.
श्रीशिवानन्दलहरी -०९
गभीरे कासारे विशति विजने घोरविपिने
विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः ।
समर्प्यैकं चेतःसरसिजमुमानाथ भवते
सुखेनावस्थातुं जन इह न जानाति किमहो ॥ ९ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -09
க³பீ⁴ரே காஸாரே விஶதி விஜநே கோ⁴ரவிபிநே,
விஶாலே ஶைலே ச ப்⁴ரமதி குஸுமார்த்த²ம்ʼ ஜட³மதி꞉ ।
ஸமர்ப்யைகம்ʼ சேதஸ் ஸரஸிஜ-முமாநாத² ப⁴வதே
ஸுகே²நாவஸ்தா²தும்ʼ, ஜந இஹ ந – ஜாநாதி கிமஹோ ॥ (9)
जड-मतिः कुसुमार्थं गभीरे कासारे विजने घोर-विपिने विशाले शैले च भ्रमति। उमानाथ! एकं चेतः+सरसिजं भवते समर्प्य सुखेन अवस्थातुम् इह जनः न जानाति किम्? अहो!
येन केनाप्युपायेन भवत्प्रसादः संपादनीय इत्युक्तम् । तत्र सुलभ उपायः क इति; तत्राह- गभीर इति । गभीरे अगाधे कासारे सरसि विजने जनरहिते घोरविपिने घोरे व्याघ्रादिभिर्भयङ्करे विपिने अरण्ये विशाले विस्तीर्णे शैले पर्वते च जडमतिः असुलभोपायज्ञः कुसुमार्थं कुसुमं पुष्पम् अर्थ: प्रयोजनं यस्मिन् कर्मणि तद् यथा भवति तथा भ्रमति सञ्चरति। हे उमानाथ ! पार्वतीपते ! एवं संवोधनं सशक्तिकं महादेवमुपासनीयं द्योतयति। एकम् एकत्वसंख्याकम् चेतस्सरसिजं चेत एव सरसिजं पद्मं; वन्यपुष्पवद् बहुत्वाश्रयसंपादनक्लेशो न भवतीति भावः। भवते तुभ्यं समर्प्य प्रदाय जन इह एकत्र अवस्थातुं निश्चलो भवितुं न जानाति न बुध्यति। किमहो किमेतदाश्चर्यकरमित्यर्थः। दुःखकराल्पफलकबहुदेशभ्रमणापेक्षया सुखकरबहुफलकैकदेशावस्थानाज्ञानमाश्चर्यं जनयतीति भावः ॥ ९ ॥
சிவனருளைப் பெறுதற்குச் சிறந்த சாதனம் கூறுகின்றனர்.
उमानाथ – ஹே உமாபதியே!
जडमतिः – சுலபமான உபாயத்தை அறியாத மூடர்கள்
कुसुमार्थम् – புஷ்பங்களைச் சேகரிக்க
गभीरे – ஆழமான
कासारे – மடுக்களிலும்
विशति – செல்லுகிறார்கள்
विजने – ஜனசஞ்சாரமில்லாத
घोरविपिने – பயங்கரமான காடுகளிலும்
विशाले – விசாலமான
शैले च – மலைகளிலும்
भ्रमति – சுற்றித் திரிகிறார்கள்.
जनः – ஜனங்கள்
एकम् – ஒரே வஸ்துவான
चेतः सरसिजम् – மனதான தாமரைப் புஷ்பத்தை
भवते – உம்மிடம்
समर्प्य – ஸமர்பித்து
इह – இவ்விடம்
सुखेन – சுகமாக
अवस्थातुम् – இருப்பதற்கு (அவர்கள்)
न जानाति – அறியவில்லையே!
किम् अहो- ஏன்?என்ன மதியீனம்! இது வெகு ஆச்சரியமே!
ஹே சம்போ! என்ன அதிசயம்! சிலர் ஸ்தல பேதத்தால் ஸித்தியை அடையலாமென்று எண்ணினவராய், மடுவிலும், மலையிலும், காட்டிலும், தனித்து நின்று உம்மை அர்ச்சிக்க மலர்களைத் தேட முற்படுகின்றனர்; அத்தகையர், ஸதா ஞானானந்த வடிவமாய், எப்போதும் தம்மை அகலாதிருக்கும் தலைவனாகிய உமக்கு, மதித்தற்கரிய மனமாகிய தாமரைமலரையர்ப்பித்து நிர்விகற்ப ஸமாதியில் நிச்சலமாய் நிஷ்டை கூடி நிரதிசயாநந்த நிலையில் நிற்கும் நிகரற்ற உண்மைச்சுகத்தை (மோக்ஷஸுகத்தை) யுணராதவரேயாவர்.
எவ்விதமாவது உனது ப்ரஸாதத்தை அடைய விரும்பி அதற்குச் சுலபமான வழி யாது என அறியாமல் உன் பாதார விந்தங்களை பூஜிப்பதற்காகப் புஷ்பத்தைத் தேடித்தேடி மூடன் மிக ஆழமான குளத்திற்கு செல்கிறான். அது போலவே கொடூர மிருகங்கள் நிறைந்த பயங்கரமான காட்டில் புஷ்பத்தைத்தேடி அலைகிறான். மிக விசாலமாக உயர்ந்தும், பரந்தும், நீண்டும் கிடக்கின்ற மலைச்சாரல்களிலும் சுற்றி சுற்றி வருகிறான். இது அவசியமேயில்லை. ஏனெனில் பயன் மிககுறைவு, சிரமம் அதிகம், பராசக்தி ஸஹிதம் உபாஸிக்கப்படவேண்டிய ஹே பார்வதீபதே ! மனம் என்ற தாமரை மலர் இங்கேயே இருக்கிறது. இந்த மலரை உனக்கு அர்ப்பணம் செய்வதில் ச்ரமமேயில்லை. இந்த மலரைத்தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை, மனமாகிற புஷ்பத்தை உனக்கு சமர்ப்பித்து ஒரே இடத்தில் நிலைபெற்று ஆடாமல் அசையாமல் சுகமாக இருக்கலாம். அதிக பயனை அளிக்க கூடிய மலரும் இதுவே. இதை மூடர்கள் அறியாதது ஆச்சரியமன்றோ !
ஸ்ரீபரமேச்வரனை பஜனம் செய்ய சுலபமான ஓர் உபாயத்தை இங்கு எடுத்துரைக்கிறார். பரமேச்வரன் வேண்டுவது பல மலர் பூக்களன்று. மனிதனின் இதய கமலத்தையே அவர் வேண்டுகிறார். அது நம்மிடமே இருக்கின்றது. அதைக் கொண்டுவர வேறு இடத்திற்குச் செல்லவேண்டிய அவசியமே இல்லை. அந்த ஒரே புஷ்பத்தை பரமேச்வரனுக்கு அர்ப்பணம் செய்தால், ஒரே இடத்திலேயே மோக்ஷசுகம் என்ற நித்ய சுகத்தைப்பெற்று ஜனன மரணமற்ற ஒரே நிலையிலேயே இருக்கலாம். இந்த சுலபமான உபாயத்தை மூடஜனங்கள் அறியாதது மிகவும் ஆச்சரியம்.
கருத்து: மனதை அர்ப்பணம் செய்யாமல் பல புஷ்பங்களைப் பறித்து அர்ப்பணம் செய்தும் பயனில்லை.
உமாநாத: இவ்வாறு ஸம்போதனம் செய்வதால் பராசக்தியுடன் கூடிய ஸ்ரீபரமேச்வரனையே உபாசிக்கவேண்டுமென்பதை சூசனம் செய்கின்றார்.
उमानाथ = हे उमापति !
जडमतिः = स्थूल बुद्धिवाला,
जनः = व्यक्ति,
कुसुमार्थम् = पुष्पों के लिये,
गभीरे = गहरे,
कासारे = तालाब में ,
विशति = घुसता है,
विजने = जहाँ मनुष्य नहीं वसते ऐसे,
घोरविपिने = गहरे जंगल में,
च = और,
विशाले = बडे,
शैले = पहाड़ पर्
भ्रमति = घूमता है ।
अहो = आश्चर्य है !
भवते = आपके लिये,
एकम् = एक
चेतःसरसिजम् = हदय कमल
समर्प्य = समर्पित कर,
इह = संसार में,
सुखेन = सुख से,
अवस्थातुम् = रहना,
किम् = क्यों,
न = नहीं ,
जानाति = जानता ।
Dr.T.M.P.Mahadevan
O Lord of Uma! One gets into a deep tank, or enters into a fearful uninhabited forest, or rams on a high mountain in order to gather flowers – what a fool! Lo, he does not know how to live in happiness here, offering unto Thee the single heart-lotus!
Flower-offering to God as an act of worship has but asymbolic significance. God does not need to be decked with flowers. He is the supreme Beauty and does not require to be embellished. When the devotee offers a flower, it only means that he is offering his heart to God. Every ritual connected with worship has an inner meaning. What very often happens is that the inner meaning is forgotten and only the outer form is observed. In the present instance, flowers are offered to God with the erroneous belief that flowers please God. One may go through enormous hazards and hardships in order to pluck flowers. But it is evident that all this endeavour is vain. What God wants is not a profusion of physical flowers but the single heart-lotus of the devotee.
Swami Tapasyananda
Dull-witted man, wandering about for flowers (for Thy worship), goes to deep lotus lakes, to uninhabited dense forests and to high mountains. Lo! he does not know how to be happy in life by offering unto Thee, the Lord of Uma, the unique lotus of his own heart.
गभीरे कासारे विशति विजने घोरविपिने
विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमति: ।
समर्प्यैकं चेतस्सरसिज-मुमानाथ भवते
सुखेनावस्थातुं जन इह न जानाति किमहो ॥ ९ ॥
हे! उमानाथ! – Hey! Umanatha!
जन – people;
कुसुमार्थं – to obtain the flowers;
गभीरे – In deep;
कासारे – in ponds;
विजने – where people dont tred;
घोरविपिने – in dangerous forests;
विशाले – wide;
शैले च – in mountains;
विशति च – they enter;
भ्रमति च – they roam;
ततः – for that reason;
जनः – people;
जडमति – they become men of indiscrimination;
भवति – they become;
एकः – being one;
चेतः – own mind;
सरसिजं – with that lotus flower;
भवते – for your sake;
समर्प्य – they pourout, surrender;
इह -in the same place;
सुखेन – with all the Ananda;
अवस्थातुं – to stay;
किं – why?
इयं लोकः -this loka;
न जानाति – they cannot comprehend;
अहो ! -what a surprise!
Commentary
Aum
காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிரயநீ ரமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக்க் காட்டினோமே
(திருநாவுக்கரசர் தேவாரம்)
“अन्तर्मुख- समाराध्या बहिर्मुख- सुदुर्लभा” (Lalitha Sahasranaamam)
What is the Shiva Pooja that is superior? It is the offering of one’s mind as a lotus flower at the feet of Parameswara. No other flower can give anyone greater satisfaction than offering his own mind as pushpaanjali. In fact the great Nayanaar says that from a ripe Bhaktha Sri Parameswara Himself takes away (‘steals’ he says!) the mind. (உள்ளம் கவர் கள்வன்).
It is said that if a person meditates on Bhagavan even in chathru bhaavam (nindhaa sthOthram) Parameswara gives him anugraham. Bhagavan is concerned only about one’s smarana and not the reason behind it.
Our saasthras say that bhandha is caused by the mind sunk in vishayas and the mind that has developed virakthi to the vishayas causes one’s Moksha. That is why the lotus flower of one’s mind should be the best offering at the feet of Parameswara. This is the superior way to please the God because nothing else pleases Him most except your mind that is dedicated to Him.
This is the secret. Without knowing this secret people fetch flowers by going into deep lakes, dark terrible forests, tall mountains etc and risk themselves when they have Lord’s favourite flower with themselves all the time. Aho! Aascharyam! exclaims Aadhi Sankara. That is why AachaaryaaL calls these people sorrowfully, as Jatamathi. Instead of surrendering the mind at the feet of Parameswara these jatamathis put it to work to worry about where the flowers are and how to fetch them and so on thus taking the mind away from the smarana of Parameswara.
Again in this sloka AachaaryaaL calls out to “Umaanaathaa” to reiterate that none should, on any account, separate Shiva and Shakthi. It is worth noting that he started off Sivaanandalahari by invoking Ambaal as “Kalaabhyaam”. Also in another sloka he called Shiva as “Saambam” (Ambaa Samedhan).
This sloka uges everyone to surrender the lotus flower of their mind to the Lotus Feet of Shiva who is Umanaatha, Umaapathi and SaambaSiva.
![]()