श्रीशिवानन्दलहरी -०२ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -02 – Sri Sivaanandalahari-02

श्रीशिवानन्दलहरी -०२

गलन्ती शम्भो त्वच्चरितसरितः किल्बिषरजो
दलन्ती धीकुल्यासरणिषु पतन्ती विजयताम् ।
दिशन्ती संसारभ्रमणपरितापोपशमनं
वसन्ती मच्चेतोह्रदभुवि शिवानन्दलहरी ॥ २ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -02

க³லந்தீ ஶம்போ⁴ த்வச்சரித ஸரித꞉ᳲ கில்பி³ஷரஜோ
த³லந்தீ தீ⁴குல்யா ஸரணிஷு பதந்தீ விஜயதாம் ।
தி³ஶந்தீ ஸம்ʼஸார-ப்⁴ரமண பரிதாபோபஶமநம்ʼ,
வஸந்தீ மச்சேதோ ஹ்ரத³பு⁴வி ஶிவாநந்த³லஹரீ ॥ (2)


शंभो! त्वत्-चरित-सरितः गलन्ती किल्बिष-रजः दलन्ती धी-कुल्या-सरणिषु पतन्ती संसार-भ्रमण-परिताप+उपशमनं दिशन्ती मत्‌+चेतः+ह्रद-भुवि वसन्ती शिव+ आनन्द-लहरी विजयताम्‌.


एवं मङ्गलं   निर्वर्त्य स्वचेतसि शिवानन्दस्थैर्यं प्रार्थयते-गलन्तीति । हे शंभो सुखकारण । त्वच्चरितसरितः तव चरितमेव भक्तपरिपालनादि चरित्रमेव सरित्‌ वाहिनी, तस्याः सकाशात्‌ गलन्ती स्रवन्ती, किल्बिषरजः किल्बिषं पापमेव रजो धूलिः तत्‌ दलन्ती छिन्दन्ती, धीकुल्यासरणिषु धियः बुद्धय एव कुल्याः कृत्रिमसरितः तासां सरणिषु पदवीषु पतन्ती गच्छन्ती, संसारभ्रमणपरितापोपशमनं संसारे संसृत्यां भ्रमणेन भ्रान्त्या यः परितापः अतिदुःखं तस्योपशमनं शान्तिं दिशन्ती प्रयच्छन्ती, मच्चेतोह्रदभुवि मम चेतः चित्तमेव ह्रदः अगाधजलप्रदेशः तस्य भूः  भूमिः तस्यां वसन्ती तिष्ठन्ती, शिवानन्दलहरी शिवाभ्यां श्रुतचरिताभ्यां जनितः य आनन्दः दुःखराहित्यरूपः तस्य लहरी प्रवाहः विजयतां सर्वोत्कर्षेण वर्तताम्‌ । सर्वाभ्यो लहरीभ्य उत्कर्षेण वर्ततामिति भावः ॥ २॥


இங்ஙனம், மங்களம் நிகழ்த்திய பின்னர்,  தமது சித்தத்தில் சிவாநந்தவெள்ளம் நிலைபெறுமாறு வேண்டுகின்றனர் .

हे शम्भो- ஹே ஸுக காரணரே!

शिवानन्दलहरी – உம்மால் உண்டுபண்ணப்பட ஆநந்தப் பெருக்கானது,

विजयताम् – எல்லாவற்றிக்கும் மேலாய் விளங்குகிறது.  ஏனெனில், அவ்வாநந்தம்

त्‍वच्चरितसरितः- – உமது திவ்விய சரித்திரமாகிய நதியிலிருந்து

गलन्ती-பெருகுகிறது

किल्बिषरजः-பாவமாகிய தூளி அழுக்கைப்

दलन्ती-போக்கடிக்கிறது.

धीकुल्यासरणिषु-புத்திகளான வாய்க்கால்களின் வரிசைகளில்

पतन्ती-பாய்ந்து வருகிறது.

संसारभ्रमणपरितापोपशमनम् – இன்னும் ஜனனம்,  மரணம் எனும் சம்சார சக்கரத்தில் சுற்றிவருவதாலுண்டாகும் துக்கத்தை நீக்கி

दिशन्ती-சாந்தத்தை அளிக்கிறது.

मच्चेतो ह्रदभुवि- (அதுவன்றி )  என்மனதாகிற மடுவில்

वसंती-தங்கியிருக்கிறது


ஹே சம்புவே !  நின் அநந்தகல்யாணகுணவிசேஷ சரித சிரவணமாகிய, புனித வெள்ளமானது பொங்கி,  என்போன்றவர் பாவமாகிய புழுதியைக் கரைத்துக்கொண்டு, அசைவற்ற புத்தியாகிய, கால்வாயின்கண்ணே பாய்ந்து,  பிறவித்துயராகிய வெம்மையைத் தணியச்செய்து, அறிவாகார நன்மனமாகிய மடுவில் ஸதா தேங்கிக்கிடக்கும்படிசெய்து,  அஃதாகவே நிலைத்திருக்க அருள்புரிவாய் (என்பதாம்).

ஸர்வ சுகங்களுக்கும்‌ மூலகாரணமான ஹே பரமேச்‌வரா! எல்லையில்லாத கல்யாண குணங்கள்‌ அனைத்தும்‌ அடங்கிய உன்‌ சரிதத்தை ச்ரவணம்‌ செய்து ச்ரவணம்‌ செய்து நிர்மலமான வெள்ள ப்ரவாகமாயும்‌ அதுமாறி பெரு நதியாக ஆகி என்‌ போன்றவர்கள்‌ அறிந்தோ அறியாமலோ செய்த அநேக வித பாபமாகிய தூளியை, ஒர்‌ நதியானது  பாய்ந்து ப்ரவஹிக்கும்‌ தறுவாயில்‌ அது பாய்கின்ற இடத்‌தில்‌ இருக்கும்‌ மலங்களை எல்லாம்‌ எவ்விதம்‌ சுத்தமாக விலக்குகிறதோ அதுபோல, என்‌ பாபங்களனைத்தையும்‌ விலக்கி பாபமற்றவனாக செய்து, புத்தி என்ற வாய்க்கால்‌ வழியாக சென்று இந்த ஸம்ஸாரத்தில்‌ பிறந்து வாழ்ந்து மடிந்து துன்பங்கள்‌ பல அனுபவிக்கும்‌ தாபத்தை சமனம்‌ செய்கின்ற மிக மஹிமை வாய்ந்த உன்‌ சரித்ர ச்ரவணத்‌தால்‌ உணரப்படுன்ற அந்த சிவானந்த வெள்ளம்‌ என்‌ மனம்‌ என்ற ஏரியில்‌ நிலையாகத்‌ தேங்க நின்று மிக மேன்மையுடன்‌ வெற்றியோடு திகழட்டும்‌.

இந்த சுலோகத்தில் எப்பொழுதும் தன்மனத்தில் சிவானந்தம் நிலைபெற்றிருக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறார்.  உலகில் ஒரு நதியிலிருந்து பெருகும் ஒரு பிரவாஹம்,  அது செல்லுமிடத்திலுள்ள தூசிகளை போக்கடித்துக்கொண்டும்,  தாபத்தை நிவிருத்திசெய்துகொண்டும் ஓர் வாய்க்கால் வழியாகச் சென்று ஏரி முதலிய நீர் நிலையங்களை அடைந்து அவ்விடத்திலேயே நிலைபெற்றுவிடும்.  அதுபோல் சிவானந்தம் என்ற பிரவாஹம் அடிக்கடி ஸ்ரீபார்வதி பரமேச்வரர்களுடைய சரித்திரங்களை சிரவணம் செய்வதால் பெருகுகிறதாம்.  உலகிலுள்ள மற்ற பிரவாஹங்கள் சில ஸுகங்களை அளித்தபோதிலும் பல துக்கங்களையும் உண்டுபண்ணக்கூடும் .  ஆனால் சிவசரித்திரத்திலிருந்து பெருகும் பிரவாஹத்தில் துக்க சம்பந்தமே இல்லாததால் ஆனந்தலஹரீ என்று கூறப்படுகிறது .

பாபமாகின்ற தூளியை இப்பிரவாஹம் பிளந்து தள்ளிவிடுகிறது.  மறுபடியும் பாபம் உண்டாவதற்கு வழியில்லாமல் பாபத்திற்கு மூலகாரணமாக அஜ்ஞானத்தை உள்பட அகற்றிவிடுகின்றது என்பதைக்குறிப்பிடவே ‘தலந்தீ’ என்ற சொல் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது.

உலகிலுள்ள மற்ற பிரவாஹங்கள் சூரிய வெப்பத்தால் உண்டாகும் தாபத்தையே போக்கடிக்கும் .  இந்தப் பிரவாஹம் சம்சார பந்தத்தால் ஏற்படும் ஆத்யாத்மிகம் ,  ஆதிதைவிகம் ,  ஆதிபௌதிகம் என்ற பலவித தாபங்களையும் சமனம் செய்துவிடும் .  ஆதலால் இந்தப் பிரவாஹம் மற்ற பிரவாஹங்களைவிட மிகமிகச் சிறந்ததாம்.


शम्भो = हे शम्भो !, त्वच्चरितसरितः = आपकी लीलाकथा रूप नदी से, गलन्ती =
बहती हुई, किल्बिषरजः = पाप-धूलि को, दलन्ती = नष्ट करती हुई, धीकुल्यासरणिषु = बुद्धिरूप
नाली के मार्गों मे, पतन्ती = पड़ती हुई, संसारभ्रमणपरितापोपशमनम्‌ = संसार मे भ्रमणरूप
परिताप के उपशम के उपाय को, दिशन्ती = बताती हुई, मच्चेतोह्रदभुवि = मेरे मनरूप सरोवर
की भूमि में, वसन्ती = रहती हुई, शिवानन्दलहरी = शिवरूप आनन्द की लहरी ( बाढ़ ),
विजयताम्‌ = सर्वोत्कर्ष पाये ।

O Lord, Thou bestower of happiness on the whole world! All glory unto that current of divine bliss, which, brimming from the river of Thy holy stories, flows into the lake of my mind through the canals of the intellect, subduing the dust of sins and cooling the heat of misery born of wanderings in transmigratory cycles.


 

Loading

One Response

  1. so beautiful! thanks for this…can you post at least one sloka a week? and …do this to Soundarya lahari too…Pranams.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading