நமது தெய்வமதத்தில் ஆதியிலிருந்தே பெண்மையை போற்றி வருகிறோம். தாயாக மட்டும் அல்லாமல், மனைவியாகவும், மகளாகவும், தங்கையாகவும், இன்னும் பல விதத்திலும் கொண்டாடுவதற்கு நாம் கூச்சப்பட்டதே இல்லை. காமாக்ஷி தேவியை ஜகதம்பிகையாகவும், காமேஸ்வரின் மனைவியாகவும், ஹிமவானின் பெண்ணாகவும், விஷ்ணுவின் தங்கையாகவும், இன்னும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, சாமுண்டி, வாராஹி, மாதங்கி என்று பல ரூபங்களில் வழிபடுகிறோம். பார்வதி பரமேஸ்வரர்களை தாயும் தந்தையும் ஆக எண்ணி அவர்களின் இடையிலான அன்பை, ரசமாக ஆபாசம் இன்றி சுவைபட பல கவிகள் பாடியுள்ளார்கள். ஆச்சார்யாள் சௌந்தர்ய லஹரியிலும், உமாமகேஸ்வர ஸ்தோத்ரத்திலும், நீலகண்ட தீட்சிதர் ஆனந்தஸாகர ஸ்தவத்திலும், மூக கவி மூகபஞ்சசதீ முழுவதிலும் இந்த திவ்ய தம்பதிகளின் பரஸ்பரப் பிரேமையை அழகாகப் பாடுகிறார்கள். அவற்றை படிப்பதால் நம் மனதில் காம விகாரங்கள் (perversions) விலகி நமது இல்லறம் இனிமையாகும். நாள்பட காமாக்ஷியைப் போல ஈஸ்வர பக்தி பண்ணி, அதன் மூலம் உயர்ந்த ஞானம் அடையலாம் என்பதால் தான் மஹாபெரியவாளே இந்த கிரந்தங்களை அதிகமாக படிக்கச் சொல்லி தம் பக்தர்களை ஊக்கப்படுத்தினார்.
மூக பஞ்ச சதியில் காமாக்ஷி தேவியை ஜகதம்பாவாகவும், பரமேஸ்வர பத்தினியாகவும், ஹிமவான் மகளாக போற்றும், எதிலும் வெற்றியை அளிக்கும் ஒரு ஸ்லோகம் பொருளுடன் -> ஜய ஜய ஜகதம்ப சிவே
இந்த ஸ்லோகத்தில் காமாக்ஷி தேவியை காமேஸ்வரர் மடியில் ஒளிரும் ஒரு ரத்னம் என்கிறார் -> அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம்
இந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட ஊடலை இனிமையாக பேசி வைக்கும் தோழி யார் என்று ஒரு ஸ்லோகத்தில் வர்ணிக்கிறார் -> விராவைர்மாஞ்சீரை:
இது போல சில ஸ்லோகங்களை அடுத்த சில பதிவுகளில் பார்ப்போம்.
Categories: Upanyasam
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
தலைப்பு, ஈஸ்வரன் அம்பாள் படம் ஸ்லோகங்கள் விளக்கத்துடன், சீதா பேசும் வசனம் ராமர் கானகம் செல்லும்போது எல்லாமே தலைப்புக்கு ஏற்ற பொருத்தம் !! கணவன் மனைவி ஊதல் கூடல் என்பது வாழ்க்கையின் ஒர் பாகம் என்பது அழகாக விளக்கப்பட்டிருக்கி றது.
ஜய ஜய ஜகதம்ப சிவே…
ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்
தலைப்பின் சிறப்பு நம் நாட்டில் பெண்கள் வணங்குவதற்குரியவர்கள் என்பதை நமது தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் கூறுகிறது.
நாம் பெண்களைக் கடவுளைப் போல பார்க்க வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் போன்ற மகான்கள் ஏராளம்.
காமாக்ஷிக்கும், ஆசார்யாளுக்கும், பெரியவாளுக்கும் ஜய ஜய பகோஷம் எழுப்புவோம்.
ஜய ஜய காமாக்ஷி
ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கர
🌹
I like this post’s idea of showing the respectable aspect of women and love. But why is the title is of a poem of a poet who is an anti-brahmin that too for an article in this dharmic forum?
Namaskaram anna, I thought of this shlokam after reading this.
Shivah shakthya yukto yadi bhavati shaktah prabhavitum
Na chedevam devo na khalu kusalah spanditumapi;
Atas tvam aradhyam Hari-Hara-Virinchadibhir api
Pranantum stotum vaa katham akrta-punyah prabhavati
Ram Ram. Periyava charanam 🙏