श्रीशिवानन्दलहरी -११ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -11 – Sri Sivaanandalahari-11

.

(Published every Monday and Thursday)

श्रीशिवानन्दलहरी -११

वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो
नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।
यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते
तदीयस्त्वं शम्भो भवसि भवभारं च वहसि ॥ ११ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -11

வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ
நரோ வா ய꞉ கஶ்சித்³ப⁴வது, ப⁴வ கிம்ʼ தேந ப⁴வதி ।
யதீ³யம்ʼ ஹ்ருʼத்பத்³மம்ʼ, யதி³ ப⁴வத³தீ⁴நம்ʼ பஶுபதே
ததீ³யஸ்த்வம்ʼ ஶம்போ⁴, ப⁴வஸி ப⁴வபா⁴ரம்ʼ ச வஹஸி ॥ (11)


 

भव! वटुः वा गेही वा यतिः+अपि जटी वा तद्‌(त्)+इतरः नरः वा यः कश्चिद्‌ भवतु। तेन किं भवति। पशुपते! यदीयं हृत्‌-पद्मं भवद्‌ (त्‌)+अधीनं यदि शंभो! त्वं तदीयः भवसि भवभारं वहसि च। 



उच्चनीचजन्मभिः स्वेष्टाविघातमुक्‍त्वा हृदयस्य शिवाधीनतामन्तरेण तत्तदाश्रमधर्मं प्राप्यापि फलाभावमाह्‌ – वटुर्वेतिवटुर्वा ब्रह्मचारी वा, गेही वा गृहस्थो वा, यतिरपि संन्यासी वा, जटी वा जटाधारी वा, तदितरः तदन्यः, यः कश्‍चिद्वा नरः मर्त्यः भवतु भूयात्‌ । तेन कारणेन हे भव ! शंभो ! किं कीदृशं कार्यं भवति ? न किमपीत्यर्थः। हे पशुपते ! सकलभूताधिनायक ! यदीयं यत्सम्बन्धि हृत्पद्मं हृदयकमलं भवदधीनं यदि त्वत्स्वाधीनं चेत्‌ तदीयः तत्सम्बन्धी त्वं भवान्‌ भवसि असि। हे शंभो! त्वं भवभारं संसारभारं च वहसि धारयसि । ब्रह्मचर्याद्याश्रमचतुष्टयेऽपि जनः त्वय्यर्पितमनाश्‍चेत्‌ तत्फलं लभते, नो चेन्‍नेत्यर्थः। यः पुमान्‌ चित्तं त्वदधीनं करोति तस्य चतुर्वर्गफलं करतलामलकमिति च । भवभारमित्यनेन जननमरणप्रवाहराहित्यं भवतीति च मन्तव्यम्‌ ॥ ११॥


ஒருவன் ஆச்ரமம் நான்கில் எதை அடையினும், அடைந்ததைச் சரிவர அனுஷ்டிக்கினும், அதனால்மட்டும் அடையும் பயன் சிறந்ததாகாது. மனதைச் சிவன்பால் அர்ப்பணம் செய்யின், அவன் அடையாதது யாதொன்றுமில்லை – என்பதை விளக்குகின்றார்.


भव​ – ஹே பரமசிவ!

वटुः वा – பிரம்மச்சரியனாகவோ

गेही वा – கிருஹஸ்தனாகவோ

यतिःअपि – ஸந்நியாசியாகவோ அல்லது

जटी वा – ஜடையையுடைய வானப்ரஸ்தனாகவோ

तदितरः – இவர்களைச் சேராத வேறு

यः कश्चिद् नरः वा –  எதாவது ஒரு மனிதனாகவோ

भवतु – இருக்கட்டும்

तेन​- அதனால்

किम् भवति? –  என்ன பயன் உண்டாகும்?

पशुपते – ஹே லோகநாயக!

यदीयम् – எவனுடையதான

हृत्पद्मम् – தனது மனதெனும் தாமரைப் பூவானது

भवदधीनम् यदि – உமக்கு ஸ்வாதீனமாய் இருக்கிறதோ,

तदीयः – அப்போது அவனைச் சேர்ந்தவராக

त्वम् – நீர்

भवसि –  ஆகிறீரன்றோ?

भवभारम् च​ – அவனது ஸம்ஸாரமென்ற ஜனனமரண பாரத்தையும்

वहसि – சுமக்கிறீர்.

शम्भो – சம்புவே! இதன் காரணம் நீர் உயர்ந்த சுகக்காரணனாயிருப்பதுவே.


ஹே பரமேசா! ஒருவன் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், ஸந்நியாசம் முதலிய ஆச்ரம தர்மங்களை மட்டும் கடைபிடிப்பதால் கிட்டும் பயன் அற்பமேயாம். ஜீவர்களின் ஒப்பற்ற தலைவன் நீயொருவனே என்பதுணர்ந்து நிஷ்காமியமாக அவன் மனத்தை உன் தாளில் அர்ப்பணஞ்செய்து, தஞ்சம் புகுவானேயாகின், அவன் குடும்பாதி ஸகல காரியங்களையும் நீயே பரித்துச் செய்யும், உனது பெருங்கருணைப்பெருக்கை அவன் அடைந்து தன்யனாகின்றான்.


ஹே சம்போ ! உயர்ந்த பிறவி தாழ்ந்த பிறவி என்பது முக்யமல்ல. உன்னை இதயத்தே வைத்து த்யானம்‌ செய்யாத ஓர்‌ ப்ரஹ்மசாரியோ, க்ருஹஸ்தனோ அல்லது மூன்றாவதான வானப்ரஸ்த ஆச்ரமியோ, அல்லது அதையும்‌ தாண்டி எல்லாவற்றையும்‌ துறந்த ஸன்யாஸியோ அல்லது வேறு யாராகவோ இருக்கட்டும்‌. ஹே பசுபதே ! அதனால்‌ என்னதான்‌ நடக்கப்‌ போகிறது? ஒன்றும்‌ நடக்கப்‌ போவதில்லை. தாமரை போன்ற எவருடைய ஹ்ருதயம்‌ சதா உன்னையே நினைத்து நினைத்து நிலை பெற்றிருக்கிறதோ நீ அவராகவே ஆகிவிடுகிறாய். ஹே பரமேச்வர! அவருடைய ஸம்ஸார பாரத்தையும்‌ நீயே தாங்கி அவரை இன்புறச் செய்கின்றாய்‌.

பக்திக்கு ஆச்ரமப் பாகுபாடுகள், பிறப்புப் பாகுபாடுகள் இல்லை.


ஒருவனுடைய மனது ஸ்ரீ பரமேச்வரனிடம் ஈடுபடவில்லை யென்றால், பிருஹ்மசர்யம், கார்ஹஸ்த்யம் முதலிய ஆசிரமங்களின் தர்மங்களை முறைப்படி அவன் அனுஷ்டித்தும், பயனில்லை. மனது ஈடுபட்டிருக்கும் பக்ஷத்தில் ஆசிரம தர்மானுஷ்டானத்தின் பூர்ண பயனையும் அவன் அடைவதுடன்,  ஸம்ஸார வாழ்க்கையையும் சுகமாகவே நடத்திவருவான்.


भव = हे भगवन्‌ !

नरः = व्यक्ति,

वटुः = ब्रह्मचारी,

वा = या,

गेही = गृहस्थ.

वा = या,

यतिः = संन्यासी,

अपि = या,

जटी = जटाधारी,

वा = या,

यः = जो,

कश्चिद्‌ = कोई भी (अव्रती),

भवतु = होवे,

तेन = उससे ( व्रती या अव्रती होने से),

किम्‌ = क्या,

भवति = होता है ?,

पशुपते = हे जीवों के अधिपति !

शम्भो = हे शम्भु !

यदीयम्‌ = जिसका,

हृत्पद्मम् = हृदयकमल,

यदि = अगर,

भवदधीनम्‌ = आपकी अधीनता स्वीकार लेता है, (तर्हि = तो),

त्वम्‌ = आप,

तदीयः = उसके,

भवसि = हो जाते हैं,

च = और ( उसका ),

भवभारम्‌ = संसाररूप बोझ,

वहसि = ढो लेते हैं ।


Dr.T.M.P.Mahadevan

O Lord! Let one be a student, a householder, a monk, an ascetic, or some other individual – of what use is it? O Lord Souls! O Sambhu! when the heart-lotus of a person becomes thine, Thou dost become his; and Thou dost bear the burden of his life.

For the true devotee, not only does the kind of next birth not matter, but also the condition or state in which he is in the present birth. Devotion knows no distinctions of orders of life. The devotee may be a student, householder, ascetic or monk. These stages of life make no difference to him.

Narada says in his Bhakti-sutra, “Among the devotees there is not the disctinction based on caste, learning, beauty, family, wealth, profession, and the rest (nasti tesu jaati-vidya-rupa-kula-dhana-kriyadi-bhedah – नास्ति तेषु जातिविद्यारूपकुलधनक्रियादिभेद:)

Swami Tapasyananda

O Lord! What does it avail a man to be a student, a householder, or an anchorite, a mendicant, or one outside these four orders? O Master of all beings! Bestower of all good! He whose heart-lutus comes in Thy possession – to him Thou becomes his ‘own’, and Thyself bearest his wordly burdens.


वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो
नरो वा य: कश्‍चिद्भवतु भव किं तेन भवति ।
यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पसुपते
तदीय-स्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥ ११ ॥

हे भव ! – Hey! Parameswara!

वटुर्वा – if it be a Brahmachari;

गेहीवा – or Grihastha;

यतिरपि – or a Sanyasi;

जटीवा – or a Vanaprastha with matted locks;

तदितर: – or the one who is not one of the above;

य: कश्‍चित्  नरोवा – Be someone undescribed;

भवतु – let it be so;

तेन – being so;

किं – what;

भवति – has to happen;

हे पशुपते – Hey! Pasupathe!

यदीयं – of which man;

हृत्पद्मं – the lotus of his heart;

भवदधीनं यदि – If he happens to be with you 24/7;

हे शंभो – Hey! Parmeswara;

त्वं – You;

तदीय: – you would belong to him;

भवसि – And be it so;

भवभारं च – the brunt of his weight called samsaara;

वहसि – you carry!

Commentary:

Aum

“प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥ “

Without having performed punya karma in ever so many previous births, praanis cannot hope to have bhakthi to Parameswara. The same is said in Bhagavat Geetha:

“मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु । ममेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः ॥

A person who surrenders the lotus flower of his mind becomes a ‘bandhu’ to Parameswara. In this sloka (of Sivaanandalahari) AachaaryaaL uses the word ‘तदीय:’. The importance of the word is, instead of saying that the bhaktha belongs to Him Parameswara says that He belongs to the bhaktha putting the importance on the bhaktha. This way He underscores the fact that He is ‘भक्तपरादीनन’. This shows the ‘भक्तवात्सल्यम् ‘ of Parameswara.

Also AachaaryaaL says, ‘भवभारं च वहसि”. The thaathparyam of this is as follows:

‘भवभारं च’ means it is the flood of janana-maraNa. We have to understand that Parameswara brings an end to this flood and gives Sivaayujya padhavi to the bhaktha. This is the swaarasyam of ‘च ‘ kaaram. Instead of knowing this secret अज्ञानी  think that by being wedded to their aasrama they can attain sreyas. Those stages of life such as brahmacharyam, grihasthaasramam, vaanaprastham and sanyaasam by themselves cannot lead to saayujya padhavi. On the mind that has found its layam of Sivapaadhaabjam can lead to Moksham. That is why Saakya Naayanaar says:

எந்தனிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள்.

Bhagavaan does not see the aasrama from which a person comes from rather it is the mind of the bhaktha that has been surrendered to Him.

Aum Namasivaaya!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading