श्रीशिवानन्दलहरी -०४ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -04 – Sri Sivaanandalahari-04

श्रीशिवानन्दलहरी -०४

सहस्रं वर्तन्ते जगति विबुधाः क्षुद्रफलदा
न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।
हरिब्रह्मादीनामपि निकटभाजामसुलभं
चिरं याचे शम्भो शिव तव पदाम्भोजभजनम् ॥ ४ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -04

ஸஹஸ்ரம்ʼ வர்தந்தே, ஜக³தி விபு³தா⁴꞉, க்ஷுத்³ர ப²லதா³,
ந மந்யே ஸ்வப்நே வா, தத³நுஸரணம்ʼ தத்க்ருʼதப²லம் ।
ஹரி  ப்³ரம்ஹ்மாதீ³நாமபி நிகடபா⁴ஜா மஸுலப⁴ம்ʼ,
சிரம்ʼ யாசே ஶம்போ⁴ ஶிவ தவ, பதா³ம்போ⁴ஜ ப⁴ஜநம் ॥ (4)


जगति क्षुद्र-फलदाः विबुधाः सहस्रं वर्तन्ते. (अहं) स्वप्रे वा तद्‌(त्‌)+ अनुकरणं तत्‌-कृत-फलं (वा) न मन्ये. (किन्तु) शंभो! शिव! निकट-भाजां, हरि-ब्रह्मा आदीनाम्‌ अपि असुलभं तव पद+अंभोज-भजनं चिरं याचे।



सर्वेदेवतापेक्षया शिवोत्कर्षंमभिप्रेत्य तत्पादारविन्दभजनं तमेव याचते- सहस्रमितिजगति भुवने क्षुद्रफलदाः तुच्छफलप्रदातारः स्वल्पफलदानादेव हेतोः सहस्रं सहस्रसंख्याकाः विबुधा देवताः वर्तन्ते सन्ति। अहं स्वप्ने वा, वाशन्दोऽप्यर्थकः, स्वप्नेऽपि किमुत जाग्रदवस्थायामिति भावः; तदनुसरणं तेषां भजनं तत्कृतफलं तैर्दत्तफलं च न मन्ये नाभ्युपगच्छामि । किन्तु निकटभाजां निकटं संनिधिं भजन्ते सेवन्ते इति निकटभाजः तेषां हरिब्रह्मादीनामपि हरिश्च ब्रह्मा च हरिब्रह्माणौ तावेवादी येषां ते, तेषामपीत्यर्थः । कर्तरि षष्ठी । असुलभं दुर्लभं हे शंभो ! तव ते पदाम्भोजभजनं पादारविन्दसेवां चिरं बहुकालिकं याचे अभ्यर्थये ॥४॥

எல்லாத்தேவர்களிலும் சிவபெருமானே மேலானவனாயிருப்பதால் அவனது சரணாரவிந்த ஸேவையானது இதில் யாசிக்கப்படுகின்றது.


शिव​! – ஹே மங்களமூர்த்தியே!

जगति-உலகத்தில்

क्षुद्रफलदाः-வெகு அற்பமான பிரயோஜனங்களை அளிக்கவல்ல

विबुधाः-தேவர்கள்

सहस्रम्-ஆயிரக்கணக்காக

वर्तन्ते-இருக்கின்றார்கள்.  ஆயினும்

(अहम्-நான்)

स्वप्ने वा-கனவிலுங்கூட

तदनुसरणम्-அத்தேவர்களை அனுசரிப்பதிலும்

तत्कृतफलम्-அத்தேவர்களால் அளிக்கக்கூடிய பிரயோஜனத்தையும்

न मन्ये-கருதுகிறேனில்லை. ஏனென்றால்

हे शम्भो- ஹே ஸுக காரணரே!

निकटभाजाम्-உமது ஸமீபத்தேயிருக்கும்

हरिब्रह्मादीनामपि-ஹரி,  பிரும்மா முதலானவர்களுக்கும்

असुलभम्​-கிடைத்தற்கரிய

तव पदाम्भोजभजनम्-உம்முடைய தாமரை மலர்போன்ற திருவடிகளின் ஸேவையையே

चिरम् – வெகுகாலமாய்

याचे- (யான் )  யாசித்து வருபவனல்லவா?


ஒரு காலத்திருந்தழிவதான பல பயன்களைத் தருந்தேவர்கள் தத்துவக்கண்ணால் நோக்குமிடத்து கோடிக்கணக்கில் அமைந்துளா ரென்றாலும், அவர்களைப் பொருளாக மதித்து வழிபடுவதை என் மெய்ம்மறந்த நிலையாகிய கனவிலும் நினையேன்; ஏனெனில்,  அவர்களனைவரும் திரிமூர்த்திகளினிஷ்டப்படியே வேலை செய்பவராவார்கள். “நீ யொருவனே அந்தத் திரிமூர்த்திகளுக்கும் பலதாதாவாய் விளங்குபவன்”  என்பதை நினது கரத்தேந்தும் கபாலம் ஒன்றே நன்கு நிரூபிக்கும் ;  ஆகவே ஈடெடுப்பின்றிநிற்கும் ஏகநாயகனாகிய நின் பங்கஜபதபக்திக்கே அவாவுகின்றேன் (என்பதாம்).

இவ்வுலகத்தில்‌ வாழ்‌கின்‌ற மக்களுக்கு எளிதில்‌ புலப்‌பட்டு அற்ப பயனை அளிக்கின்ற எண்ணற்ற தெய்வங்கள்‌ இருக்கின்றனர்‌. அவர்கள்‌ தரும்‌ பயனையோ அவர்களையோ நான்‌ என்‌ மெய்யுணர்வற்ற கனவு நிலையிலும்‌ கூட நினைக்க விரும்பவில்லை. ஹரி, ப்ரஹ்‌மா முதலிய தைவங்களும்‌ கூட உன்‌ பாதஸேவையே பெரிது என எண்ணி உன்‌ ஸமீபத்திலேயே இருந்து கொண்டு உன்‌ ஸேவை செய்தும்‌ எளிதில்‌ அடைய முடியாத நிலையில்‌ இருக்கும்‌ உன்னையேதான்‌ நான்‌ பெரிதாகக்கருதி உன்‌ பாத ஸேவையே எனக்குக்கதி எனத்‌ திடமாக எண்ணி உன்‌ பாதாரவிந்த பஜனமொன்‌றையே நீண்டகாலம்‌ வரை தந்தருள்புரிய வேணுமாய்‌ யாசிக்கிறேன்‌.


மற்ற தேவர்களைவிட சிவனே மிகச்சிறந்தவர் எனக்கருதி அவருடைய சரணாரவிந்த பஜனத்தையே இங்கு வேண்டிக்கொள்கிறார் .

பிரும்ஹா, விஷ்ணு முதலிய தேவர்கள் உள்பட ஸ்ரீபரமேச்வர சேவைக்காக அவருடைய சமீபத்திலேயே காத்துகொண்டிந்தருந்தும்,  அவருடைய சேவை சுலபமாகக் கிடைக்கக்கூடியதாக இல்லை என்பதால் ஸ்ரீபரமேச்வரன் மற்ற தேவர்களை விடமிகச்சிறந்தவர் என்று ஏற்படுகிறது . ஆதலால் “அவருடைய சரணசேவையையே வெகுகாலம்வரை நான் செய்துகொண்டிருக்கவேண்டும் ”  என வேண்டிக்கொள்கிறார்.  மற்றதேவர்கள் எல்லாம் மிக அற்பமான பலத்தை அளிக்கக்கூடியவர்கள் .  ஆதலால் அவர்களுடைய சேவையை சொப்பனத்தில்கூட நான் விரும்பவில்லை என்பதால் ஜாக்கிரத காலத்தில் விரும்பவில்லை என்பதைபற்றிச் சொல்லத் தேவையில்லை .

இவ்விதம் மற்றதேவர்களைப்பற்றி பேசுவது “நஹிநிந்தா”  நியாயப்படி ஸ்ரீபரமேச்வரனை மிகவும் புகழ்வதற்கல்லாமல் மற்றதேவர்களைப் பற்றி குறைகூறுவதற்கல்ல என்று அறியவேண்டும்.

नहि निदा निन्द्यं निन्दितुं प्रवृत्ता, अपि तु स्तुत्यम् स्तोतुम्। ஒருவரை குறைத்துப் பேசுவதின் நோக்கம் மற்றொருவரைப் புகழ்ந்து பேசுவதற்காகவே தவிர ,  அவரைக் குறைத்துக் கூறவேண்டு மென்பதற்காகவே அல்ல என்பதே ஸம்ஸ்க்ருதத்தில் ‘நஹிநிந்தாந்யாயம்‘  எனப்படும்.


शम्भो = हे शम्भो !

शिव = हे शिव !,

जगति = संसार में ,

क्षुत्रफलदाः = तुच्छ फल देने वाले,

विबुधाः = देवता,

सहस्रम्‌ = हजारों,

वर्तन्ते = हैं ( किन्तु),

तदनुसरणम्‌ = उनकी सेवा,

वा = या,

तत्कृतफलम्‌ = उससे होने वाले फल को,

स्वप्ने = सपने में ( भी ),

मन्ये न = मैं कोई मान नहीं देता,

हरिब्रह्मादीनाम्‌ = विष्णु ब्रह्मा आदि को, अपि = भी,

निकटभाजम्‌ = (जो कि) आपके निकट हैं

असुलभम्‌ = जो सुलभ नहीं,

तव = आपके,

पदाम्भोजभजनम्‌ = चरण कमलों के उस भजन की,

चिरम्‌ = चिर काल से,

याचे = मैं याचना करता हूँ ।


Dr.T.M.P.Mahadevan

Thousands of gods there are in the world who grant puerile benefits; even in my dreams I do not think of following them or of the benefits granted by them. O Sambu! O Siva! What I have been for a long time asking for is the worship of Thy lotus-feet, which does not come easily even to those that are near Thee, such as Vishnu and Brahma.

Siva is the supreme Reality. Gaining Him should be the goal of life. Anything short of this ideal will only make one continue to revolve in the cycle of bondage. Nothing but the saving Feet of the Lord will save the soul from samsara. The gods and godlings – there are so many of them – may give worldly success and even heavenly enjoyment. But these, after all, have little value for one who seeks the final beatitude.

Compare Yaamunaacharya’s Stotra-ratna Verse 27:

tavamrita-syandini pada-pankaje
niveditatma katham anyad icchati
sthite ‘ravinde makaranda-nirbhare
madhuvrato nekshurakam hi vikshate

“The soul which has entered Thy lotus-feet shedding nectar – how can it ever desire anything else? When there is the lotus laden with honey, the bee, indeed, does not even cast a glance at the iksuraka flower (which is without fragrance or honey)

Swami Tapasyananda

In this world, many are the minor deities who bestow paltry rewards. I do not, even in dream, attach any importance either to them or their worship or to the results accruing from it. O Lord, O Thou bestower of happiness and embodiment of all goodness! For long have I been praying for Thy lotus feet, which are difficult of attainment even for divinities like Vishnu and Brahma who live in close proximity to Thee.


 

Loading

One Response

  1. பரமேவரனுடைய பாத பஜனத்தை வேண்டிப்போம். “ஆடும் பரிவேல் அணி சேவலென பாடும் பணியே அருள்வாய்” னு அருணகிரி கேட்டா மாதிரி பகவானோட பஜனம் பண்றதுக்கு பிரார்த்தனை பண்ணிக்கறார்.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading