श्रीशिवानन्दलहरी -०३ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -03 – Sri Sivaanandalahari-03

श्रीशिवानन्दलहरी -०३

त्रयीवेद्यं हृद्यं त्रिपुरहरमाद्यं त्रिनयनं
जटाभारोदारं चलदुरगहारं मृगधरम् ।
महादेवं देवं मयि सदयभावं पशुपतिं
चिदालम्बं साम्बं शिवमतिविडम्बं हृदि भजे ॥ ३ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -03

த்ரயீவேத்³யம்ʼ ஹ்ருʼத்³யம்ʼ, த்ரிபுரஹரமாத்³யம்ʼ த்ரிநயநம்,
ஜடாபா⁴ரோதா³ரம்ʼ, சலது³ரக³ஹாரம்ʼ- ம்ருʼக³த⁴ரம் ।
மஹாதே³வம்ʼ தே³வம்ʼ, மயி, ஸத³யபா⁴வம்ʼ பஶுபதிம்ʼ,
சிதா³லம்ப³ம் ஸாம்ப³ம், ஶிவமதிவிட³ம்ப³ம்ʼ, ஹ்ருʼதி³ ப⁴ஜே ॥ (3)


त्रयी-वेद्यं हृद्यं त्रि-पुर-हरम्‌ आद्यं त्रि-ण(न)यनं जटा-भार+उदारं चलद्‌(त्‌)+उरगहारं मृग-धरं मही-देवं देवं मयि सदय-भावं पशु-पतिं चिद्‌(त्‌)+आलंबं स+अंबं अतिविडंबं शिवं हृदि भजे (अहमिति अध्याहार्यम्‌).


शिवानन्दस्य शिवभजनमूलत्वात्‌ तद्भजनमावश्यकमिति स्वयं भजते – त्रयीवेद्यमिति । अहं त्रयीवेद्यं त्रय्या वेदत्रयेण वेद्यं ज्ञेयं, हृद्यं हदयाभिव्यक्तं, त्रिपुरहरं स्थूलादिशरीरत्रयहरम्‌, आद्यम्‌ आदौ भवं सृष्टेः पूर्वमपि स्थितमित्यर्थः। त्रिनयनं त्रिलोचनं जटाभारोदारं जटाजूटेन उदारं गंभीरं , चलदुरगहारम्‌ उरसा गच्छन्तीत्युरगाः सर्पाः । चलन्तः स्पन्दमानाः उरगा एव हारो भूषणं यस्य तम्‌। मृगधरं धरतीति धरः, मृगस्य धरः मृगधरस्तम्‌, हरिणधरमित्यर्थः। महादेवं दीव्यतीति देवः, महांश्चासौ देवश्च महादेवस्तम्‌ अपरिच्छिन्नस्वप्रकाशरूपमित्यर्थः। देवं दीव्यतेः प्रमोदार्थत्वाच्च आनन्दरूपम्‌ । मयि मयि विषये सदयभावं भावनाविशिष्टमित्यर्थः। पशुपतिं  ब्रह्यादिलोकानां पतिं  पालकं पाशविमोचनमित्यर्थः। चिदालम्बं चितः स्वरूपज्ञानस्य आलम्वं साधनं साम्बम्‌ उमासहितम्‌। अतिविडम्बं प्राप्तलोकानुकरणम्‌ । शिवम्‌ ईश्वरं हृदि मनसि भजे भावये धीप्रेरकत्वेन ध्यायामीत्यर्थः ॥३॥


பரசிவாநுக்கிரகம் பக்தியால் விளைவதாதலின் அப்பரசிவனைத் துதிக்கின்றனர்.


[अहम्- நான்]

हृदि – என் மனதில்

शिवम् – அப்பரமசிவனையே

भजे- தியானிக்கிறேன் .  அவர் யார் எனில்,

त्रयीवेद्यम्-மூன்று வேதங்களால் அறியத்தக்கவர்;

हृद्यम् – மனதிற்கு இஷ்டர்.

त्रिपुरहरम् – திரிபுரங்களைக் கொன்றவர் (ஸ்தூல சூக்ஷ்ம காரண சரீரங்களை நாசம் செய்கிறவர்);

आद्यम्-ஆதிக்கும் ஆதியாயுள்ளவர்;

त्रिनयनम् – மூன்று கண்களுடையவர்;

जटाभारोदारम् – அதிகமான ஜடாபாரத்தால் கம்பீரமாயிருப்பவர்;

चलदुरगहारम् – அசைந்து கொண்டிருக்கும் பாம்புகளை ஆபரணங்களாய் அணிபவர்;

मृगधरम् – கையில் மானைத்தரித்தவர்;

महादेवम् – தேவர்களெல்லோர்க்கும் தேவராயுள்ள மஹாதேவர்;

देवम् – எப்போதும் பிரகாசத்துடனிருப்பவர்;

मयि – என்மீது

सदयभावम् – கருணை கொண்டிருப்பவர்;

पशुपतिम् – ஸகல ஜீவர்களுக்கும் பதியாய் விளங்குபவர்;

चिदालम्बम् – ஸ்வரூப ஞானத்திற்கு ஸாதனரானவர்;

सांबम् – அம்பாளுடன் கூடியவர்;

अतिविडम्बम् – உலகத்தாரைப்போல் பலகாரியங்களை அநுஷ்டிப்பவர்;

(शिवम् हृदि भजे) – ஆகையால் அத்தகைய பரமசிவனையே தியானம் செய்வேன்.


ரிக், யஜுர்,  ஸாமமாதி மறைகளால் பிரதிபாதிக்கப்படுபவனாகவும்,  அறிவாகாரமாய் விளங்கும் அன்பர்கட்கு அணித்தாமன்பனாகவும்,  இரும்பு, செம்பு, பொன் என்னும் மூவித பேதமதில்சூழ் நகரங்களுடன்கூடிச்சஞ்சரிக்கும் பலமிக்க திரிபுராதிகளையும் இலேசாகச் சிறுநகை காட்டி யெரித்தவனாகவும், நீண்ட ஜடாமகுடத்தை யுடையவனாகவும்  விளங்கி, முன் தாருகாவன ரிஷிகளால் கொல்லுதற்கேவிய கொடிய சர்பத்தை யணிந்தும், அக்கினியையும் மானையும் கரத்தேந்தியும்,  அகடிதகடனா சாமர்த்திய முதற்பெரும் பொருளாய் நின்று, என்னிடத்தில் கருணைமிக்க ஞானசொரூபராய் விளங்கும் பரமசிவன் தாளைச் சதா வணங்குகின்றேன் (என்பதாம்).


ருக்‌ வேதம்‌, யஜுர்வேதம்‌, ஸாம வேதம்‌ இவைகளின்‌ முடிவாக அறிவாகாரமாய்‌ அறியப்படுகின்‌றவரும்‌ பரமேச்‌வரனையே சதாகாலமும்‌ நினைத்து நினைத்து பஜித்து உருகுகின்ற பக்தர்களின்‌ சுத்தமான மனதில்‌ எப்பொழுதும்‌ ப்ரகாசிக்கின்‌றவரும்‌ முப்புரங்களை தன்‌ புன்னகையால்‌ எரித்தவரும்‌ அதாவது தங்கம்‌, வெள்ளி, செம்பு முதலிய பலம்‌வாய்ந்த உலோகங்களைக்கொண்டு ஆக்கப்பட்ட புரங்‌களை விட பலம்‌ வாய்ந்த, யாராலும்‌ அழிக்க முடியாத உபநிடதங்களில்‌ விவரித்து கூறப்பட்ட இந்த பவஸாகரத்தில்‌ தன்னுடைய அடியவர்கள்‌ அல்லல்‌ படுவதற்கு காரணமாக இருக்கின்ற, ஸ்தூலசரீரம்‌ ஸுக்ஷ்மசரீரம்‌, காரண சரீரம்‌ என்று சொல்லப்படுகின்‌ற முப்புரங்களை தன்‌னுடைய ஓர்‌ சிறு நகையால்‌ அழித்து தன்‌ பக்தனை காப்பவரும்‌, நித்யமான அழிவற்ற உருவமாக ச்ருஷ்டிக்கு மூன்‌பே இருக்கின்‌றவரும்‌, ஸகல லோகங்களுக்கும்‌ ப்ரகாசத்தைத்‌ தருகின்றவர்களான ஸுரீயன்‌, சந்திரன்‌. அக்னி இவர்‌களை தன்னுடைய மூன்று கண்களாகக்‌ கொண்டு நீண்ட மிக அழகு வாய்ந்த ஜடைமுடியோடு, அசைந்தாடுகின்‌ற கொடிய ஸர்ப்பத்தை மாலையாக அணிந்து சதா துள்ளிக்குதித்து அலைபாய்கின்ற மனித மனதையொத்த அழகிய மானையும்‌ நெருப்பையும்‌ தன்னிருகரங்களில்‌ தாங்கிக்கொண்டு, எப்பொழுதும்‌ எல்லா காலங்களிலும்‌ எல்லா தேசங்களிலும்‌ ப்ரகாசித்து கொண்டு, தானே ஆனந்த கனமாக இருந்து கொண்டு பிறரும்‌ சிவானந்தத்தை அனுபவிக்க அருள்‌ புரிந்‌து உலகில்‌ பிறந்‌து மடின்ற மக்களின்‌ பந்த பாசங்களை வேரோடு அறுத்து அவர்களை காக்கின்‌ற பசுபதியாக ஆகி மிகக்கருணையோடு என்னிடத்தில்‌ அனாதியாகக் குடிபுகுந்திருக்கும்‌ அவித்யையை அழித்து, மெய்ஞானம்‌ அளித்து ஆத்ம ஸ்வரூபத்தை அறியச்‌செய்கின்ற ஜ்ஞான ஸ்வருபியான உன்னை என்னிதயத்தில்‌ வைத்து ஸதாஸர்வகாலமும்‌ த்யானம்‌ செய்கிறேன்‌.


முன் சுலோகத்தில் வேண்டிக் கொள்ளப்பட்ட சிவானந்தம் சிவபஜனத்தால் ஏற்படவேண்டியதாகையால் இந்த சுலோகத்தில் தானே சிவபஜனம் செய்கின்றார் .

த்ரிபுரஹரம்: உபநிஷத்துகளில் சரீரமே புரம் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூலசரீரம் உண்டாவதையும் அழிவதையும் நாம் அனைவரும் அறிவோம்.  நம் பார்வைக்கு எட்டாத “சூக்ஷ்மம் ” “காரணம் ” என்ற இரு சரீரங்களும் அழிந்தால்தான் ஒருவன் முத்தியடைய முடியும்.  அதற்கு ஸ்ரீபரமேச்வரனுடைய அருளால் ஆத்மஞானம் உண்டாக வேண்டும்.  ஆதலால் அந்த மூன்று சரீரங்களையும் அழிப்பவர் ஸ்ரீபரமேச்வரன் என்று கூறப்படுகிறது.

ஆத்யம்:  ஸ்ரீபரமேச்வரன் ஜனனமரணமற்ற நித்யஸ்வரூபியாதலால் சிருஷ்டிக்கு முன்பும் இருக்கின்றார் என உரைக்கப்பட்டிருக்கிறது .

மஹாதேவன்:  மஹாம்சாஸௌ தேவ:ச  – மஹாதேவ: மஹானாயும் ,  தேவனாயும் இருக்கின்றார் என்பது பொருள் .

ஈசனைத்தவிர மற்ற எல்லா வஸ்துக்களும் குறிப்பிட்ட சில இடங்களிலும்,  குறிப்பிட்ட சில காலத்திலும்,  குறிப்பிட்ட சில வஸ்து ஸ்வரூபத்துடனுமிருக்கின்றபடியால் அவை எல்லாம் கால தேச வஸ்து பரிசிச்சேதமுள்ள அற்பவஸ்துக்கள் ஆகும்.  ஈசனோ,  எக்காலத்திலும் எல்லா இடங்களிலும்,  எல்லா வஸ்துக்களாகவும் இருக்கிறபடியால் மேற்கூறிய மூன்றுவித பரிச்சேதங்கள் அற்ற மஹான் எனக்கூறப்படுகின்றார்.  மேலும்,  ஈசனைத் தவிர மற்ற பொருள்கள் எல்லாம் ஈசனுடைய தேஜஸ்ஸால் பிரகாசிக்கின்றன.  ஈசனோ ஸ்வயம் பிரகாசர்.  அதையே மஹாதேவம் என்ற சொல் குறிப்பிடுகிறது .

தேவம்:  “திவ்” என்று தாதுவிற்கு ஆநந்தம் என்றும் ஓர் பொருள் உண்டு.  அதையொட்டி ஆநந்த ரூபராயிருக்கின்றார் என்று கூறப்பட்டது.  இதே தாதுவிற்குப் பிரகாசம் என்று மற்றொரு பொருளுண்டு.  அதை அனுசரித்து “ஸ்வயம்பிரகாசர் ”  என்று “மஹாதேவம்” என்ற சொல் குறிப்பிடுகிறது .

பசுபதிம் : ஜீவர்கள் எல்லாம் பசுக்கள் என்றும் அவர்களுடைய பாசமாகிய அவித்யையை அகற்றி அவர்களுக்கு விடுதலையை அளிக்கின்றபடியால் ஸ்ரீபரமேச்வரன் பசுபதியாவார்.

சிதாலம்பம் : ஆத்மஸ்வரூபத்தை அறிந்துகொள்ள ஸ்ரீபரமேச்வரனுடைய அருளே காரணம்.

அதிவிடம்பம்:  இவ்விதமுள்ள ஸ்ரீபரமேச்வரனும் உலகமக்களைப்போல் விவாஹம் செய்து கொள்ளுவது போலவும், தவம்புரிவது போலவும்,  குழந்தைகளுடன் கூடிக்களிப்பது போலவும் நடித்துக் காண்பிக்கிறார் அல்லாமல் அவற்றால் உண்மையில் அவருக்கு சுகமோ துக்கமோ இல்லை என்பது கருத்து.

ஹ்ருதி பஜே – புத்தியை நல்வழியில் செல்லும்படி தூண்டவேண்டுமென்பதற்காக ஹ்ருதயத்தில் ஸ்ரீபரமேச்வரனை பஜிக்கின்றார்.


त्रयीवेद्यम्‌ = वेद द्वारा विज्ञेय,

हृद्यम्‌ = हृदय को प्रसन्न करने वाले,

त्रिपुरहरम्‌ = त्रिपुर का नाश करने वाले,

आद्यम्‌ = सर्वप्रथम,

त्रिनयनम्‌ = तीन नेत्रों वाले,

जटाभारोदारम्‌ = जटा की बहुलता से भव्य दर्शन बाले,

चलदुरगहारम्‌ = चंचल सर्परूप आभरण वाले,

मृगधरम्‌ = मृग को धारण किये हुए,

महादेवम्‌ = सब देवताओं में महान्‌,

देवम्‌ = अप्राकृत द्युति वाले,

मयि = मुझ पर

सदयभावम्‌ = दया का भाव रखने वाले,

पशुपतिम्‌ = पाशबद्ध जीवों के अधीश्वर,

चिदालम्बम्‌ =समस्त चैतन्य के आश्रय,

अतिविडम्बम्‌ = (उपाधिधर्मों का) अनुकरण करने में तथा (अविवेकियों को) भ्रमित करने में कुशल,

साम्बम्‌ = उमा सहित,

शिवम्‌ = भगवान्‌ शंकर को,

हृदि = हृदय में,

भजे = भजता हूं ।


Dr.T.M.P.Mahadevan

In my heart do I worship Siva who is knowable through the three Vedas, who is delightful to the heart, who destroyed the three Cities, who is primeval and has three eyes, who looks majestic with a profusion of matter locks, who wears the wriggling snakes as ornaments and bears an antelope, who is the great God, the Divinity, who is gracious to me, who is the lord of souls, and the basic consciousness, who is in the company of His Spouse, and who enacts the ways of the world.

Swami Tapasyananda

I contemplate in my heart on the supreme Deity, Siva, the three-eyed and luminous Being, who is to be known through the Vedas, who shines in the heart of creatures, who destroys the three bodies (gross, subtle, and causal) of His worshippers, who is the first of all beings, who is majestic with His pile of matted locks, who wears a garland of quivering serpents, who sports a deer in hand, who is merciful towards me, who is the lord of all creatures, who is the support of pure consciousness, who is inseparable from the Divine Mother and who has disguised Himself in a wordly garb.


 

Loading

2 Responses

  1. Hari bol..bolo Bolo Ohm namah Shivaya
    Shiv shiv shiv shiv
    Shiv shiv shiv shiv
    Shiv shiv shiv shiv
    Shiv shiv shiv shiv

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading