Sri Rama Jyothi Ratham blessed by Pudhuperiyava – 33 years back


Thanks to Sri Sarma Sastrigal for the FB share.

அயோத்யா ராம ஜன்ம பூமியில் ஆலய நிர்மாண நிமித்தம் நாடு முழுவதும் ராம ஜ்யோதி ரதம் எடுத்துச் செல்லப்பட்டது. 1990.

காஞ்சி ஸ்ரீ மட வளாகத்தில் ரதத்தை ஆசீர்வதித்து ஆச்சார்யாள் துவக்கி வைத்த தருணம்.
அன்று காஞ்சியில் பொது கூட்டத்திற்கு முன்பு ஆசார்யாள்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்கு மடத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஸ்ரீ மடத்தில் இரு ஆச்சார்யாள்களும் ஆசியளித்தது பாக்யத்திலும் பாக்யம்.

அயோத்யாவில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதில் எந்த விதமான பிரச்சனை இல்லாமல், எல்லோருடைய சம்மதத்துடன் சுமுகமாக அமைய வேண்டும், எல்லொரும் க்ஷேமமாக இருக்க வேண்டும், என சங்கல்பத்துடன், பிரார்த்தனையுடன் ’ஸ்ரீ ராம ஜோதி ரதம்’ ஒன்று நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது.

கிராமங்கள் நகரங்கள் என எல்லா ஊர்களிலும் ஆங்காங்கு ரதத்துடன் பொதுகூட்டங்களும் நடைபெற ஏற்பாடு துவங்கியது. அயோத்ய பிரச்னையின் முழு விவரங்களையும் அதுபோது பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

அன்று காஞ்சி பொதுக்கூட்டத்திலும் மக்கள் நல்ல எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். அதில் உரையாற்றும் பொறுப்பும் அடியேனுக்கு தரப்பட்டிருந்தது.

Loading

2 Responses

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading