.
श्रीशिवानन्दलहरी -०७
मनस्ते पादाब्जे निवसतु वचः स्तोत्रफणितौ
करौ चाभ्यर्चायां श्रुतिरपि कथाकर्णनविधौ ।
तव ध्याने बुद्धिर्नयनयुगलं मूर्तिविभवे
परग्रन्थान्कैर्वा परमशिव जाने परमतः ॥ ७ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -07
மநஸ்தே பாதா³ப்³ஜே, நிவஸது வசஸ் ஸ்தோத்ர ப²ணிதௌ,
கரௌ சாப்⁴-யர்சாயாம்ʼ, ஶ்ருதிரபி கதா²-கர்ணந விதௌ⁴ ।
தவ த்⁴யாநே பு³த்³தி⁴ர்-நயநயுக³லம்ʼ மூர்த்தி விப⁴வே,
பரக்³ரந்தா²ந் கைர்வா பரமஶிவ ஜாநே பரமத꞉ ॥ (7)
परम-शिव! ते पाद+अब्जे मनः निवसतु। स्तोत्र-फणितौ वचः (निवसतु)। अभ्यर्चायां करः (निवसतु)। कथा+आकर्णन-विधौ श्रुतिः अपि (निवसतु)। तव ध्याने बुद्धिः (निवसतु)। मूर्ति-विभवे नयन-युगलं (निवसतु)। पर-ग्रंथैः अतः परं किं वा जाने (परमतः किं वा जाने)?
एवं बुद्धिमनुनीय मनआदीनां करणानां परमशिवकैङ्कर्यपरतां तत्कैङ्कर्याद् बहिरङ्गभूतग्रन्थावलोकनापह्नवेन प्रार्थयते- मनस्त इति । हे परमशिव ! ते तव पादाब्जे चरणाम्भोजे मनः चित्तं निवसतु । वचः वागिन्द्रियं स्तोत्रफणितौ स्तूयतेऽनेनेति स्तोत्रं स्तावकग्रन्थः तत्फणितौ तदुच्चारणे निवसतु चिरं तिष्ठतु । वागिन्द्रियं शिवस्तोत्राभिलाषि भवत्वित्यभिप्रायः । करः हस्तेन्द्रियम् अभ्यर्चायां त्वत्पूजाविधाने निवसतु । हस्तेन्द्रियं त्वदभ्यर्चनपरं भवत्वित्यभिप्रायः । चकारेण अनुक्तमपि शिवगुणगणलेखनं समुच्चीयते । श्रुतिः श्रोत्रेन्द्रियं कथाकर्णनविधौ चरित्रश्रवणविधाने निवसतु । श्रोत्रेन्द्रियं तव चरित्रश्रवणे व्याप्रियतामिति भावः । बुद्धिः निश्चयात्मकान्तःकरणवृत्तिः ध्याने त्वद्विषयकप्रत्ययावृत्तौ निवसतु । त्वामेव सदा ध्यायत्विति भावः। नयनयुगलं नेत्रेन्द्रिययुग्मम् । एकस्यापीन्द्रियस्य युगलत्वाभिधानं गोलकाभिप्रायेण । मूर्तिविभवे तनुशोभातिशये निवसतु । दिन्यमङ्गलविग्रहरूपं पश्यत्वित्यभिप्रायः । उक्तरीत्या षट्त्सु करणेषु व्याप्रियमाणेषु अतः परम् इत उत्तरकालं कैर्वा करणैः । वा शब्दः प्रश्ने । परग्रन्थान् उक्तार्थाद् बहिरङ्गभूतान् ग्रन्थान् जाने ज्ञास्यामि ? “वर्तमानसामीप्य” इति भविष्यदर्थे लट् । उक्तकरणजातं सदा त्वदेकशरणं भवत्विति घट्टा र्थः॥७॥
திரிகரணங்களும் சிவசம்பந்தத்தில் ஈடுபட்டுவிடின், பிற (பேத) சாஸ்திரங்களின் சம்பந்தம் அற்று (சம்பந்தம் இல்லாமலிருப்பதால் ) பயன் உண்டாகும் எனக் கூறுகின்றார்.
परमशिव! – ஹே பரமசிவனே!,
मनः – இந்த மனமானது,
ते – உம்முடைய,
पादाब्जे – தாமரைத் திருவடியில்,
निवसतु – வஸிப்பதிலும்,
वचः – வார்த்தையானது,
स्तोत्रफणितौ – உம் ஸ்துதியையே கூறும் கிரந்தங்களைச் சொல்லுவதிலும்,
करः च – இரு கைகளும்,
अभ्यर्चायाम् – உம்மை அருச்சிப்பதிலும்,
शृतिरपि – காதுகள்,
कथाकर्णनविधौ – உமது சிறந்த கதைகளைக் கேட்பதிலும்,
बुद्धिः – புத்தியானது,
तव ध्याने – உம்மையே தியானிப்பதிலும்,
नयनयुगलम् – கண்களிரண்டும்,
मूर्तिविभवे – உமது திவ்விய திருமேனியைக் கண்டுகளிப்பதிலும் (உபயோகப்படட்டும்),
अतः परम् – அவ்வாறு நீர் அநுகிரஹம் செய்தபின்,
कैर्वा – வேறு எந்த இந்திரியங்களால்,
परग्रन्थान् – இதர கிரந்தங்களை,
जाने – தெரிந்து கொள்ள வியலும்? நான் அறிய மாட்டேன்.
ஹே பரமசிவ! எனது மனம், வாக்கு, கரம், புத்தி, பார்வை, செவி முதலிய இந்திரியங்கள் முறையே உனது சீர்பாதம், ஸ்துதி, பூஜை, தியானம், வடிவ சௌந்தர்யம், சரிதம் முதலியவைகளில் பொருந்தியிருக்கக் க்ருபை புரிவீரானால், ஏனைய தீயவிஷயங்களில் சிக்கி வீணாகமாட்டேன். ஆகவே, பிறவிப்பயனைப்பெற மேற்கூறிய ஸாதனங்களைப் பின்பற்றுமாறு கடாக்ஷிப்பீராக!
ஹே பரமேச்வர ! தாமரை போன்ற உன் திவ்ய பாதங்களில் எனது மனம் அசையாமல் நிலை பெற்றிருக்க அருள் புரி. எனது நாக்கு உன் திவ்ய சரித்ரங்கள் அடங்கிய ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்வதிலும் உன் நாமாவை ஜபிப்பதிலும் ஈடுபடட்டும். எனது இரு கரங்களும் உனது தொண்டு செய்து உன்னை பூஜிப்பதிலும், எனது இரு செவிப்புலன்களும் அம்ருதமயமான உனது குணங்களைக் கேட்டுக் கேட்டு பரவசமடைவதிலும், இடைவிடாமல் ஏகாக்ரமாக உன்னை த்யானிப்பதில் எனது புத்தியும், உனது திவ்ய மங்கள மூர்த்தியை கண்குளிர கண்டு களிப்பதில் எனது இரு கண்களும் இருக்கட்டும். இவ்வாறு எனது எல்லா இந்த்ரியங்களும் உனது சேவையை செய்வதிலேயே ஈடுபடும்படிஅருள் புரி. அப்படி உன் சேவையில் ஈடுபட்டுவிட்ட பிறகு மற்ற விஷயங்களை சொல்கின்ற புத்தகங்களை எந்த புலன்களின் உதவி கொண்டு தான் நான் அறிவது?
எல்லா இந்திரியங்களும் பரமசிவன் விஷயத்திலேயே ஈடுபட்டுவிட்டால், மற்ற விஷ்யங்களைக் கூறும் நூல்களை அறியவேண்டிய அவசியம் இல்லை என்பதை பரக்ரந்தான் கைர்வா என்பதினால் கூறினார். முன் சுலோகத்தில் புத்தியை பரமேச்வர பஜனத்திலேயே ஈடுபடும்படி உரைத்தார்; இங்கு மற்ற இந்திரியங்களும் ஸ்ரீ பரமேச்வர பஜனத்திலேயே ஈடுபட்டிருக்கவேண்டுமென்றும், வேறு விஷயங்களை நிரூபணம் செய்யும் நூல்களை நாடாமலிருக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறார்.
मनः = मन्,
ते = आपके,
पादाब्जे = चरण कमल में,
वचः = वाणी,
स्तोत्रफणितौ = स्तोत्रों का उच्चारण करने में,
च = और,
करौ = दोनों हाथ,
अभ्यर्चायाम् = पूजन में,
अपि = तथा,
श्रुतिः = कान्,
कथाकर्णनविधौ = कथायें सुनने में,
बुद्धिः = बुद्धि,
तव = आपके,
ध्याने = ध्यान में,
नयनयुगलम् = दोनों आँखे,
मूर्तिविभवे = मूर्ति-सौन्दर्य के दर्शन में ,
निवसतु = लगे रहें,
वा = तो,
अतः = इस व्यस्तता के,
परम् = बाद,
कैः = किन इन्द्रियों से,
परग्रन्थान् = अन्य ग्रन्थों को,
जाने = मैं जानूं ।
Dr.T.M.P.Mahadevan
O the supreme Siva! Let my mind stay at Thy lotus-feet; let my speech be engaged in uttering Thy praise; my hands in Thy worship; my sense of hearing in listening to Thy story; my intellect in meditation on Thee; and my eyes in looking at Thy splendid form! This being so, through which other sense-organs will I learn other texts?
How should one seek the Lord’s protection? With all one’s faculties of sense, mind and heart. The technique of devotion consists in concentrating one’s attention on God. When a man is in love with a person, how does he behave? He is drawn entirely towards that person without any reservation; his actions, speech and mind come to have only one end, which is to please his object of love. Similarly, the devotee should dedicate his entire being to God. God should become the sole object of his sense-functions and mental modes. All the devotee’s interests are thus centered in God. God becomes his one occupation. How will he then attend to anything else? of what use are the “texts” to him? For, he has gained the purpose of all learning.
जिह्वे कीर्तय केशवं मुररिपुं चेतो भज श्रीधरम्
पाणि-द्वन्द्व समर्चयाच्युत-कथाः श्रोत्र-द्वय त्वं शृणु।
कृष्णं लोकय लोचन-द्वय हरेर्गच्चाङ्घ्रि-युग्मालयम्
जिघ्र घ्राण मुकुन्द-पाद-तुलसीं मुर्धन् नमाधोक्षजम्॥२०॥
— मुकुन्दमालस्तोत्रम्
jihve kīrtaya keśavaṁ muraripuṁ ceto bhaja śrīdharam
pāṇi-dvandva samarcayācyuta-kathāḥ śrotra-dvaya tvaṁ śṛṇu|
kṛṣṇaṁ lokaya locana-dvaya harergaccāṅghri-yugmālayam
jighra ghrāṇa mukunda-pāda-tulasīṁ murdhan namādhokṣajam||20||
“O tongue, sing the glory of Kesava! O mind, worship the Enemy of the demon Mura! O the two hands, server the Lord of Sri! O the two ears, hear the story of Achuta! O the two eyes, behold Krisna! O the two feet, go to the temple of Hari! O nose, smell the tulasi that is at the feet of Mukunda! O head, bow to the Lord Visnu!
Swami Tapasyananda
O Lord! Thou Supreme doer of good to all the worlds! May my mind be occupied with Thy lotus-feet, my speech with Thy praise, my hands with Thy worship, my ears with sacred accounts about Thee, my intellect with Thy meditation, and my eyes with the glory of Thy form. Then by which organ, would I study books unconnected with Thee!
मनस्ते पादाब्जे निवसतु वच:स्तोत्रफणितौ
करौ चाभ्यर्चायां श्रुतिरपि कथाकर्णनविधौ ।
तव ध्याने बुद्धि: नयनयुगलं मूर्तिविभवे
परग्रन्थान् कैर्वा परमशिव जाने परमत: ॥ ७ ॥
हे परमशिव ! Hey! Paramasiva!
Sri Appar wrote in his ThEvaram as follows:
தலையே நீவணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகள் கேண்மின்களோ.
மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய் – மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய் – நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.
கைகாள் கூப்பித்தொழீர் – கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகள் கூப்பித்தொழீர்.
ஆக்கை யாற்பயனென் – அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
வாக்கை யாற்பயனென்.
கால்க ளாற்பயனென் – கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென்.
உற்றா ராருளரோ – உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றார் ஆருளரோ.
இறுமாந் திருப்பன்கொலோ – ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன் – திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.
அஞ்சும் அடக்கும் அமரரும் அன்கிலை
அஞ்சும் அடக்கில் அசேதனமா மென்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.
(திருமந்திரம்)Here the Saint Thirumoolar tells us that it is not possible to control the indhriyaas because it would be to go against their nature. What is their nature? The nature of the sense organs is to go towards the sense objects. What happens when they go to the sense objects? The indhriyas get hurt and the mind is drawn towards the sense objects and away from the Self. This is like the fly that get attracted by the fire and eventually consumed by it. Instead if the indhriyas are directed towards the worship of Easwara then they would by default not go towards sense objects. This is what Thirumoolar means by saying “அஞ்சும் அடக்கா அறிவு”
தத்துவப்பேயோடே தலையடித்துக் கொள்ளாமல்
வைத்த வருள் மோன வள்ளலையே–நித்த மன்பு
பூணக்கருது நெஞ்சு போற்றக்கர மெழும்புங்
காணத்துடிக்கு மிருகண்.
(தாயுமானவர்)
![]()