Let us take a moon bath; சந்திர ஒளியில் குளிப்போம்

In Sundara Kandam moon rise is described beautifully in the 5th sargam.

लोकस्य पापानि विनाशयन्तं महोदधिं चापि समेधयन्तम् ।

भूतानि सर्वाणि विराजयन्तं ददर्श शीतांशुमथाभियान्तम् ।।5.5.2।।

While moving forward, Hanuman saw the Moon spreading his light, thereby warding off the agony of all creatures, causing the swelling of the ocean and illuminating the earth as well as the sky.

हंसो यथा राजतपञ्जरस्थः सिंहो यथा मन्दरकन्दरस्थः ।

वीरो यथा गर्वितकुञ्जरस्थ चन्द्रोऽपि बभ्राज तथाम्बरस्थः ।।5.5.4।।

Like a swan in a cage of silver, like a lion in a cave of Mandara mountain, like a hero on a proud, intoxicated elephant, the Moon shone in the sky.

This curfew is a good opportunity to sync back with nature and enjoy the blessings that are freely available. One such blessing is the full moon. According to Ayurveda, the moon has a cooling, and soothing effect on the mind and body. I have heard that Mahaperiyava sits in a place with no artificial lights facing the full moon and chants Lalitha Sahasranamam every month after navavarana pooja. 

We can chant

कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे ।
गुणिनि गुहारिणि गुह्ये गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥

kundali kumaari kutile, chandi charaacharasavithri chaamunde |
guNini guhaariNi guhyE, GurumoorthE tvaam namaami kamakshi ||

108 times, which adds up to 1000 names of Amba and 108 namaskarams to Periyava.

So go out there and take a moon bath. Even if you miss it today, don’t miss it tomorrow. Krishna Prathamai chandran (1st crescent of full moon moon)  is also equally resplendent. Phalguna Krishna Prathamai (Tomorrow night in India) is especially auspicious for Amba devotees. 

சுந்தரகாண்டம் ஐந்தாம் சர்கத்தில் சந்திரோதயத்தை பற்றி அழகான வர்ணனைகள் உண்டு. இந்த ஊரடங்கு  நாம் இயற்கையோடு இணைந்து வாழ, இயற்கையின் கொடைகளை அனுபவிக்க ஒரு வாய்ப்பு என்றே தோன்றுகிறது. பூர்ண சந்திரன் அப்பேற்பட்ட ஒரு வரம். ஆயுர்வேதத்தில், சந்திர கிரணங்கள் உடலையும் மனத்தையும் குளிரச் செய்வதோடு, மன அமைதியையும் அளிக்கும்  என்று சொல்லி இருக்கிறது. மஹாபெரியவா ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நவாவரண பூஜையை முடித்து விட்டு, செயற்கை விளக்குகள் இல்லாத ஒரு இடத்தில், பூர்ண சந்திரனை பார்த்து அமர்ந்து கொண்டு லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

நாமும் பௌர்ணமி அன்று சந்திர ஒளியில் அமர்ந்து

குண்ட³லி குமாரி குடிலே சண்டி³ சராசரஸவித்ரி சாமுண்டே³

கு³ணினி கு³ஹாரிணி கு³ஹ்யே கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி ॥

என்று 108 முறை ஜபிக்கலாம். அப்படி ஜபித்தால் அம்பாளின் ஆயிரம் நாமங்களும் வந்துவிடும். பெரியவாளுக்கு நூறு நமஸ்காரங்கள் செய்ததாகவும் ஆகிவிடும்.

அதனால் இன்றோ, இன்று இல்லாவிட்டாலும் நாளையோ சந்திர ஒளியில் குளிப்போம். பிரதமை  சந்திரனும் மிகவும் அழகாக இருக்கும். பால்குன கிருஷ்ண பிரதமை அம்பாள் பக்தர்களுக்கு மிகவும் விசேஷம்.

In kataksha shathakam 97th slokam 

यावत्कटाक्षरजनीसमयागमस्ते
कामाक्षि तावदचिरान्नमतां नराणाम् ।
आविर्भवत्यमृतदीधितिबिम्बमम्ब
संविन्मयं हृदयपूर्वगिरीन्द्रशृङ्गे ॥

yaavat kataaksha rajani samayaagamaste
kamakshi taavat achiraan namataam naraanaam | 
aavirbhavati amrita deedhiti bimbam amba
samvinmayam hridaya poorva girindra shringe ||

Mooka kavi says that those who keep doing namskaram to kamakshi will attain gnanam in a poetic way. He says, In the eastern horizon called the heart of a devotee, who constantly worships, till the dusk of kamakshi kataksham arrives, the bright moon called gnanam rises. Beautiful slogam. Swamigal, after taking  sanyasa,  recited this slokam 3 times daily for attaining Jnana. 

கடாக்ஷ சதகத்துல 97 வது ஸ்லோகத்துல,

யாவத்கடாக்ஷரஜனீஸமயாக³மஸ்தே

காமாக்ஷி தாவத³சிரான்னமதாம் நராணாம் ।

ஆவிர்ப⁴வத்யம்ருʼததீ³தி⁴திபி³ம்ப³மம்ப³

ஸம்வின்மயம் ஹ்ருʼத³யபூர்வகி³ரீந்த்³ரஶ்ருʼங்கே³ ॥ 97 ॥

அப்படீன்னு ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம். ஸ்வாமிகள், இதை ஸந்நியாசம் வாங்கிண்ட பின்ன, எனக்கு ஞானம் அடையறதுக்கு ஏதாவது ஒரு ஸ்லோகம் சொல்லணும்னு சொல்லி, இதை mark பண்ணிண்டு, தினம் மூணு வாட்டி படிப்பார்.

‘யாவத்’- எதுவரையில், ‘கடாக்ஷ ரஜனீ ஸமய:’ – அம்பாளுடைய கடாக்ஷம் என்ற இரவு வேளை  ‘ஆக³மஸ்தே’ – ‘ஆக³ம:’ அது எப்ப வருமோ அதுவரைக்கும், ‘காமாக்ஷி தாவத்³’ – அதுவரையில், ‘அசிராத்’ –  இடையறாமல் ‘னமதாம் நராணாம்’ – அதுமாதிரி தெய்வத்தை வழிபடணும்ங்கிறது எப்ப வரைக்கும் பண்ணனும்னா, ஞானம் அடையற வரைக்கும் அம்பாளுடைய வழிபாடு பண்ணிண்டே இருக்கணும்! அது மாதிரி விடாம யாரு நமஸ்காரம் பண்ணிண்டே இருக்காளோ அவாளுடைய ‘ஹ்ருʼத³ய பூர்வ கி³ரீந்த்³ர ஶ்ருʼங்கே³’ – ‘ஹ்ருʼத³யம்’னா மனசு. ‘பூர்வம்’னா கிழக்கு. ‘கி³ரீந்த்³ர ஶ்ருʼங்கே³’ – கிழக்கிலே இருக்கக் கூடிய மனமாகிய சிகர முகட்டில் ‘ஸம்வின்மயம்’ – ஞானமயமான ‘அம்ருʼததீ³தி⁴தி’ – சந்திரன். ‘ஆவிர்ப⁴வதி அம்ப³’- ‘யார் உன்னை விடாம நமஸ்காரம் பண்ணிண்டிருக்காளோ அவாளுடைய மனசுல ஞானம்ங்கிற சந்திரிகை உதயமாகும்’ அப்படீன்னு அர்த்தம்.

In kataksha shathakam 21st slokam also, mooka kavi describes kamakashi kataksham (glances) as a moon pouring nectar. Sharing the meaning of the slokam with some thoughts on how intimacy between husband and wife can be increased with kamakshi’s blessings and Swamigal’s one pointed devotion towards Mahaperiyava – Kamakshi kataksham as resplendent moon

கடாக்ஷ சதகம் 21வது ஸ்லோகத்திலும் காமாக்ஷி கடாக்ஷத்தை அம்ருத மழை பொழியும் நிலவாக வர்ணிக்கிறார். அந்த ஸ்லோகத்தின் மூலம் கணவன் மனைவிக்குள் அன்பு வளர்த்துக் கொள்ள வழியும், ஸ்வாமிகளின் ஏக பக்தியை பற்றிய சில எண்ணங்களும் இங்கே. – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் குளிர் நிலவு

 



Categories: Upanyasam

Tags: ,

3 replies

  1. அபிராமி பட்டர் ஸதா அம்பாளை பௌர்ணமி ஒளியாகவே தியானம் செய்ததால் அமாவாசை அன்று கூட பூர்ண நிலவாக காட்சி கொடுத்தாள்
    பெரியவாளை அப்படியேதான் ! பௌர்ணமி நிலவில் அம்பாளை மனம் குளிர வெளியே வந்து தர்சனம் செய்வார். ஒரு முறை சதாராவில். பூஜை முடிந்து பக்தர் ஒருவர் கொண்டு வந்த புஷ்பங்கள் ஆகாசத்தை நோக்கி வீசி பூஜை செய்தாராம் ! பார்க்கப் பரவசமாக ஆகாஸத்துக்கும் பூமிக்கும் பாலம் போட்டாற்போல் விளங்கிற்று என்று சொல்லக் கேட்டு இருக்கேன்.
    முழு நிலவுக்கு வியாதிகளை நிவ்ருத்திக்கும் ஆர்றல் உண்டு என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
    ஸம்வித் ஞானம் என்ற கடாக்ஷம் அதிக கிரணங்களுடைய சந்திரனுக்கு உண்டு! தேவியின் கடைக்கண் பார்வையாலேயே இந்த கடாக்ஷம் அடைய முடியும்!
    குரு என்பவர் அம்பாளின் வெளித் தோற்றமே ! உணர்ந்தவர்களுக்குப் புரியும் இந்த உணர்வு ! குரு மூர்தயே த்வாம் நமாமி காமாக்ஷி !
    நல்லதோர் பதிவு பௌர்ணமி அன்று,!

  2. பெரியவா பற்றிய அனுபவங்களில் பட்டம்பி மாமா சொன்னார் “ தனு:பொளஷ்பம் “ என்ற சொளந்தர்யலஹரி ஸ்லோகத்தை பெளர்ணமி சந்திரனை பார்த்து சத்தமாக சொல்வார் லோகஷேமத்திற்காக என்றார். அதிலிருந்து எனக்கு அந்த ஸ்லோகம்தான் நினைவிற்கு வரும். நீங்கள் கூறியதை பார்த்தவுடன் மனது குதூகலித்தது. “குண்டலி குமாரி” ஸ்லோகம் சொன்னால் பெரியவாளையும் சேர்த்து ஸ்தோத்திரம் செய்யலாமே என்று. பெரியவாளும் அம்பாளும் ஒன்றுதான்🙏🙏🙏🙏ஜெய ஜெய சங்கரா ஹரஹர சங்கரா

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading