ராம பக்தி சாம்ராஜ்யம்

‘ராம பக்தி சாம்ராஜ்யம்’ என்ற கிருதியில் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் “விளையாட்டாகவே கோலாகமான இம்மூவுலகங்களையும் படைக்கும் ஸ்ரீ ராமபிரானின் பக்தி என்னும் சாம்ராஜ்யத்தில் எந்த மனிதர்கள் வசிக்கிறார்களோ, அவர்களுடைய தரிசனமே ப்ரம்மானந்தத்தை அளிக்கவல்லது. அந்த ஆனந்தத்தை இப்படியென்று என்னால் வர்ணிக்க இயலாது. அது ஒவ்வொருவரும் தாமே அனுபவித்து அறியத்தக்கது.” என்கிறார். அதாவது “ராம பக்தி கொண்ட மகநீயர்களை பார்ப்பதே பேரானந்தம். ராம பக்தியின் சுவையை அவரவர்கள் அனுபவித்து தான் புரிந்து கொள்ள முடியும். சொல்லி புரிய வைக்க முடியாது” என்று கூறுகிறார்.

ராமாயணத்தில் ஸ்ரீ ராமரை வால்மீகி முனிவர் “காந்தர்வே ச புவி ஸ்ரேஷ்ட:” என்று புகழ்வார். அதாவது சங்கீத சாஸ்திரத்தில் தன்னிகரற்ற ஞானம் படைத்தவர் ஸ்ரீராமர் என்று பொருள். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் “அதனால்தான் தியாகராஜ சுவாமிகளின் சங்கீதத்தில் ஸ்ரீராமர் அப்படி சந்தோஷப் பட்டார்” என்று சொல்வார்.

“காந்தர்வே ச புவி ஸ்ரேஷ்ட:” என்ற வார்த்தைகள் நம் மஹாபெரியவாளுக்கு பொருந்தும். சங்கீதத்தில் தன்னிகரற்ற ஞானம் கொண்ட பெரியவா எவ்வளவோ மஹாவித்வான்களின் சங்கீதத்தை கேட்டு, விருதுகள் கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் தியாகராஜ சுவாமிகளைப் போல பெயர், புகழ் விரும்பாமல், அவருடைய சிஷ்ய பரம்பரையில் வந்த நீலா மாமி என்ற உத்தம பக்தை, பெரியவாளின் சன்னிதியில் வாழ்நாள் முழுவதும் அம்பாளுக்கு வீணை வாசித்து இருக்கா. பெரியவா சென்னை விஜயத்தின் போது நான்கு வருடங்கள் பெரியவா இருக்கும் இடத்திற்கெல்லாம் போய், வீணை வாசித்து இருக்கா. மூக பஞ்சசதி யை எண்பத்தாறு ராகங்களில் பெரியவாளிடம் பாடி இருக்கா. பெரியவா அவாளுக்கு பாடி காண்பிச்சு இருக்கா. பாட்டு சொல்லி கொடுத்து இருக்கா. ஆறுதல் வார்த்தைகள். வேடிக்கை பேச்சுக்கள். எத்தனையோ ஆச்சர்யமான அனுபவங்கள். பெரியவா தன் குழந்தையைப் போல அந்த மாமியை அன்பு பாராட்டி வழி நடத்தி இருக்கா. அவாளுடைய டயரிக் குறிப்புகளில் இருந்து அந்த அனுபவங்களை ஒரு புத்தகமாக அவர் காலத்திற்குப் பின் உறவினர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் அந்த புத்தகத்தையும், புத்தகத்தின் சுருக்கத்தை என் குரலிலும் இங்கே கேட்கலாம் ->  நான் கண்ட பூஜ்யஸ்ரீ மஹாபெரியவா



Categories: Upanyasam

Tags: , ,

5 replies

  1. jAYA jAYA sANKARA HARA HARA SANKARA SARANAM SARANAM
    JANAKIRAMAN NAGAPATTINAM

  2. idai padippavarkellam maha bakyam kittum…Periyava thiruvadi saranam…!

  3. ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர. பெரியவா பாதம் சரணம்.
    ஸ்ரீமதி நீலா மாமி அவரின் ஒவ்வொரு பெரியவாளுடன் ஏற்பட்ட அனுபவமும் நம் கண் முன்னே கொண்டு வந்தது.
    அவரைப் போன்ற புண்ணியவதி, வீணை வித்வத்தை காமாக்ஷி பெரியவாளுக்கு முழுக்க முழுக்க சமர்ப்பித்துள்ளார்.
    பெரியவாளே கொடுத்த மந்த்ர உபதேசம், மாமியின் பயணங்களுக்கு மறைமுகமாக செய்த உதவிகள், அவர்களின் சிறிய மாம்பலம் வீட்டிற்கு வந்து ஆசி வழங்கியது ஆஹா! என்னே ஓர் பாக்யம். மாமியின் எழுத்துக்களும் மிக கோர்வையாக, எளிய நடையில்
    உள்ளது. இதை படிக்க படிக்க
    சொல்லொணா ஆனந்தம்.
    ஒவ்வொரு வரியும் உருக்கி உருக்கி நம்மை திரவமாக்கி பெரியவாளுடன் கலக்க வைத்தது.
    இன்று அனுஷம் இந்த தினத்தில் இந்த புத்தகத்தை அளித்தது பேரானந்தம். 🙏🙏

  4. நீலா மாமி போன்றவர்களை த்தான் சாகோரானி என்று சொல்லப்படுகிறது! ஏனென்றால் ஸ்ரீ காமாக்ஷி அருகில் இருந்து கொண்டு தேவியின் மந்தஸ்மிதம் சந்திர ஒளிக் கிரணங்களை சுவைக்கும பேறு பெற்றவர்கள் மாமி ! சந்திரனின் ஒளிக் கீற்று என்பது பெரியவா அருகாமையில் இருந்து sa சங்கீத தொண்டு செய்து அவர் மந்தஹாச வதனத்தை தரிசித்து அல்லவா மாமி! அஹோ பாக்யம்! மறு பிறவியே கிடையாது !
    என் பிரார்த்தனை பெரியவாளிடம் இழைக்கும் வழியே அடுண்காலன்
    எனை நடுங்க அழைக்கும் போது அஞ்சல் என வர வேண்டும் அவர் என்பது ஒன்றே !
    உலகத்தில் உள்ள பந்த பாசங்கள் ஒழிந்து ஈசன் எந்தன் இணையடி நீழல் ஒன்றே குறிக்கோள் !!
    அவள் மந்தஹாசம் என்ற அம்ருத பானத்தைப் பருக பல ஜன்ம
    சுகிர்தம் வேண்டும் !!
    ஜய ஜய ஜகதம்பா சிவே…

  5. பெரியவா பக்தி சாம்ராஜ்யத்தில் நிறைய ரத்தினங்கள் மூழ்கி உள்ளனர். அவர்களை உங்களைப்போன்றவர்கள் வெளிக்கொணர்ந்த போழ்து மேலும் ப்ராகாஸம் ஆகிறார்கள்.நீலா மாமியின் அனுபவங்களை எத்தனை முறை கேட்டாலும்,படித்தாலும் மனம் நெகிழ்கிறது.🙏🙏🙏

Leave a Reply

%d