Adishankara goes to Srisailam

Shrisailam Mallikarjunaswamy temple

During his yatra, Adisankara, with his disciples reaches Srisailam on a fine evening. This holy kshetram is nestled in the midst of dense forests. To the roaring sound of Krishna River flowing tumultuously, the birds chirping on their way back home, and various jungle sounds, weather very salubrious and pleasant, Sri Sankara reaches the southern bank of the Krishna River. After taking a holy bath, he climbs up and reaches a plain field. The atmosphere is filled with the Frangrance of Jasmine flowers, that just blossomed. There he sees a tall Arjuna Tree with a Jasmine vine coiling it. He gets the Darshan of Lord Shiva in the form of Shivalinga. The Arjuna tree with its Jasmine coil forms like a canopy to the Shivalinga. The scenario was so captivating, a Shivajyothi flashes in his mind. Poetry came gushing from his holy mouth, that is called SIVANANDALAHARI. In general, Sri Sankara does not mention any Moorthi, Kshetram or Thirtham in his Stotras. But perhaps the serenity of the environment was so captivating that Sankara was reminded of Lord Mallikarjuneswara and Bramarambika and praises and seeks their blessings in Sloka 50 and 51. We also seek Mallikarjuna’s blessings in person and the darshan of the Lord of Srisailam is in our itinerary.

सन्ध्यारम्भविजृम्भितं श्रुतिशिरःस्थानान्तराधिष्ठितं
सप्रेमभ्रमराभिराममसकृत्सद्वासनाशोभितम् ।
भोगीन्द्राभरणं समस्तसुमनःपूज्यं गुणाविष्कृतं
सेवे श्रीगिरिमल्लिकार्जुनमहालिङ्गं शिवालिङ्गितम् ॥ ५० ॥

ஸந்த்⁴யாரம்ப⁴ விஜ்ருʼம்பி⁴தம்ʼ ஶ்ருதிஶிரஸ்-தா²நாந்த-ராதி⁴ஷ்டி²தம்ʼ
ஸப்ரேமப்⁴-ப்⁴ரமராபி⁴-ராம-மஸக்ருத் ஸத்³வாஸநாஶோபி⁴தம், ।
போ⁴கீ³ந்த்³ராப⁴ரணம்ʼ, ஸமஸ்த ஸுமந꞉ᳲ பூஜ்யம்ʼ கு³ணாவிஷ்க்ருʼதம்ʼ,
ஸேவே ஶ்ரீகி³ரி மல்லிகார்ஜுந மஹாலிங்க³ம்ʼ ஶிவாலிங்கி³தம்ʼ ॥ (50)

अधुना श्रीशैलवासिनं शिवं भजते- सन्ध्येति । श्रीगिरिमिल्लिकार्जुनमहालिङ्गं श्रीगिरौ श्रीशैले विद्यमानं मल्लिकार्जुनमहालिङ्गं मल्लिकावल्ल्या संश्लिष्टार्जुनवृक्षसदृशं महालिङ्गं लीनं सूक्ष्मं परमात्मानं गमयतीति लिङ्गम्‌, अत एव महत्‌, तल्लिङ्गम्‌ अहं सेवे भजे इति क्रियान्वयः । तत्‌ कीदृशम्‌ ? शिवालिङ्गितं शिवया पार्वत्या आलिङ्गितं  पीठिकारूपया शक्त्या आविष्टमिति भावः । उभयोरुपमानोपमेयभूतयोः अर्जुनमहालिङ्गयोः तुल्यधर्मान्‌ प्रतिपादयितुं श्लिष्टविशेषणैः   अर्जुनमहालिङ्गं विशिनष्टि- सन्ध्यारम्भविजृम्भितं सन्ध्यायाः सायंसन्ध्याकालस्य आरम्भे प्रादुर्भावे शोभितं । श्रुतिशिरस्स्थानान्तराधिष्ठितं श्रुतीनां वेदानां शिरस्स्थानानि उपनिषदः शैलादन्यानि स्थानानि स्थानान्तराणि अस्वपदविग्रहः, तान्यधिष्ठायाभिधेयतासंबन्धेन स्थितम्‌ कर्तरिक्तः, अन्यत्र श्रुतिश्च शिरश्च श्रुतिशिरसी कर्णमूर्धानौ तयोः स्थानान्तरं स्थानभेदः तदधिष्ठाय स्थितं स्वावयवैः पुष्पैरित्यर्थः। सप्रेमभ्रमराभिरामं प्रेमयुक्तया भ्रमरया भ्रमराम्बिकयाऽभिन्नशक्त्या अभिरामं मनोजम्‌, अन्यत्र प्रेमसहितचञ्चरीकैः अभिरागम्‌ । असकृत्‌ सर्वदा । सद्वासनाशोभितम्‌ सतां साधूनां वासनया भावनया शोभितं व्याप्तम्‌, अन्यत्र सद्वासनया साधुगन्धेन शोभितं प्रकाशितं । भोगीन्द्राभरणं सर्पभूषणम्‌, अन्यत्र भोग एषामस्तीति भोगिनः तेषामिन्द्राः श्रेष्ठाः विषयानुभवितारः तेषामाभरणं भूषणं । समस्तसुमनःपूज्यं समस्तैः सुमनोभिः देवैर्विद्वद्भिश्च पूज्यम्‌, अन्यत्र सर्वेभ्यः पुष्पेभ्यः पूज्यं पूज्यकुसुमविशिष्टम्‌ गुणाविष्कृतं गुणेन सत्त्वगुणसंबन्धेन आविष्कृतं प्रकाशितम्‌, अन्यत्र गन्धादिगुणैराविष्कृतं प्रकाशितम्‌ । एतादृशलिङ्गं सेवे इति क्रियायामन्वयः । मल्लिकार्जुनमिति विभक्तिपरिणामेन विशेषणानां तत्राप्यन्वयः। स्पष्टार्थोऽयम्‌ ॥ ५० ॥

(அ-கை ) ஸ்ரீசைலத்தின் மல்லிகார்ஜுனரைத் துதிக்கின்றனர் .
संध्यारम्भविजृम्भितम्- ஹே நாதரே ! ஸந்தியா காலமாரம்பமாகும் போது (பிரதோஷ காலத்தில் ) பக்தாநுக்ரஹம் பொருட்டு தாண்டவ நடனம் செய்து விளங்குபவரும், [சாயங்காலவேளையில் மலர்ந்த புஷ்பங்களால் அழகிய காட்சியை அளிக்கின்றதும் ] श्रुतिशिरस्स्थानान्तराधिष्ठितम्-வேதசிரஸ் எனும் உபநிடத வாக்கியங்களின் முடிவில் ஆரோபிக்கப்பட்டவரும் , [காது, தலை முதலிய இடங்களில் அணியப்படும் புஷ்பங்களையுடையதும் ] सप्रेमभ्रमराभिरामम्-உயர்ந்த பிரியத்துடன் கூடின பிரமராம்பிகையின் சேர்க்கையால் அழகடைந்தவரும் , [ஆசைகொண்ட வண்டுகளால் ராமணீயமாயும் ] असकृत्-எக்காலமும் [அடிக்கடி ] सद्वासनाशोभितम्-ஸாதுக்களது மனதின் கண்ணே விளங்கிவருபவரும் [நறுமணத்தால் சோபிக்கின்றதும் ] भोगीन्द्राभरणम्-நாகாபரணராய் விளங்குபவரும்[காமபோகம் முதலிய சுகங்களை அனுபவிக்கின்றவர்களுக்கு அலங்காரமாயும் ] समस्तसुमनःपूज्यम्-ஸமஸ்த முனிவர்களாலும் பெரியோர்களாலும் பூஜிக்கப்பட்டவரும் , [மற்ற எல்லா புஷ்பங்களைக் காட்டிலும் மிகச்சசிறந்த புஷ்பங்களையுடையதும் ] गुणाविष्कृतम्-ஸத்வகுணத்துக்கே தமது பிரகாசத்தைக் கொடுத்து விளங்கவைப்பவரும் [நறுமணம் முதலிய குணங்களுடன் விளங்குகின்றதும் ] शिवालिङ्गितम्-சிவை என்ற நமது அம்பாளால் ஆலிங்கனம் செய்யப்பட்டவரும் [மங்களகரமாயும் ] श्रीगिरिमल्लिकार्जुनमहालिङ्गम्-ஸ்ரீபர்வதத்தின் மீது மல்லிகார்ஜுனமென்று பெயர் பெற்றவருமான மகாலிங்கத்தை [அழகுபொருந்திய பர்வதத்திலிருக்கின்ற மல்லிகையினால் சுற்றப்பட்ட பிரகாசிக்கின்ற மருதமரத்தை ] सेवे-நான் ஸேவிக்கிறேன்.

[தாத்பர்யம்]: ஏ மஹாலிங்கத்தேவனே! உன்னைப் போற்றிசெய்கின்றேன். வேதசிரஸாய் விளங்கும் உபநிடதங்களில் பிரதிபாதிக்கப்படும் சச்சிதாநந்தவடிவனே! உலகீன்ற உமாதேவியாரின் உளங்களிப்ப அவளுடன் ஒன்றி அபேதமாய் உறைபவனே! உம்மைக் கொல்வான் வேண்டி, தாருகாவன முனிவர்கள் ஏவிய கொடிய சர்ப்பத்தின் வலியை அடக்கிய அறிகுறியாக அதை ஆபரணமாக அணிந்து அகிலத்தவர்க்குக் காட்டுபவனே! சத்துவகுணப் பிரதானமானவனே! பூதர் முனிவராதி பலராலும் சூழப்பட்டு போற்றப்படுபவனே! வேண்டினர்க்கு விரும்பியபயனை விரைந்தளிப்பவனே! அடியார்க்கு அருள்புரிவான் வேண்டிப் பிரதோஷ காலத்தில் ஆனந்ததாண்டவம் செய்பவனே! அவ்வடியவரைக் காக்கும் தொண்டைச் சிரஸாய் வகித்துள்ளேன் என்பதை அனைவருமறிவான் வேண்டி அம்புலியைச் சிரத்தில் சூடியவனே ! ஸ்ரீகிரி (திருப்பருப்பதம்/ஸ்ரீசைலம்) என்னும் திவ்ய சிவஸ்தலத்திலெழுந்தருளியிருக்கும் மல்லிகார்ச்சுனனே! உனது திருவடிகளையே ஸதா சேவிக்கின்றேன் ஆதலின் எனக்கு அருள்புரிவாய் .

[தெளிவுரை ]: ஸ்ரீ சைலத்தில்‌ ப்ரமராம்பிகையோடு மல்லிகார்ஜுன மஹாலிங்கமாக விளங்குகின்ற ஹே மல்லிகாஜுனேச்வர! உமக்கும்‌ மல்லிகார்ஜுன வ்ருக்ஷத்திற்கும்‌ உள்ள உவமையும்‌என்னே ! ஒற்றுமையும்‌ என்னே ! மல்லிகார்ஜுன விருக்ஷமானது ஸந்த்யா காலத்தில்‌ புஷ்பங்கள்‌ மலர்ந்து மிக அழகுடன்‌ ப்ரகாசிக்கிறது. நீ அதே காலத்தில்‌ பக்தர்‌களுக்கு அனுக்ரஹம்‌ செய்வதற்காக ஆனந்த நர்த்தனமாடும் நடராஜனாக ப்ரகாசிக்கிறாய்‌. அம்மரத்‌தில்‌ பூக்கின்ற பூக்கள்‌ தலையிலும்‌ காதிலும்‌ பக்தர்களால்‌ வைத்துக்‌ கொள்ளப்‌ படுகின்ற மலரோடு கூடினதாக இருக்கிறது, நீ ச்ருதி ப்ரதிபாத்யனாய்‌ உபநிஷத வேத்யனாய்‌ விளங்குகிறாய்‌. வண்டுகள்‌ நறுமணம்‌ வீசுன்ற அம்மலரை அடிக்கடி மிக ஆசையுடன்‌ சுற்றுவதாய்‌ ப்ரகாசிக்கறது. ப்ரமராம்‌பிகையால்‌ மிக ப்ரேமையுடன்‌ ஆலிங்கனம்‌ செய்யப்பட்டவனாயும்‌ ஸாதுக்களுடைய நல்ல பாவனையாலும்‌ நீ சோபிக்கிறாய்‌. காமாதி போகங்களை அனுபவிக்கின்‌றவர்‌களுக்கு அலங்காரமாய்‌ மல்லிகார்ஜுனம்‌ இருப்பது போல போகீந்த்ரனான வாசுகியே உமது அலங்கார ஆபரணமாக விளங்குகிறது. ஸகல தேவர்களாலும்‌ பூஜிக்கப்படுகின்‌றவன்‌ நீ. எல்லா புஷ்பங்களையும்‌ விட மிக சிறந்த புஷ்பம்‌ என்று மற்ற புஷ்பங்களால்‌ கொண்டாடப்பட்டு உலகில்‌ மிக சிறந்த புஷ்பமாக விளங்குகிறதுஅது. ஸ்ரீசைல புண்ய க்ஷேத்ரத்தில்‌ மல்லிகையால்‌ சுற்றப்பட்டு வ்ருக்ஷ ரூபியாய்‌ ஸ்ரீ ப்ரமராம்பிகா ஸமேதராய்‌ இருக்கின்ற ஸ்ரீ சைல மல்லிகார்ஜுனலிங்கம்‌ என்ற உன்னை ஸேவிக்கிறேன்‌.

(கருத்துரை): இதில் ஸ்ரீசைல க்ஷேத்திரவாஸியான ஸ்ரீபரமேச்வரனை ஆச்சார்யர்கள் போற்றுகிறார்கள் .:-
அந்த க்ஷேத்திரத்தில் மல்லிகைக்கொடியால் சுற்றப்பட்ட அர்ஜுன விருக்ஷம் (மருதமரம் ) ஸ்தலவிருக்ஷம்.
ஸ்வாமியின் பெயர் மல்லிகார்ஜுனேச்வரர் . அம்பிகையின் பெயர் ப்ரமராம்பிகை. “மல்லிகார்ஜுனர் ” என்ற பெயருக்கு ஏற்றபடி அர்ஜுன விருக்ஷத்திற்கும் ஸ்ரீபரமேச்வரனுக்கும் உள்ள ஒற்றுமைகளை சிலேடையாக பல சொற்களால் வர்ணிக்கின்றனர் .

भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्राही स्फुरन्माधवा-
ह्लादो नादयुतो महासितवपुः पञ्चेषुणा चादृतः ।
सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनो-
राजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभुः ॥ ५१ ॥

ப்⁴ருʼங்கீ³ச்சா² நடநோத்கட꞉, கரிமத³க்³ராஹீ, ஸ்பு²ரந்மாத⁴வா-
ஹ்லாதோ³, நாத³யுதோ மஹாஸிதவபு꞉ᳲ பஞ்சேஷுணா சாத்³ருʼத꞉ ।
ஸத்பக்ஷஸ் ஸுமநோ வநேஷு ஸ புநஸ் ஸாக்ஷாந்மதீ³யே மநோ-
ராஜீவே ப்⁴ரமராதி⁴போ விஹரதாம்ʼ ஶ்ரீஶைலவாஸீ விபு⁴: ॥ (51)<!—>

भ्रमराधिपतित्वनिरूपणेन स्वमनोराजीवे विहरणं प्रार्थयते- भृङ्गीति ।विविधं भवतीति विभुः। “सोऽकामयत, बहु स्यामिति” श्रुतेः । श्रीशैलवासी भक्तानुग्रहाय लिङ्गरूपेण श्रीशैलवासी। भ्रमराधिपः भ्रमराम्बिकाया अधिपः स एव भ्रमराधिपो भृङ्गराजः। मन्मन एव राजीवं पद्मं तस्मिन्‌ विहरतां सञ्चरतु भृङ्गाणां राजीववासस्वाभाव्यात्‌ । तमेव श्लिष्टविशेषणैः  विशिनष्टि-भृङ्गीच्छानटनोत्कटः भृङ्गिणः भक्तविशेषस्येच्छया नटने नर्तने उत्कटः उत्कटेच्छः, अन्यत्र भृङ्गजातेः इच्छायाः अपेक्षायाः नटनेऽनुकरणे उत्कटः उत्कटेच्छः । करिमदग्राही करिणो गजासुरस्य मदः बलवत्ताभिमानः तं गृह्णति तत्संहरणेन हरतीति तथोक्तः । अन्यत्र करिणां गजानां मदः मदजलं  तद् ग्रहणशीलः, ताच्छील्ये णिनिः । स्फुरन्माघवाह्लादः माधवे मोहिनीरूपापन्ने आह्लादः प्रवृत्त्यौत्सुक्यं स्फुरन्‌ प्रकाशमानः माधवाह्लादो यस्य, अन्यत्र माधवे वसन्ते आह्लादः आनन्दः स्फुरन्‌ माधवाह्लादो यस्य । नादयुतः प्रतिपाद्य[1]त्वसंबन्धेनप्रणवनादसहितः । अन्यत्र झङ्कारध्वनियुतः। महासितवपुः सितं शुभ्रं वपुर्यस्य सः महांश्चसौ सितवपुश्चेति तथोक्तः, अन्यत्र असितं नीलं  वपुर्यस्य महांश्चासौ नीलवपुश्चेति तथोक्तः । पञ्चेषुणा चादृतः पञ्चेषुणा मन्मथेन आदृतः स्वबाणलक्ष्यत्वेन निश्चितः, अन्यत्र आदृतः स्वसहायत्वेन निश्चितः । सुमनोवनेषु सत्पक्षः सुमनसां देवानामवनेषु रक्षणेषु सत्पक्षः सन्  पक्षः अभिमानो यस्य तथोक्तः, अन्यत्र सुमनसां पुष्पाणां वनेषु उद्यानादिषु सन्‌ विद्यमानः पक्षोऽभिमानो यस्य स तथोक्तः । साक्षात्‌ चक्षुरादीन्द्रियविषयः, उभयत्र तुल्यार्थकमिदम्‌ । एवंभूतः सः श्रीशैलवासी  भ्रमराधिपतिः विहरतामिति पूर्वेणान्वयः । सर्वदा मनसि आत्यन्तिकसंयोगेन तिष्ठतु इति भावः ॥ ५१ ॥

भृङ्गीच्छानटनोत्कटः-பிருங்கி ரிஷியினுடைய வேண்டுகோளுக்கிணங்கி நடனத்தை ஆசையுடன் செய்கிறவராயும் [(அல்லது) பிருங்கி – பெண்வண்டின், இச்சா-விருப்பப்படி, நடன-ஆடுவதில் , உத்கட-அதிக ஆசையுள்ளதாயும்] करिमदग्राही-கஜாசுரனுடைய கொழுப்பை அடக்கினவராயும், [யானையின் மதஜலத்தை கிரஹிக்கும் திறமையுள்ளதும்] स्फुरन्माधवाह्लादः-மஹாதேஜஸ்வியான விஷ்ணுவிடத்தில் வெகுப்ரீதியுடையவராயும், [வசந்த ருதுவினிடம் சந்தோஷத்தை யுடையதாயும்] नादयुतः-(பிரணவ ) நாத தத்துவதோடு கூடியவராயும் [ரீங்கார சப்தத்தோடு கூடியதாயும்] महासितवपुः-பரிசுத்தமான வெண்மை நிறமுள்ள தேஹத்தையுடையவராயும் [நன்றாய் கருத சரீரத்தை யுடையதாயும்] पञ्चेषुणा च-மன்மதனால்
आदृतः-பயத்தால் ஆதரிக்கப்பட்டவராயும் , [நன்றாய் அங்கீகரிக்கப்பட்டதாயும்] सुमनोवनेषु-நற்குணமுள்ள முனிவர்களையும் தேவர்களையும் காப்பாற்றுவதில் [நல்ல புஷ்பங்களுள்ள காடுகளில்] सत्पक्षः-வெகு சிரத்தையுடையவராயும் [நல்ல இறகுகளை உடையதாயும்] साक्षात्-பிரத்யக்ஷமாக கண்ணுக்கெதிரேயுள்ள
श्रीशैलवासी – ஸ்ரீசைலபர்வதத்தில் வசிக்கிறவராயும் [பர்வதங்களிலிருக்கிறதாயும்] विभुः-எங்கும் வியாபித்து வருபவராயுமுள்ள[எங்கும் சஞ்சரிக்கும் சக்தியுள்ளதாயும்] सः-அந்த
भ्रमराधिपः- ஸ்ரீபிரம்மராம்பிகையின் பதியான தேவரீர் [சிவன் ஆகிற வண்டானது] पुनः-மறுபடியும்
मदीये मनोराजीवे-எனது ஹிருதயத்தாமரையில்
विहरताम्-(எப்போதும் ) லீலை செய்யவேணுமென்று பிரார்த்திக்கிறேன்.[சஞ்சரித்துக்கொண்டிருக்கட்டும் ] [தாத்பர்யம்]: சர்வேசா! நீர் மிக்க கறுத்த உடலுடன் , கரடுமுரடுகளார்ந்த ஸ்ரீசைலம் முதலிய கிரிகளில் தங்கி வசந்த ருதுவில் அன்புடன் கலந்து கஜாசுரனுடைய மதநீரைக் குடித்து தேவர்குழமாகிய பூங்காவில் சந்தோஷத்துடன் திரிந்துழன்று பிருங்கிமாமுனிவரின் இச்சைப்படி நடனம் புரிந்து பிரணவ நாதமாகிய ரீங்கார ஒலியுடன் பொருந்தித் திரிந்து உழலும் கஷ்டமான வாசத்தை விட்டு, என் இருதய கமலமாகிய மிருதுவான தாமரைக் கமலத்தில் ஸதா வீற்றிருந்து விளையாடிக்கொண்டிருக்க அடியேன் வேண்டுகின்றேன் (என்பதாம் ).

[தெளிவுரை]: [ப்ருங்‌கீ, மஹாஸித: ஸுமனோவநேஷு, கரிமதக்‌ராஹீ, ஸ்புரன்மாதவாஹ்லாத, பஞ்சேஷுணாசாத்ருத:, இச்சொற்கள்‌ யாவும்‌ இருபொருள்படுகின்ற சொற்களாகும்‌. ஒரு பொருள்‌ வண்டைக்‌ குறிக்கிறது. மற்றொன்று பரமேச்வரனை குறிக்கிறது. பகவத்‌ பாதர்கள்‌ தனது மனதை தாமரை மலராகவும்‌ ஸ்ரீ சைல வாஸியான ப்ரமராம்பிகை ஸமேதரான பரமேச்வரனை ஒரு வண்டாகவும்‌ கருதி சிலேடையாக ஸ்தோத்ரம்‌ செய்‌கிறார்‌.] வண்டு பெண்வண்டின்‌ இச்சைப்படி வாழ்வதில்‌ ஆசையுடையது. அது போல ஸ்ரீ பரமேச்வரன்‌ ப்ருங்‌கி என்ற தனது பக்தரான முனிவரின்‌ இச்சைப்படி நடனமாடுவதில்‌ மிகவும்‌ ஸந்தோஷமுடையவராக ப்ரகாசிக்‌கின்றார்‌. வண்டு கொழுத்த யானையின்‌ மத ஜலத்தை பருகுகிறது. அது போல ஸ்ரீ பரமேச்வரன்‌ கஜாசுரன்‌ என்ற அரக்கனின்‌ கொழுப்பைப்‌ (மதத்தை) போக்கடித்தவர்‌. வஸந்த காலத்தில்‌ வண்டிற்கு மிக மோஹம்‌ உண்டு. அதுபோல மாதவனான ஸ்ரீ மஹாவிஷ்ணு மோஹினியாக உருவெடுத்த தருணத்தில்‌ ஸ்ரீ பரமேச்வரன்‌ அவரை மோஹித்தவர்‌. வண்டு ரீங்காரம்‌ செய்கின்றது. பரமேச்‌வரனோ ஓம்‌ என்ற ப்ரணவநாத ப்ரம்மமாக விளங்குகிறார்‌. வண்டு காடு மலை முதலிய இடங்களில்‌ சுற்றிச்‌ சுற்றி வருகிறது. அது எங்கும்‌ சஞ்சாரம்‌ செய்கிறது. ஸ்வாமி எங்கும்‌ நிறைந்திருக்கிறார்‌. வண்டு மன்மதனுக்கு உதவி செய்வதினால்‌ அவன்‌ அதை ஆதரிக்கிறான்‌. பரமேச்‌வரனை தன்‌ பாணத்திற்கு இலக்காக செய்து ஆதரித்தவனும்‌ அவனே. ஆதலால்‌ அவனால்‌ ஆதரிக்கப்பட்டவராகிறார்‌ ஸ்வாமி. புஷ்பங்கள்‌ எப்பக்கமோ அப்பக்கத்தை நோக்கி செல்கிறது வண்டு. வெண்மையான உடலையுடைய ஸ்ரீ பரமேச்வரன்‌ தேவர்களைக்‌ காப்பதிலேயே அபிமானமுள்ளவராக இருக்கிறார்‌. கருத்த உடலையுடைய வண்டின்‌ இறக்கைகள்‌ மிகவும்‌ அழகுடன்‌ ப்ரகாசிக்கிறது, பகவான்‌ ஸத்பக்ஷபாதியாக இருக்கிறார்‌. இவ்விதம்‌ ஒரு வண்டாகவே தோற்றமளிக்‌கின்‌றவரும்‌ ஸ்ரீ சைலத்தில்‌ ப்ரமராம்பிகையின்‌ அதிபதியுமான ஸ்ரீ பரமேச்வரன்‌ என்ற வண்டு எனது மனமாகிற தாமரை மலரில்‌ வந்திருந்து களிப்புடன்‌ விளையாடட்டும்‌.

(கருத்துரை): இதில் ஸ்ரீசைல க்ஷேத்ர வாசியான பிரமராம்பிகைக்குப் பதியான ஸ்ரீபரமேச்வரனை பிரமராதிபனாக, அதாவது வண்டுகளுக்குத் தலைவனாக கற்பித்து , வண்டுகள் தாமரைபுஷ்பத்தில் வசிக்கும் சுபாவமுள்ளதால், தனது மனதையும் தாமரை புஷ்பமாக கற்பித்து ஸ்ரீ பரமேச்வரனாகிற வண்டு , மனதாகிற தாமரையில் சஞ்சரித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார் . ஸ்ரீ பரமேச்வரனையும் வண்டையும் இதில் உள்ள சொற்கள் எல்லாம் சிலேடையாகக் குறிப்பிடுகின்றன .

Loading

One Response

Leave a Reply