.
(Published every Monday and Thursday)
श्रीशिवानन्दलहरी -१३
असारे संसारे निजभजनदूरे जडधिया
भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् ।
मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण-
स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥ १३ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -13
அஸாரே ஸம்ʼஸாரே, நிஜப⁴ஜந தூ³ரே ஜட³தி⁴யா
ப்⁴ரமந்தம்ʼ மாமந்த⁴ம்ʼ, பரம க்ருʼபயா பாது முசிதம் ।
மத³ந்ய꞉ᳲ கோ தீ³நஸ்-தவ, க்ருʼபண ரக்ஷாதி நிபுண:-
த்வத³ந்ய꞉ᳲ கோ வா மே, த்ரிஜக³தி ஶரண்ய꞉ᳲ பஶுபதே ॥ (13)
पशु-पते! असारे निज-दूरे संसारे जड-धिया भ्रमन्तम् अर्थं मां परम-कृपया पातुम् उचितम्। मद् (त)+अन्यः दीनः तव कः? कृपण-रक्षा+अतिनिपुणः त्वद् (त्)+अन्यः मे त्रि-जगति कः शरण्यः?
अनीदृशस्य मम ज्ञानप्रदानेन रक्षणविधानं तव युक्तमित्याह- असार इति । हे पशुपते ! आत्मानभिज्ञपरिपालक । अजड[1] ! हे जडदेहादिभिन्न ! अत एव परम[2] ! परात् परत्वेन प्रसिद्ध ! असारे न विद्यते सारः सुखविशेषः यस्मिन् तथोक्ते निजभजनदूरे निजस्य स्वरूपस्य परमेश्वरस्य भजनम् अनुसन्धानं दूरं विप्रकृष्टं यस्मिन् तस्मिन् संसारे सम्यक् सरति विषयाननुधावत्यस्मिन्निति संसारः, तस्मिन् भ्रमन्तं सारवत्ताभ्रमेण चरन्तं । सारवत्ताभ्रमः कुत इति ? अत्राह- अन्धं आत्मानात्मविवेकशून्यं मां कृपया करुणया धिया विविक्तस्वरूपज्ञानप्रदानेन पातुं रक्षितुमुचितम् युक्तम् । अज्ञातनिजस्वसूपं मां प्राप्तात्मलाभं कुर्विति भावः । संसारतप्ताः शरण्येन मया तापान्निवर्तनीयाः त्वदन्ये सन्ति बहवः, तन्निवर्तकाश्च मदन्येऽपि सन्ति, मन्निर्बन्धेन तव किं फलमिति चेत् ? तत्राह- दीनः संसारतापतप्तः मत् मत्तः अन्यः तापात् निवर्तनीयः तव कोऽस्ति मादृशः ? न कोऽपि स्यादिति भावः। कृपणरक्षातिनिपुणः कृपणः आत्मानभिज्ञः, तद्रक्षायां तदज्ञाननिवर्तने, अतिनिपुणः अतीव समर्थः मे मम शरण्यः रक्षणार्हः अत्र जगति अस्मिन् लोके त्वदन्यः त्वत्तो भिन्नः को वा अस्ति।॥ १३॥
[1] निजभजनदूर इति, अजड इति छेदो धियेति च पदान्तरम् । जडधिया
भ्रमन्तमित्यन्ये योजयन्ति ।
[2] परमकृपयेत्येकं पदमित्येके ।
பரமேச்வர! முப்புவனங்களிலும் தீநரக்ஷகன் நீயாயிருத்தலின், இம்மூன்றிடங்களிலிலும் இரக்ஷிக்கப்படுத்தற்குரிய எளிய தன்மையுடையவனாயிருக்கும் அடியேனைக் காத்தல், நினது கடன் எனக் கூறுகின்றார்.
हे पशुपते – விவேகமற்றவர்களுக்கு ஞானத்தை அளித்து இரக்ஷிக்கின்றவரே!
असारे – ஸாரமில்லாததும்
निजभजनदूरे – (ஆத்ம ஸ்வரூபமாயுள்ள) பரமாத்மாவை பஜிக்கும் விஷயத்துக்கு தூரத்தேயிருப்பதுமான
संसारे – ஜனனமரண மென்ற ஸம்ஸாரத்தில்
जडधिया – இது நன்மை, இது தீமை என்று பகுத்தறிவு இல்லாத மூடபுத்தியினால்
भ्रमन्तम् – “ஏதோ ஸாரமிருக்கின்றது” என்ற பிரமத்தால் சுழன்று சுழன்று வருகிறவனாயும்
अन्धम् – ஞானம் எனும் தேஜஸைக் கண்டு அறியக்கூடாத குருடனாகவும் (விவேகமில்லாதவனாயும்) இருக்கும்
माम् – என்னை
परमकृपया – உமது பெருமை பொருந்திய கிருபையினால்
पातुं उचितम् – காப்பாற்றுவது உசிதமாகும். (ஏனென்றால்)
मदन्यः – என்னைக்காட்டிலும் வேறு ஒருவன்
दीनः – தீனன் (எளியவன்)
कः எவன்தான் (இருக்கிறான்?) (இவ்வுலகத்தில் ஒருவருமில்லை;)
तव – தங்களுக்கு இரக்ஷிக்கக்கூடியவனாக இருக்கின்றான்
कृपणरक्षातिनिपुणः – (ஆத்ம ஞானமற்ற) தீனர்களைக் காப்பாற்றுவதில் மிகுந்த நிபுணன்
शरण्यः – (இன்னும்) சரண் என்று அண்டினவர்களைக் காப்பாற்றும் சக்தியைப் பெற்றவர்
त्रिजगति – இம்மூவுலகத்திலும்
त्वदन्यः – உம்மைத் தவிர்த்து வேறொருவர்
मे – எனக்கு
को वा? – யார்தான் இருக்கிறார்? வேறு ஒருவரும் இல்லையல்லவா!
ஓ சர்வைச்வரியனே ! ஆராயுமிடத்து, பூவுலகம், விண்ணுலகம், கீழுலகம் என்னும் மூவுலகங்களிலும் அன்பர்கட்கு இரங்கி அருள்புரியும் வள்ளல் நின்னையன்றி வேறொருவருமில்லை என்பதும், அதுபோன்று, எவ்வுலகிலும் எனையொத்த ஏழை இல்லை யென்பதும், மிகப்பிரசித்தமாகும். இங்ஙனமிருந்தும், எனது ஊழ்வினை வசத்தால் விழலுக்கு நீர் இறைத்தவனைப் போல் ஸம்ஸாரத்தில் ஆழ்ந்து, உன்னைப்போற்றிக் கடைத்தேறாது கலங்கிநிற்கின்றேன்; ஆகவே, தாய்க்கருணைகாட்டி திக்கற்ற தமியனாம் என்னைக் காத்தல் தீனரக்ஷகனாகிய உமக்குத் தலையாயகடனாகும்.
அஞ்ஞானத்தில் மூழ்கி கிடக்கின்றவர்களுக்கு ஞானத்தை யூட்டி காப்பாற்றுகின்றவரே! ஸர்வச்ரேஷ்ட! பரமேச்வரனான உன்னை பஜிப்பதற்கு எட்டாத தூரத்தில் இருக்கின்ற இந்த நிஸ்ஸாரமான ஸம்ஸாரத்தில் ஏதோ ஓர் இன்பம் இருப்பதாக ஏமாந்து ஓடி அலைகின்றவனும் இது நித்யம், இது அநித்யமென்று பிரித்து அறிந்து கொள்ளாத குருடனுமான என்னை கருணையோடு நீ காப்பதுதான் ந்யாயம். என் ஆன்மாவை நான் அறியும்படி செய். இந்த ஸம்ஸாரத்தில் பிறந்து தவிக்கின்ற தீனனான என்னைத் தவிர வேறு யார் உன்னால் காப்பாற்றப்பட வேண்டியவர் உள்ளார்கள்? யாருமேயில்லை. பொருளை கையில் வைத்துக்கொண்டு அதன் மதிப்பை அறிந்து அனுபவிக்கத் தெரியாதவன் கிருபணனல்லவா. அவன் அல்லவோ கஞ்சன் எனப்படுகிறான். அவனைப் போலவே நானும் ஆத்மஸாக்ஷாத்காரத்தை என்னிடமே வைத்துக்கொண்டு அதை அனுபவிக்காமல் கஞ்சனாக, கிருபணனாக இருக்கிறேன். இப்படிப்பட்ட கஞ்சப் பேர்வழிகளைக் காப்பதில் நீ தான் மிக ஸமர்த்தன். இம்மூவுலகிலும் உன்னைத் தவிர எனக்கு கதி யாருமில்லை.
சொற்ப சுகங்கூட இல்லாத இந்த ஸம்ஸாரத்தில், ஆத்மாநாத்ம விவேகமற்ற நான் தங்களை பஜனம் செய்யாமல் இந்த ஸம்ஸாரத்திலேயே சுகங்களை அனுபவிக்கலாம் என்ற எண்ணங்கொண்டு இங்குமங்கும் வீணாக சுற்றிக்கொண்டிருக்கிறேன் . கிருபைபுரிந்து தாங்கள் எனக்கு ஆத்ம ஞானத்தை அளித்து என்னை இரக்ஷிக்கவேண்டும் . மூவுலங்ககளிலும் என்னைவிட துன்புற்றவனையும் தாங்கள் பார்க்க இயலாது . தங்களைத்தவிர வேறு ஒரு இரக்ஷகனையும் நான் அடையமுடியாது . ஆதலால் என்னை தாங்களேதான் இரக்ஷிக்கவேண்டும் . தங்களால் இரக்ஷிப்படவேண்டியவர்களுள் நானே தான் முதல்வன் .
கிருபணன்: – என்று இங்கு ஆத்ம ஞானமற்றவனையே குறிப்பிடுகிறார் . சாதாரணமாக கையிலிருக்கும் பொருளை உபயோகப்படுத்தாமல் கஷ்டப்படுகின்றவனை கிருபணன் எனக் கூறுவதுண்டு . தன்னிடத்திலேயே உள்ள ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவை அறியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருகிறவர்களை இங்கு கிருபணன் எனக் குறிப்பிடுகிறார் . உபநிஷத்துகளிலும் , பகவத்கீதையிலும்கூட இம்மாதிரி கூறப்பட்டிருக்கிறது .
पशुपते = हे पशुपति !
निजभजनदूरे = अपने प्राप्तव्य से अत्यन्तभिन्न,
असारे = निस्तत्व,
संसारे = संसार में,
जडधिया = ( अपनी ) मूढ बुद्धि के कारण,
भ्रमन्त्तम् = भटकते हए,
माम् = मुझ,
अन्यम् = अन्ये की,
परमकृपया = (आपकी ) अहैतुक कृपा से ,
पातुम् = रक्षा हो ( यह),
उचितम् = उचित है|
तव = आपके लिये,
त्रिजगति = तीनों लोकों में,
मदन्यः = मुझ से भिन्न,
दीनः = दीन
कः = कौन (होगा जिसपर कृपाकर आप रक्षा करें)?
वा = और,
मे = मेरे लिये,
त्रिजगति = तीनों लोकों में,
त्वदन्यः = आप से भिन्न,
कः = कौन,
शरण्यः = शरण लेने योग्य (तथा)
कृपणरक्षातिनिपुणः – दुःखी की रक्षा में कुशल (होगा)?
Dr.T.M.P.Mahadevan
O Lord of souls! It is but proper that Thou shouldst protect me through Thy great compassion – me who am blind, and who revolve foolishly in the essenceless samsaara that is far away from one’s real goal. To Thee, who can be poorer in spirit than I? And, to me, who can be a better expert than Thou, in protecting the poor and in offering refuge in all the three worlds?
The relation between the soul and God is an inseparable relation. The soul stands in need of protection; God is the supreme protector. When the soul does not realize this truthu, it relies on false props in this world. Blinded by ignorance, it revolves in samsara; and misery becomes its lot. When, however, devotion enters its heart, and it turns towards God, it receives sure succour and gets saved. The devotee is he who is convinced that God is his only help. For him, there is no saviour other than God in all the three worlds.
jada-dhiya may also be read as ajada dhiya. Then, the meaning would be: O the non-inert Spirit (ajada), Thou shouldst protect me by granting wisdom (dhi).
Swami Tapasyananda
O Thou, highest of beings! It befits Thee to save me who, stupefied by ignorance, is wallowing in hollow worldliness, far removed from the worship of Thee, the Lord of all creatures. Where is the person more miserable than I? Where is one more skilled than Thee in saving the wretched? And where in all the three worlds is another apart from Thee who is fit for one to take refuge in?
भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् ।
मदन्य: को दीनस्तव कृपणरक्षातिनिपुण
स्त्वदन्य: को वा मे त्रिजगति शरण्य: पशुपते ॥ १३ ॥
Commentary
Aum
என்போல் எளியவரும் எங்கெங்கு பார்த்தாலும்
உன் போல் வலியவரும் உண்டோ பராபரமே
(தாயுமானவர்)
शिवप्रसादेन विना न बुद्दिः शिवप्रसादेन विना न युक्तिः |
शिवप्रसादेन विना न सिद्दिः शिवप्रसादेन विना न मुक्तिः ||
Hey! PasupathE! exclaims AchaaryaaL. Who is a ‘pasu’? ‘पसयन्तीति पशवः ’ Those jeevas who take the objects sensed by the karmEndriyaas as real and suffer their lives in this samsaara are called ‘pasu’. They are bound by three paasams (literally chains) called kaamam, karmam and maayai and thus live a life of अज्ञानी.
(What is maayai? It is the inability to know the subtle secret of getting janma साफल्यम् given in the Vedantha saasthra. Annamacharya laments on the obstacles created by the maaya in the following keerthana (in Telugu language).
Ekkadi mAnusha janmam bethina phalame unnadhi nikkamu ninnE nammithi nee chithambikanU
(What is the use of getting a manusha janmam? It is now left to you)
maravanu AhArambulu maravanu samsArasukhamu maravanu indriya bhogamu mAdhava nee mAya
By your Maya do I forget eating, happiness of life, sense-pleasures…?
marachedha sugyAnambunu marachedha thatva rahasyamu marachedha guruvunu daivamu mAdhava nee mAya
But by our Maya I do forget acquiring gnana, I forget all the thathva rahasya, I forget my Guru and the God ?
viduvanu pApamu punyamu viduvanu nA durgunamulu viduvanu mikkiliyAsalu vishnuda nee mAya
And by your Maya I do not give up doing paapa and puNya karmas, I do not give up my dhurguNa as also my greed ?
vidichedha shatkaaryambulu vidichedha vAiragyambunu vidichedha Acharambunu vishnuda nee maya
By your Maya, I do not practice the shatkarmas (which are dauti, basti, neti, nauli, kapalabati and trataka), I do not practice vairaagyam, I do not practice aachaaram..
thagilEdha bahulampatamula thagilEdha bahubhandhambula thagulanu mOkshapu mArgamu thalapuna yenthainA
By your Maya, I go by the way of the mind and get entanged in relationships but the thought of Moksha never crosses my mind..
agapadi shree Venkateswara anrtharyAmi vai nagi nagi nanu nee velithi nAkA yI mAya
I surrender to you who is the antharyaami of all, why this Maaya for me, shouldn’t you save me…
What is kaama? It is the base desire in such objects as women, wealth etc.
And what is karma? It is the punya and papa done in many previous lives.
Thus being bound by these three paasam, having abhimaanam to the inert body that is made of five subtle elements from space to earth and calling it as ‘I’ and calling the objects as mine, knowing what is seen only as real and ignoring the unseen Vedic knowledge that liberates from these paasams, thus drowning endlessly in the ocean of samsaara, that praani is known as ‘pasu’. Therefore Parameswara who apportions the karmaphalas to these pasus, is known as Pasupathi.
Hey! PasupathE! There is no end for me from the eternal spin that I am dragged into with kaamam, krOdham, lObham, mOham, madham and maathsaryam. There is no release for me from the binding of wife, children, wealth, home etc. (காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்றேகுதல் என்கொலோதான்!) My constant efforts O! PasupathE! To relieve myself from these clutches only take me from the frying pan to the fire! I have not found time to think of your lotus feet because I have remained an ‘avivehi’. Hey! Parameswara! Hey! prabhO! You alone is the saranaagatha vathsalan and I am you saraanaagathan. There is none equal to you in being dheena-rakshakan in all the three worlds. Please therefore come to me and teach me the aathma-gnaanam to drench myself in sivaanandalahari.
Adding the padam हे अजडा to the words भजनदूरे जडधिया indicates only addressing of Parameswara. Therefore हे अजडा means being vilakshaNam to paancha baudhika deha that is by nature perishable ( नश्वर ). This ParamporuL keeps destroying jada dehaadhis and is capable of separating them and revealing Aatmaswaroopam. Hey! ParamporulE! please give me that ज्ञानं.
He ParamporuLe! Please do not ask me why you should save me while there are so many dheenans that you have to save me. Dont ask me why I am coming to you. Dont suggest me to go to anya devatas. I am telling you that there is no greater dheenan on earth than me. To me where will I find a more KaruNakaran than you? If you ever think of these you would never ask me such silly questions.
Therefore, Hey! PrabhO! You are alone SaraNaagatavatsalan. Keep this in your mind and teach me आत्मज्ञानं so that I do not drown in the samsaara saagaram but be immersed in Sivaanandalahari.
SivOham, SivOham.
![]()
One Response
This explanation is fantastic. I was able to recite the shloka along with the provided meaning. The audio of the shloka made it even easier to understand. The translated explanation of the shloka was exceptionally clear.