சீர்பாத வகுப்பு பொருளுரை

இன்று செவ்வாய்கிழமை, கிருத்திகை நக்ஷத்ரம், சஷ்டி திதி மூன்றும் கூடி வந்துள்ளது. முருகனை வழிபட உகந்த நாள். அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் தமிழில் முருகனின் மேல் பாடப்பட்ட தன்னிகரற்ற துதிப் பாடல்களாக அமைந்துள்ளன, அவற்றுள்  ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு  தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது இதுவே என்று எனக்கு தோன்றுகிறது. அருள் நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும்.
2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகமும் சித்திக்கும்.
3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது. அவற்றை இந்த இணைப்பில் கேட்கலாம் -> சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு ஒலிப்பதிவு (Audio of seer pada vaguppu, devendira sanga vaguppu, vel vaguppu)

அதுல இந்த ‘சீர்பாத வகுப்பு’ எல்லாத்தைக் காட்டிலுமே ரொம்ப அழகா இருக்குன்னு எனக்கு எண்ணம். தமிழ்லேயே முருகப் பெருமானுடைய துதி ன்னா ‘சீர்பாத வகுப்பு’தான் அப்படிங்கிற அளவுக்கு எனக்கு அதுல பிரியம்.

‘வரிசை தரும் பதம் அது பாடி –

வளமொடு செந்தமிழ் உரைசெய

அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே’

(‘பரவு நெடுங்கதிர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்) ன்னு ஒரு திருப்புகழ்ல பாடறார். அந்த முருகனுடைய பாதங்களை வணங்கினால் எல்லா வரங்களும் கிடைக்கும். இந்த சீர்பாத வகுப்புக்கு முக்கியமா ஞானம் வரும் ன்னு ஒரு பலஸ்ருதி சொல்லி இருக்கார் வள்ளி மலை ஸ்வாமிகள். இந்த சீர்பாத வகுப்போட பெருமை என்னனா, இதுல நமக்கு இந்த பாதம் என்ன அருள் பண்ணும் அப்படிங்கற விஷயம் இருக்கு. நாம எப்படி இந்த பாதத்தை அணுகி பக்தி பண்ணனும்ங்கிற விஷயமும் இருக்கு. பாதத்தின் பெருமை, எல்லை இல்லாத பெருமை. அதைப் பத்தி நிறைய விஷயங்கள் இருக்கு. ஸ்கந்த புராணத்துல வர்ற எல்லாக் கதைகளையும் சுருக்கமா நாலு வரிகள்ல சொல்றார். மொத்தம் பதினாறு வரி. நாலு வரிகள்ல குழந்தையா பிறந்து அப்பா அம்மாவோட கொஞ்சி விளையாடறது. அடுத்து கொஞ்சம் வளர்ந்த உடனே குமரனாகி தேவ சேனாதிபதியாகி சூர ஸம்ஹாரம் பண்ணது. அப்புறம் கணபதியோட போட்டி போட்டு உலகம் சுத்தி வந்தது. அதுக்கு அப்புறம் யுவன் ஆன பின்னே வள்ளிஅம்மையோட காதல் புரிந்தது. இப்படி எல்லாம் வறது. நம்முடைய ஷண்மதத்தில இருக்கக் கூடிய ஆறு தெய்வங்களை பத்தியும் இராமாயணக் காட்சிகள், ஸ்ரீ மத் பாகவதத்துல வரக் கூடிய காட்சிகள் அப்படி எல்லா தெய்வங்களுடைய விஷயமும் வறது. மொத்தம் அறுபது சம்ஸ்கிருத வார்த்தைகள் வறது. இது தனியான ஒரு ஸ்துதி. விரிவான அதனுடைய பொருளுரையை இங்கே கேட்கலாம் – சீர் பாத வகுப்பு பொருளுரை (meaning of seer pada vaguppu)Categories: Upanyasam

Tags: ,

1 reply

  1. நம் மதத்தில் பகவான் பாத கமலங்களுக்கு ஒர் சிறப்பிடம் உண்டு ! அது ஈஸ்வரனானாலும், அம்பிகையானாலும், விஷ்னுவானாலும், முருகனனாலும் சரண கமலாலயம் என்றே வர்ணிக்கப்படுவது கண்கூடு !
    சீர்பாத வகுப்பு என்ற முருகனின் சரணங்கள் பலவிதமாக போற்றப்படுவது இதனை உறுதிப்படுத்துகிறது !
    அழகான பதிவு, பொருத்தமும் கூட செவ்வாய், கிருத்திகை தினத்தன்று ,!
    குரல் வளத்துடன் அழகாகப் பாடி பதிவு செய்த கணபதிக்கு நன்றி உரித்தாகுக !
    வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா,….

Leave a Reply

%d bloggers like this: