


    स्वामिन्‌! स्मर+अरे! शिव! गणैः सेवित! विभो! धृति-स्तम्भ+आधारां दृढ-गुणनिबद्धां सगमनां विचित्रां पद्म+आढ्यां प्रतिदिवस-सत्‌+मार्ग-घटितां विशदां मत्‌+चेतः+ स्फुट-पट-कुटीं प्राप्य शक्त्या सह जय।॥


एवं चित्तस्य तदधीनतां संप्रार्थ्य इदानीं चेतसः कुटीत्वनिरूपणेन तत्र तद्वासं प्रार्थयते – धृतिस्तंभेति। हे स्मरारे! कामशत्रो! अनेन जितसर्वविषयत्वं शिवस्य सूच्यते। भो स्वामिन्‌! वशीकृतसकलभुवन। गणैः सेवितगणैः स्वरूपं विमर्शद्भिः सेवित ध्यात! भो विभो! सर्वं व्याप्य स्थित! भोः शिव।अखण्डानन्दस्वरूप परमेश्वर! धृतिस्तम्भाधारां धृतिः विषयनित्यत्वावधारणं सैव स्तम्भः कुटीस्थित्याधारभूतमध्यप्रदेशस्थदारुविशेषः, स एवाधारः आलम्बनं यस्यास्ताम्‌। दृढगुणनिबद्धां दृढैः बलवद्भिः गुणैः गुणकार्यभूतैः देहादिभिः निबद्धांस्थापिताम्‌, अन्यत्र गुणैः रज्जुभिर्निबद्धाम्‌ आकृष्य क्लृप्तां सगमनां देशान्तरगमनसहितां विचित्रां विविधदुर्वासनावासिताम्‌, अन्यत्र नानावर्णां पद्माढ्यां पद्मया लक्ष्मीप्रार्थनया आढ्यां पूर्णाम्, अन्यत्र पद्माकारचित्रयुक्ताम्‌, प्रतिदिवससन्मार्गघटितां प्रतिदिवसं दिवसे दिवसे सतो ब्रह्मणः मार्गेऽन्वेषणे घटितां योजिताम्‌, अन्यत्र सन्मार्गे राजमार्गसमीपे घटितां कल्पितां, विशदां निर्मलां मच्चेतस्स्फुटपटकुटीं मच्चेत एव स्फुटपटकूटी तामभिव्यक्तपटगृहं प्राप्यानुप्रविश्य जय सर्वोत्कर्षेण वर्तस्व। पञ्चकोशातिरेकेण प्रकाशस्वेति भावः। आदिमैः पञ्चभिर्- विशेषणैः स्वधर्मसहितं चित्तस्वरूपं पटकुटी च प्रतिपाद्यते। षष्ठेन विशेषणेन ब्रह्मान्वेषणे चित्तस्य योजितत्वम्‌। विशदामित्येतदैकरूप्येण चित्तपटकुट्योरुभयत्रान्वेति। स्मरारे! इत्यनेन शिवस्य जितकामत्वं बोध्यते। स्वासमिन्नित्यनेन सर्वस्वातन्त्र्यम्। विभो! इत्यनेन व्यापकस्वरूपता। शिवेत्यनेन आनन्दरूपता। अतो हेतोः पूर्वोक्तप्रकारेण परमशिवप्रार्थना युज्यते। चित्तपक्षे सर्वाणि विशेषणानि लिङ्ग​विपरिणामेन योजनीयानि ॥२१॥


முந்தய சுலோகத்தில் மனதை அந்நிய சிந்தனையில்லாமல் சிவாதீனத்தில் ஒப்படைத்துவிட்டு, இதில் என் மனமாகும் நிர்மலமான கூடாரத்தில் அருட்சக்தியுடன் ஸதாகாலமும் ஆநந்தவடிவினராக வசிக்கவேண்டுமென பரமசிவனைப் பிரார்த்திக்கின்றனர்.

स्मरारे – ஸ்மராரே – (மன்மதனுக்கு சத்ருவே!), காமாந்தகரே!

विभो – விபோ⁴ – ஸர்வவ்யாபகரே!

शिव​ – ஶிவ – சுபகரரே

स्वामिन् – ஸ்வாமின் – ஸர்வத்தையும் ஸ்வாதீனமாகக் கொண்டவரே!

गणैः सेवित​ – க³ணை꞉ ஸேவித – பிரமத கணங்களால் ஸேவிக்கப்படுவோரே! (இங்கு தம் மனதை ஒரு கூடாரமாக ஒப்பிடுகின்றார். மேற்கூறியபடி என் மனத்தை உமது சுவாதீனமாக்கி விட்டீராயின்) என் மனமானது சிறந்த கூடாரமாகும். அதற்கு)

धृतिस्तम्भाधाराम् – த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் – தைர்யம் என்ற தூண் ஆதாரமாயிருக்கும். (கூடாரத்திலும் மத்யபாகத்தில் ஒரு தூண் ஆதாரமாக அமைக்கப்படும்)

दृढगुण निबद्धाम् – த்³ருʼட⁴கு³ண நிப³த்³தா⁴ம் – ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற திரிகுண கார்ய பூததேகாதி குணங்களால் கெட்டியாக கட்டப்பட்டுவிடும்; (கூடாரமும் பல கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும்.)

सगमनाम् – ஸக³மநாம் – நினைத்த இடங்களுக்கு வெகு சுலபமாய்ப் போகக் கூடியதாகும்; (கூடாரத்தையும் சுலபமாக பல இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்)

विचित्राम् – விசித்ராம் – பலவித விஷயவாசனைகளுடன் கூடியது.  (கூடாரமும் நானாவிதவர்ணங்களுடையது)

पद्माढ्याम् – பத்³மாட்⁴யாம் – தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியிடம் (செல்வதில்) ஆசை கொண்டது. (கூடாரத்தில் தாமரைப்பூப் போன்ற சித்திரங்கள் நிறைந்து காணப்படும்)

प्रतिदिवससन्मार्गघटिताम् – ப்ரதிதி³வஸஸந்மார்க³க⁴டிதாம் – தினந்தோறும் அங்கு பிரும்ம விசாரம் செய்வதிலும் இதர சன்மார்க்க வழியிலும் ஈடுபட்டிருக்கும்; (கூடாரமும் நீர், நிழல் இவைகள் கிடைக்கும் ராஜமார்க சமீபத்தில் அமைக்கப்படும்)

विशदाम् – விஶதா³ம் – நிர்மலமான ஸ்தானமும் ஆகும்; அங்கு அப்போதுள்ள பிரகாசத்துக்கோ அளவிராது. (கூடாரம் விசாலனமானது)

मच्चेतस्स्फुटपटकुटीम् – மச்சேதஸ்ஸ்பு²டபடகுடீம் – (ஆகையால் தேவரீர்) என் மனமாகிற பிரகாசமான துணியால் செய்யப்பட்ட கூடாரத்தில்

शक्‍त्या सह​ – ஶக்த்யா ஸஹ – அம்பிகையுடன்

प्राप्य​ – ப்ராப்ய – எழுந்தருளி

जय​ – ஜய – மேன்மையாக விளங்குமாறு அருள்புரிவீர்.


ஏ, பரமசிவ! பஞ்சபூதகாரியமான என் உடலில் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணாம்சமாய் விளங்கும் மனதை, அசைவின்றி ஸத்வாகாரமாய் நிலைத்து நிற்க, திடவைராக்கியத்துடன் பதுமாசனமிட்டு ஞான யோகம் புரியும் என் சூக்கும மனத்தில், அருட்சத்தியுடன் அபேதமாய் விளங்கும் ஹரனே! நீவிர் நீங்காதெழுந்தருளவேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன். (இந்நிலை நிற்பவரே இறைவனை அடைவர் என்பதை சூசிப்பிப்பதாம் (என்பதாம்).


மன்மதனை அழித்த ஹே பரமேச்வர! எனது மனம்‌ கூடாரம்‌ போன்றதாகும்‌. கூடாரம்‌ நிலையாக நிற்க உறுதியாக அதன்‌ நடு மையத்தில்‌ தூண்‌ இருக்கிறது. அது போல எனது மனதில்‌ உலகில்‌ அனுபவிக்கப்படுகின்ற ஸுகதுக்கங்கள்‌ நிலையாக இருக்கிறது. கூடாரம்‌ நிற்க எப்படி தூண்‌ தேவையோ அது போல விஷயங்கள்‌. விஷய ஸுகங்‌கள்‌ இருந்தால்‌ தான்‌ மனம்‌ இருக்கும்‌. கயிற்றால்‌ கூடாரம்‌ கட்டப்படுகிறது. ஸத்வ ரஜஸ்‌ தமஸ்‌ என்ற கயிற்றால்‌ மனம்‌ கட்டப்பட்டுள்ளது. கூடாரம்‌ விரும்பிய இடங்களில்‌ எடுத்து செல்லப்படுவது போலவே எனது மனமும்‌ நாலாவிடங்களிலும்‌ செல்கிறது. மனதில்‌ பலவிதமான ஜன்மாக்‌களை கொடுக்கக்‌ கூடிய நுண்ணிய வாஸனைகள்‌ அல்லது விஷயங்களில்‌ பற்றுதல்‌ இருப்பது போல்‌ கூடாரத்தில்‌ பலவித வர்ணங்கள்‌ அழகுறத்‌ தீட்டப்பட்டுள்ளது. மனம்‌ எப்‌பொழுதும்‌ லக்ஷ்மி தேவியையே ப்ரார்த்திக்கிறது. கூடாரத்தில்‌ தாமரைப்‌ பூக்கள்‌ தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்‌டுள்ளது. ஒவ்வொரு நாளும்‌ மனம்‌ ப்ரம்மஸ்வரூபத்தை அனுஸந்தானம்‌ செய்கிறது. நிழல்‌ நீர்‌ முதலியவை எங்கு சுலபமாக கிடைக்கிறதோ, அங்குதான்‌ கூடாரம்‌ போடப்‌ படுகிறது. ப்ரமதகணங்களால்‌ ஸேவிக்கப்படுன்ற ஹே விபோ! கூடாரம்‌ போல இருக்கின்ற எனது மனதில்‌ பார்வதிஸஹிதமாய்‌ வந்திருந்து வாஸம்‌ செய்து வெற்றியுடன்‌ விளங்க வேண்டும்‌.


முன் ஸ்லோகத்தில்மனதை குரங்காக  கற்பித்து அதை ஸ்ரீபரமேச்வரன் அதீனமாகச் செய்து கொள்ள வேண்டும் என பிரார்த்திக்கப் பட்டது. இங்கு மனதை ஒரு கூடாரமாகக்  கற்பனை செய்து அதில் ஸ்ரீபரமேச்வரன் பார்வதீதேவியுடன் வாசம் செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்ளப்படுகிறது. மனதிற்கும் கூடாரத்திற்கும் பல அம்சங்களில் ஒற்றுமைகளை இங்கு கவி கற்பித்திருக்கிறார். கூடாரத்திற்கு மத்தியில் உள்ள ஒரு கோல் கூடாரத்தைத் தாங்கி நிற்கும். “விஷயங்கள் எல்லாம் நித்தியம்” என்ற உறுதியே  மனதைத் தாங்கி நிற்கிறது.  “விஷயங்கள் அநித்தியம்” என்ற உறுதியும் அனுபவமும் ஏற்பட்டுவிட்டால் பின்பு மனோநாசமும் ஏற்படக்கூடும். கூடாரம் கயிறுகளால் இழுத்துக் கட்டப்படும். மனதும் ஸத்வம் முதலிய குணங்களால் ஆகிய உடல் முதலியவற்றால் திருடமாக கட்டப்பட்டிருக்கிறது. கூடாரத்தை பல இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். மனதும் பல இடங்களுக்குச் செல்லுகிறது. கூடாரத்தில் பலவித வர்ணங்கள் காணப்படும். மனதில் பலவித விஷயவாசனைகள் உள. கூடாரம் (பத்மாட்யாம்) தாமரை போன்ற சித்திரத்துடன் கூடியது. மனதும் (பத்மாட்யாம்) பணத்தில் பேராசை கொண்டது. கூடாரம் (ஸந்மார்க்கத்தில்) சிறந்த மார்க்கத்திற்கு சமீபத்தில் அமைக்கப்படும். மனதும் (ஸந்மார்க்கத்தில்) பிரம்மஸ்வரூபத்தைத் தேடுவதில் ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய மனதாகிற கூடாரத்தில், ஏ பரமேச்வரா! தாங்கள் தேவியுடன் சுகமாக குடிகொள்ள வேண்டும்.

இந்த ச்லோகத்தில் பகவத் பூஜ்யபாதாள் பரமேச்வரனைக் குறித்து பிரயோகம் செய்யும் ஸம்போதனைகளின் ஸ்வாரஸ்யத்தை அநுபவிப்போம். ஸ்மராரே – என்ற பதத்தினால் ஜிதகாமத்வம், அதாவது ஞானமார்க்கத்திற்கு மூல சத்ருவாயிருக்கின்ற காமனை நெற்றிக்கண்ணால் எரித்து லோகத்தில் ஞானமார்க்கத்தை ஸ்தாபனம் செய்தார் என்றும், ஸ்வாமின் – என்ற ஸம்போதனையினால் ஸர்வ ஸ்வாதந்திரியம் அதாவது இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற ஸர்வ சக்திகளையும் தனது அதீனத்தில் வைத்துக்கொண்டு, ப்ரும்மாதி பிபீலிகாந்தமாகவுள்ள ஸகலப் பிராணிகளுடைய யோகக்ஷேமத்தை ஏகனாகயிருந்துகொண்டு வஹிக்கின்றார் என்றும், விபோ – என்ற ஸம்போதனையினால் ஸர்வவ்யாபக ஸ்வரூபத்தையும், ஶிவ – என்ற ஸம்போதனையினால் மேலான ஆநந்தஸ்வரூபனென்றும் வர்ணிக்கிறார். ஸ்மராரே, ஸ்வாமின் என்பதால் பரம்பொருளின் தடஸ்த லக்ஷணமும், விபோ,  ஶிவ என்பதால் ஸ்வரூப லக்ஷணமும் வெளியாகிறது. தவிர ஶக்த்யா ஸஹ என்று சொல்லி, ஶிவ-சக்திகளைப் பிரித்து உபாசனை செய்யக்கூடாது என்பதையும் பரமாச்சார்யாள் உறுதிசெய்கிறார்கள்.

மேல்சொன்ன ஸம்போதானா ஸ்வாரஸ்யங்களை அனுசந்தானம் செய்துகொண்டு பரமபக்தியோடு எவர்கள் இந்த ச்லோகத்தை சிவ சந்நிதியில் சொல்லி நமஸ்காரத்தை செய்கிறார்களோ, அவர்களுடைய மனதாகிய கூடாரத்தில் பார்வதீபரமேச்வரர்கள் சிவானந்தத்தைப் பெருகவிட்டுக்கொண்டு  ஸதா வசிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பகவத்பாதாளுடைய பிரார்த்தனா ரூபமான இந்த ச்லோகமே இதற்குப் ப்ரமாணம்.


स्मरारे = हे कामदेव के नाशक !
स्वामिन्‌ = हे अधीश्वर!,
शिवगणैः = (हे) शिवगणों द्वारा,
सेवित = सेवित !
विभो = हे व्यापक तत्व! (आप ),
शक्त्या = अपनी शक्ति ( पार्वती ) सहित,
मच्चेतःस्फुटपटकुटीम्‌ = मेरे मनरूपर उजले तम्बू में,
धृतिस्तंभाधाराम्‌ = जो धैर्य रूप आधारभूत खम्बे पर टिका है,
दृढगुणनिबद्धाम्‌ = स्थिर सद्गुण रूप रस्सियों से बँधा हे,
विचित्राम्‌ = रंग विरंगा है,
पद्माढ्याम्‌ = कमलों से सजा है,
विशदाम्‌ = विस्तीर्ण है,
सगमनाम्‌ = इधर-उधर ले जाया जा सकता है तथा,
प्रतिदिवससन्मार्गघटिताम्‌ = अच्छे रास्ते पर (बढते हुए) प्रतिदिन (किसी न किसी पड़ाव पर ) ताना जाता है,
प्राप्य = आकर,
जय = विजयी बनें ||


Dr.T.M.P.Mahadevan

O Destroyer of Manmatha! O Master ! O Siva, that art worshipped by the divine attendants! O the all-pervading One! Enter along with Thy consort the shining tent of my mind, that has the will as the supporting central pole, and is fastened with the ropes of constant virtues, that could be moved anywhere, is multi-coloured, and is embellished with the figures of lotuses and is moved daily on highways; and mayest Thou be victorious!

The mind is compared, here, to a strong, clean, and well-furnished tent; and the Lord is invited to use it in his campaign against evil. The entry of the Lord along with His Consort into the tent will ensure victory over evil. Let not the mind-tent be allowed to fall into the hands of the enemy!

Swami Tapasyananda

O Thou destroyer of Cupid and ruler of the worlds! Thou auspicious and all-pervading One attended upon by thy devotees! May Thou accompanied by Thy Divine Sakti (i.e the Mother of the Universe, Siva’s consort, known variously as Uma, Parvati, Gauri etc) enter into, and take residence in, the shining and movable tent of my mind, which is fixed every day on the royal road of divine contemplation, and which has the will as the pillar for its support, the Gunas (i.e. dispositions of Nature), as its strong ropes, the numerous tendencies as its multiple colours, and the psychic centers as its lotus designs.

 


धृतिस्तंभाधारां दृढगुणनिबद्धां सगमनां
विचित्रां पध्माढ्यां प्रतिदिवससन्मार्गघटिताम् ।
स्मरारे मच्चेत:स्फुटपटकुटीं प्राप्य विशदां
जय स्वामिन् शक्त्या सह शिव गणै: सेवित  विभो ॥ २१ ॥

हे स्मरारे ! – Hey Paramasiva! You are the enemy of Manmatha !

हे स्वामिन् ! – Hey Lokanaathaa!

गणैः  – by the prathama GaNas;

सेवितः – One who is worshipped;

धृतिस्तंभाधारां – Thinking that the dwaita prapanjam is satyam and holding it as the central pillar;

दृढगुणनिबद्धां – and tied to it with strong ropes;

सगमनां  – with capacity to go to any and every place it can think of;

विचित्रां – with so many bad vibes (vaasanas);

पध्माढ्यां – with greed for money;

हे विभो   – Hey ParamporuLe! Hey Sarvavyaapi!

मच्चेत:स्फुटपटकुटीं  – the tent called my mind that keeps shining;

विशदां – clean it out of all its faults and dirts;

प्रतिदिवसं  – daily;

सन्मार्गघटिताम् – To be able to know Brahman through Vedanta Vichara;

शक्त्या सह – in the company of Parashakti;

प्राप्य  – please come to the tent of my mind;

हे शिव ! – Hey Shiva!

जय – Please remain there superior to all Tatvas.

Commentary

Aum

Hey! Parameswara! Without your prasaadam no one can carry out his work fruitfully. Therefore I have a long-standing desire that I need to do dhyaanam of your divya swaroopam in my mind with ekaagra buddhi. Yet I have not become a bhaagyavaan of that desire.

Because, Hey! PrabhO! I have anchored the tent of my mind in firmly on the pillar that holds this dwaita prapanjam as satyam which makes me argue accordingly. Besides this tent is tightly tied by the body made of the triguNas of Satwam, Rajas and Thamas.

Besides, this tent called my mind has the ability to roam to any place it can think of. Also this tent of my mind is attached to the nails of the many different praaptha vaasanas. As if the above described four is not enough, as the saying goes, पद्माढ्याम् पद्मया लक्ष्मीप्रार्थनया आढ्याम् पूर्णं, I have this insatiable desire to gather wealth. Therefore, Hey! Parameswara! You have yourself said: “नहि कल्याणकृत् कश्चित् दुर्गर्ति तात गच्छति”.  Keeping that sentence as praamaaNyam in the poorva sloka I had surrendered my mind to you and had begged you to keep it in your aadheenam and with your karuNa kataaksham remove all kinds of द्वैत ज्ञानं  and clean out my mind into a pristine tool.  Only when you do so can I be able to without fail and daily indulge in the Vedanta vichaaram that teaches jeeva-Brahma aikyam. Hey! Parameswara! Together with saakshaat Paraashakti you, in the stillness of calm with no सञ्चलं to speak of yet remain in bOdhaananda swaroopam which is the  highest of Aananda and may I please request you to give me the Sivaananda pravaaha that never dries up?  This is my constant prayer to you.

Hey! SmaraarE! Enemy of Manmathaa! You attained jithakaamathvam by opening your third eye on Kaama the prime enemy of ज्ञानमार्ग and burnt him to ashes.

Swamin! You are the protector of all species from Brahma to the smallest insect by your swaathanthriyam of absolute control over Ichchaa Shakthi, Kriyaa Shakthi and Gnana Shakthi.

(The names ‘स्मरारे’ and ‘स्वामिन्’ indicate the तटस्थलक्षणम् ).

Hey! VibhO! You are the Sarvavyaapi. The Veda Says:
“एको विष्णुः महदबूतं प्रुथग्भूतान अनेकशः |
त्रीन् लोकान् व्याप्य भूतात्मा भुङ्ग्क्ते विस्वभुगव्ययः|| ”

Hey! Sivaa! You are the most auspicious One!

(The names विभो and शिव indicate the स्वरूपलक्ष्णं ).

Hey! Parameswara! None can have his work done without your prasaadham. Therefore I need to have the Ekaagra chinthana of your divya swaroopam in my heart but I have not been able to do so. This is because I have been thinking of this dwaitha prapancham as real and it became the central pillar of mental tent. This tent has been fastened by strong ropes called the thrigunaas of sathwam, rajas and thamas. Surprisingly this mental tent is capable of moving all around to many different places! Lo and behold! This mental tent has a built in strength of sustenance called ‘प्रारब्ध वासना’. Alas! It is completely filled with innumerable desires for wealth and so on.

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளுமிவ்
வையந் தன்னொடுங் கூடுவதில்லை யான்.
(குலசேகராழ்வார்)

O! SmaraarE! Swaamin! VibhO! Shivaa! Can you please remove these desires from my tent of the mind and occupy it as Shakthi SamEdhaaL so I will always have Sivaanubhavam in me?

Sivoham, Sivoham.

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading