
Author: CHAKARAVARTHI RAJAGOPALACHARIYAR (RAJAJI)
अन्नं न निन्द्यात् । तद्व्रतम् ।
“உண்ணும் உணவைப் பழித்தலாகாது; இது விரதமாகும்” என்று தைத்திரீய உபநிஷத்தில் பிருகுவுக்கு அவர் தகப்பனார் உபதேசிக்கிறார்.
தற்காலத்து வைத்திய சாஸ்திர புலவர்களும் இதையே சொல்வார்கள். ஆகாரம் உட்கொள்ளும் சமயத்தில் அதை பழித்தலோ, குறை கூறலோ, சந்தேகத்தலோ ஆரோக்கிய முறையாகாது. சாப்பிடும் போது, இது நல்லது, இது ஜீரணமாகிவிடும், இது எனக்கு ஆரோக்கியம் தரும், பலம் தரும், உள்ளத்தையும் சுத்தமாக்கும் என்று எண்ணி உணவை உட்கொள்ள வேண்டும் என்பது ஆரோக்கிய சாஸ்திர நியதி. நாம் எண்ணும் எண்ணங்களுக்கு அதிக சக்தி உண்டு. புசிக்கும் போது நாம் கொள்ளும் நம்பிக்கையே உணவை நல்லதாகவும் தீயதாகவும் செய்யும்.
ஜீவன்கள் அனைத்தும் உணவில் இருந்து உண்டாகின்றன. ஜீவன்களின் உயிரை தாங்குவதும் உணவே ஆகும். இவ்வளவே அல்ல. ஜீவன்கள் அனைத்தும் முடிவில் உணவாகவே முடியும். ஒவ்வொரு தாவர வகையும் பிராணி ஜீவனும் வேறு தாவர ஜங்கம உயிர்களுக்கு ஆகாரமாய் முடியும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அறிவோம். வேரூன்றி வளரும் செடி முதலிய உயிர்களும், ஊர்ந்தும், பறந்தும், நடந்தும் செல்லும் எல்லா பிராணி வகைகளும், தம் உடல்களை ஒன்று மற்றொன்றுக்கு உணவாகவே உதவுகின்றன. இதுவே சிருஷ்டி அமைப்பு சிருஷ்டிகள்.
சிருஷ்டியில் உள்ள அனைத்தையும் உண்டாக்கிக் காப்பாற்றி, ஒன்றுக்கொன்று இன்றியமையாத சம்பந்தமுமாகின்ற இந்த “உணவு” என்னும் பொருளிலே பிரம்மத்தைக் காணலாம் என்பது உபதேசம்.
“அதோ அந்த மாமரத்தின் வடக்கு கிழகை பார். அதன் மேலிருக்கும் ஏழு நட்சத்திரங்களுக்கு பெயர் சப்தரிஷி. அதில் வால் போல் நீண்டு கிடக்கும் மூன்று நட்சத்திரங்களைப் பார்” என்று இவ்வாறு படிப்படியாக பையனுக்குச் சொல்லி, அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டுவது போல் உணவின் பேரிரகசியத்தை விளக்கி, அதிலிருந்து படிப்படியாக பிரம்மத்தை முனிவர் உபதேசிக்கிறார்.
உலக சிருஷ்டி அனைத்தையும் ஒன்றுக்கொன்று பிணைத்து கட்டும் உணவு என்ற சிறந்ததொரு பொருள் அலட்சியம் செய்யலாகாது. அதன் அருமையை அறிந்து மதித்தல் வேண்டும்.
अन्नं न परिचक्षीत । तद्व्रतम् ।
“அன்னம் ந பரிசக்ஷீத! தத்வ்ரதம்”
“உணவை எறியலாகாது; இது விரதம்” உணவு நன்றாக இல்லை என்று தள்ளக்கூடாது. நன்றாக இருந்ததையும் அளவுக்கு மிஞ்சி பரிமாறிக் கொண்டு பிறகு எறியக்கூடாது. உணவை வீணாக்குதல் கூடாது. மிக்க அருமையான பொருளை அலட்சியம் செய்யவாவது வெறுத்தலாவது ஒழுக்கமாகாது. உயிரைக் காப்பாற்றக்கூடிய உணவுப் பொருளைக் காட்டிலும் அருமையான பொருள் உலகத்தில் உண்டோ?
இந்த முக்கியமான ஒழுக்க முறையை இப்பொழுது நம் நாட்டில் ஜனங்கள் உணரவில்லை. பல்லாயிர வருஷங்களுக்கு முன் வேதாந்த ஞானத்தில் ஒரு பாகமாக உபநிஷதிலும் கூட சொல்லி விளக்கப்பட்டதாயினும் அதை இன்னும் கவனியாது மூடர்களைப் போல் நாம் நடந்து கொள்கிறோம். வேண்டிய அளவுக்கு மேலும், வேண்டாத வகைகளும் வற்புறுத்தி வற்புறுத்திப் பரிமாறுவதும், வற்புறுத்துதலை எதிர்பார்ப்பதும், உணவு முடிந்து எரியும் இலைகளில் ஏராளமான தின்பண்டங்கள் கிடப்பதும் நம் நாட்டின் கெட்ட வழக்கமாகி வருவதைப் பார்க்கிறோம்.
अन्नं न निन्द्यात् । तद्व्रतम् ।
अन्नं न परिचक्षीत ।
என்ற உபநிஷத் உபதேசத்தை நாம் இப்போதாவது கவனித்து வழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும்.
“உணவை ஏராளமாக உண்டுபண்ணு வாயாக” என்பது முனிவர் உபதேசம்.
अन्नं बहु कुर्वीत । तद्व्रतम् ।
“சோர்வு கொள்ளாதே. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு” என்கிறார் முனிவர். இதைவிட உயர்ந்த பொருளாதார உபதேசம் என்ன வேண்டும்? சமுதாயத்திற்கு உழைப்பாயாக; உணவு ஏராளமாக உண்டாக்குவதே சமூகத்திற்கு செய்யும் பேருதவி; பொருளை உண்டாக்கும் முயற்சிகளை எப்பொழுதும் செய்வாயாக; சோர்வு வேண்டாம்; இதுவே ஒழுக்கம்” என்பது உபநிஷத் வாக்கியம்.
இவ்வாறு பொருளை உண்டாக்குவாயாக என்று உபதேசித்து விட்டு தொடர்ந்தாற்போல் சொல்லுவதையும் கவனிக்க வேண்டும். பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல; மற்றவர்களுக்காக:
न कञ्चन वसतौ प्रत्याचक्षीत । तद्व्रतम् ।
“எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக; இதுவே ஒழுக்கம்.” வந்த விருந்தினருக்கு, இல்லை என்று சொல்லக்கூடாது. சோர்வற்ற முயற்சியை கொண்டு ஏராளமான உணவுப் பொருள்களை உண்டாக்கி, அதை வீண் செய்யாமல் காப்பாற்றி வைத்தால், வந்த விருந்தினரை போ என்று சொல்ல வேண்டிய அவசியம் வராது. பொருள் இல்லை என்ற தரித்திரத்தின் கஷ்டம் இராது. முயற்சியின் பயனாக செல்வம் படைத்து சிக்கனமாக வாழ்ந்தால், உலோபித்தனம் வந்து மனதைக் கவர்ந்து கொள்ள பார்க்கும்; அது கூடாது; வந்த விருந்தினரை போ என்று சொல்லாதே; எவருக்கும் இடம் கொடுப்பாயாக; அதுவே ஒழுக்கம் என்கிறார் முனிவர்.
எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால்,
உண்ணும் உணவில் குற்றம் காண வேண்டாம்
ஏராளமான உணவுப் பொருள்களை உண்டாக்கு;
உணவை வீணாக்காதே:
அனைவருக்கும் அன்னமிடு:
என்பதை உணவைப் பற்றி உபநிஷத்தின் உபதேசம் ஆகும்.
*********
अन्नब्रह्मोपासनम्
अन्नं न निन्द्यात् । तद्व्रतम् । प्राणो वा अन्नम् ।
शरीरमन्नादम् । प्राणे शरीरं प्रतिष्ठितम् ।
शरीरे प्राणः प्रतिष्ठितः । तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् ।
स य एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति ।
अन्नवानन्नादो भवति । महान्भवति प्रजया
पशुभिर्ब्रह्मवर्चसेन । महान् कीर्त्या ॥ १॥
इति सप्तमोऽनुवाकः ॥
Do not blashpheme food, that shall be your vow. Prana is food. Body is the eater of food. The body is fixed in Prana. The Prana is fixed in the body. Thus food is fixed in food. He who knows that food is fixed in food, becomes one with Brahman. He becomes possessed of food and he becomes the eater of food. He becomes great in progency, in cattle wealth and in the splendor of Brahmana-hood. He becomes great in fame.
अन्नं न परिचक्षीत । तद्व्रतम् । आपो वा अन्नम् ।
ज्योतिरन्नादम् । अप्सु ज्योतिः प्रतिष्ठितम् ।
ज्योतिष्यापः प्रतिष्ठिताः । तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् ।
स य एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति ।
अन्नवानन्नादो भवति । महान्भवति प्रजया
पशुभिर्ब्रह्मवर्चसेन । महान् कीर्त्या ॥ १॥
इत्यष्टमोऽनुवाकः ॥
Do not reject food, that shall be your vow. Water is food. Fire is the food-eater. Fire is fixed in water. Water is fixed in fire. So food is fixed in food. He who knows that food is fixed in food, stands forever, established well. He becomes the possessor of food and he becomes the eater of food. He becomes great in progency, in cattle wealth and in the splendor of Brahmana-hood. He becomes great in fame.
अन्नं बहु कुर्वीत । तद्व्रतम् । पृथिवी वा अन्नम् ।
आकाशोऽन्नादः । पृथिव्यामाकाशः प्रतिष्ठितः ।
आकाशे पृथिवी प्रतिष्ठिता ।
तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् ।
स य एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति ।
अन्नवानन्नादो भवति । महान्भवति प्रजया
पशुभिर्ब्रह्मवर्चसेन । महान् कीर्त्या ॥ १॥
इति नवमोऽनुवाकः ॥
Accumulate plenty of food, that shall be your vow. The Earth is food. Akasha is the food-eater. In the Earth is fixed the Akasha. In the Akasha is fixed the Earth. So food is fixed in food. He who knows that food is fixed in food, stands forever, established well. He becomes the possessor of food and he becomes the eater of food. He becomes great in progency, in cattle wealth and in the splendor of Brahmana-hood. He becomes great in fame.
सदाचारप्रदर्शनम् । ब्रह्मानन्दानुभवः
न कञ्चन वसतौ प्रत्याचक्षीत । तद्व्रतम् ।
तस्माद्यया कया च विधया बह्वन्नं प्राप्नुयात् ।
अराध्यस्मा अन्नमित्याचक्षते ।
एतद्वै मुखतोऽन्नꣳराद्धम् ।
मुखतोऽस्मा अन्नꣳराध्यते ।
एतद्वै मध्यतोऽन्नꣳराद्धम् ।
मध्यतोऽस्मा अन्नꣳराध्यते ।
एदद्वा अन्ततोऽन्नꣳराद्धम् ।
अन्ततोऽस्मा अन्न राध्यते ॥ १॥
Do not turn away anyone who seeks shelter and stay. This is the vow. Let one therefore, acquire plenty of food by any means whatsoever. They should say: ‘Food is ready.’ If the food is prepared in the best manner, the food is givn to him (the guest) also in the best manner. If the food is prepared in the medium manner, food is also given to him in the medium manner. If food is prepared in the lowest manner, the same food is also given to him in the lower manner. he who knows thus, will obtain all the rewards as mentioned above.
Source: shlokams.org
O Parameshwara. Do I follow any of them? मुझे सुधार् दो।
![]()