.
(Published every Monday and Thursday)
श्रीशिवानन्दलहरी -२०
सदा मोहाटव्यां चरति युवतीनां कुचगिरौ
नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः।
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं
दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ॥ २० ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -20
ஸதா³ மோஹாடவ்யாம்ʼ சரதி யுவதீநாம்ʼ குசகி³ரௌ
நடத்யாஶாஶாகா²ஸ்வடதி ஜ²டிதி ஸ்வைரமபி⁴த꞉।
கபாலிந் பி⁴க்ஷோ மே ஹ்ருʼத³யகபி மத்யந்த சபலம்ʼ
த்³ருʼட⁴ம்ʼ ப⁴க்த்யா ப³த்³த்⁴வா ஶிவ, ப⁴வத³தீ⁴நம்ʼ குரு விபோ⁴ ॥ (20)
कपालिन्! भिक्षो! मे हृदयकपिः सदा मोह+अटवयां चरति युवतीनां कुचगिरौ नटति आशा-शाखासु झटिति स्वैरम् अभितः अटति। विभो! शिव! अत्यन्त-चपलं मे हृदयकपिं भक्त्या दृढं बध्द्वा भवद्(त्)+अधीनं कुरु॥
एवमीश्चरप्रीतिं सम्प्रार्थ्य मम चित्तचाञ्चल्यं परिहृत्य मच्चित्तं त्वदधीनं कुरुष्वेति प्रार्थयन्नाह- सदा मोहेति। भो विभो! सर्वव्यापक। भोः शिव सुखस्वरूप! भोः कपालिन्! कपालमस्यास्तीति तस्य संबुद्धिः, भो भिक्षो। हृदयकपिः सदा सर्वदा मोहाटव्यां मोहः संसारेच्छा स एव अटवी अरण्यं तस्यां चरति संचरति। युवतीनां नारीणां कुचगिरौ स्तनपर्वते, कूचावेव गिरिः तस्मिन्। नटति नृत्यं करोति। आशाशाखासु आशाः पुत्रदारादिषु प्रेमाणः ता एव शाखा विटपाः तास्वटति संचरति। झटिति शीघ्रम् अभितः इतस्ततः। स्वैरं स्वेच्छाविहारं यथा तथा अटति संचरति। अत्यन्तचपलं अतिचपलं मे मम हृदयकपिं हृदयमेव कपिः इति रूपकं, तं चित्तवानरं दृढं नितान्तं भक्त्याख्यया रज्ज्वा बद्ध्वा चेष्टारहितं कृत्वा भवदधीनं त्वद्वशं कुरु कुरुष्व। संसारनिमग्नं मचिचत्तं सदा त्वदेकशरणं कुर्विति तात्पर्यम् ॥२०॥
कपालिन् – கபாலின் – ஹே கபாலியே! பிரமனது மண்டையோட்டை கையிலேந்தியவரே!
भिक्षो – பி⁴க்ஷோ – பிக்ஷாடனம் செய்கிறவரே!
शिव – ஶிவ – மங்கள காரணரே!
विभो – விபோ⁴ – எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளவரே!
(हृदयकपिः – ஹ்ருʼத³யகபி꞉ – மனமாகிய குரங்கு)
मोहाटव्याम् – மோஹாடவ்யாம் – மோகம் என்ற காட்டிலேயே
सदा – ஸதா³ – எக்காலமும்
चरति – சரதி – திரிகிறதே!
युवतीनाम् – யுவதீநாம் – இளம் பெண்களது
कुचगिरौ – குசகி³ரௌ – குசங்களாகிய மலையின்மீது
नटति – நடதி – காமத்தினால் கூத்தாடுகிறதே!
आशाशाखासु – ஆஶாஶாகா²ஸு – பெண்டாட்டி, பிள்ளை, சொத்து முதலான ஆசாபாசங்களென்னும் கிளைகளில் இருந்து
स्वैरम् – ஸ்வைரம் – தனதிஷ்டப்படி
अभितः – அபி⁴த꞉ – நாற்பக்கங்களிலும்
झटिति – ஜ²டிதி – வேகத்துடன்
अटति – அடதி – தாண்டிக் குதிக்கிறதே!
अत्यन्तचपलम् – அத்யந்தசபலம் – அவ்வாறு மிகவும் சலனமுள்ள
मे – மே – எனது
हृदयकपिम् – ஹ்ருʼத³யகபிம் – மனக்குரங்கை
दृढम् – த்³ருʼட⁴ம் – வெகு பலமாக
भक्त्या – ப⁴க்த்யா – பக்தி என்ற கயிற்றைக்கொண்டு
बद्ध्वा – ப³த்³த்⁴வா – கட்டி
भवदधीनम् – ப⁴வத³தீ⁴நம் – உமது வசம்
कुरु – குரு – இருக்கச் செய்தருள்வீர்
ஹே பரம்பரனே! அடியேனது மனமாகிய வாநரமானது ஸம்ஸாரமெனுங் காட்டில் தினமும் திசை தப்பித் திரிந்து உழல்வதுடன், அதிலுள்ள பெண்களின் ஸ்தனமாகிய மலைமிசை ஓயாது பாய்வதும், மனைமக்களாதி மரங்களிலும் பொன் பொருளாதி மரக்கிளைகளிலும் தாவுவதுமாய், ஒன்றுவிட்டொன்று பற்றி, நெறி தவறி சலித்து ஓடுவதைத், தலைவனாகிய நீர், அதை பக்தியாகிய கயிற்றால் நன்கு பிணைத்து, தம்வயப்படுத்துதலாகிய திருவருள் நெறியில் நிலைத்திருக்கக் கருணை பாலிப்பீராக.
எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்ற ஹே பரமேச்வர! மண்டையோட்டை. கையில் வைத்திருப்பவரே! நீயோ ஒரு பிக்ஷு. என் மனமோ ஒரு குரங்கு. எனது ஆசைகளோ கிளைகள் நிறைந்த ஒரு பெரிய மரமாக மோஹம் என்ற காட்டில் வளர்ந்து பரந்து கிடக்கிறது. இந்த குரங்கு இந்த மோஹவனத்தில் தன்னிஷ்டம் போல் நிச்சிந்தையாக ஸஞ்சரிக்கிறது, பெருத்து உயர்ந்த அழகாக இருக்கின்ற பெண்களின் மார்பகங்களில் இக்குரங்கு தாவுகிறது. இப்படி சுற்றியலையும் என் மனமாகிற குரங்கை, ஹே பிக்ஷோ! நீயே வைத்துக்கொள். யாசகர்களின் கையில் குரங்கு ஒன்று இருப்பது உசிதமே. சஞ்சல ஸ்வபாவமுள்ள இக்குரங்கை கட்டுவதற்கு பக்தி இருக்கிறது. பக்தி என்ற கயிற்றால் இம்மனக் குரங்கை பலமாகக் கட்டி ஹே சிவ! நீயே வைத்துக்கொள். அதை உனக்கு அதீனமாக செய்துவிடு.
ஏ பரமேச்வரா! என் மனது ஒரு குரங்கு. அது மிகவும் சஞ்சலமானது. விஷயங்களில் மயக்கமாகிற காட்டில் அது சுற்றிக் கொண்டிருக்கிறது. மங்கைகளின் மார்புகளாகிற மலைகளில் அது நர்த்தனம் செய்கிறது. கிளைகளில் வாசஞ்செய்யும் பிராணியாதலால் குரங்கிற்கு “ஶாகாம்ருகம்” – என்று ஒரு பெயர் உண்டு. என் மனக்குரங்கு ஆசைகளாகிற கிளைகளில் இஷ்டப்படி இங்குமங்கும் சுற்றித்திரிந்து கொண்டே இருக்கிறது. அதை பக்தியாகிற கயிற்றால் கெட்டியாகக் கட்டித் தங்களிடமே வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது தங்களிடம் பக்தி ஏற்பட்டு விட்டால் விஷயங்களிலுள்ள ஆசைகள் ஒழிந்து அது தங்களிடமே ஈடுபட்டுவிடும். அதற்குத் தாங்கள் அருள் புரிய வேண்டும்.
இங்கு விபோ – என்ற சொல்லால் எல்லா இடங்களிலும் வியாபித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு என் மனக்குரங்கு எந்த இடத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது, என்பதை அறிந்து அதைக் கட்டிபிடித்துக் கொண்டுவருவது மிக சுலபம் என்பதைக் குறிப்பிடுகிறார்.
பிக்ஷோ – என்பதால் பிக்ஷை எடுக்கின்றவர்களுக்கு கையில் ஒரு குரங்கும் இருத்தால் பிக்ஷை அதிகமாக் கிடைக்கக்கூடும். ஆதலால் பக்தி என்ற கயிற்றால் என் மனக்குரங்கைக் கட்டி அதைத் தங்களிடமே வைத்துக்கொண்டால் தங்களுக்கும் ஸௌகரியமுண்டு என்பதை சூசனம் செய்கிறார்.
இந்த ச்லோகத்தை எவர்கள் சொல்லி நமஸ்காரத்தைச் செய்கிறார்களோ அவர்கள் கீழ்ப்பட்ட காமாதிகளிலிருந்து விமுக்தர்களாகி மனதை சிவபாதாப்ஜத்தில் வைத்து சிவாதீனர்கள் ஆவார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே சான்று.
कपालिन् = हे कपाल धारण करने वाले !
भिक्षो = हे भिक्षुक !,
शिव = हे शिव !
विभो = हे व्यापक ईश्वर !,
स्वैरम् = स्वच्छन्द ( यह मेरा मन),
सदा = हमेशा,
मोहाटव्याम् = अविवेक के जंगल में,
चरति = घूमता है,
युवतीनाम् = युवतियों के,
कुचगिरौ = ऊँचे स्तनों पर,
नटति = नाचता है,
आशाशाखासु = इच्छाओं की शाखाओं पर,
झटिति = जल्दबाजी से,
अभितः = इधर-उधर चारों ओर,
अटति = कूदता रहता है।
अत्यन्तचपलम् = अत्यधिक चंचल,
मे = मेरे (इस),
हदयकपिम् = मन रूप बन्दर को,
भक्त्या = अपनी भक्ति रूप रस्सी से,
दृढम् = पक्का,
बद्ध्वा = वाँधकर,
भवदधीनम् = अपने अधीन,
कुरु = कर लीजिये ।
Dr.T.M.P.Mahadevan
O Siva, bearing the skull (as alms-bowl)! O the One that is all-pervading! O Mendicant! It ever roams the forest of delution, dances on the breast-hills of maidens, leaps quickly in all directions, and as it likes, from branch to branch of desires – extremely inconstant is this monkey-mind of mine! (Accepting it as my alms-offering) bind it firmly with the cord of devotion, and bring it under Thy control!
Here, the mind is compared to a monkey. Whether the Darwinian theory of man’s descent from the ape is true or not, there is doubtless similarity between the behaviour of the human mind and the roving activity of the monkey. Driven by desires, prompted by passions, the mind moves from object to object; it whirls in a wayward manner, finding no rest or peace.
The mind can be controlled through devotion to God. Among the many roles that Siva plays is the one in which He goes about as mendicant (bhiksu) with a skull for alms-bowl, begging for alms. In this verse, the Lord is implored to accept the mind-monkey as an offering. If only He would bind this monkey with the cord of devotion and keep it under control, He would receive plenty of alms.
Swami Tapasyananda
O Lord! Thou that bearest a skull in hand! Thou mendicant! Thou auspicious and all-pervading One! Accepting this monkey of my mind as my devout offering, bind it with (the cord of) devotion and bring it under Thy control – this extremely wayward monkey that always wanders in the forest of ignorance, dancing on the hill-tops of young women’s breasts, and moving about quickly in diverse directions (according to its promptings) along the branches of worldly desires.
सदा मोहाटव्यां चरति युवतीनां कुच-गिरौ
नटत्याशाशाखासु अटति झटिति स्वैरमभित: ।
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं
दृढं भक्त्या बध्द्वा शिव भवदधीनं कुरु विभो ॥ २० ॥
हे कपालिन ! – One who is holding Brahma’s skull;
हे शिव ! – Hey! Mangala swaroopane!
हे विभो ! – Hey! Sarva vyaapi!
सदा – Always (that monkey of the mind);
मोहाटव्याम् – roams in the deadly forest of अज्ञानं;
युवतीनां – young girls;
कुचगिरौ – hills of breasts;
नटति – dancing there due to कामोद्भवम्;
अशाशाखासु – In the branches of desires for sons, wives and wealth;
जटिति – in haste;
अभितः – in all four-sides;
स्वैरं – by uncontrollable likings;
अटति – roaming;
अत्यन्तचापलं – beginningless and endless waverings;
मे – my;
ह्रुदयकपिम् – that monkey of mind;
भक्त्या – by the rope of bhakti;
दृढं – firm;
बध्द्वा – tie;
भवदधीनम् – bound towards you;
कुरु – make it!
Commentary
Aum
“मन एव मनुष्याणाम् कारणं बन्धमोक्षयोः “
According to our saasthra the mind that wanders in vishyas such as women is the root of one’s entanglement in the samsaara and the mind that has anchored itself in Sivadhyaanam is the cause of his release from samsaara. A man does not need another enemy when he has a mind set at liberty. Therefore मनोनिग्रहम् alone is his road to release. A person instead of training himself in the मनोनिग्रहम् is impelled by चपल बुद्धि and thinks only of sporting with women as the ultimate pursuit. This leads him to aasaa paasams such as kaamam, krOdham, lObam, mOham, madham, maathsaryam, sthree, puthran, dhanam etc that branch off endlessly. This is the way one loses his vivEkam.
श्लेष्मोद्नारि मुखं स्रवन्मलवती नासा श्रुमल्लेचनं
स्वेदस्नापि मलामिपूर्णमभितो दुर्गन्धदुष्ठं वपुः |
अन्यद्वक्तुमशक्यमेव मनसा मन्तुं क्वचिन्नार्हति
स्त्रीरूपं कथमीद्दश सुमनसां पात्रीभवेन्मेत्रयोः ||
कामेन कान्तां परिगृह्य तद्दज्जनोSप्ययं नश्यति नष्ठद्रुष्ठि |
माम्सास्थिमज्जामलमूत्रपात्रम् स्त्रीयं रम्यतयैव पयति || (Vedaantasamgaham)
constant dripping of phlem and dirt collecting nose, blob gathering in eyes’ ends, stinky sweating, bag that collects urine and feces, unqualified to be talked of by others, full of flesh, bones and fat is the body of someone whom one calls lady and praises her as beauty par excellence – such is the way praaNis waste their janmas.
Hey! Parameswara! My mind dwells in the dense forest of अज्ञानं. And it is losing its vivekam. You have to turn my mind away from avivekam and make it do smaranam of your lotus feet. So it is incumbent on you to tie my mind which has become a vicious monkey, to your lotus feet with the rope called Bhakthi. Hey! PrabhO! You pinched off the fifth head of Brahma and is using his skull as the begging bowl. May be if you take my mind which is the monkey with you, people amused at the sight and would give you alms generously!
Hey! Sambho! My mind is constantly roaming thinking of women. My mind is an uncontrolleable monkey taming of which is insurmountable. Even if I do so how can I keep that with me constantly struggling with it?
That is the reason SankaraachaaryaaL used the word कपालिन. Hey! Parameswara! Is there anything in the world that is impossible to achieve? Aren’t you the one who is capable of doing all the kaaryams in all the times? Brahma lied to you saying that he saw your head and you immediately plucked that 5th head that told this lie! It stuck to your hand to proclaim to the world that you wont tolerate people who cheat others. Is it not the reason that you are called कपालिन?
When you go for begging as bikshaandi sometime people may not give you food. So to keep your company and to entertain the grihastas so they can give you food, I am offering you this mind of mine which is a monkey. When you take this away from me, not only you get bhiksha but I also lose my mind that haunts me!
பரந்துலகேழும் படைத்தபிரானை
இரந்துணி யென்பர்க ளெற்றுக்கிரக்கு
நிரந்தரமாக நினையு மடியா
ரிரந்துண்டு தன்கழ லெட்டச் செய்மாறே
(திருமந்திரம்)
SivOham, SivOham.
![]()