श्रीशिवानन्दलहरी -१९ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -19 – Sri Sivaanandalahari-19

.

(Published every Monday and Thursday)

श्रीशिवानन्दलहरी -१९

दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके
दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके।
मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये
वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाःखलु वयम् ॥ १९ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -19

து³ராஶாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴ப – க்³ருʼஹத்³வார – க⁴டகே
து³ரந்தே ஸம்ʼஸாரே து³ரிதநிலயே து³꞉க²-ஜநகே।
மதா³யாஸம்ʼ கிம்ʼ ந வ்யபநயஸி கஸ்யோபக்ருʼதயே
வதே³யம்ʼ ப்ரீத்திஶ்ச்சேத் -தவ-ஶிவ க்ருʼதார்தா²꞉ᳲ க²லுவயம் ॥ (19)


    दुराशा-भूयिष्ठे दुरधिप-गृह-द्वार-घटके दुरन्ते दुरित-निलये दुःख-जनके संसारे मद्‌ (तृ)+आयासं कस्य उपकृतये न व्यपनयसि वद। शिव! इयं तव प्रीतिः चेत्‌ वयं कृतार्थाः खलु।॥



पूर्वस्मिन्‌ पद्ये हरिमुखास्त्वां भजन्त इत्युक्तम्‌। भजमानाय ब्रह्मणे ईश्वरेण क्रियमाणामुपकृतिं पर्यालोच्य भजमानस्यात्मनोऽपि कृतार्थतां निश्चिनोति – दुराशेतिदुराशाभूयिष्ठे निन्दितविषयेषु आशा प्रवृत्तिः तया भूयिष्ठे बहुले अतएव दुरधिपगृहद्वारघटके दुरधिपाः दुष्टनृपतयः तेषां गृहाणि मन्दिराणि तेषां द्वाराणि प्रवेशमार्गाः तानि घटयतीति तद्घटकस्तस्मिन्‌, दुरन्ते दुर्लभः अन्तः अवसानं यस्य तस्मिन्‌, दुरितनिलये दुरितानां पापानां निलये स्थाने। अत एव दुःखजनके दुःखोत्पादके संसारे जननमरणादिप्रवाहरूपे मदायासं मम परिभ्रमणरूपं प्रयत्नं त्वद्विधेयस्य ( कस्य ) ब्रह्मणः उपकृतये तच्चिकीर्षितानुत्लङ्घनरूपायै न व्यपनयसि किम्‌ ? नापनुदसि किम्‌ ? किमिति प्रश्ने। वद ब्रूहि। इत्थमेवेति चेत्‌ ? तत्राह–इयं भक्तोपकरणविषयिका प्रीतिः प्रेमा हे शिव! तव सिद्धा चेद्‌ भजमाना वयमपि कृतार्थाः लब्धप्रयोजना भविष्यामः; खल्विति निश्चये। एकत्वे विवक्षितेऽपि “अस्मदो द्वयोश्चे”ति विकल्पेन बहुवचनम्‌, अहं कृतार्थो भविष्यामीति पर्यवसितोऽर्थः ॥१९॥


தன்னைச் சரணடைந்தவன் எனக் கருதி, பிரமனுக்கு உபகாரம் செய்யும் பரசிவனைத் தாமும் சரணடையின் கிருதார்த்தராதற்குத் தடையில்லை. பரமேச்வரனை பஜிப்பவர்கள் எல்லோரும் க்ருதார்த்தர்களேதான்  என்கின்றனர்.


हे शिव​ – ஹே ஶிவ – ஹே பரமசிவனே

दुराशाभूयिष्ठे – து³ராஶாபூ⁴யிஷ்டே² – துராசைகள் நிரம்பியதாயும்

दुरधिपगृहद्वारघटके – து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே – அவ்வாசையைத் தீர்த்துக்கொள்ள துஷ்ட அரசர்களது கிரஹத்துவாரத்தில் போய்ச் சேரவேண்டியதாயும்

दुरन्ते – து³ரந்தே – முடிவற்ற துன்பமுடையதாயும்

दुरितनिलये – து³ரிதநிலயே – பாபங்களுக்கு இருப்பிடமுள்ளதாயும்

दुःखजनके – து³꞉க²ஜநகே – துக்கத்தையே சதா உண்டு பண்ணுவதாயும் (இருக்கின்ற)

संसारे – ஸம்ʼஸாரே – இச் சம்ஸாரமாகிய பிறப்பில் (யான் உழன்றுகொண்டு துன்பப்படுவதை நீர் அறிவீர்)

मदायासम् – மதா³யாஸம் – இவ்வாறு யான் அனுபவித்துவரும் பலவித துன்பங்களை

न व्यपनयसि किम् – ந வ்யபநயஸி கிம் – அனுபவிக்குமாறு ஏற்பட்ட என் தலைவிதியை போக்கடிக்கிறீரா, மாட்டீரா?

वद​ – வத³ – சொல்லும்

அவ்வாறு பிரமன் எழுதிய தலைவிதியை நீர் துடைத்து விட்டால்,

कस्य उपकृतये – கஸ்ய உபக்ருʼதயே – உமது பக்தனான அப்பிரமனது பெருமை குறையுமென்று எண்ணி அவருக்கு உதவும் பொருட்டு (என் துன்பத்தை நீக்காமலிருக்கிறீரா?)

तव इयं प्रीतिश्चेत् – தவ இயம்ʼ ப்ரீதிஶ்சேத் – ஆயினும் இவ்விஷயத்தில் என்மீது உமக்கு அருள் எனும் அன்பு இருக்குமானால்

वयम् – வயம் – நாங்கள்

कृतार्थाः खलु – க்ருʼதார்தா²꞉ க²லு – க்ருதார்த்தர்களாக ஆகி விடுவோம் என்பதற்கு யாது தடை?


ஹே பக்தப்பிரியனே! பிரம்மதேவன் உனது உண்மைத்தொண்டன் ஆதலின், அவன், என் தலையில் எழுதிய எழுத்தைத் துடைத்தல் உமது பெருமைக்கு இழுக்காம் என எண்ணி, சாரமற்ற சம்சாரப் படுகுழியில் வீழ்ந்து தத்தளிக்கும் என் துன்பத்தை நீர் தவிர்க்கவில்லை போலும். இதனால் நீர் பக்தப்பிரியன் என்பது விசதமாய்த் தெரிகின்றது. ஆகவே, இவ்வுறுதிபற்றியே யானும்  உன்னைச் சரணமடைகிறேன்; எனக்கும் பிரமன் அடைந்த மேன்மை ஸித்தியாகட்டும்;  உனக்கும் இரக்ஷகன் (காப்பவன்) என்னும்  பெயரும் நீடூழி நிலைக்கட்டும் (என்பதாம்).

 


ஹே சிவ! அருவருக்கத்தக்க ஆசைகளால்‌ நிறைந்ததும்‌ கெட்ட வழிகளில்‌ வாழ்கின்ற ப்ரமுகர்களின்‌ வீடுகளில்‌ ஏறி இறங்கி பிழைக்கின்ற நிலை நிறைந்ததும்‌ முடிவில்லாத கெட்ட விஷயங்கள்‌ நிறைந்ததும்‌ ஸகல விதமான இன்னல்களுக்கும்‌ துன்பங்களுக்கும்‌ வாஸஸ்‌தலமாகவும்‌ துன்பம்‌ ஒன்றே நிரம்பியுமுள்ள இந்த ஸம்ஸாரத்தில்‌ என்னுடைய சொல்லவொண்ணாத்‌ துன்பங்களை நீ ஏன்‌ போக்கடிக்கவில்லை? ஒரு வேளை ப்ரஹ்மா உன்‌ பக்தனாயிற்றே, அவர்‌ பொருட்டு அவருக்கு உபகாரம்‌ செய்ய வேண்டுமென்று நீ என்‌ துன்பங்களை அகற்றாமல்‌ இருக்‌கிறாயோ என்னவோ! பக்‌தர்களிடம்‌ கொண்ட ப்ரீதியினால்‌ நீ பக்தர்களின்‌ விருப்பு வெறுப்புக்களை அனுஸரித்து நடப்பவனாக இருக்கிறாயே.  அப்படியாகில்‌ ப்ரஹ்மாவைப் போலவே நானும்‌ உனது பக்தனே. என்னிடமும்‌ உனது ப்ரீதி இருக்குமல்லவா. அப்படி இருக்கும்‌ வரை நானும்‌ என்னைப் போன்ற உனது பக்தர்களும்‌ எல்லாவிதமான லாபங்களையும்‌ அடைந்தவர்களாக ஆகிவிடுவோம்‌. இது நிச்சயம்‌.


இப்பிரபஞ்சத்தில் கெட்டவிஷயங்களில் ஆசையே மிக அதிகம்.  துஷ்டர்களுடைய வீட்டுவாசலில் ஏறி இறங்காமல் பிழைப்பதும் மிக அரிது.  இதன் முடிவைக் காண்பதும் துர்லபம்.  ஒருசிலர் முடிவைக் கண்டாலும் அது மிகக்கொடியதாகவே இருக்கிறது.  பலவித பாபங்களுக்கிருப்பிடமான இப்பிரபஞ்சம் பற்பல துன்பங்களுக்கே ஆஸ்பதமாக இருக்கிறது.  இதில் நான் படும் கஷ்டங்களுக்கு அளவே இல்லை. இதை அவசியம் தாங்கள் போக்கடிக்கவேண்டும்.  “என் பக்தனான பிரம்மதேவன் நீ கஷ்டப்படும்படி உன்னைப் படைத்து விட்டார்.  அதை மாற்றாது போனால் தான் அவருக்கு உபகாரம் செய்ததாக ஆகும்.  ஆதலால் உன் துன்பத்தை நான் போக்கடிக்கவில்லை ”  என்றால்,  ஏ பரமேசிவா,  அப்படியானால் பக்தர்களுக்கு உபகாரம் செய்வதில் தங்களுக்கு பிரீதி அதிகம் என்று ஏற்படுகிறது.  ஆம் என்றால் எனக்கு இனி கவலையில்லை.  என் காரியங்கள் எல்லாம் நிச்சியமாக சித்தியாகிவிடும்.  ஏனென்றால்,  நானும் உன் பக்தன்.  எனக்கும் உபகாரம் செய்ய தாங்கள் பிரியப்படுவீர்கள் அல்லவா?

ஹே ப்ரபோ! என்னுடைய ஸகலவிதமான அபராதங்களை எல்லாம் மேலான கருணையினால் க்ஷமித்து என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று பரமாச்சார்யாள் பரமேச்வரனை யாசிக்கிறார்கள் .  இந்த ச்லோகத்தை சொல்லி நமஸ்காரம் செய்துகொண்டு வருபவர்கள்,  பரமேச்வரனுடைய கருணையினால் நிச்சயமாக க்ருதார்த்தர்களாக ஆவார்கள் என்பதில் ஐயமில்லை என்பதற்கு இந்த ச்லோகமே சான்று.


शिव = हे शिव !,
दुरधिपगृहद्वारघटके = दुष्ट राजाओं के महलों के द्वारों पर ले जाने वाले,
दूराशाभूयिष्ठे = असदिच्छाओं से भरपूर,
दुरितनिलये = पाप के भण्डार रूप,
दुःखजनके = दुःख के जनक ( इस ),
दुरन्ते = समाप्त न होने वाले,
संसारे = संसार में,
मदायासं = होने वाले मेरे कष्ट को ( आप),
किम्‌ = क्यों,
न = नहीं,
व्यापनयसि = हराते ? ( यह ),
कस्य = किसके ,
उपकृतये = उपकार के लिये है ?,
वद = बताइये ।
चेत्‌ = यदि,
इयम्‌ = इसी में,
तव = आपकी ,
प्रीतिः = प्रसन्नता है तो,
वयम्‌ = हम ( इसी अवस्था में ),
कृतार्थाः = कृतार्थ हैं,
खलु = इसमें सन्देह नहीं ।


Dr.T.M.P.Mahadevan

Is it for benefiting Brahma that Thou wilt not remove my suffering in samsara which brims with evil desires, which leads to the doorsteps of evil rulers, which is endless, which is the home of sin, and which generates misery? Tell me, O Siva! If this be Thy pleasure, we shall, indeed, be blessed!

It is by God’s grace that one’s bad tendencies and evil nature could be changed. There is nothing that God cannot transmute. The  decrees of Fate have no validity before the grace of God.

It is to be noted that among the bad effects of evil fate is mentioned seeking the patronage of wicked rulers.

Swami Tapasyananda

Worldly life is full of evil desires; it involves servility to wicked masters; it is disastrous in the end; it is a source of sin, and productive of painful experiences. Say, why, and for whose benefit, dost Thou not remedy this misery of mine? O Lord! If it, however, contributes to Thy joy, we are, indeed, satisfied.

 


दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके
दुरन्ते संसारे दुरितनिलये दु:खजनके ।
मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये
वदेयं प्रीतिश्‍चेत्त्व  शिव कृतार्था: खलु वयम् ॥ १९ ॥

दुराशा भूयिष्ठे – full of bad desires;

दुरधिप गृहद्वारघटके – begging at the gates of bad kings;

दुरन्ते – endless of such dhukkams;

दुरितनिलये – being the abode of mahaapaapas

दु:खजनके – that generates dhukkam;

संसारे – in the samsaara of birth and death;

मदायासं – of the misery that I go through;

कस्य – of Brahma;

उपकृतये – to help out;

न व्यपनयसि किं – are you not removing them or not?

वद – please tell;

हे शिव ! – Hey! Mangalaswaroopa!

तव – to you;

इयं – this;

प्रीतिश्चेत् – if you have love for deena janas;

वयं – we;

कृतार्था: खलु – we would have profited out of janma, is it not!

Commentary

Aum

Hey! Parameswara! I have been doing the forbidden karmas plentifully and I have failed to do the good karmas that were decreed on me. Shamefully, I am ever ready to do karmas out of greed.

I do not have the desire to invite and treat adithis and saadhus in my home. Driven by ego and vile thoughts, I beg for small mercies from dhushta prabhus by singing their praise and proclaiming falsehood for truth. I do these despicable acts to protect my family. Is there no end to this samsaara dhukkam? Why are you being such an indifferent witness?

Hey! MahaaprabhO! Knowing that I am the abode of intolerable sins, knowing that I drown myself day in and day out in the misery of samsaara, what is the reason for your inaction from saving me? Are you saying that I am bound to suffer my karmas destined by Brahma? Is it because Brahma has become you devotee that you do not want to disappoint him? Am I not also your bhakthaa? Are you not supposed to save me?

The root cause of my committing sins are due to my very being born in this samsaara. Otherwise how else would I ever be committing sins? The only way out is for you to save me from this samsaara. Brahma’s ordainment that I should suffer for my past sins should not be your excuse for not saving me.

Therefore O! Parameswara! Please do not disappoint me. Excuse all my sins. Save me from the rut of the samsaara.

கிருபாநிதி இவரைப்போலே கிடக்குமோ இந்த தரணி தனிலே,
சபாபதிக்கு வேறு தெய்வம்  சமானமாகுமா ?

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading