श्रीशिवानन्दलहरी -१७ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -17 – Sri Sivaanandalahari-17

.

(Published every Monday and Thursday)

श्रीशिवानन्दलहरी -१७

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो
प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम्।
कथं पश्येयं मां स्थगयति नमःसम्भ्रमजुषां
निलिम्पानां श्रेणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥ १७ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -17

ப²லாத்³வா புண்யாநாம்ʼ, மயி கருணயா வா, த்வயி விபோ⁴
ப்ரஸந்நே(அ)பி ஸ்வாமிந், ப⁴வத³மல பாதா³ப்³ஜ யுக³லம்।
கத²ம்ʼ பஶ்யேயம்ʼ மாம்ʼ, ஸ்த²க³யதி நமஸ்ஸம்ப்⁴ரமஜுஷாம்ʼ
நிலிம்பாநாம்ʼ ஶ்ரேணிர், நிஜகநக மாணிக்ய மகுடை꞉ ॥ (17)


 

     विभो! (मम) पुण्यानां फलाद्‌ (त्‌) वा करुणया वा त्वयि प्रसन्ने अपि भवद्‌ (त्‌)+ अमल-पाद+अब्ज-युगलं कथं पश्येयम्‌? स्वामिन्‌! नमः+संरम्भ-जुषां निलिम्पानां श्रेणिः निज-कनक-माणिक्य-मकुटैः मां स्थगयति॥



त्वत्कटाक्षपतनम्‌ आभिमुख्येन विना त्वत्पादारविन्ददर्शनं न घटिष्यते। तच्च दर्शनं विघटकसामग्रीबलाद्‌ दुर्लभमित्याह- फलाद्वेति। हे विभो! सर्वव्यापक! ममेत्यध्याहारः, पुण्यानां सुकृतानां फलाद्वा, करुणया वा कृपया वा, हे स्वामिन्‌! सकलदेवतासार्वभौम! मयि (मयि) विषये त्वयि भवति प्रसन्ने सत्यपि प्रत्यक्षतः प्रसादाभिमुखे (सत्यपि) भवदमलपादाब्जयुगलं भवतः तव अमलं स्वच्छं शुद्धसत्त्वरूपमित्यर्थः, पादाब्जे पादौ अब्जे इवेत्युपमितसमासः, तयोर्युगलं द्वन्द्वं  त्वच्चरणारविन्दयुगलमित्यर्थः। अहं कथं पश्येयम्‌ ईक्षेय। नमस्संभ्रमजुषां नमसि नमस्कारे संभ्रमः ऐदम्पर्यम्‌ तज्जुषां तद्भाजां निलिम्पानां सुराणां श्रेणिः परम्परा निजकनकमाणिक्यमुकुटैः माणिक्य रत्‍नविशेषैः खचितानीति मध्यमपदलोपः। कनकानि कनकविकाराणि च तानि माणिक्यखचितानि च निजानि स्वकीयानि च तानि कनकमाणिक्यमुकुटानि च निजकनकमाणिक्यमुकुटानि तैर्मां  स्थगयति अन्तर्हितं करोति। हे देव। मम तव साक्षात्कारः कथं भवेत्‌ ? ॥ १७ ॥


இறைவனது பாதாரவிந்த தரிசனத்தின் அருமையை விளக்குகின்றார். பரமேச்வரனே தலையாய தேவன், தேவர்களுக்கு தேவன் என்பது அலங்கரித்துச் சொல்லப்படுகிறது.


हे विभो – ஹே விபோ⁴ – எங்கும் நிறைந்தவரே!

स्वामिन् – ஸ்வாமின் – எல்லாப் பொருளையும் தன் ஸ்வாதீனமாகவுடையவரே

पुण्यानाम् – புண்யாநாம் – அடியேனால் செய்யப்பட்ட புண்ணியத்தின்

फलाद् वा – ப²லாத்³ வா – பயனாகவோ

मयि करुणया वा – மயி கருணயா வா – அல்லது என்னிடத்தில் உள்ள உமது பரம கருனையாலோ

त्वयि – த்வயி – நீர்,

प्रसन्ने अपि – ப்ரஸந்நே அபி – உம்மைப் பூஜித்த மாத்திரத்தில் அவர்கட்கெதிரே தரிசனம் கொடுத்து அநுகிரஹம் செய்கிறவராய் இருக்கிறீர், இருந்தபோதிலும்

भवदमलपादाब्‍जयुगलम् – ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் – (உமது) இரண்டு பாதாரவிந்தங்களையும்

कथं पश्येयम् –  கத²ம்ʼ பஶ்யேயம் – எவ்விதம் பார்ப்பேன் நான்? (பார்க்கமுடியாது இருக்கிறேன்)

नमस्संभ्रमजुषाम् – நமஸ்ஸம்ʼப்⁴ரமஜுஷாம் – ஏனென்றால், உம்மை நமஸ்கரிப்பதில் வெகு பரபரப்புக் கொண்ட

निलिंपानाम् – நிலிம்ʼபாநாம் – தேவர்களது

श्रेणिः – ஶ்ரேணி꞉ – கூட்டமானது

निजकनकमाणिक्‍यमकुटैः – நிஜகநகமாணிக்யமகுடை꞉ – (ஸதாகாலம் உம்மைச் சுற்றியிருப்பதால்) அவர்களது தங்கத்தால் செய்யப்பட்ட மாணிக்க கிரீடங்களால்

माम् – மாம் – (நான் உம்மை பார்க்கக்கூடாதவாறு) என்னை

स्थगयति – ஸ்த²க³யதி – மறைக்கிறார்களே!


ஹே பக்தவத்சலா! எனது பல ஜன்மத்துப் பூர்வ புண்ணிய மிகுதியாலேயோ அல்லது, நீங்கள் ஆத்மகோடிகள் அனைவரையும் அவரவர் மனப்பரிபக்குவம் பற்றிப்பல  சாதனங்களைப் பின்பற்றச் செய்தும் ஆட்கொள்ளும் திருவருட் சாமர்த்தியத்தாலேயோ, நான் தங்களை அபரோக்ஷமாய் அறிவதாகிய வஸ்துநிச்சயம் செய்யும் வல்லமையைப் பெற்றிருந்தும், ப்ரத்யக்ஷமாய் உமது உருவத்திருமேனியின் திருவடித் தாமரைகளை ஒருக்காலும் தரிசிக்கப் பெற்றேனில்லை. ஏன்? காட்டிலுள்ள வாசனைமலர்களை மொய்த்துழலும் வண்டினங்களைப் போல், உமது பாதார்ச்சனையில் தேவர் குழாம் இடையீடின்றி சூழ்ந்திருப்பதாலேயோ? அறியேன். என் சங்கை தீர உண்மையை உணர்த்தி, திருவடித் தரிசனம் அருள்வாயாக.


உனது கடாக்ஷம்‌ பரிபூரணமாக கிடைக்காத எவனுக்‌கும்‌ உனது தர்சனம்‌ துர்லபமே. எங்கும்‌ நிறைந்து ஸர்வ வ்யாபியாக விளங்குகின்ற ஹே பரமேச்வர! முற்பிறவியில்‌ செய்த புண்ய பலத்தாலோ, அல்லது உனது கருணையாலோ ஹே ஸ்வாமீ! நீ என்‌ முன்‌ நேரடியாக தோற்றமளித்தாலும்‌கூட உனது ஸ்படிகம்‌ போன்ற‌ ஸ்வச்சமான திவ்ய சரணாரவிந்தங்களைக் கண்டு வணங்க முடியவில்லை. ஒப்பற்ற திவ்யரத்‌தினங்களால்‌ செய்யப்பட்ட கிரீடங்களைத்‌ தலையில்‌ அணிந்திருக்கின்‌றவர்களும்‌ உனது பாதாரவிந்தங்‌களை நமஸ்கரிப்பதற்கு மிகக்‌ குழப்பத்துடன்‌ என்‌ முன்‌, கூட்டம்‌ கூட்டமாக குழுமியிருக்கின்‌றவர்களுமான தேவர்‌களின்‌ வரிசை என்னை தர்சனம்‌ பண்ண முடியாமல்‌ உன்னை மறைத்து விடுகிறதே! நான்‌ என்ன செய்வேன்‌? எவ்விதம்‌ உன்னைக் காண்பேன்‌?


ஏ பரமேச்வர! தங்களுடைய திருவடிகளை நான் தரிசனம் செய்துவிட்டால் தங்களுடைய கடாக்ஷம் என்மேல் விழுந்து விடும்.  அதற்குமேல் யாதொரு கவலையுமிராது.  அந்தத் திருவடிகளின் தரிசனமே அரிதாக இருக்கிறதே.  நான் என்ன செய்யலாம்,  எனக் கூறுகிறார்.

நான் பல ஜென்மங்களில் செய்த புண்ணிய வசத்தாலோ, தங்களுக்கு என்னிடமுள்ள கிருபையாலோ,  தாங்கள் என்முன் ஆவிர்பவித்தபோதிலும் தங்களுடைய தரிசனத்திற்கு போட்டி போட்டுக்கொண்டு எனக்கு முன் நிற்கும் தேவர்களுடைய வரிசை, நான் தங்கள் சரணங்களை தரிசனம் செய்யமுடியாதபடி எங்களை மறைத்துவிடுகிறதே!  நான் என்ன செய்வேன்!


विभो = हे व्यापक परमात्मा !
स्वामिन्‌ = हे अधीश्वर !
वा = चाहे,
पुण्यानाम्‌ = पुण्यों के
फलाद्‌ = फल से,
वा = या,
मयि = मुझ पर,
करुणया = कृपा कर,
त्वयि = आपके,
प्रसन्ने = प्रसन्न होने पर,
अपि = भी,
भवदमलपादाब्जयुगलम्‌ = आपके निर्मल चरणकमलद्वय,
कथम्‌ = कैसे,
पश्येयम्‌ = देखूँ,
नमःसम्भ्रमजुषाम्‌ = आपको नमस्कार करने की उतावली वाले,
निलिम्पानाम्‌ = देवताओं का,
श्रेणिः = समुदाय,
निजकनकमाणिक्यमुकुटैः = अपने माणिक्यजटित स्वर्ण मुकुटों से,
माम्‌ = मुझे,
स्थगयति = ढाँप देता है ( उन्हें देख पाने से रोक देता है ) ॥


Dr.T.M.P.Mahadevan

O, the all-pervading Master! Although either on account of the fruit of meritorious deeds, or through compassion for me, Thou art graciously present, how am I to behold Thy blemishless lotus-feet? The whole gathering of gods, who press forward in their eagerness to make obeisance to Thee, prevent me (from beholding Thy feet) by the splendor of their golden tiaras set with gems.

The devotee may come into the presence of God either on account of past merit or on account of divine grace. But there is no guarantee that he will behold the holy feet of God. For, a corwd of gods is there surrounding the feet and offering obeisance to them. Added to the density of the gods is the dazzling effect of their gem-set crowns.

This is the poetic way of saying that Siva is the supreme Deity, the God of gods (deva-deva), the great God (Mahadeva).

Swami Tapasyananda

O Lord all-pervading! Even after Thy being pleased with me, either due to my meritorious works or due to Thy Grace, why is it that I cannot get a sight of Thy Holy lotus feet? For, they are hidden from me by the golden crowns studded with precious gems belonging to the crowd of celestials who prostrate at Thy holy feet in excitement.

 


फलद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो
प्रस्न्‍नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।
कथं पश्येयं मां स्थगयति नम: संभ्रमजुषां
निलिंपानां श्रेणिर्निजकनक माणिक्यमकुटै: ॥ १७ ॥

हे विभो ! –  Hey! Sarvavyaapi, paramporuLe!

पुण्यानां – of all the puNyaas;

फलद्वा -because of strength;

मयि -to me;

करुणया वा – because of kindness;

त्वयि – you;

प्रस्न्‍नेऽपि – though present to show your side glance;

हे स्वामिन् ! – Hey. Swamin! Hey, PrabhO!

भवतः – your;

अमलं – pure, Nirmalam;

पादाब्जयुगलम् – in those two lotus feet;

कथं ? – How;

पश्येय –  can I see;

नम: संभ्रमजुषां – in my haste to do namaskaaram to your holy feet;

निलिंपानां – of the Devas;

श्रेणि -gathering or community;

निजकनक माणिक्यमकुटै: – With thier kreetams made of maanikka on their head these Devas fall at your feet to do prostration;

मां -to me;

स्थगयति – the event blinds my eyes and make me shudder.

Commentary

தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.

சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ?
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
(திருவாசகம்)

This sloka highlights Siva Paadha Dharisanam. The story of Sudharsana Chakra is embedded in this sloka.

Once upon a time there was an asura by name Jalandara who by his austerities obtained a boon from Shiva that he would be invincible against anyone whom he chooses to fight. Using this boon he vanquished Indra, Brahma and even Vishnu and then subjugated all the devas and naras and ill treated them. With these great victories gone into his head he decided that he would defeat Parameswara Himself and thus marched towards Kailash. At the gate Shiva in the guise of an old man stopped Jalandara and told him that he has to prove that he is a worthy opponent to fight the Lord. Jalandara wanted to know from the old man the kind of proof that was required more than the defeat of Indra, Brahma and Vishnu in his hands. Upon this the old man drew a chakra with his foot on the sand and told Jalandara that if he could lift the chakra out of the sand that would be proof enough. Jalandara immediately gathered his intellectual prowess and decided to life the chakra and proudly lifted the chakra out of the sand. Alas! No sooner he lifted the chakra than did it spring into action and cut-off his head! Then the powerful Sudharsana chakra that was brilliant as the sun rested with Shiva.

At a later time rakshasaas were on the rise and were giving himsa to devas. Desirous of protecting the devas, Mahavishnu decided to do a sahasranaama archana to Parameswara using lotus flowers so Shiva would be pleased and give him that brilliant Sudharsana Chakra. When he said the 999th naama and placed the lotus flower at the feet of Shiva all the lotus flowers were exhausted and Vishnu was nonplussed for the 1000th flower for the 1000th naama. Suddenly he remembered that people call him Aravindaaksha (lotus eyed) and immediately he plucked one of his eyes and placed at the feet of Shiva saying the 1000th naama. Such was the devotion of Mahavishnu to Parameswara! Parameswara immediately restored Mahavishnu his eye that he placed at the feet of Shiva.

देवकार्यस्य सिद्दयर्थं दैत्यनाषाय चाश्रमम् |
सुदर्शनाक्यं चक्रम् च ददामि तव शोमनम् ||

In order for the work of Devas to attain its fuition and for the destruction of Raalshasas I am giving you this chakraayudhaa of mahaa mahimaa to so that you can do rakshaNam of the Bhakthas, said Shiva to Vishnu.

एवमुक्त्वा ददौ चक्रं सूर्यायुतसमप्रभम्|
सुदर्शनं सापादोत्थं सर्वशत्रुविनाशनम् ||||

So saying Shiva gave him the coveted Sudharsana Chakra that became the familiar weapon in the hands of Vishnu who came to be known as Chakrapaani thenon. This wonderful story is given in Shiva MahaapuraaNam.

With this Sudharshana Chakra of 1000 effugence of Surya which came out of the foot of Parameswara, Vishnu went on to save Gajendra, did the samhaara of sisupaala, saved parikshit from distruction in the womb and so on. In essence this is the Sudharsana Chakra that is destined for “परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।”.

In this sloka AachaaryaaL says: O! Parameswara! As a dheenan I am trying to submit a bilva dhaLam at your feet but all the devas have gone ahead of me in a hurry and are placing their heads with the many jeweled kireetams at your feet that blinds my eyes in their brilliance. What a surprise! That one bilva dhaLam that I sent towards your feet fell on all their heads and gave me the benefit of worshipping all the Devathaas!

Aum Namasivaaya!

SambO! Mahaadeva!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading